“ஊருக்கு நல்லது சொல்லும் விகடன், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கலாமா?”: தொழிலாளர்களின் குமுறல் https://youtu.be/0H3PqYbDCec
குறிச்சொல்: ஆனந்த விகடன்
கார்ப்பரேட் விகடனின் ஹைடெக் அரசியல்!
தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத உன்னதப் பொய்யர்களின் கூடாரமான பாஜகவை, அதன் புறக்கடை அரசியலை எந்த விவாதத்துக்கும் உட்படுத்தாமல், மொத்தப் பழியையும் மாநில ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மீது சுமத்தி அரசு எந்திரத்தைப் பக்குவமாகப் பாதுகாக்கிறது பம்மாத்து விகடன்.
“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்
சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், … Continue reading “திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்
விகடனின் ரெமோ விமர்சனம்; அதை நீங்க சொல்லலாமா எனக் கேட்கும் சமூக ஊடகம்!
அண்மையில் வெளியான ‘ரெமோ’ படத்துக்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன் இதழ், இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு கேடு என எழுதியது. இதற்கு சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். அதன் தொகுப்பு இங்கே: Karthick Gopalakrishnan: சன் டிவியில் கொலை செய்ய சொல்லிக்கொடுக்கிறது விகடன் சீரியல். டைம் பாஸ் விகடன் , மக்கள் மனதை விஷமாக்கும் தொடர்களுக்கு ரெமோ பரவாயில்லை. இவர்கள் ரெமோவிற்கு மார்க் கொடுக்கிறார்கள். ரெமோ உலகக் காவியம் எல்லாம் இல்லை. அது குப்பையே, … Continue reading விகடனின் ரெமோ விமர்சனம்; அதை நீங்க சொல்லலாமா எனக் கேட்கும் சமூக ஊடகம்!
“தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை
அண்மையில் கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷை விடுதலை செய்யக்கோரியும் அவரை சிறையில் அடித்த காவல்துறையினரைக் கண்டித்தும் சமூக வலைத்தளங்களில் மக்கள் ஆதரவாக எழுதிவருகிறார்கள். இதையும் படியுங்கள்: யார் இந்த பியூஸ் மனுஷ்? இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, தன்னுடைய முகநூலில் பியூஸ் மனுஷ் குறித்து கீழ்கண்ட பதிவை பகிர்ந்திருந்தார்: பியூஷ் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் தொடர்ந்து எழுதிவருவதை அமைதியாகவே கவனித்து கொண்டிருந்தேன். ஆனால், நண்பர் ஒருவர் இன்று வான்காரி … Continue reading “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை
“இதுதான் ஊடக அறமா?”:ஆனந்தவிகடனுக்கு ஒரு வாசகரின் கடிதம்!
ஜெ. சுப்ரமணியன் ஆனந்த விகடனுக்கு வணக்கம் ஆனந்தவிகடனின் பலவருட வாசகன் என்ற உரிமையிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதழியல் கற்றுத்தரும் ஆசிரியன் என்ற பொறுப்பிலும் இந்த பதிவை இடுகிறேன். கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டில் நடந்த 2ஜி ஊழல் குறித்த தொடர்ச்சியாக எழுதி தமிழ் வாசகர்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்த்ததில் விகடனுக்கு பெரிய பங்குண்டு. அது மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் (மதுரையில் கொஞ்சம் அதிகம்) தி.மு.க.வினர் நடத்திய அராஜகங்களை வெட்ட வெளிச்சமாக்கியது விகடன். அதேபோல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த … Continue reading “இதுதான் ஊடக அறமா?”:ஆனந்தவிகடனுக்கு ஒரு வாசகரின் கடிதம்!
”காலி நாற்காலிகளை போட்டோ எடுக்கிறியா ?; நக்சல் கேஸ்ல ஜெயில்ல போட்டுருவேன்”: ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் விகடன் நிருபரிடம் போலீசார் மிரட்டல்
சென்னை தீவுத்திடலில் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தை படமெடுக்க முயன்ற விகடன் போடோகிராபர் நிவேதன் போலீசாரால் தாக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளரை அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று மாலை தீவுத்திடலில் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை தீவுத்திடலில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். இந்த கூட்டத்தை கவரேஜ் செய்வதற்காக பத்திரிக்கையாளர்கள் டிவி ஊடகத்தை சேர்ந்தவர்கள் ஏகப்பட்ட … Continue reading ”காலி நாற்காலிகளை போட்டோ எடுக்கிறியா ?; நக்சல் கேஸ்ல ஜெயில்ல போட்டுருவேன்”: ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் விகடன் நிருபரிடம் போலீசார் மிரட்டல்
“வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்
ஆனந்த விகடனில் கடந்த வாரம்(6.4.2016)வெளியான ‘போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை’ என்ற கட்டுரை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவும் இடதுசாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ப. திருமாவேலன் ‘வைகோவின் புரிதலும் எனது விளக்கமும்!’ என்ற தலைப்பில் தன்னுடைய முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அதில், “மக்கள் நலக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக வைகோ பேசிய பேச்சுகளை விமர்சித்து ஆனந்த விகடன் இதழில், 'போர் வாள் அட்டக்கத்தி ஆன … Continue reading “வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்
ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?
யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். … Continue reading ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?
ஜுனியர் விகடன் சாதியத்துடன் மு.க.ஸ்டாலின் படத்தை வெளியிட்டதாக கண்டனம்!
ஜுனியர் விகடன் சாதியத்துடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் படத்தை வெளியிட்டதாக கண்டனம் கிளம்பியுள்ளது. எம் எல் ஏக்களின் செயல்பாடுகள் குறித்து தொடர் வெளியாகிறது. இதில் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி குறித்து சமீபத்திய இதழில் கட்டுரை வெளியானது. மு.க. ஸ்டாலின் தானே தனக்கு சிகையலங்காரம் செய்துகொள்வது போன்று வரையப்பட்டு பிரசுரமானது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. சிலர் கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர். அவர்களைத் தவிர்த்துவிட்டு Ashok Thamizhan என்பவரது முகநூல் பதிவை பகிர்கிறோம்.. “தி.மு.க பொருளாளர் … Continue reading ஜுனியர் விகடன் சாதியத்துடன் மு.க.ஸ்டாலின் படத்தை வெளியிட்டதாக கண்டனம்!
#விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!
வா. மணிகண்டன் எழுத்தாளர் ஞாநி, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் தாங்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி வென்றுவிடும் என்று இப்பொழுது வரைக்கும் நான் நம்பவில்லை என்றாலும் திமுக, அதிமுகவிற்கு மாற்று எதுவுமேயில்லை என்ற நிலை இல்லை. மூன்றாவதாக ஒரு ஆள் இருக்கிறார் என்பதே சந்தோஷம்தான். ஆனால் மூன்றாவதான ஒரு ஆளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தர்ம அடி அடிப்பதைத்தான் காணச் சகிக்கவில்லை. மனுஷ்ய புத்திரன் மாதிரியானவர்கள் வைகோவையும் மக்கள் நலக் … Continue reading #விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு கட்டுரை: விகடனுக்கு சில கேள்விகள்!
சந்திரசேகரன் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் தாமதம் எதுவும் இல்லை என பொறியாளர் சொன்னதாக விகடனில் கட்டுரை வெளியாகியுள்ளது. http://bit.ly/1kLc0na http://www.vikatan.com/…/57266-secret-behind-sembarambakkam… //ஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. // என்று பொறியாளர் கூறியுள்ளார். *இதற்காகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 900 என்பது திடீர்னு நேரடியாக 26 ஆயிரம் ஆகுமா அல்லது படிப்படியா ஆயிரம், ரெண்டாயிரம்னு ஏறுமா? *அந்த கூடுதல் தண்ணி திடீர்னு செம்பரம்பாக்கம் … Continue reading செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு கட்டுரை: விகடனுக்கு சில கேள்விகள்!
#சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்
விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் பத்திரிகையாளர்கள் ஞாநி, விஜயசங்கர், மணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விவாதத்தில் ஞாநி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது திமுகவில் இணைந்திருக்கும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், இதுகுறித்து வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ‘ அவருக்கு வயதாகிவிட்டது. அவரை அவரது குடும்பத்தினர் இம்சித்து அரசியலில் நீடிக்க செய்கிறார்கள். இது மனிதாபிமானமல்ல’ … Continue reading #சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்
அதிகம் விற்பனையாகும் இதழ் ஆனந்த விகடனா? குமுதமா?: இதோ தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் 10 இதழ்களின் பட்டியல்!
இந்தியாவில் வெளியாகும் பத்திரிகைகளின் விற்பனை குறித்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியாகிறது. 2014-15ஆம் ஆண்டுக்கான அறிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. இதழ்களின் விற்பனையைப் பொறுத்தவரையில் ஆனந்த விகடனுக்கு குமுதத்துக்கும் விற்பனையில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனந்த விகடன் குமுதத்தைவிட இரண்டாயிரம் பிரதிகள் அதிகம் விற்பனையாகிறது. பெண்கள் இதழ்களில் அவள் விகடன் முதலிடம் பிடித்திருக்கிறது. புலனாய்வு இதழ்களில் ஜூனியர் விகடன் முதலிடம் பிடித்திருக்கிறது. தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் பத்து இதழ்களின் பட்டியல்.. 1ஆனந்த விகடன் : 2,44,072 2. குமுதம் … Continue reading அதிகம் விற்பனையாகும் இதழ் ஆனந்த விகடனா? குமுதமா?: இதோ தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் 10 இதழ்களின் பட்டியல்!