ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!

கதிர்வேல் ராணுவத்துக்கு ஆள் எடுக்க எழுத்து தேர்வு நடந்தது பிகாரில். ஆயிரம் வாலிபர்களுக்கு மேல் பேனா பென்சிலுடன் துள்ளி வந்தார்கள்.எல்லாரும் முதலில் சட்டையை கழற்றுங்கள் என்றார் அதிகாரி. அதிர்ச்சி அடைந்தாலும் அப்படியே செய்தனர் இளைஞர்கள். பேன்டையும் கழற்றுங்கள் என்றார் அதிகாரி. காரணம் புரியாமல், வேறு வழி தெரியாமல் கழற்றினார்கள். ஜட்டியுடன் மைதானத்தில் உட்கார வைத்து வினாத்தாளை கையில் கொடுத்து தேர்வு எழுத சொன்னார் அதிகாரி. மீடியாவுக்கு தகவல் போய் ஓடி வந்தார்கள். “காப்பி அடிக்காமல் தடுக்க எல்லாரையும் தனித்தனியாக … Continue reading ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!

சியாச்சினில் ஒவ்வொரு மாதமும் 2 இராணுவ வீரர்கள் மரணமடைகிறார்கள்; எதிரியால் அல்ல; பனியால்!

இமயமலைத் தொடரில் இருக்கும் சியாச்சின் பனிமலைச் சிகரம், உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் போர்முனை என்று வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது இந்தப் பனிச்சிகரம். மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். சியாச்சின் பனிப்புயலில் சிக்கி இந்த மாதம் 10 வீரர்கள் பலியாயினர். இந்தியாவின் ஒட்டுமொத்த கவனம் பெற்றிருக்கிறது இந்த மரணங்கள். ஆனால், இராணுவத்தைப் பொறுத்தவரை இது இயல்பாக நடக்கும் விஷயம் … Continue reading சியாச்சினில் ஒவ்வொரு மாதமும் 2 இராணுவ வீரர்கள் மரணமடைகிறார்கள்; எதிரியால் அல்ல; பனியால்!