பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் மாநில ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் உள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு … Continue reading பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரைக்கு தடை: சிபிஐ கண்டனம்

திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் சுதந்திர தின உரை ஒலிபரப்புக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிபுரா முதலமைச்சர் திரு.மாணிக் சர்க்கார் அவர்களின் சுதந்திர தின உரையை திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அவரது உரையை அரசின் செய்தி நிறுவனங்கள் ஒலிபரப்பு செய்யவில்லை; இது கண்டிக்கத்தக்கது .வேலைவாய்ப்பு , நாட்டின் பொருளாதார சுதந்திரம் குறித்த விபரங்களை ,இந்த நாட்டை குறிப்பிட்ட … Continue reading திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரைக்கு தடை: சிபிஐ கண்டனம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு: சிபிஐ

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடுமுழுவதும் பசு, மாடு, காளை, எருது, கன்றுகள் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடைவிதித்தும், விவசாயப் பணிகளுக்கும், வளர்ப்புக்கும் கால்நடைகளை விற்பனை செய்ய கடுமையான நிபந்தனை விதித்தும் மோடியின் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் … Continue reading கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு: சிபிஐ

”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”

தமிழக ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் , அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று , ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது.இந்நிலையில், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட செப்டம்பர் 22 முதல் ,அ.இ.அ.தி.மு.க வில் மௌனமாக நடந்துவந்த அதிகாரப்போட்டி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளும் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் யார் என்பதனை தீர்மானிக்க வேண்டியது … Continue reading ”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”

“இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ  மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கருத்து: தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை. இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும். மே மாதம் 16 ம் தேதி இயற்கை மழை பொழிந்தது. அதற்கு முன்னதாக ஊழல் மூலம் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு ஏற்கெனவே ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற பணமழையை பொழிந்தன. அண்ணா , காமராஜர் போன்ற தலைவர்கள் … Continue reading “இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

“சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (16.05.2016) நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம். இதன் மூலம் 15வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் தருணத்தில் எந்த வகைப்பட்ட கொள்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் எந்த கொள்கை வழிப்பட்டு அரசை வழி நடத்தினார்கள்? மக்களின் நலன் … Continue reading “சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்