ஆதலினால் காதல் செய்வீர்: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை ஆதரிக்கும் இல்லம்!

கண. குறிஞ்சி கடந்த 10 ஆண்டுகளாகச் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு ஆதரவாகத் திருப்பூர் வழக்குரைஞர் அருமைத் தோழர் செ. குணசேகரன் அவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். திருப்பூரிலுள்ள தனது வாழ்விடத்தையே இதுவரை கலப்பு மண இணையர் பாதுகாப்பு இல்லமாக மாற்றிச் சாதி மறுப்பு இணையர்களுக்கு ஆதரவு நல்கி வந்தார். இணையர்களைப் பெற்றோர் மற்றும் உறவினர்களது தாக்குதலிலிருந்து பாதுகாப்பது, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைத் தருவது மற்றும் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வது எனக் காத்திரமான … Continue reading ஆதலினால் காதல் செய்வீர்: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை ஆதரிக்கும் இல்லம்!

ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

விடியலை நோக்கிய காலை வேளை ஸ்வாதிக்கு அஸ்தனமாக இருக்கும் என ஸ்வாதிக்கும் தெரியாது, அவரை ரயில் நிலையம் வரை விட்டுவிட்டுச் சென்ற அவருடைய தந்தைக்கும் தெரியாது. ஆனால், அந்த அஸ்தமனத்தை எதிர் நோக்கியிருந்தது, ஸ்வாதியை இரக்கமின்றி வெட்டித்தள்ளிய ‘அந்த’ ஆண் தான். ஸ்வாதியின் சமூக வலைத்தள பக்கங்களில் அவர் காதல் வயப்பட்டிருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அந்த வயதுக்கே உரிய எதிர்ப்பார்ப்புகளைச் சொல்லும் சில சினிமா காட்சிகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவ்வளவே...மற்றபடி அவர் முகநூல் அலுவலக விஷயங்களை … Continue reading ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிவேல் மகன் சந்தோஷ் (வயது 30). வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தேசிகன். பெல் நிறுவனத்தில் துணை பொதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சுமதி (29). வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி படித்து வந்தபோது சந்தோசுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சுமதியை அவருடைய பெற்றோர் … Continue reading ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…

சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவியதாக கர்ப்பிணிப் பெண் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை!

தலித் இளைஞன் விஸ்வநாதன் - தேவர் இனம் சார்ந்த காவேரி இருவரும் கல்லூரி காலத்திலேயே காதலித்து வந்துள்ளனர். எதிர்ப்புகளை மீறி இந்த காதலர்கள் மணம் முடிக்க உதவியவர் கல்பனா . இவர் , விஸ்வநாதனின் சகோதரி. சமீபத்தில் நடைபெற்ற இந்த கலப்புமணத்தை நடத்திவைத்தவர் கல்பனா என்பதையறிந்த காவேரி குடும்பத்தினர்  கல்பனாவின் வீட்டுக்கு வந்து, தங்கள் பெண்ணை வீட்டுக்கு அனுப்பச்சொல்லி பிரச்சினை செய்துள்ளனர். அவர்கள் அங்கில்லை என்பதை கல்பனா கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த காவேரி குடும்பத்தினர், கல்பனாவை வெட்டி கொன்றுள்ளனர். கல்பனா … Continue reading சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவியதாக கர்ப்பிணிப் பெண் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை!

நெல்லையில் சாதி ஆணவகொலை

 திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த விசுவநாதன் (இரயில்வே ஊழியர்) என்ற தலித் இளைஞனும் தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (தேவர்) என்பவரின் மகள் காவேரியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் மிரட்டலுக்குப் பயந்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். காவேரியின் தந்தை தொடர்ந்து விசுவநாதனின் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார். விசுவநாதனின் குடும்பத்தார் காவல்துறை துணை ஆணையரிடம் புகார் கொடுதுதுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடு்க்கவில்லை. புகார் கொடுத்ததால் மேலும் ஆத்திரம் … Continue reading நெல்லையில் சாதி ஆணவகொலை

”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்

என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிறமலை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் … Continue reading ”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்

கொங்கு பகுதியில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை; கரூரில் கூலிப்படையால் இளைஞர் வெட்டிக் கொலை

உடுமலைப் பேட்டை சங்கர் கொடூரமாக கொல்லப்பட்டதன் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை. இதற்குள் மேலும் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது. இதுவும் கொங்கு பகுதியில்... மணிகண்டன் மா.பா மீண்டும் ஒரு ஆணவக் கொலை.... திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் மகன் சுரேஷ் ஆரோக்கியசாமி வயது 28.இவர் தனது தாய் மற்றும் சகோதரிகளோடு கரூர் ஆண்டாங்கோவில் ராமா கவுண்டன் புதூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளார்.இதனிடையே வீட்டு உரிமையாளரின் மகளுக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் கடந்த … Continue reading கொங்கு பகுதியில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை; கரூரில் கூலிப்படையால் இளைஞர் வெட்டிக் கொலை

“கொற்றவையாகிய நான் இனி எழுதப் போவதில்லை”

கொற்றவை வணக்கம் தோழர்களே, இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அதை துணிவுடன் ஒற்றை ஆளாக நின்றே எதிர்கொண்டும் உள்ளேன். நான் சொன்ன எந்த கருத்திலிருந்தும் - அது என்னுடைய அறிவிற்கும் - சமூக மாற்றத்திற்கும் சரியானதே என்று கருதிய எந்த கருத்திலிருந்தும் நான் பின்வாங்கியதில்லை. ஆனால் விமர்சனம் என்பது வேறு அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய … Continue reading “கொற்றவையாகிய நான் இனி எழுதப் போவதில்லை”

#வீடியோ:“தண்ணி கொடுங்க” என கெஞ்சும் வெட்டுப்பட்ட சங்கர்: மருத்துவர்களின் அலட்சியம் சங்கரை சாகடித்ததா?

உடுமலைப் பேட்டையில் சாதிய வன்மத்தால் வெட்டப்பட்ட சங்கரும் கவுசல்யாவும் உடுமலைப் பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கே சங்கருக்கு செய்யப்பட்ட சிகிச்சைகளைப் பார்க்கும்போது மருத்துவர்களின் அலட்சியமே சங்கரை கொன்றியிருக்கிறது என சந்தேகம் வருகிறது. சங்கர், மூச்சுவிட முடியவில்லை என்று பேசுகிறார், தண்ணி கொடுங்க என்று கேட்கிறார். இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை மெல்லிய இதயம் கொண்டோர் பார்க்க வேண்டாம் என கேட்கிறோம். http://www.youtube.com/watch?v=OaemeZkAhD0  

’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி சங்கர், கவுசல்யா ஆகியோரை நடு சாலையில்  பகல் நேரத்தில பல பேர் முன்னிலையில் மூன்று பேர் படுகொலை செய்தனர். சாதி மறுத்து தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் கவுசல்யாவின் தந்தை, இந்த படுகொலைகளை ஆள் வைத்து செய்ததாகச் சொல்லி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸிடன் இந்த படுகொலை குறித்து நியூஸ் 7 நிருபர்  வேலூரில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கருத்து கேட்டிருக்கிறார்கள். … Continue reading ’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து

#சர்ச்சை: நாத்திகத்தை தூக்கிப் பிடிப்பது கம்யூனிஸ்டுகளா? திராவிட இயக்கங்களா?

எழில் அரசன் வெள்ளிக்கிழமை காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தேன். மதிப்பிற்குரிய தோழர் அருணன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுந்தான் சித்தாந்த அடிப்படையிலான ‘விஞ்ஞானபூர்வ நாத்திக’ கட்சி என்றும் ‘நாங்கள் வறட்டு நாத்திகவாதிகள் அல்ல’ என்பதுபோலவும் சொன்னார். தமிழ்நாட்டில் அருணன் இப்படி சொல்லியிருப்பதால், திராவிடர் இயக்கத்தினர் ‘வறட்டு நாத்திகவாதம்’ பேசுகிறவர்கள் என்றுதான் மறைமுகமாக சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். உழைக்கும் மக்களின் பொருளாதார மற்றும் சமூகவியல் சிக்கல்களை தீர்த்துவிட்டால் கடவுளும் மதமும் தாமாக … Continue reading #சர்ச்சை: நாத்திகத்தை தூக்கிப் பிடிப்பது கம்யூனிஸ்டுகளா? திராவிட இயக்கங்களா?

ஆணவக் கொலை செய்த ராமநாதபுரம் இளைஞர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

இராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபதி(24) என்பவர் ஆணவக் கொலை செய்ததற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 17 வயது பெண் ஒருவர் தலித் இளைஞரை காதலித்தார் என்பதற்காக அவரை தொண்டையை அறுத்து கொலை செய்தார் பூபதி. இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமாரும் மாவட்ட எஸ்பி மணிவண்ணனும் பரிந்துரைத்தனர்.