கவிஞர் இன்குலாப் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பு!

கவிஞர் இன்குலாபுக்கு வழங்கப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பதாக அவருடைய குடும்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குவது என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும். அவர்களது எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம். இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது ’’எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் … Continue reading கவிஞர் இன்குலாப் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பு!

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”: இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்

மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவையொட்டி அவர் எழுதிய "மனுசங்கடா நாங்க மனுசங்கடா" பாடலை நினைவுகூர்ந்து இடதுசாரி செயல்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சிபிஎம்எல்(விடுதலை) மாநில கமிட்டி உறுப்பினரும் பத்தியாளருமான சந்திரமோகன் தனது முகநூலில் எழுதிய அஞ்சலி: பலநூறு முறை மக்கள் மத்தியில் நான் பாடிய அப் பாடலை நினைவு கூர்ந்து அஞ்சலி! "மனுசங்கடா நாங்க மனுசங்கடா " "மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா ! எங்களோட … Continue reading “மனுசங்கடா நாங்க மனுசங்கடா”: இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்

மக்கள் பாவலர் இன்குலாபுக்கு வீரவணக்கம்: ராமதாஸ் இரங்கல்

மக்கள் பாவலர் இன்குலாபுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அஞ்சலி: ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்த மக்கள் பாவலர் இன்குலாப் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய இன்குலாப் இளம் வயதிலிருந்தே தமிழுக்காகவும், தமிழருக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார். பொதுவாக பேராசிரியர்கள் பட்டதாரிகளை உருவாக்குவார்கள். ஆனால், இன்குலாப் மனிதநேயம் கொண்ட சமூகப் போராளிகளையும், பாவலர்களையும் உருவாக்கினார். தமிழகத்தில் இன்று புகழ்பெற்ற … Continue reading மக்கள் பாவலர் இன்குலாபுக்கு வீரவணக்கம்: ராமதாஸ் இரங்கல்

“ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர் இன்குலாப்”: அ. மார்க்ஸ்

கவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயலாத துயரத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார் எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ். இதுகுறித்து தன்னுடைய முகநூல் குறிப்பில் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளவை: “என்னுடைய இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர் இன்குலாப்”. என்னுடைய முதல் நூல் 'எதுகவிதை' யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி … Continue reading “ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர் இன்குலாப்”: அ. மார்க்ஸ்

கவிஞர் இன்குலாப் காலமானார்!

மக்கள் கவிஞர் என புகழப்படும் இன்குலாப் காலமானார். உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் இன்று உயிரிழந்தார். பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் என பன்முகம் கொண்ட இன்குலாப். சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட சில விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.