திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

திருவாரூரில் தனக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டியது குறித்தும் மதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: நேற்று ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாலை நான்கு மணிக்கு சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நான்கு இடங்களில் பேசிவிட்டு, அடுத்து சீர்காழி தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் உமாநாத், மயிலாடுதுறையில் தே.மு.தி.க. வேட்பாளர் அருள்செல்வன், பூம்புகார் த.மா.கா. வேட்பாளர் சங்கர், நன்னிலம் சிபிஎம் வேட்பாளர் … Continue reading திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

“கடைசி மூச்சுள்ளவரை நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருப்பேன்”: தினமலர் செய்திக்கு தா.பா. பதில்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியன் அதிமுகவில் இணையவிருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. இதை மறுத்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் . “அ.தி.மு.க.வில் நான் இணைய போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த வேளையில், எங்கள் ஊரில் நானும் மாணவர்கள், இளைஞர்கள் என மொத்தம் 8 பேர் கட்சிக்கு ஆதரவாக சுவரில் எழுதி, துண்டுப் பிரசுரம் தயாரித்தோம். … Continue reading “கடைசி மூச்சுள்ளவரை நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருப்பேன்”: தினமலர் செய்திக்கு தா.பா. பதில்

தேர்தல் பணிகளில் 94 வயது காம்ரேட்!

சி. மகேந்திரன் பேராவூரணி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் தமயந்தி திருஞானம் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் தயாரிப்பு பணிகளுக்காக தோழர் சிங்காரம் வந்திருந்தார். அவருக்கு வயது 94. மலேயா கம்யூனிஸ்டு கட்சியில் பணியாற்றியவர். கட்சி அங்கு தடைசெய்யப்பட்ட போது தப்பி தமிழகத்திற்கு வந்தவர். இன்று வரை கட்சி உறுப்பினர். ஊர் பேராவூரணி குருவிக்கரம்பை. நீண்ட காலத்திற்கு பிறகு அவரை சந்தித்த மகிழ்ச்சி எனக்கு.

பேராசிரியர் ஜி. என். சாய்பாபாவுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்

நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. போலியோவால் பாதிக்கப்பட்ட ஜி. என். சாய்பாபாவால், நகரும் நாற்காலியின் உதவியால்தான் இயங்க முடியும். இந்த நிலையில் அவர் அண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இவருடைய வழக்கறிஞர், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதன் அடிப்படையில் பூர்ணிமா என்ற சமூக செயல்பாட்டாளர் தாக்கல் செய்த பொதுநல மனுவை ஏற்றுக்கொண்ட … Continue reading பேராசிரியர் ஜி. என். சாய்பாபாவுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்

கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

 ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி … Continue reading கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!