“நான் ட்விட்டரை விட்டேப் போகிறேன்”: ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ததால் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆதங்கம்

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மோடி அரசையும், இந்துத்துவ கும்பலையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பல சந்தர்ப்பங்களில் ராஜ்தீப் சர்தேசாயின் கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் உள்ள மோடி பக்தர்கள் கடுமையாக அவரை தாக்கி எழுதியுள்ளனர். இந்நிலையில் யாரோ சில சர்தேசாயின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து, தொடர்பில்லாத செய்திகளை வெளியிட்டு வந்தனர். இதனால் ட்விட்டர் கணக்கிலிருந்து விலகுவதாக சர்தேசாய் அறிவித்திருக்கிறார். சர்தேசாயின் முடிவு ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. சில ட்விட்டுகள்... https://twitter.com/RealHistoryPic/status/726398418541637632 https://twitter.com/brumbyOz/status/726378797755408385 https://twitter.com/AmanKayamHai/status/726369750960377856 https://twitter.com/iRonakGupta/status/726358849549045760

”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து

பங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமான மோதிலால் ஆஸ்வாலின் நிறுவனர் மோதிலால் ஆஸ்வால், கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். நாட்டில் உள்ள பாதி பொறியாளர்கள் இடஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் கட்டிய கட்டடம் இடிந்துவிழத்தான் செய்யும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்று சனிக்கிழமை காலை ட்விட்டியிருந்தார். இந்த ட்விட்டுக்கும் எதிர்ப்பு வலுக்கவே, சில மணி நேரங்களில் அது ஃபார்வேர்டு செய்யப்பட்ட குறுஞ்செய்தி, எனக் கூறி அதை நீக்கிவிட்டார். https://twitter.com/MrMotilalOswal/status/716133044181053441Continue reading ”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து