பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் மாநில ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் உள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு … Continue reading பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திடல் வேண்டும். அனைத்து பகுதி மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்திட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்து … Continue reading இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

“சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (16.05.2016) நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம். இதன் மூலம் 15வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் தருணத்தில் எந்த வகைப்பட்ட கொள்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் எந்த கொள்கை வழிப்பட்டு அரசை வழி நடத்தினார்கள்? மக்களின் நலன் … Continue reading “சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

கருத்துக் கணிப்புகள்: தேர்தல் ஆணையம் அமைதி காப்பது ஏன்?

கருத்துக்கணிப்புகள் வெளியிட தடையிருந்தும் தற்போது வெளியாவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் அமைதி காப் பது ஏன் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்(2016) தொடர்பாக 04.04.2016 காலை 7 மணி முதல் 16.05.2016 மாலை 6.30 மணி வரையிலான காலத்தை வாக்குப்பதிவிற்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, அதனை அச்சு மற்றும் மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது … Continue reading கருத்துக் கணிப்புகள்: தேர்தல் ஆணையம் அமைதி காப்பது ஏன்?

கோவையில் மீண்டும் தலையெடுக்கும் காவிபயங்கரவாதம்: கம்யூனிஸ்ட் இளைஞர் படுகொலை

  கோவையில் இஸ்லாமிய மக்களின் மீது வன்மத்தை வைத்து வளர்க்கப்பட்ட காவி பயங்கரவாதம் கம்யூனிஸ்ட் இயக்க இளைஞர் ஒருவரை பலிவாங்கியிருக்கிறது. “கோவை மாநகரம் ‪ஆவரம்பாளையம்‬ தெற்கு வீதி எண் நான்கில் வசித்து வருபவர் எஸ்.சதீஸ்குமார் (வயது 20). இவர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில்(AIYF), தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12.04.2016 அன்று, மாலை தெற்கு வீதி பாரதி படிப்பகத்தில் இருந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த காவி கும்பலை சேர்ந்த அருண் … Continue reading கோவையில் மீண்டும் தலையெடுக்கும் காவிபயங்கரவாதம்: கம்யூனிஸ்ட் இளைஞர் படுகொலை