நூல் அறிமுகம்: தொ. பத்தினாதனின் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’

தினகரன் செல்லையா இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் சென்றபோது மதுரையை ஒட்டி ஈழ அகதிகள் இருக்கும் முகாமிற்கு சென்று வந்ததிலிருந்து அவர்களின் அவல நிலை அடிக்கடி மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதில் பலவித சிக்கல்கள். உண்மையில் தமிழ்நாட்டில் உரிமைகளே இல்லாத கடைக்கோடி மனிதர்களாக,அடிமைகள் போல், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைவிட கொடுமையான நிலையில் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளுக்கு ஆதரவாய் குரல் எழுப்புவோர் எவருமில்லை. … Continue reading நூல் அறிமுகம்: தொ. பத்தினாதனின் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’

தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

திருமுருகன் காந்தி வலியும், வருத்தமும், ஆதங்கமும் மக்களின் முகத்தில் வெளிப்படுவதை எங்களின் நினைவேந்தல் பிரச்சாரத்தின் பொழுதில் காண முடிகிறது. சிலரிடத்தில் அடர்ந்து வெளிப்படும் மெளனம் வெளிப்படுத்த இயலாத ரணத்தினை உணர்த்தியது. தமிழகத்தின் ஆற்றாமை சொல்லி மாளாது என்பதை எங்களின் ஒவ்வொரு பிரச்சாரத்தின் பொழுதும் உணர்கிறோம். முகமறியா, அரசியல் பேசாத பலர் எங்களது துண்டறிக்கைகளை அதிகமாய் வாங்கி பிறருக்கு கொடுக்கிறோம் என்று சொல்லும் அந்த சொல்லில் இயக்க அரசியல் மீதான நம்பிக்கை வளர்கிறது. ஒரு சிலர் நினைவேந்தலில் பங்கேற்ற … Continue reading தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

ஈழத் தமிழர்களை நாம் அவமானப்படுத்துகிறோம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஈழ விவகாரத்தில் கருணாநிதியை முன்வைத்து தீவிரமான விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடந்தன. தினமலரும், நியூஸ் செவனும் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக முந்துவதான தோற்றம் வரவும், விவாதம் அந்தப் பக்கம் திசை திரும்பியிருக்கிறது. இத்தகைய விவாதத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தீவிர கட்சி அபிமானிகளாக இருப்பதால், ஈழ விவகாரம் யாருக்கு பெரும் நட்டத்தை விளைவித்தது, அதனால் இழப்புகளை சந்தித்தவர்கள் யார் என்ற அளவிலேயே அது நிற்கிறது. முதலில், ஈழ விவகாரத்தில் நட்டமடைந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதை … Continue reading ஈழத் தமிழர்களை நாம் அவமானப்படுத்துகிறோம்!

ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். … Continue reading ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

#வீடியோ: “கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதிக்கு தமிழக அரசு அதிகாரி தந்த உடனடி மரணதண்டனை!

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதமாகிவிட்டதாக ரவி விளக்கமளித்தும் அதை ஏற்க அந்த அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது … Continue reading #வீடியோ: “கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதிக்கு தமிழக அரசு அதிகாரி தந்த உடனடி மரணதண்டனை!

’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்கிறாரா?

’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்வதாக இலங்கையைச் சேர்ந்த களப்பணியாளர் அருணா சுதர்சன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் அருணா சுதர்சன் , “இரண்டு நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து என் தோழியின் சகோதரர் பேசினார். சீமானுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறதாமே.... ஆட்சியைப் பிடித்து விடுவாரா? என்று கேட்டார். அவர் பேசி முடித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு தொகுதியில் கூட சீமானால் வெற்றி பெற முடியாது … Continue reading ’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்கிறாரா?

சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, ‘பற நாயே’ சாதிய வன்மத்துடன் பின்னூட்டமிட்டார். இது இந்திய-இலங்கை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உடைக் கட்டுப்ப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பற்றி … Continue reading சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். “இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University of Jaffna ) நிர்வாகம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. 1. மாணவர்கள் வகுப்புகளுக்கு ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது 2. வெள்ளிக்கிழமைதோறும் மாணவிகள் சேலை … Continue reading ”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்