கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

ஹிந்துத்துவா கல்வித் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது? என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க மையத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.இந்தியாவின் 75வது … Continue reading கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11ம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்றும் அவர் தமிழருக்காக … Continue reading ‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

“நான் தமிழர் இல்லையென்றால் கல்லால் அடித்துக் கொல்லட்டும்”: சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

தன்னை தெலுங்கர் என்று சொல்லும் நாம் தமிழர் கட்சியினருக்கு  தமிழர் முன்னேற்றப் படை  நிறுவனர் கி.வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார். தனது முகநூலில், “நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு காங்கிரசோ சிங்கள இனவாதமோ எதிரிகள் அல்ல ;இந்த வீரலட்சுமி மட்டும் எதிரியாம் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை பல்வேறு தரப்பட்ட மக்கள் மலையாளி என்று முகநூலில் பதிவு செய்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் எம்மை தெலுங்கர் என்று முகநூலில் பதிவிட்டுகொண்டிருக்கிறார்கள். முதலில் … Continue reading “நான் தமிழர் இல்லையென்றால் கல்லால் அடித்துக் கொல்லட்டும்”: சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

மதுரை சொக்கன் சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு … Continue reading பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

மகாராஷ்டிரா என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா?: பிறமாநில ஆட்டோக்களை கொளுத்த சொன்ன ராஜ் தாக்கரேவுக்கு லாலு மகன் கேள்வி!

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே, மராத்தியர்கள் அல்லாத வட மாநிலத்தவர் பலருக்கு மகாராஷ்டிர அரசு புதிதாக ஆட்டோ உரிமம் வழங்கி உள்ளதால், மராத்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். இதனால் மராத்தியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை, அதாவது புதிதாக பெர்மிட் வழங்கப்பட்டுள்ள ஆட்டோக்களை தீ வைத்து கொளுத்துங்கள் என்று அவர் மகாராஷ்டிரா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது  பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவு , அந்தேரி … Continue reading மகாராஷ்டிரா என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா?: பிறமாநில ஆட்டோக்களை கொளுத்த சொன்ன ராஜ் தாக்கரேவுக்கு லாலு மகன் கேள்வி!

“புரட்சி பேசிவிட்டு யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்” மக்கள் நலக் கூட்டணியினர் பற்றிசீமான்

மக்கள் நல கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் புரட்சி பேசிவிட்டு, தற்போது யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருப்பது வருத்தம் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தில் பூட்டிக்கிடக்கும் நெசவாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை சமுதாயக்கூடமாக மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெசவாளர் கட்டிடத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் … Continue reading “புரட்சி பேசிவிட்டு யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்” மக்கள் நலக் கூட்டணியினர் பற்றிசீமான்