நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!

மாதவராஜ் நடிகர் ராமராஜனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழக ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, இந்த நாட்டின் பிரதமரின் போலிக் கல்விச் சான்றிதழ் குறித்த விவாதங்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாய் ஆம் ஆத்மி கட்சி இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது, … Continue reading நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!

“பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

அ. குமரேசன் ஐந்தாறு பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் வந்தார்கள். திடீரென்று “வந்தே மாதரம்” என்று கோஷம் போட்டார்கள். பிறகு மார்க்சிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தி கோஷம் போட்டார்கள். நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை மீது கறுப்பு மையால் “பாகிஸ்தான் ஏஜென்ட்” என்று எழுதினார்கள். கற்களை வீசி தாக்கினார்கள். ஓடிப்போனார்கள். ஒடியவர்களில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல, … Continue reading “பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

சைக்கிளில் வரும் அமைச்சர்கள்; தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும்?

டெல்லியில் ஆம் ஆம்தி தலைமையிலான அரசு காற்று மாசை குறைப்பதற்கு அமல்படுத்தியிருக்கும் ஒற்றை-இரட்டைப் படை வாகனப் பயன்பாட்டுத் திட்டத்துக்கு அங்கே வரவேற்பு கிடைத்திருக்கிறது. டெல்லி முதலமைச்சர் தான் பரிந்துரைத்தது மட்டுமில்லாமல், தானே உதாரணமாக மாறி ஒரு காரை பகிர்ந்து கொண்டு அலுவலகத்துக்கு பயணம் செய்கிறார். டெல்லி துணை முதல்வர் சிசோடியா, சைக்கிளில் பயணம் போகிறார். அமைச்சர்கள், அதிகாரிகள் பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸ் முதல் பாஜக வரையிலான கட்சிகள் இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்று … Continue reading சைக்கிளில் வரும் அமைச்சர்கள்; தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும்?

பெருவணிக நிறுவனங்களாக மாறிவிட்ட ஊடகங்கள், பெருநிறுவனங்களின் ஊழல்களைக் கண்டுகொள்வதில்லை: சாய்நாத்

தி ஹிந்து(ஆங்கிலம்)வில், கிராமப்புற செய்திகளின் ஆசிரியராக பணியாற்றிய சாய்நாத், பின் அங்கு ஏற்பட்ட மனகசப்பினால் வேலையை விட்டு சென்றார். ஊடகத்துறையில் ஊழல் எந்தளவு புரையோடி இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாய்நாத் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். ஊடகத்தில் தற்போது நிலவும் சூழலில்,  சேவியர் கல்லூரி நடத்திய, “ஊடக மாநாட்டில்” ஊடகவியலர்களின் பொய்கள் – கட்டமைக்கப்பட்ட நிர்பந்தம் – என்ற தலைப்பில் சாய்நாத் ஆற்றிய உரையின் தொடர்ச்சி.... முந்தைய பகுதி இந்திய பத்திரைக்கை மற்றும் ஊடகத் … Continue reading பெருவணிக நிறுவனங்களாக மாறிவிட்ட ஊடகங்கள், பெருநிறுவனங்களின் ஊழல்களைக் கண்டுகொள்வதில்லை: சாய்நாத்