சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

சந்திரமோகன் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக,  சேலத்தில் "சாதியும் சமூக மாற்றமும் " எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார். சிங்களர்- தமிழர் இன முரண்பாடு, இலங்கையில் சிறுபான்மை தமிழர் மகாசபை, வர்க்கம் எதிர் சாதி, வருணங்கள், பிராமண மதம், தமிழர் நிலப்பரப்பில் தோன்றிய திணை அரசுகள், மார்க்சியம், ரஷ்யப் புரட்சியில் "ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்" என்ற அணுகுமுறை எனப் பல்வேறு விசயங்கள் பற்றி விரிவாக பேசினார். "சிங்களர்கள் கண்டி நாயக்கர்கள் என்று … Continue reading சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

நூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’

அ.முத்துலிங்கத்தின் வழக்கமான நடை; அதே எள்ளல், மெல்லிய நகைச்சுவை, ஆழம் என எல்லாமும் உண்டு.

ஈழம், ராஜுவ்காந்தி, பிரபாகரன்: சர்ச்சையை கிளப்பிய இரண்டு பதிவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி ஈழ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.  ஒரு கட்டத்தில் திமுக ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்குமிடையே கருத்து மோதலாக இது உருவெடுத்தது. குறிப்பாக திராவிடர் கழக ஆதரவாளர் பிரபாகரன் அழகர்சாமி மற்றும் எழுத்தாளர் விநாயக முருகன் எழுதிய பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பிரபாகரன் அழகர்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு: இன்று இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நாள். … Continue reading ஈழம், ராஜுவ்காந்தி, பிரபாகரன்: சர்ச்சையை கிளப்பிய இரண்டு பதிவுகள்!

முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி…”நோ கமெண்ட்ஸ்” சொன்ன ரஜினி

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்பட்டதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் தங்களுடைய இரங்கலையும் கருத்துக்களையும் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்திருக்கிறார் என்கிறது ஏஎன்ஐ செய்தி நிறுவனம். ரஜினியின் இந்தப் போக்கை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். வீடியோ: திலீப்குமார் டூ ஆஸ்கர் நாயகன்: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் குறித்த புத்தகம்...  https://youtu.be/Q2JBrJgdkV4

இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது: எழுத்தாளர் குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுவதாக எழுத்தாளர் சாத்திரி குற்றம்சாட்டியுள்ளார். தனது முகநூல் பதிவில், “இலங்கையில் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நான் எழுதிய புத்தகங்களான ஆயுத எழுத்து, அன்று சிந்திய ரத்தம், மற்றும் அண்மையில் வெளியான அவலங்கள் சிறுகதை தொகுப்பு அடங்கிய புத்தக பொதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சரியான காரணங்கள் எதுவுமின்றி அதனை இலங்கை சுங்கத் துறையினர் உரியவரிடம் கொடுக்காமல் தடுத்து வைத்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கு … Continue reading இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது: எழுத்தாளர் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை: மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு!

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை ஆக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பது மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட‌ அறிக்கை வருமாறு: தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, சிங்களக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து; அவர்களிடமிருந்து படகுகளையும் பறிமுதல் செய்துவருகின்றனர். தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 122 இழுவைப் படகுகளையும், … Continue reading தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை: மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு!

தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்!

தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று ஈவு இரக்கமற்ற முறையில் இலங்கை அரசு முடிவு எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண 27.1.2014-ல் தொடங்கி இதுவரை நான்கு முறை இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் … Continue reading தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்!

ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன்

தீபச்செல்வன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று பல கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஈழ மக்களின் தனி ஈழ கோரிக்கைக்கு எதிராகவும் ஒரு காலத்தில் பேசியிருந்தார். இன்று அவர் அமரத்துவமடைந்த நிலையில் சிலர் … Continue reading ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன்

சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது: விநாயக முருகன்

விநாயக முருகன் ஒருகாலத்தில் சென்னையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. செங்கல்பட்டை (அப்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஒன்றாக இருந்தன) லேக் மாவட்டம் என்றே சொல்வார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் வீராணம் ஏரியை சுற்றி அறுபத்துநான்கு மதகுகள் இருந்தன என்ற தகவல் வரும். மாம்பலத்தில் மாம்பலம் கால்வாய் இருந்தது. கொளத்தூர், பெரியார் நகர் எல்லாம் ஒரு காலத்தில் குளம், குட்டை நிறைந்த கிராமங்கள். நிலத்தடி நீர் சுவையாக இருந்தது. இப்போது சென்னையில் எங்கு எங்கு ‘போர்’ … Continue reading சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது: விநாயக முருகன்

பறையா எனும் போது வலிக்கிறதா தமிழரே…!

என். சரவணன் சுமனதேரர் “பற தெமலா” என்று திட்டியதால் கொதித்துப்போயுள்ளது தமிழுலகம். அவரது சிங்கள பௌத்தத்தோடு தனியாக கணக்கு தீர்த்துக்கொள்வோம். தமிழர் நமக்கும் அது சார்ந்த கணக்கொன்று தீர்க்கப்படாமல் நிலுவையில் தொடர்கிறதே அதைத் தான் இங்கு குறிப்பிடவருகிறேன். இங்குள்ள பிரச்சினை பறையர் அல்லாத தம்மை பறையர் என்று அழைத்து விட்டார்கள் என்பது தானே ஒழிய. “பொதுவாக“ சாதிய இழிவு புரிந்தார் என்பதற்காக எழுந்த ஆத்திரம் அல்ல இது. “பறையா” என்று திட்டியதில் வரும் அறச் சீற்றம் என்பது … Continue reading பறையா எனும் போது வலிக்கிறதா தமிழரே…!

யாழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து யுனிசெஃப் அலுவலக முற்றுகை: 30 பேர் கைது

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலையைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் சென்னையில் இன்று போராட்டம் நடத்தினர். கஸ்தூரிபாய்நகர் மாடித்தொடர்வண்டி நிலையம் அருகிலிருந்து அடையாறு பகுதியிலுள்ள யுனிசெஃப் அலுவலகம் நோக்கி, பு.இ.மு. அமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்தச்சென்றனர். தமிழ்வாணன் தலைமையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அவ்வமைப்பின் 30 பேர் இதில் கலந்துகொண்டனர். தமிழீழ மக்கள் இனப்படுகொலை செய்வதை சிங்கள இனவெறி அரசின் இன்னும் நிறுத்தவில்லை; தமிழீழ மக்களின் தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது, முன்னாள் … Continue reading யாழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து யுனிசெஃப் அலுவலக முற்றுகை: 30 பேர் கைது

’எல்லை தாண்டி மீன்பிடிப்பது காலம் காலமாக உள்ள ஒன்றுதான்; ஆனால் பிரச்சினை அதுவல்ல’: சுமந்திரன்

இழுவை வலை மீன்பிடிப்பு முறைதான் இந்திய, இலங்கை மீனவர் பிரச்னைக்கு பிரதானக் காரணம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்திய-இலங்கை மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் டெல்லியில் சனிக்கிழமை இரு நாட்டு வெளியுறவுத்துறை, வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுமந்திரன் எம்.பி., கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக  செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். பாக் … Continue reading ’எல்லை தாண்டி மீன்பிடிப்பது காலம் காலமாக உள்ள ஒன்றுதான்; ஆனால் பிரச்சினை அதுவல்ல’: சுமந்திரன்

யாழ் மண்ணில் ஹோலி பண்டிகை: இந்தியா கலாச்சார ஆக்கிரமிப்பு செய்வதாக ஈழத்தமிழர்கள் கடும் கண்டனம்

யாழ் மண்ணில் முதல் தடவையாக ஹோலி பண்டிகை, வரும் 20ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளதாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. யாழ் மாநகர சபை மைதானத்தில் காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை இந்திய தூதரகம் நடத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இலங்கை வாழ் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என பலரும் எதிர்ப்பு … Continue reading யாழ் மண்ணில் ஹோலி பண்டிகை: இந்தியா கலாச்சார ஆக்கிரமிப்பு செய்வதாக ஈழத்தமிழர்கள் கடும் கண்டனம்

”இது சிங்கள பெளத்த நாடு. நாங்கள் இப்பிடித்தான். நீ வெளியே போ தமிழ் பறை***!”

நிலா லோகநாதன் இந்த உலகமானது, எப்போதும் போல, எங்கேயும் போல மதத்தாலும், மத வெறியாலும், மதங்கள் பல ஆயிரம் வருடங்களாகச் சேமித்துக் கடத்தித் தொலைத்த காட்டு மிராண்டித்தனத்தின் உச்சமானவர்கள் வாழும் புனித பூமியென மீண்டுமொரு முறை உணர்ந்து கொண்டேன். இந்த முறை புனித பெளத்தக் காவிகள் எனக்கு அறிவுக்கண்னைத் திறந்து விட்டார்கள். நேற்று அருந்தப்பில் உயிர் பிழைத்தோம்.இன்றோ நாளையோ, ஏன் நாட்கள் பல கடந்துங்க் கூட எம்மீதான வன்மம் தொடரலாம். வாள் கொண்டு பல நூறு பேரால் … Continue reading ”இது சிங்கள பெளத்த நாடு. நாங்கள் இப்பிடித்தான். நீ வெளியே போ தமிழ் பறை***!”

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொலை: சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்!

இலங்கை யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து புதன்கிழமை காலை இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றன. இதுகுறித்து தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள்... ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தா.செ.மணி: சென்ற 2016 அக்டோபர் 21 அதிகாலை யாழ்ப்பாணப் பலகலைக்கழக மாணவர்கள் இருவர் சிங்களக் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொலையுண்டிருப்பது எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (பவுன்ராஜ்) சுலக்சன் ஆகிய … Continue reading யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொலை: சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் இலங்கை போலீஸால் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவில் பகுதி போலீஸ் சோதனை சாவடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் இருவர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலில், அந்த மாணவர்களை சுட்டுக் கொல்லவில்லை என்றும், சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் உயிரிழந்தததாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனையின்போது, இரு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் … Continue reading யாழ்ப்பாணத்தில் இலங்கை போலீஸால் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை

குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ விமர்சனம்: வி. சபேசன்

வி. சபேசன்  கடந்த வாரம் யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற குணா கவியழகனின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வில் நான், ‘விடமேறிய கனவு' நாவலுக்கான விமர்சனத்தை செய்திருந்தேன். அந்த விமர்சனத்தின் எழுத்து வடிவம் இது. சில குறிப்புக்களை வைத்துத்தான் பேசினேன். எழுதி வைத்து வாசிக்கவில்லை. ஏறக்குறைய இதைத்தான் பேசினேன். ‘விடமேறிய கனவு' நாவல் கதையின் நாயகன் தனது கதையை சொல்வதாக தன்னிலை வடிவத்தில் அமைந்திருப்பதை சொல்லி விமர்சனத்தை ஆரம்பித்தேன். ......................................................... தடுப்பு முகாம் அனுபவம்.... முள்ளிவாய்க்காலிற்குப் பின்னர் … Continue reading குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ விமர்சனம்: வி. சபேசன்

விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம்

தமிழ்நதி முள்ளிவாய்க்காலிலிருந்து நாங்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’ அரசு உலகுக்கு அறிவித்தபோது சாவின் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த துப்பாக்கிக் கருந்துளைகளின் முன் கைகளை உயர்த்தியபடி ‘ஆமென் சுவாமி’என்றோம். பிறகு முட்கம்பி வேலிகளுள் விடுதலையானோம். கூரைகளைப் பிடுங்கிக்கொண்டு வழங்கப்பட்ட கூடாரங்களுள் ஒன்றுபோலவே நெளிந்துகொண்டிருக்கிறார்கள் புழுக்களும் குழந்தைகளும் ‘விடுவிக்கப்படுவதன்’முன் போராளிகளாக இருந்த பெண்களை நகக்குறிகளுடனும் பற்தடங்களுடனும் முகாமின் மூலைகளில் சடலங்களாகக் கண்டுபிடிக்கிறோம் ஆயினும் புத்தர் சாட்சியாக எதையும் நாங்கள் பார்க்கவில்லை! எங்களது விடுதலையை எப்போதும்போல சளைக்காமல் பிரகடனம் செய்துகொண்டிருக்கிறது அரசு. வதைமுகாம்களின் சுவர்களில் தெறிக்கிறது … Continue reading விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம்

கவிஞர் மஜீதுக்கு இலங்கை அரசு வழங்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ரதி விருது!

இலங்கையைச் சேர்ந்த கவிஞர் மஜீதுக்கு அந்நாட்டு அரசு வழங்கும் வாழ்நாள் இலக்கிய சாதனையாளருக்கான ‘ரதி விருது’ வழங்கப்பட்டது. மஜீத் சுகயீனமாக இருப்பதால் அவருடைய மனைவி சாபிறா A.மஜீத் விருதைப் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து, தன் கணவரின் உடல்நலன் குறித்தும் சாபிறா எழுதியுள்ள முகநூல் பதிவு: மஜீதுக்கு கட்டம் கட்டமாகவே வைத்தியம் நடைபெறுகிறது, அது சென்னையில் உள்ள விஐயா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முதலாம் கட்டம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மூன்று மாதங்களுக்கு மாத்திரைகளை கொடுத்து அடுத்த … Continue reading கவிஞர் மஜீதுக்கு இலங்கை அரசு வழங்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ரதி விருது!

“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை”:முன்னாள் விடுதலை புலியின் கண்ணீர்க் கதை!

“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை” என்கிறார் முன்னாள் போராளியான இளையதம்பி தவராணி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வரும் போது தனக்கு 24 வயது என தவராணி குறிப்பிடுகின்றார். ஐ.பி.சி தமிழ் பிரிவுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தவராணி, “தவராணி ஆகிய நான் 9 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்துள்ளேன். எனக்கு தாயுமில்லை. தந்தையுமில்லை, எனக்குரிய காணித்துண்டு … Continue reading “எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை”:முன்னாள் விடுதலை புலியின் கண்ணீர்க் கதை!

“நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

வி. சபேசன் சீமான் இரண்டு கோட்பாடுகளை கொச்சைப்படுத்துகிறார். ஓன்று திராவிடம் மற்றது தமிழ்த் தேசியம். இந்த இரண்டு கோட்பாடுகள் பற்றிய மிகத் தவறான விடயங்களை இளைஞர்களுக்கு சீமான் போதிக்கிறார். திராவிடத்தின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் பற்றுள்ள ஒருவன், இதை அலட்சியப்படுத்தி விட்டு கடந்து செல்ல மாட்டான். சீமானுக்கு எதிரான கருத்தியல் போரை நடத்துவான். தந்தை பெரியாரின் திராவிடக் கோட்பாடுகளில் தமிழ்த் தேசியமும் அடங்கி விடுகிறது. ஆயினும் திராவிடம் என்பது ஒரு மனிதனின் சுயமரியாதை, ஆரிய பார்ப்பனிய … Continue reading “நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

“ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

கடந்த வாரம், யாழ் பல்கலையில் உடைக் கட்டுபாடு குறித்து தெரிவித்திருந்த ரவிக்குமாருக்கு இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் துரை ரட்ணம் சாதிய சொல்லாடலைப் பயன்படுத்து கடுமையாக சாடியிருந்தார். அந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரை... அ. மார்க்ஸ்  நான் டெல்லியில் இருந்து ரயிலில் வந்துகொண்டிருந்தபோது ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, “நீங்கள் ஏன் இதில் மௌனம் சாதிக்கிறீர்கள்?” எனக் குற்றம் சாட்டும் தொனியில் வினவினார். ரவிக்குமாருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் நான் ரவிக்குமார் … Continue reading “ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு கடிதம்: உண்மை நிலவரம் என்ன?

வில்லவன் இராமதாஸ் ராஜீவ் கொலை வழக்கு - எழுவரையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை தமிழக அரசு கேட்டிருப்பதாக செய்தி. யாரும் உடனே மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டாம். இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று தரப்பும் (தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம்) தமிழர்களுக்கு விரோதமானவை. ஒருவேளை தேர்தல் ஆதாயத்துக்காக தமிழக அரசு அவர்களை விடுவிக்க விரும்பினால் அவர்களை பரோலில் விடுவிக்கும் வேலையைத்தான் அரசு முதலில் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் கருத்து கேட்பதில் உள்ள … Continue reading எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு கடிதம்: உண்மை நிலவரம் என்ன?

“மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது; ஜீன்ஸ் போடக்கூடாது; மாணவிகள் புடவை கட்ட வேண்டும்”: இலங்கை யாழ் பல்கலையிலும் ஆடைக் கட்டுப்பாடு!

மாணவர்கள் எப்படிப்பட்ட உடைகளை அணிந்து வர வேண்டும் என்று இலங்கை யாழ் பல்கலைக்கழகம் புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்  த. கலையரசனின் பதிவு: “மன்னிக்கவும், இந்த அறிவித்தல் வெளியானது, ஆப்கானிஸ்தானிலோ அல்லது ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அல்ல. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இவை. "இதெல்லாம் தமிழ்க் கலாச்சாரமா? இந்துக் கலாச்சாரமா? அல்லது ஆங்கிலேயக் கலாச்சாரமா?" என்று ஒரு எழவும் புரியவில்லை. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கவும்: 1. மாணவர்கள் தாடி வைத்திருக்கத் … Continue reading “மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது; ஜீன்ஸ் போடக்கூடாது; மாணவிகள் புடவை கட்ட வேண்டும்”: இலங்கை யாழ் பல்கலையிலும் ஆடைக் கட்டுப்பாடு!

இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

வன்னி அரசு. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் செயத் ராஅட் அல் ஹுசேனின் நான்கு நாள் இலங்கை சுற்றுலா இன்று முடிவடைந்தது. அவர் பயணத்தின் விளைவாக தமிழர்களுக்கு எதாவது நன்மை நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை. மாறாக இலங்கை அரசு மேற்பார்வையில் நடத்தப்பட்ட மற்றுமொரு சடங்கு போல இந்த பயணம் அமைந்துள்ளது. தமிழர்களின் மிகமுக்கிய கோரிக்கைகளில், ஐநாவுக்கு எந்த பங்கும் கடமையும் இல்லாதது போல கைகழுவி உள்ளது. தனது பயணத்தின் இறுதியில் … Continue reading இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நஷ்டஈடு : ரணில் அறிவிப்பு

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் தகவல் ஊடகத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டு குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அவர், ராஜபட்ச ஆட்சியில் 44 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

8 தமிழ் அமைப்புகள் மீதான தடையை ரத்து செய்தது இலங்கை அரசு

விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட எட்டு தமிழ் அமைப்புகள் மீது தடை விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு கெஜட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டாணியா தமிழ் அமைப்பு, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, தேசிய கனடா தமிழர்கள் கவுன்சில், தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய எட்டு அமைப்புகளின் … Continue reading 8 தமிழ் அமைப்புகள் மீதான தடையை ரத்து செய்தது இலங்கை அரசு