ராணுவத் துப்பாக்கி எப்படி அர்ஜூன் சம்பத் வீட்டிற்குள் வந்தது?: ராணுவ வீரர் கேள்வி…

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து வழிப்பட்ட படத்தை தனது முகநூலில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை கிளப்பியதால் அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர், தடா.ஜெ. அப்துல் ரஹீம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.அந்தப் புகாரில் அர்ஜூன் சம்பத் வழிபாட்டின் போது பயன்படுத்திய துப்பாக்கி அரசு அனுமதி பெற்றதா என்று அவரைக் கைது … Continue reading ராணுவத் துப்பாக்கி எப்படி அர்ஜூன் சம்பத் வீட்டிற்குள் வந்தது?: ராணுவ வீரர் கேள்வி…

கோவையில் கடையை உடைத்து செல்போன்களை அள்ளும் இந்து முன்னணியினர்; சிசிடிவி கேமராவில் சிக்கினர்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டார். இதைக் கண்டிப்பதாகக் கூறி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட் இந்துத்துவ அமைப்பினர் கோவையில் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். கோவை துடியலூரில் மொபைல் கடையை உடைத்து கையில் செல்போன்களை அள்ளிச் சென்ற காட்சி அந்தக் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. https://youtu.be/BwqQkGOU7N8 வீடியோ உதவி: ஒடியன் லட்சுமணன்

இந்து முன்னணி நடத்திய வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதை அடுத்து பொது மக்கள் மீது இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் வன்முறையை கட்டவிழ்த்தனர். இதைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து  கண்டன ஆர்ப்பாட்டத்தை சனிக்கிழமை நடத்தின. இதில் பெருந்திரளானவர்கள் திரண்டு, வன்முறையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலையானதை அடுத்த நடத்தப்பட்ட வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22.9.2016 இரவு கோவை துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த திரு. சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது. ஆனால், இந்தக் கொலையைப் பயன்படுத்தி இந்து … Continue reading கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கோவையில் மீண்டும் கலவரத்தை தூண்டும் இந்துத்துவ அமைப்புகள்: சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பேருந்து உடைப்பு, கடையடைப்பு, வாகனங்களை தீக்கிரையாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. கோவை கலவரம் போன்றதொரு சூழலை மீண்டும் இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கி வருவதாக சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இங்கே... இர.இரா. தமிழ்க்கனல்: கோவையில் இறுதி ஊர்வலத்துக்கு முன்பும் பின்பும் காலிகள் ஆங்காங்கே தறிகெட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். துடியலூர் பகுதியில் கேப்டன் … Continue reading கோவையில் மீண்டும் கலவரத்தை தூண்டும் இந்துத்துவ அமைப்புகள்: சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்

சாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்

திருநெல்வேலியில் சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சிபிஐ எம் எல் கட்சி தொண்டரை இந்து முன்னணி ஆதரவாளர் தலையை வெட்டி கொடூரமாகக் கொன்றுள்ளனர். இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:   “2 4 வயதான தோழர் மாரியப்பன் சாதி வெறியர்களால் கடந்த 20 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் வண்ணார் சாதியைச் சேர்ந்தவர். அவரின் தலையை வெட்டியெறிந்திருக்கிறார்கள். தலையில்லா உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் மாரியப்பனுக்கு ஆதிக்க சாதி வெறியன் ஒருவன் கொலை மிரட்டல் விடுத்த அன்றைய … Continue reading சாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்

இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

திருப்பூரைச் சேர்ந்த சக்தி காமாட்சி - ஆனந்த் தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர். ஆனந்த் ''இந்துமுண்ணனி''யின் தீவிர உறுப்பினர். இவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து திவிக வெளியிட்ட குறிப்பில், “இணையரின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையருக்கு … Continue reading இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

தமிழகத்தைச் சூழும் ஜிஹாத்!: இந்து முன்னணி கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் வீடியோக்களை பரப்புகிறதா?

“கடந்த சில நாட்களாக "தமிழகத்தைச் சூழும் ஜிஹாத்" என்ற தலைப்பில், தமிழகத்தின்  ஒவ்வொரு மாவட்டத்தின் பெயரிலும் தனித் தனியாக 5 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை ஓடக் கூடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இவை யூடியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிலுள்ள அனைத்துக் காட்சிகளும் முஸ்லிம்களைக் குற்றவாளியாகச் சித்தரித்து, அவற்றைப் பார்க்கும் இந்து சகோதரர்களை ஆவேசப்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்டு, இந்துத்துவா அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயநோக்கில் வடமாநிலங்களில் இதுபோன்ற … Continue reading தமிழகத்தைச் சூழும் ஜிஹாத்!: இந்து முன்னணி கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் வீடியோக்களை பரப்புகிறதா?

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: “இராம கோபாலனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?”

தமிழக கோயில்களுக்குள் லெகின்ஸ், டி சர்ட் போன்ற ஆடைகளை அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஆடை அணிவது, அதை எப்படி அணிவது என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் மூக்கை நீட்டுவதற்கு இந்துத்துவா சக்திகளுக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் உள்ள கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதே தவிர, இந்து முன்னணியின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்து … Continue reading கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: “இராம கோபாலனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?”