“போதும் உங்க அன்பு… தெகட்டிருச்சு…”: தன் மீதான விமர்சனத்துக்கு சேரன் பதில்

'கன்னா பின்னா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சேரன், “தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் … Continue reading “போதும் உங்க அன்பு… தெகட்டிருச்சு…”: தன் மீதான விமர்சனத்துக்கு சேரன் பதில்

#புத்தகம்2016: ‘எல்லாக் கனவும்போல இதுவுமொரு கனவாயிருந்துவிடக்கூடாதா?’ பார்த்தீனியம் நாவலிலிருந்து…

தமிழ்நதி இருந்தாற்போல சுபத்திரா கதைக்கத் தொடங்கினாள். வயிற்றுக்குள் புரட்டிக்கொண்டிருக்கும் வாந்தியை ஓங்காளிக்கும் வேகத்துடன் சொற்கள் சீறிவந்தன. “இந்தியனாமி யாழ்ப்பாணத்தைப் பிடிச்சாப்பிறகு கொஞ்சச் சனங்கள் அகதிமுகாமிலை இருந்து திரும்பித் தங்கடை வீடுகளுக்கு வந்திட்டுதுகள். நாங்கள் இரவிலை வீட்டிலை படுக்கிறேல்லை. இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டு பக்கத்து வீட்டை போயிடுறனாங்கள். அங்கைதான் படுக்கை. அண்டைக்குப் போறதுக்குக் கொஞ்சம் பிந்திப் போச்சுது. இரவு எட்டு மணியிருக்கும். றெயில்வே லைன் பக்கம் நாய் குலைச்சுச் சத்தம் கேட்டுது. அவங்கள்தானெண்டு தெரியும். வீடு வீடாய்ப் போய் … Continue reading #புத்தகம்2016: ‘எல்லாக் கனவும்போல இதுவுமொரு கனவாயிருந்துவிடக்கூடாதா?’ பார்த்தீனியம் நாவலிலிருந்து…

விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம்

தமிழ்நதி முள்ளிவாய்க்காலிலிருந்து நாங்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’ அரசு உலகுக்கு அறிவித்தபோது சாவின் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த துப்பாக்கிக் கருந்துளைகளின் முன் கைகளை உயர்த்தியபடி ‘ஆமென் சுவாமி’என்றோம். பிறகு முட்கம்பி வேலிகளுள் விடுதலையானோம். கூரைகளைப் பிடுங்கிக்கொண்டு வழங்கப்பட்ட கூடாரங்களுள் ஒன்றுபோலவே நெளிந்துகொண்டிருக்கிறார்கள் புழுக்களும் குழந்தைகளும் ‘விடுவிக்கப்படுவதன்’முன் போராளிகளாக இருந்த பெண்களை நகக்குறிகளுடனும் பற்தடங்களுடனும் முகாமின் மூலைகளில் சடலங்களாகக் கண்டுபிடிக்கிறோம் ஆயினும் புத்தர் சாட்சியாக எதையும் நாங்கள் பார்க்கவில்லை! எங்களது விடுதலையை எப்போதும்போல சளைக்காமல் பிரகடனம் செய்துகொண்டிருக்கிறது அரசு. வதைமுகாம்களின் சுவர்களில் தெறிக்கிறது … Continue reading விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம்

ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

திலீபன் மகேந்திரன், தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர். தேசியக் கொடியை எரித்ததற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில் தமிழக காவல்துறையில் திலீபனுக்கு இன்ஸ்டண்ட் தீர்ப்பாக அவருடைய கையை உடைத்தது. மூன்று மாத சிறை வாசத்துக்குப் பின் பிணையில் வெளியே வந்தார் திலீபன். பட்டம் படித்த திலீபன், முழுவேலையாக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் தவித்த உதகை பெண் ஒருவரை மீட்டு கொண்டுவருவதற்கு அவருடைய குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். செல்ஃபியும் ஸ்டேடஸ் போராளியுமாக இல்லாமல் … Continue reading ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

காவல்துறையால் கால்கள் நசுக்கப்பட்ட ஈழத்தமிழர் குடும்பம் உதவி கேட்கிறது

திலீபன் மகேந்திரன் தோழர்களே தயவு செய்து உதவுங்கள்... இந்த நாடும், அரசும் நம் மக்களை வாழவைக்காது, முடிந்த வரை நாம் இனைந்து உதவுவோம்.. சென்ற 15.03.2016 அன்று ஈழத் தமிழர் சுபேந்திரன் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்கள் ஆகியும் அவரால் கால்களை இயக்க முடியவில்லை. அந்தக் குடும்பம் அன்றாடச் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கிறது. கால் மணிக்கட்டு எலும்பை உடைத்து அதில் பூட்ஸ் காலால் ஏறி … Continue reading காவல்துறையால் கால்கள் நசுக்கப்பட்ட ஈழத்தமிழர் குடும்பம் உதவி கேட்கிறது