#இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!

இறைவி திரைப்படம் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன. அது பெண்ணிய படமா என்பதிலிருந்து தொடங்கி தற்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களை விமர்சிக்கும் படமா ஆதரிக்கும் படமா என்பது வரை வந்து நிற்கிறது. திரை திறனாய்வாளர் Saraa Subramaniam தனது முகநூல் பதிவில்... ‪#‎இறைவி‬ படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா) பார் ஒன்றில் மது அருந்திக்கொண்டிருப்பார். அப்போது, அவரிடம் உறுதுணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர், "தமிழன் தமிழன்னு உணர்வை தூண்டிவிட்டு பைசா பண்ணுற பிராடுகளுக்கு செருப்படி..." … Continue reading #இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!

#இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

விஜய்பாஸ்கர் விஜய் இறைவியில் இதை கவனித்தீர்களா ? -1 அதில் ஒரு தயாரிப்பாளர் டைரக்டரை மன்னிப்பு கேட்கச் சொல்வார். டைரக்டர் மன்னிப்புக் கேட்டதும் காலை நீட்டி கேட்கச் சொல்வார். பின்னர் வருந்தி விளக்கம் கொடுக்கும் போது “சார் அவன் மன்னிப்பு கேட்டா போதும்ன்னுதான் நினைச்சேன். ஆனா அவன பாத்த உடனே சர்ருன்னு ஏறிகிச்சி காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கச் சொன்னேன்” என்பார். பாபியை சேதுபதி மன்னித்து பிரச்சனையில்லாமல்தான் செல்ல நினைக்கிறார் ஆனால் திடீரென்று அவருக்கு சர்ருன்னு ஏறிக்கொள்ள … Continue reading #இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

இறைவி….: ப்ரியா தம்பி

Priya Thambi கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் காதல் கதை அது.... ‘’அவங்க இரண்டு பேரும் டெய்லி கிருஷ்ணன் கோயில்ல மீட் பண்ணிப்பாங்க.. அதுதாங்க அவங்க லவ் பிளேஸ்’’ என்று சொன்ன இடத்திலேயே, அதற்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என … Continue reading இறைவி….: ப்ரியா தம்பி

“மலக்கிடங்கு பேனா புடிச்சு எழுதுனா சந்தனமாவா இருக்கும்?” சாருவின் இறைவி பட விமர்சனத்துக்கு யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை

எழுத்தாளர் சாரு நிவேதா இறைவி படம் குறித்து “கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூலில் அளித்திருக்கும் எதிர்வினை, “தமிழ்ல்ல எந்தக் கொறஞ்ச இன்டக்ரிடியும் இல்லாத ஒரு ஒளருவாயர் சாரு நிவேதிதா. அம்பானி குடும்பத்த அரிச்சந்திர நாடகம் லெவலுக்குச் சொன்ன மணிரத்னத்தினுடைய குரு படத்துக்கு இல்லாத இன்டர்பிரடேசன் எல்லாம் குடுப்பாரு. மிஷ்கின் நண்பரா இருக்கிறவரை அவரு படம் காவியம். முரண்பட்டா மொதல்ல எழுதுனதெல்லாம் வாபஸ். என்னய்யா இது … Continue reading “மலக்கிடங்கு பேனா புடிச்சு எழுதுனா சந்தனமாவா இருக்கும்?” சாருவின் இறைவி பட விமர்சனத்துக்கு யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை

“கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” எழுத்தாளர் சாருவின் இறைவி விமர்சனம்

இறைவி திரைப்படம் குறித்து பாராட்டியும் சிலாகித்தும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, தனது வலைப்பூவில் கடுமையான வார்த்தைகளால் இறைவியை பற்றி எழுதியிருக்கிறார். “கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் … Continue reading “கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” எழுத்தாளர் சாருவின் இறைவி விமர்சனம்

#‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!

Vinitha P M Swamy #‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு 'புதிய' படைப்பு... இதில் என்ன புதுமை?! ஏவாள் காலம் தொட்டு இது தானே நடக்கின்றது? சரி, இந்தப் படைப்பு சொல்ல வரும் கருத்து தான் என்ன? பெண்கள், அவர்களின் வாழ்க்கையை, தீர்மானங்களை, அதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்... நன்று! ஆனால் அந்த களத்திற்கான நீளம், அகலம், ஆழம், எல்லாம் ஆண்களே வரையறுத்தால் எப்படி? "எங்கள் … Continue reading #‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!

இறைவிக்குள்ளே இறைவனைப் பார்க்கிறேன்: ச.விசயலட்சுமி

  ச.விசயலட்சுமி இறைவி படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.தலைப்புக்குள்ளே என்ன சொல்ல வருகிறார்கள் என கவனித்தபோது இது பெண்களுக்கான படம் என அழுத்தி உச்சரிக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்ஸா பார்க்கவில்லை. ஜிகர்தண்டா பார்த்திருந்தேன். பெண்களுக்காக மட்டுமே பேசிவிடும் படம் என்றால் கமர்ஷியலாக படம் ஹிட் அடிக்குமா?அதற்கான வரவேற்பு மனநிலை உண்மையில் இருக்கிறதா? இத்தனை ஊடகங்களும் காமிராக்களும் விழித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பட்டப்பகலில் கௌரவக் கொலைகள் எனப்படும் ஆணவக் கொலைகள் நடக்கிற சமூக அரசியல் சூழலில் இதெல்லாம் … Continue reading இறைவிக்குள்ளே இறைவனைப் பார்க்கிறேன்: ச.விசயலட்சுமி

இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை  மேடையில் சாடிய ராதாரவி

இறைவி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிஷா, ராதாரவியின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த ராதாரவி, அவரை மேடையிலே அநாகரிகமான முறையில், “ராதாரவியைப் பத்தித் தெரியல, இந்தக் கருமத்தை கூட்டியாந்து நிகழ்ச்சி நடத்துறீங்க” என பேசினார். நிகழ்ச்சி நடத்துபவர்கள் கொடுத்த ஸ்கிரிப்டையே தான் படித்ததாக தொகுப்பாளர் நிஷா, தெரிவித்த நிலையில், பெண்களின் பெருமை பேசுவதாக சொல்லிக் கொள்ளும் பட  நிகழ்ச்சியில் பெண்ணை பொது இடத்தில் அவமதிப்பதா என சர்ச்சை … Continue reading இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை  மேடையில் சாடிய ராதாரவி