தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் புறக்கணிக்கப்படுகிறாரா?

சந்திரமோகன் 18.2. 1860 ல் மீனவர் சமூகத்தில் பிறந்து வளர்ந்து,1903 ல் பவுத்தத்தை தேர்ந்து, சிறிது காலம் காங்கிரஸ் கட்சியின் சோசலிச முகாமில் பணியாற்றி, 1918 ல் இந்தியாவிலேயே முதல் தொழிற்சங்கத்தை - MLU மெட்ராஸ் லேபர் யூனியன் _ அமைத்து, 1923 ல் நாட்டிலேயே முதன் முறையாக மே தினத்தை கொண்டாடி, தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியை HLKP உருவாக்கி, பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, அதன் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சிங்காரவேலர்; நாடு … Continue reading தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் புறக்கணிக்கப்படுகிறாரா?

12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிபெண் 196.5 பெற்றிருந்த அரியலூர் மாணவி அனிதா வின் தற்கொலை சாவு நெஞ்சை பிளக்கும் செய்தியாக கிடைத்து அதிர்ச்சியுற்றோம். சுமைப்பணித் தொழிலாளியான சண்முகம், தாயை இழந்த பிள்ளையான அனிதாவின் மருத்தவ கனவை நிறைவேற்ற அல்லும், பகலும் பாடுபட்டார். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்த அனிதா … Continue reading 12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

கேம்பஸ் இண்டர்வியூ ஏமாற்று: எல்& டி நிறுவனத்தைக் கண்டித்து மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டம்!

சி. மகேந்திரன் எல் அண்ட் டி தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பணி ஒப்பந்த அத்து மீறலை எதிர்த்து சென்னை சோழிங்கநல்லூரில் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளின் போராட்டம். பொறியியல் கல்லூரிகளில் placement என்பதற்காக ஒரு கட்டணம் பெறுகிறார்கள். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பணி வாங்கித் தருவதில்லை. இதில் பெருங்கொள்ளை நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாது அண்மையில் எல் அண்ட டி நிறுவனத்தில், தேர்வு செய்த மாணவர்களை பணியில் அமர்த்தாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து அவர்களை வேலையற்றவர்களாக ஆக்கியுள்ளார்கள். வேறு வேலைக்கும் … Continue reading கேம்பஸ் இண்டர்வியூ ஏமாற்று: எல்& டி நிறுவனத்தைக் கண்டித்து மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டம்!

“இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ  மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கருத்து: தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை. இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும். மே மாதம் 16 ம் தேதி இயற்கை மழை பொழிந்தது. அதற்கு முன்னதாக ஊழல் மூலம் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு ஏற்கெனவே ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற பணமழையை பொழிந்தன. அண்ணா , காமராஜர் போன்ற தலைவர்கள் … Continue reading “இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

“எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது! நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல … Continue reading “எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

ஒன்றரை லட்சம் கடன் பாக்கிக்காக கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன் வீடு ஜப்தி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் சென்னையில் புதனன்று (மே 4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கல்விக் கடனில் மிக மோசமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. கடன் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் பலரை கடனை திருப்பி கட்டக்சொல்லி துன்பப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். என்றாலும் இந்தமாதியான பாதிப்பு தனிப்பட்ட முறையில் எனக்கே ஏற்பட்டுள்ளது. என்னுடைய மகள் கல்விக் கடன் பெற்று … Continue reading ஒன்றரை லட்சம் கடன் பாக்கிக்காக கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன் வீடு ஜப்தி!

வேட்பாளர் அறிமுகம்: பழங்குடிகளின் தோழர் பி. எல். சுந்தரம்!

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார் பி. எல். சுந்தரம். இவர் தற்சமயம் இந்தத் தொகுதியில் எம் எல் ஏவாக இருக்கிறார். பல வளர்ச்சிப் பணிகள் காரணமாக தொகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்ற இவரைப் பற்றி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள் சப்பே கொகலு என்ற பழங்குடியின கதைத் தொகுப்பின் ஆசிரியர், லட்சுமணன் ஓடியன் சொல்கிறார்: ஒரு வார்டு கவுன்சிலரைக்கூட எளிதில் சந்திக்கமுடியாத தொகுதியில் ஒவ்வொருவீடாய் ஒவ்வொரு குடும்பமாய் ஒவ்வொரு மனிதராய் … Continue reading வேட்பாளர் அறிமுகம்: பழங்குடிகளின் தோழர் பி. எல். சுந்தரம்!

சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு:முத்தரசன் போட்டி இல்லை

தமிழக தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1.திருவாரூர்- மாசிலாமணி 2.பென்னாகரம்- நஞ்சப்பன் 3.தளி-ராமச்சந்தின் 4.பவானிசாகர்- சுந்தரம் 5.ஸ்ரீவில்லிபுத்தூர்- லிங்கம் 6.வால்பாறை(தனி)- மணிபாரதி 7.திருந்துறைப்பூண்டி உலக நாதன் 8.குடியாத்தம்(தனி) லிங்கமுத்து 9.சைதாப்பேட்டை ஏழுமலை 10.அவினாசி(தனி)- எம்.ஆறுமுகம் 11.சிவகங்கை- எஸ் .குணசேகரன் 12.மாதவரம்-ஏ.எஸ்.கண்ணன் 13.வீரபாண்டி-மோகன் மதுரை கிழக்கு-காளிதாசன் 15.திருப்பரங்குன்றனம் - கந்தசாமி 16.ஒட்டன்சந்திரம் -சந்தானம் 17.பேராவூரணி- தமயந்தி திருஞானம் 18.திருவரங்கம்- புஷ்பம் வைத்திய நாதன் 19.கீழ் பெண்ணத்தூர்- ஜோதி 20.அறந்தாங்கி- லோகநாதன் 21.அருப்புக்கோட்டை-செந்தில்குமார் 22.வாசுதேவநல்லூர்-சமுத்திரக்கனி 23.நாகப்பட்டினம்- … Continue reading சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு:முத்தரசன் போட்டி இல்லை

தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

தமிழ்நாடு சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, தமிழகத்தின்  அடித்தட்டு மக்களுக்கும் அதிக பரிச்சயமானவர். தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய பிரச்சனைகளுக்கும், பாராளுமன்றத்தில் உரத்து ஒலிக்கும் ஒரு சில குரல்களில் டி.ராஜாவின் குரலும் முக்கியமான ஒன்று. அவரின் மகள் அபராஜிதா ராஜாவின் பெயர்தான்,  கடந்த இரண்டு நாட்களாக டெல்லி பத்திரிக்கைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. "புலிக்கு பிறந்தது" என்ற சொல்லுக்கு சிறிதும் பிழை இல்லாமல் வளர்ந்த பெண்ணான அபராஜிதா, ஐந்தாண்டுகளுக்கு முன், … Continue reading தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?

நாட்டின் பிரபலமான, டெல்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (J.N.U) கடந்த செவ்வாய்க்கிழமை,  ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி, மற்றும் பாரதீய … Continue reading தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?

மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ, தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் அ. குமரேசனுக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி... மக்கள் நலக் கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தக் கூட்டணி அதிமுக-வின் ‘பி’ டீம் என்று கூட சொல்கிறார்கள். திமுக-வுக்கு இவ்வளவு ஆத்திரம் வரக் காரணம் என்ன? அதிமுக-வை வீழ்த்துவதுதான் நோக்கம் என்றால் திமுக பக்கம்தான் வரவேண்டும் என்கிறார்களே?அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற கோபம் தங்களுக்கு ஆதாயமாக மாறும் … Continue reading மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?

தோழர் பரதனின் சொத்து குவிப்பு பட்டியல் இதோ…

80 வருடங்களுக்கு மேலாக கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்த,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் தோழர் பரதனின் மறைவுக்கு பின்னர், அவருடைய சொத்துக்கள் என்று கருதப்பட்டவைகளின் பட்டியலும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது *துருபிடித்த அலமாரி *ஒரு ஜோடி ஷூ *சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று *அவருடைய அடையாளமான கோட் ஒன்று *பழுதடைந்த இரவு விளக்கு ஒன்று *ஒரு பிளாஸ்க் இந்த பொருட்களுடன்தான் அவர் கடந்த ஐந்தாண்டுகளாக வாழ்க்கை கடத்தி இருக்கிறாரா ? என்று நெகிழ்ச்சி குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. … Continue reading தோழர் பரதனின் சொத்து குவிப்பு பட்டியல் இதோ…

செவ்வணக்கம் தோழர் பரதன்: சீத்தாராம் யெச்சூரி

தோழர் பரதன், ஒரு ஓய்வறியா கம்யூனிஸ்ட் போராளி. இந்திய மக்களின் நலனுக்கான போராட்டத்தில் மாறாத உறுதியையும், தீர்மானகரமான பற்றினையும் ஒருபோதும் கைவிடக் கூடாது என்றமதிப்புமிக்க பாடங்களை நமக்கு கற்றுத் தந்தவர். இந்திய அரசியலில், அரசியல் நெறி என்பது மிகவேகமாக சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியலின் மாண்பு என்ன என்பது பற்றியும், அரசியல் என்பதை பணம் சம்பாதிக்கிற தொழில் என்ற அளவிற்கு இழிவானதாக கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது பற்றியும், ஆனால் உண்மையில் அரசியல் என்பது சமூகத்திற்கு நாம் ஆற்றும் … Continue reading செவ்வணக்கம் தோழர் பரதன்: சீத்தாராம் யெச்சூரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார். அவருக்கு வயது 92.  டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஏ.பி.பரதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஏ.பி.பரதன் பதவி வகித்தவர்.

வடசென்னை பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார் முத்தரசன்

வடசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வட சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள ஜகஜீவன் ராம் நகர்,முல்லை நகர், தேவர் நகர்,சத்திய மூர்த்தி நகர், சுடுகாடு அருகில் உள்ள தற்காலிக குடியிருப்பு முகாம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில குழு செயலாளர் இரா.முத்தரசன் புதன்கிழமை காலை சந்தித்தார். … Continue reading வடசென்னை பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார் முத்தரசன்

வெள்ளத்துக்கு அதிமுக, திமுக அரசுகளே காரணம்: மக்கள் நலக் கூட்டணி

திமுக, அதிமுக கட்சிகள் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த தவறியதால் தான், வெள்ளத்தால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நலக் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், … Continue reading வெள்ளத்துக்கு அதிமுக, திமுக அரசுகளே காரணம்: மக்கள் நலக் கூட்டணி