தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை

கொற்றவை என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை ராஜினாமா செய்த 42, 43 வயது வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்… அவ்வளவே). எனக்கு 10, 11 வயது இருக்கும் … Continue reading தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை

முன்னாள் காவல் துறை அதிகாரியின் பொறுப்புணர்வு இதுதானா?

பா. ஜீவசுந்தரி  மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை சமமாக நடத்தும்படியும், உடைமைப் பொருளாக நினைக்காமல், தாவர, சங்கம சொத்துக்களாக மதிப்பிடாமல் ரத்தமும் சதையும் உயிரும் உள்ள சக மனுஷியாக, மனிதப்பிறவியாக நினையுங்கள் என்பதை வலியுறுத்தலாம். அதை விடுத்து பாதுகாப்பு என்று பெண்ணை வீட்டுக்குள் முடக்கும் நடைமுறைகள் எரிச்சலூட்டுகின்றன. படங்களைப் பதிவிடும்போது அதை யார் பார்க்கலாம் என்ற விதிமுறைகளைப் பெண்கள் பின்பற்றினால் போதும். … Continue reading முன்னாள் காவல் துறை அதிகாரியின் பொறுப்புணர்வு இதுதானா?

ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

Rajasangeethan John   ஆண் தவறு செய்திருக்கலாம். பெண் தவறு செய்திருக்கலாம். கூலி வேலையாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். ஆனால் எங்கோ ஏதோ ஒரு சிக்கல் நேர்ந்திருக்கிறது. ஏதோ இருவரின் வாழ்க்கை பாட்டங்களுக்கு தடை விழுந்திருக்கிறது. அந்த தடைக்கு அடுத்தவர் காரணம் என்ற புள்ளியில் தொடங்குகிறது குற்றத்துக்கான சிந்தனை. இந்த குற்றச்சிந்தனை பெருகுவதற்கு பல சமூக நடைமுறைகள் உதவுகின்றன. தடையிலிருந்து சுலபமாக வெளியே வர முடியாத அளவுக்கு அழுத்தம் தரும் சமூக நம்பிக்கைகள். சாதிகள், மதங்கள். அதை … Continue reading ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

பெண்கள் குடும்பத் தலைவர்களாக ஆக முடியுமா?: தர்ம சாஸ்திரங்களை முன்னிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லியைச் சேர்ந்த ஒரு வர்த்தகரின் மூத்த மகளான சுஜாதா ஷர்மா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "தனது தந்தை மறைந்த பின்னர் அவரது 3 தம்பிகள் சொத்துக்களை நிர்வகித்து வந்ததாகவும், தற்போது அவர்களும் மறைந்த பின்னர் தான் பொறுப்புக்கு வர முயன்றபோது தனது சித்தப்பா மகன் அதைத் தடுத்து விட்டதாகவும்" கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நஜ்மி வசிரி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘இந்து கூட்டுக் குடும்பங்களில் மூத்த ஆண்மகன் குடும்பத் தலைவராவது எப்படி இயற்கையாக … Continue reading பெண்கள் குடும்பத் தலைவர்களாக ஆக முடியுமா?: தர்ம சாஸ்திரங்களை முன்னிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!