“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”

ஆழி செந்தில்நாதன் தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று … Continue reading “தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”

ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!

ஆழி. செந்தில்நாதன் 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 - உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்... அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய … Continue reading ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!

தனிநாடு கேட்டு முகநூலில் எழுதியதற்காக கைது; பாசிச நடவடிக்கைக்கு மேலும் ஓர் உதாரணம்

ஆழி செந்தில்நாதன் திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை. ஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு. தனிநாடு வேண்டும் எனக் … Continue reading தனிநாடு கேட்டு முகநூலில் எழுதியதற்காக கைது; பாசிச நடவடிக்கைக்கு மேலும் ஓர் உதாரணம்

பெரியார் சிலை உடைக்கப்பட்டால்…

இந்த மண் சமூக நீதிக்கும் தமிழ் அரசியலுக்குமான வேர்ப்பிடிப்புள்ள மண். அதனால்தான் இந்த மண்ணில் பெரியாரும் அண்ணாவும் வெற்றிபெறமுடிந்தது. அந்த மண் இன்னும் ஆரியத்துக்கு எதிரான தமிழ் மண்ணாகத்தான் இருக்கிறது.

நமது மாவோயிஸ்ட் தோழர்கள் எங்கே?

ஆழி செந்தில்நாதன் திரிபுராவில் சிபிஎம்மின் தோல்வியை முன்வைத்து, மார்க்சிய லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த தோழர் எழுதியப் பதிவு ஒன்றை நேற்றிரவு பார்த்தேன். அந்தப் பதிவு சிபிஎம்மை விளாசித்தள்ளியது. சிபிஎம்மின் தவறுதான் பாஜக வந்ததற்கு காரணம் என்று கூறிய தோழர், தன்னுடைய தீர்வு என்று எதையும் முன்வைக்கவில்லை. பிரகாஷ் காரத்தின் தவறான முடிவுகள்தான் இன்று சிபிஎம்மை ஒழித்துக்கட்டுகிறது என்று மா லெ இயக்கப் பின்னணி கொண்ட தோழர்கள் சிலரும் கூறுகிறார்கள். நல்லது, நல்லது. இந்தியா பாசிச … Continue reading நமது மாவோயிஸ்ட் தோழர்கள் எங்கே?

முட்டை நிறுத்தம், சத்துணவு திட்டம் நிறுத்தப்படுவதற்கான முன்னோட்டம்!

ஆழி செந்தில்நாதன் சத்துணவுத் திட்டத்தில் முட்டை நிறுத்தம். விரைவில் சத்துணவுத் திட்டமே நிறுத்தம். எல்லாம் இப்படித்தான் தொடங்கும். சத்துணவுத் திட்டத்துக்கு முட்டைகளில் கொள்முதல் செய்வதில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது, எனவே முட்டைகள் அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். எல்லாம் இப்படித்தான் தொடங்கும். ரேஷன் கடைகளில் தொடங்கியதைப்போல. பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பது வெகுவிரைவில் நிறுத்தப்படலாம் என்கிற அச்சம் இந்துத்துவ இந்திய அரசை அறிந்தவர்களுக்கு ஏற்படாமல் இருக்காது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சத்துணவுதான். அந்த எம்ஜிஆரின் நூற்றாண்டில், … Continue reading முட்டை நிறுத்தம், சத்துணவு திட்டம் நிறுத்தப்படுவதற்கான முன்னோட்டம்!

மும்மொழித் திட்டத்தை தலைகீழாக்கும் மமதா!

ஆழி செந்தில்நாதன் சற்று முன்பு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி முகநூல் வழியாக எழுதியிருப்பது இது.மேற்கு வங்கத்தில் வங்காள மொழியைக் கட்டாயாமாக்கிய கையோடு தனது மொழிக்கொள்கையை - அதாவது கல்வித்துறை சார்ந்த மொழிக்கொள்கையை - மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் மமதா. அதில் மமதா பானர்ஜியின் வியூகத்தைப் பாருங்கள். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே மும்மொழித் திட்டம் இருக்கிறது. அதன்மீது அவர் கைவைக்கவில்லை. ஆனால் அதன் அடிப்படையையே மாற்றிவிடுகிறார். "மூன்று மொழிகளைப் படியுங்கள், ஆனால் வங்க மொழி அதில் ஒன்று. … Continue reading மும்மொழித் திட்டத்தை தலைகீழாக்கும் மமதா!

பெண்கள் ஏன் ஜெயலலிதாவை ரோல்மாடல் என்கிறார்கள்?

ஆழி செந்தில்நாதன் ஜெயலலிதாவைப் பற்றி பாராட்டுகளாகவும் விமர்சனங்களாகவும் ஆயிரம் எழுதலாம். ஒரு விஷயத்தில் மட்டும் தமிழகமே உடன்படுகிறது என்பதை என் வீட்டில் நடக்கும் உரையாடல்கள் முதல் நூற்றுக்கணக்கான முகநூல் குறிப்புகள் வரை பார்க்கிறேன். தமிழ்நாட்டுப் பெண்களின் சார்பாக - மூன்றரை கோடி பெண்களின் சார்பாக - எல்லா ஆண்களுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை அவர் நடத்திக்காட்டியிருக்கிறார். அவரது யுத்தம் உளவியல் ரீதியில் தமிழகப் பெண்களை ஆட்கொண்டிருக்கிறது. அவரது வேறு எந்த சாதனை, வேதனைகளைவிட இந்த ஒன்று தமிழகப் … Continue reading பெண்கள் ஏன் ஜெயலலிதாவை ரோல்மாடல் என்கிறார்கள்?