இந்தியா – பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்?: ஓர் இராணுவ வீரரின் அனுபவம்

சதீஸ் செல்லதுரை எனது முதல் போஸ்டிங் காஷ்மீர் புல்வாமாவில். அது பார்டர் அல்ல.. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. அடுத்து நான் பஞ்சாப் வந்த போது வேலியினை கடந்து ஜீரோ லைன் என நாங்கள் அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தானின் எல்லையில் இந்திய விவசாயிகளின் பாதுகாப்பிற்கும் ,போதை பொருட்கள் கடத்தலை தவிர்க்கவும் காவலுக்கு நிற்போம். புதியதாக போன நிலையில் பாகிஸ்தான் நிலத்தில் மூத்திரம் பெய்து பெரும் வெறி ஒன்றை … Continue reading இந்தியா – பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்?: ஓர் இராணுவ வீரரின் அனுபவம்

கொல்கத்தாவில் கட்டும்போதே உடைந்துவிழுந்து 15 பேரைக் கொன்ற பாலம்; கட்டுமான நிறுவனம் ’எல்லாம் கடவுளின் செயல்’ என்கிறது!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நீண்ட வருடங்களாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நெருக்கடி மிக்க பகுதியில் இந்த விபத்து நடந்திருப்பதால் இன்னும் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கக்கூடும் என கருதப்படுகிறது. மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். https://twitter.com/DrunkVinodMehta/status/715488425818730498 இந்நிலையில் இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹைதரபாத் நிறுவனமான IVRCL, இந்த விபத்து கடவுளின் செயல் என கருத்து தெரிவித்திருக்கிறது. https://twitter.com/Babu_Bhaiyaa/status/715504187757309952 2009-ஆம் … Continue reading கொல்கத்தாவில் கட்டும்போதே உடைந்துவிழுந்து 15 பேரைக் கொன்ற பாலம்; கட்டுமான நிறுவனம் ’எல்லாம் கடவுளின் செயல்’ என்கிறது!

இராணுவப் பணி: தேச பக்தியா, வயிற்றுப்பாடா?

சரவணன் சந்திரன்  டிஸ்கவரி சேனலில் ‘சியாச்சின்’ எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ வீரர்கள் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. அது பழைய நியாபகங்களையும் பல விஷயங்களையும் கிளறியது. ஒருமுறை இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விடுமுறை முடிந்து முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் இறுக்கமாக உடன் வந்தவர் பின்னர் மெல்லப் பேச ஆரம்பித்தார். அவர் சியாச்சின் குறித்து சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சுற்றிலும் பனிமூடிய சிகரங்களில் … Continue reading இராணுவப் பணி: தேச பக்தியா, வயிற்றுப்பாடா?