தனிநாடு கேட்டு முகநூலில் எழுதியதற்காக கைது; பாசிச நடவடிக்கைக்கு மேலும் ஓர் உதாரணம்

ஆழி செந்தில்நாதன் திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை. ஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு. தனிநாடு வேண்டும் எனக் … Continue reading தனிநாடு கேட்டு முகநூலில் எழுதியதற்காக கைது; பாசிச நடவடிக்கைக்கு மேலும் ஓர் உதாரணம்

பாசிஸ்டுகளை பாசிஸ்டுகள் என்று அழைத்ததற்காக கைது செய்யப்படுவது பாசிசத்தின் நிச்சயமான அடையாளம்!

கனடாவின் மான்ட்ரியல் பல்கலை கழகத்தின் ஆய்வு மாணவி சோபியா, தூத்துக்குடி செல்லும் விமானத்திலும் தூத்துக்குடி விமான நிலையத்திலும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனைப் பார்த்து "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டார். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கமும் அதன் கையில் பொம்மையாக உள்ள தற்போதைய தமிழக அரசாங்கமும் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்றன. தனது கட்சியை பாசிச கட்சி என்ற சோபியா சொன்னதற்காக … Continue reading பாசிஸ்டுகளை பாசிஸ்டுகள் என்று அழைத்ததற்காக கைது செய்யப்படுவது பாசிசத்தின் நிச்சயமான அடையாளம்!

சோஃபியா எனும் வனயட்சி!

ஒருவன் உன்னை எதிர்த்தால் அவன் மீது தேசத்துரோகி என முத்திரை குத்து, முடித்தால் தீவிரவாதி என நிரூபி, இறுதியில் வாயில் சுடு என்பது தான் ஃபாசிஸம்.

’பாசிச ஆட்சி’ என முழக்கமிட்ட மாணவி கைது; அப்பட்டமான மனித உரிமை மீறல்

’பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக’ என்று சொல்லும் ஒரு மாணவியிடம் தங்கள் ஆட்சி ஜனநாயக ஆட்சி என விளக்கம் சொல்லத் துப்பில்லாமல், போலீசிடம் புகார் கொடுத்து மாணவியைக் கைது செய்து சிறைப் படுத்தியுள்ள இந்த ஆட்சி, பாசிச ஆட்சியின்றி வேறு என்ன?. இதைச் சொல்லக் கூட குடிமக்களுக்கு உரிமை இல்லையா? இதற்குப் பெயரா ஜனநாயகம்?  ஆயிரம் முறை சொல்வோம் இது பாசிச ஆட்சி என்று. ஜனநாயகத்தின் எந்தக் கூறுகளும் இங்கு இல்லை. பாசிச ஆட்சி என்று கோஷம் … Continue reading ’பாசிச ஆட்சி’ என முழக்கமிட்ட மாணவி கைது; அப்பட்டமான மனித உரிமை மீறல்

சனாதன் சன்ஸ்தா மீது வரும் கவனத்தை மாற்றவே கைது நடவடிக்கைகள்: CPI குற்றச்சாட்டு

ஆதிவாசிகளுக்காகவும்,தலீத்துகளுக்காகவும்,சமூகத்தின் மற்ற நலிந்த பிரிவினருக்காகவும் போராடிவரும் சுதா பரத்வாஜ்,வெர்னான் கொன்சால்வஸ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா ஆகிய அறிவுஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வீடுகளில் நாடு முழுவதும் சோதனை நடந்து உள்ளன.இவர்களுக்கு 'நகர நக்சல்பாரிகள்' என்ற முத்திரை குத்தியுள்ளனர். சனாதன் சன்ஸ்தா ( Sanathan Sanstha) என்ற அமைப்பு ஈத் பண்டிகையின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்தது; கௌரி லங்கேஷ்,தாபோல்கர்,கோவிந்த் பன்சாரே போன்ற பகுத்தறிவாளர்களின் கொலைகளில் … Continue reading சனாதன் சன்ஸ்தா மீது வரும் கவனத்தை மாற்றவே கைது நடவடிக்கைகள்: CPI குற்றச்சாட்டு

அறிவிக்கப்படாத அவசர நிலை: மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது; கண்டனங்கள்

மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதும், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்கள் வீடுகளில் சோதனைகள் நடப்பதும் நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது. சட்டிஸ்கரில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வருபவரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் வெர்னான் கன்சல்வஸ், கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை, டில்லி, ராஞ்சி, கோவா மற்றும் அய்தராபாத் ஆகிய இடங்களில் செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்துள்ளன. இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 153 எ, … Continue reading அறிவிக்கப்படாத அவசர நிலை: மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது; கண்டனங்கள்

உத்தமர் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டம்: கட்சிகளை விளாசுகிறது முகநூல்!

தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ள வாஜ்பாயி புகழஞ்சலி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் தலைவர்கள் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பேசுகின்றனர். https://twitter.com/DrTamilisaiBJP/status/1034039494368882689 இந்த புகழஞ்சலி கூட்டத்தின் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பல்வேறு தரப்பினர் சொன்ன கருத்துக்களின் தொகுப்பு இங்கே! அரசியல் விமர்சகர் வில்லவன்: இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா. அடுத்ததாக வரப்போவது … Continue reading உத்தமர் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டம்: கட்சிகளை விளாசுகிறது முகநூல்!

கோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு!

நிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது.

இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்!

மலையாள வார இதழான மாத்ருபூமியில் எழுத்தாளர் ஹரிஷ் ‘மீசை’ என்ற பெயரில் தொடர்கதை எழுதிவந்தார். மூன்றாவது பகுதியில் பெண்கள் கோயிலுக்கு செல்வது தொடர்பாக இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் பத்தி சர்ச்சையானது. ‘கோயிலுக்கு பெண்கள் ஆடம்பரமாக நகைகளும் உடைகளும் அணிந்துவருவது தாங்கள் உறவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சொல்லவே’ என்றும் மாதத்தில் நான்கைந்து நாட்கள் தாங்கள் தயாராக இல்லை எனக் காட்டவே கோயிலுக்குச் செல்வதில்லை’ என்றும் தொடர்கதையில் எழுதியிருந்தார் ஹரிஷ். இது இந்து பெண்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி இந்துத்துவ … Continue reading இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்!

திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்?

பொது இடங்களில் இஸ்லாமியர் தொழுகை செய்யக்கூடாது: ஹரியாணா முதல்வரின் பேச்சுக்கு எழுத்தாளர் தஸ்லிமா ஆதரவு

மசூதிகளில் மட்டுமே இஸ்லாமியர் தொழுகை செய்யலாம்; பொது இடங்களில் அல்ல என பேசியுள்ளார் ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார். ஹரியாணாவில்  உள்ள குருகிராமில் திறந்த வெளியில் இஸ்லாமியர் தொழுகை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி குழுக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அம்மாநில முதல்வர், பொது இடங்களில் தொழுகை நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அதனால், மசூதிகளில் அல்லது ஈத் கா எனப்படும் திறந்த வெளி வழிபாட்டிடங்களில் மட்டுமே தொழுகை நடத்த … Continue reading பொது இடங்களில் இஸ்லாமியர் தொழுகை செய்யக்கூடாது: ஹரியாணா முதல்வரின் பேச்சுக்கு எழுத்தாளர் தஸ்லிமா ஆதரவு

”கர்நாடகத்தில் ஒருபோதும் பாஜக ஆட்சியைப் பிடிக்காது!”: பிரகாஷ் ராஜ்

இந்துத்துவ பிரிவினை அரசியலை கடுமையாக எதிர்த்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.  #justasking என்ற ஹாஷ் டேக்கை உருவாக்கி தன்னுடைய கருத்துக்களை ட்விட்டரில் சொல்லிவருகிறார். மே மாதம் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து த வயர் இணையதளத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கும் அவர், தான் பாஜக -வை எதிர்ப்பதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். “எனக்கு பாஜகவினர் மீது தணிப்பட்ட பகை எதுவும் இல்லை. ஆனால் … Continue reading ”கர்நாடகத்தில் ஒருபோதும் பாஜக ஆட்சியைப் பிடிக்காது!”: பிரகாஷ் ராஜ்

“குழந்தைகளை காப்பாற்ற நினைத்ததுதான் நான் செய்த தவறா?”: டாக்டர். கஃபில் கானின் உருக்கமான கடிதம்

விடுப்பிலிருந்தேன் என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு?

இந்து சனாதன தர்மத்தின் காவலர் அசாராம்: குஜராத்தின் போலி என்கவுண்டர் போலீஸ் வன்ஸாரா சொல்கிறார்!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் அசாராம் பாபுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார் குஜராத்தின் முன்னாள் காவல் அதிகாரியான வன்ஸாரா.  குஜராத்தில் இஸ்ரத் ஜஹான் மற்றும் சொராபுதீன் ஷேக் ஆகியோர் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர் பன்ஸாரா. இவர் புதன்கிழமை அசாராம் பாபுக்கு சிறுமி வன்கொடுமை வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து சொல்லியிருக்கிறார். அதில், “சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்படவில்லை. அவரை தவறான முறையில் தொட்டார் … Continue reading இந்து சனாதன தர்மத்தின் காவலர் அசாராம்: குஜராத்தின் போலி என்கவுண்டர் போலீஸ் வன்ஸாரா சொல்கிறார்!

’கொல்லப்பட்டது சரிதான்; இல்லையென்றால் மனிதவெடிகுண்டாக மாறியிருப்பாள்”: சிறுமி கொலை குறித்து கேரள இளைஞர்

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் இந்துத்துவ கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட எட்டு வயது சிறுமிக்காக நாடே கண்ணீர் வடிக்கிறது. பொய்யாகவேணும் இந்துத்துவர்கள் பரிதாபம் காட்டுவதாக நடிக்கலாம். ஆனால், அவர்களுடைய வன்மம் ஆழ்மனதில் வேறூன்றி இருப்பதால், அது எவ்வகையிலாவது வெளிப்பட்டுவிடுகிறது. கேரளாவைச் சேர்ந்த இளைஞர் விஷ்ணு நந்தகுமார், கோட்டக் மகிந்திரா வங்கியின் துணை மேலாளர். அவர் தனது முகநூலில், சிறுமியின் கொலை குறித்து இப்படி எழுதிச் செல்கிறார்... “அந்தச் சிறுமி கொல்லப்பட்டது சரிதான்; இப்போது கொல்லப்படவில்லை எனில், … Continue reading ’கொல்லப்பட்டது சரிதான்; இல்லையென்றால் மனிதவெடிகுண்டாக மாறியிருப்பாள்”: சிறுமி கொலை குறித்து கேரள இளைஞர்

ஆஷிஃபாவை முன்வைத்து!: குட்டிரேவதி

பெண் - ஆண் மரபணுக்கள் வரை சென்று, வாஷிங்பவுடர் போட்டுக் கழுவும் அயர்ச்சியான வேலை நமக்கு இருக்கிறது. ஆனால் எளிய வழி ஒன்றும் இருக்கிறது.

இங்கே யார் தீவீரவாதிகள்?

பண்டிட்கள் பிஜேபியின் தலைமையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஊர்வலம் செல்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் பார் அசோஷியேஷனும் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்திருக்கிறது.

ஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை

ஆசிஃபாவை கோயில் பிரகாரத்தின் தூணில் கட்டி வைத்து மயக்க மருந்து கொடுத்து உணவளிக்காமல் வரிசையாக வன்புணர்ச்சி செய்தவர்கள் பிறகு ஏன் அவளது பிஞ்சுக் கால்களை முறித்தார்கள்?

ஆர்.எஸ்.எஸ். திருத்தி எழுதிய வன்கொடுமை சட்டம்; 21 பேரை பலிவாங்கியது!

தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் இருவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் ஆவர். நீதிபதியாவதற்கு முன்னர், ஆதர்ஷ் கே கோயல் RSS ன் வழக்கறிஞர்கள் பிரிவான All India Adiwakta Parishad என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்தவர். பல சர்ச்சைகள் உள்ள தீர்ப்பை எழுதிய ஊழல் பேர்வழியும் ஆவார்.

ராமர் கோயில் கட்டுவதுதான் ராம ரத யாத்திரையின் நோக்கமா?

ராமர் கோவில் காட்டுவது அவர்கள் நோக்கமல்ல. ராமர் பெயரால் நாட்டை பதற்றத்தில் வைத்திருப்பதும், இந்து - முஸ்லீம் பிரச்சினையை உண்டாக்குவதும், அதன் பேரால் இந்து வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் நோக்கம்.

லிங்காயத்து – இந்துக்கள் அல்ல – தனி மதம் – தமிழ் சமய சூழல்

பிரகாஷ் ஜே.பி. கர்நாடகாவில் பெருமளவில் உள்ள லிங்காயத்து பிரிவு மக்கள், தாங்கள் "ஹிந்துக்கள்" கிடையாது, எங்களுடையது பசவண்ணாவால் 12 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட தனி சமயம்.. எனவே எங்களை தனி மதமாக அறிவிக்கவேண்டும்.. என்ற கோரிக்கையை எழுப்பிவருகிறார்கள்.. இது திடீர் கோரிக்கையல்ல.. பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கையை லிங்காயத்து சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. காரணம், லிங்காயத்துகளின் கொள்கைகளும், வழிபாட்டு முறைகளும், வைதீக ஹிந்து முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.. இந்து சனதான வேதங்களையும் உபநிஷத்துகளையும், பிறப்பின் அடிப்படை … Continue reading லிங்காயத்து – இந்துக்கள் அல்ல – தனி மதம் – தமிழ் சமய சூழல்

இந்த எழுச்சி தேவை; சிலைகளை காக்க மட்டும் அல்ல!

யோ. திருவள்ளுவர் இந்த எழுச்சி தேவை. இது வெறுமனே சிலையை காக்க அல்ல. இழந்த உரிமைகளை மீட்கவும், இருப்பவற்றை இழக்காமல் பாதுகாக்கவும் தேவை. சரியான பாதைக்கு திருப்பினால் இத்தகைய எழுச்சிகள் உரிமைகளை காக்க துவக்கமாக அமையும். ஆனால் கலவரங்கள் உருவாகாமல், பிளவுகளை உருவாக்குவதை கவனமாகத் தடுக்க வேண்டும். ராஜா மட்டுமல்ல தமிழ்மக்களின் உரிமைகளை மோடியின் காலடியில் விற்கிற அதிமுக அரசுக்கும் பொறுப்புண்டு. அதனால் தான் எச்சு.ராஜாக்களால் இப்படி துள்ளமுடிகிறது. பெரியாரும், அம்பேத்கரும் எந்த மக்களையும் விலக்கம் செய்யவோ, … Continue reading இந்த எழுச்சி தேவை; சிலைகளை காக்க மட்டும் அல்ல!

”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”

”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்” என சமூக-அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் வே.மதிமாறன் தனது முகநூலில் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பதிவில்... “‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா 2014 ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது வைகோ வை உடன் வைத்துக்கொண்டே சொன்னார். அப்போது திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, நேரடியான பெரியார் இயக்கங்களே அமைதியாகத்தான் இருந்தன. ‘எதிர்க்கட்சியா இருக்கும்போதே நம்மள இவனுங்க ஒண்ணும் பண்ணல, இப்ப நாம ஆளும் கட்சி அதுவும் … Continue reading ”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”

”லெனின் சிலைபோல், பெரியாரின் சிலை உடைக்கப்படும்”: எதிர்ப்பால் பதிவை நீக்கிய எச். ராஹா

அண்மையில் திரிபுராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி 25 ஆண்டுகால ஆட்சியை பாஜகவிடன் இழந்தது. ஆட்சியைப் பிடித்த ஓரிரு நாட்களிலேயே பாஜகவினர் இடதுசாரி அரசு நிறுவிய இடதுசாரி புரட்சியாளர் லெனின் சிலையை அப்புறப்படுத்தினர். இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி கடும் கண்டனங்களுக்கு ஆளானது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில் ’திரிபுராவின் லெனின் சிலை உடைக்கப்பட்டது, நாளை சாதிவெறியர் ஈவெரா சிலை..” என பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளத்திலும் … Continue reading ”லெனின் சிலைபோல், பெரியாரின் சிலை உடைக்கப்படும்”: எதிர்ப்பால் பதிவை நீக்கிய எச். ராஹா

அரசு பள்ளி மாணவர்களை விட்டுவைக்காத ‘கன்யா பாத பூஜை’ திணிப்பு

இனியன் பிள்ளையார் பொறந்த நாளுக்கு பிள்ளையாரு வேசம், கிருஷ்ணன் பொறந்த நாளுக்கு கிருஷ்ணன் வேசம், விவேகானந்தா பொறந்த நாளுக்கு விவேகானந்தா வேசம், ஆசிரியர் தினத்துக்கு ஆசிரியரின் காலை கழுவி சுத்தம் செய்து சந்தனம, குங்குமம் தடுவுதல் எனத் தொடர்ந்து இப்போ ஏதோ "கன்யா பாத பூஜை" தினம்னு பத்து வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு சம வயதுடைய ஆண் குழந்தைகளை வைத்து பாத பூஜை செய்ய வைத்திருக்கிறது இந்துத்துவ அமைப்பு. இதில் இன்னொரு கூடுதல் அயோக்கியத் தனம் … Continue reading அரசு பள்ளி மாணவர்களை விட்டுவைக்காத ‘கன்யா பாத பூஜை’ திணிப்பு

அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்

அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார். “அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார். “பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. … Continue reading அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்

குஜராத் தேர்தல் ஸ்பெஷல்: ராமர் பாலம் 7000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் கட்டப்பட்டது!

குஜராத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நிலையில் ராமர் சேது பாலம் மனிதர்களால் 7000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக சொல்கிறது 'சயின்ஸ் சேனலின்' ஆய்வு. தனது ட்விட்டர் பக்கத்தில் 2.26 நிமிடங்களுக்கு வெட்டி தொகுக்கப்பட்ட வீடியோவை சயின்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த ட்விட்டை ஸ்மிருதி இரானி பகிர்ந்திருக்கிறார். https://twitter.com/ScienceChannel/status/940259901166600194 https://twitter.com/smritiirani/status/940285049521541120 சுப்ரமணியன் சாமி, ட்விட்டுக்கு கமென்ட் போடுகிறார். அந்த சேனலின் மற்ற ட்விட்டுகள் 100 லைக்கையோ, 100 ரீ ட்விட்டையோகூட கடக்கவில்லை. ராமர் பால ட்விட், 25 ஆயிரம் ரீ-ட்விட்டுகளை … Continue reading குஜராத் தேர்தல் ஸ்பெஷல்: ராமர் பாலம் 7000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் கட்டப்பட்டது!

கௌரி லங்கேஷ் வழக்கு விசாரணை முறையான முடிவை எட்டாது: கௌரி லங்கேஷின் நண்பரும் பத்திரிகையாளருமான சிவசுந்தர் பேச்சு

லங்கேஷ் பத்திரிக்கையில் பத்தி எழுத்தாளராகவும் ,கௌரி லங்கேஷூடன் இணைந்து பணி ஆற்றியவருமான சிவசுந்தர்  பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 8ஆம் தேதி பேசினார். தமிழ்நாடு பண்பாட்டு பேரவையும் , சென்னை பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2014 மே மாதம் முதல் 2017 மே மாதம் வரை ( மோடி பிரதமரானதிலிருந்து ) 154 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கௌரி லங்கேஷை கொன்ற  கொலையாளிகள் தண்டிக்கப்படலாம்.ஆனால்  இந்தக் கொலைகளை பின்னிருந்து இயக்கிய சூத்திரதாரிகள் கண்டுபிடுக்கப்படபோவதில்லை.எனது கவலையெல்லாம் … Continue reading கௌரி லங்கேஷ் வழக்கு விசாரணை முறையான முடிவை எட்டாது: கௌரி லங்கேஷின் நண்பரும் பத்திரிகையாளருமான சிவசுந்தர் பேச்சு

மத்திய தொல்லியல் துறையின் வன்மம்!

கீழடி ஆராய்ச்சியை மத்திய தொல்லியல் துறை நிறுத்திக்கொண்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: கீழடி ஆராய்ச்சியை நேர்மையோடும் அக்கறையோடும் அடுத்த கட்டத்திற் குக் கொண்டுசெல்ல வேண்டிய மத்திய தொல்லியல் துறை திடீரென்று, ஆய்வுக் குழிகளை மூடிவிட ஆணையிட்டதும் கூடாரங் களை அகற்ற ஆணையிட்டதும், இந்த … Continue reading மத்திய தொல்லியல் துறையின் வன்மம்!

உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்?

மாதவராஜ் இதைத்தான் பார்ப்பனியத்தின் ஜாதீய வன்மமாகவும், வக்கிரமாகவும் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பூனாவில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மேதா விநாயக் கோல் என்பவர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் துணை இயக்குனராக இருக்கிறார். அவர்கள் குடும்பத்தினர் நடத்திய சடங்குகளின் போது சமையல் வேலைக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த, திருமணமான பெண்தான் வேண்டும் என்று பார்த்திருக்கின்றனர். நிர்மலா குல்கர்னி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பெண் அவர்களுக்கு சமைத்துக்கொடுத்திருக்கிறார். சில நாட்கள் கழித்து நிர்மலா பிராமணர் அல்ல என்பதும் அவர் … Continue reading உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்?

‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தீவிர இந்துத்துவ எதிப்பாளராக இயங்கி வந்த பத்திரிகையாளர். கௌரி லங்கேஷ், 2008-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே: சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டி ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், அடுத்த நாளே, காவல்துறை வட்டாரங்கள் அவர்களை பற்றிய செய்தியை கசியவிட்டது. அதாவது அவர்கள் மூவரும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக அந்த … Continue reading ‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

கௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

மோடி என்ற ஒற்றை நபர்தான் அனைத்துக்கும் காரணமா?

நாளை மோடி என்ற முகமூடியை கழற்றி எரிந்துவிட்டு இதே இந்துத்துவ+தாராளமய கூட்டு வேறு அடையாளத்துடன் வரும்போது அதன் மீதும் நம்பிக்கை கொள்ள தொடங்குவார்கள் மக்கள்.

கழிப்பறையை எட்டிப் பார்த்தபோது அம்பலமானது மோடியின் ‘மகள்களை காப்போம்’ முழக்கம்

தொலைகாட்சி கேமராக்கள் முன்னால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பழங்குடியின பள்ளி மாணவிகள் ராக்கி கட்டிய உடனேயே, அவர்களில் சிலர் கழிப்பறைக்குச் சென்றபோது, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்; அவர்களை மிரட்டி பாலியல்ரீதியாக தாக்கியிருக்கிறார்கள்.

இந்து என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாது: மத்திய அரசு பதில்

எந்த அடிப்படையில் இந்து திருமணச் சட்டத்தை வைத்திருக்கிறீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார். இதுவரை பதில் இல்லை.

பெரியாரை பிச்சைக்காரராக்கி எஸ். வி. சேகர் மீம்!

நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வி. சேகர், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். பெரியாரை பிச்சக்காரராக சித்தரித்து ட்விட்டரில் போட்ட மீம் இவருடைய சமீபத்திய சர்ச்சை. https://twitter.com/SVESHEKHER/status/887179583266496512 எஸ். வி. சேகரின் இந்தப் பதிவுக்கு பலர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க. கனகராஜ் தன்னுடைய முகநூலில் எஸ். வி. சேகரின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “எஸ். வி.சேகர் எல்லை மீறுகிறார். கண்டிக்கிறேன் என சொல்வது மிகமிக மென்மையானது. பெரியாரை ஏற்றுக்கொண்ட கட்சிகள் ஒவ்வொன்றிடமும் ஒண்டியிருந்தவர் … Continue reading பெரியாரை பிச்சைக்காரராக்கி எஸ். வி. சேகர் மீம்!

”பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை!

“கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். முதல்முறையாக நானே அதை நேரடியாக அனுபவிக்கிறேன்,”

ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்!

அ. குமரேசன் ஏர் இந்தியா விமானங்களின் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்கிற சாதா வகுப்பினருக்கு (எகனாமிக் கிளாஸ்) அசைவ உணவு வழங்கப்படுவது கடந்த ஜூன் நடுவிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் பயணிகளுக்கு இனிமேல் அ-அசைவ உணவுகள் மட்டும்தானாம். ஆனால் உயர் வகுப்பினருக்கு (பிசினஸ் கிளாஸ், எக்சிகியூட்டிவ் கிளாஸ்) அசைவ உணவும் உண்டாம். அசைவ உணவுகள் அ-அசைவ உணவுகளோடு கலந்துவிடுகின்றன. அதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு என்கிறது நிர்வாகம். அத்துடன், உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை என்று … Continue reading ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்!

பெண்களை பாத பூஜை செய்ய வைத்த ஜார்க்கண்ட் முதல்வர்!

ஜார்க்கண்டின் முதல் பழங்குடி அல்லாத முதலமைச்சரான ரகுபர் தாஸுக்கு இரண்டு பெண்கள் பாத பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குருபூர்ணிமா தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜார்க்கண்ட் முதல்வரின் பாதங்களை ரோஜா இதழ்கள் சேர்த்த நீரால் இரண்டு பெண்கள் கழுவி, மந்திரங்களை உச்சரித்து வரவேற்பு அளித்தனர். பெண்களை பாத பூஜை செய்ய வைத்த முதல்வரின் செயலுக்கு பெண்ணிய செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் பிருந்தா, “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்கள் ஒரு முதல்வர் … Continue reading பெண்களை பாத பூஜை செய்ய வைத்த ஜார்க்கண்ட் முதல்வர்!

பார்ப்பன பெண்களுக்கு ஓர் நினைவூட்டல்: கிருபா முனுசாமி

நான் சிறுபிள்ளையாக இருந்த போது கூட 'மொட்டை பாப்பாத்தி' என்ற சொல்லாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த சொல்லாடல் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் திராவிடம்.