நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!

அ. ராமசாமி அரங்க அமைப்புக் கலையை அறிந்தவர்கள் இந்த மேடை அமைப்பை முன்முற்ற அரங்கம் (Front Project Stage ) என்று சொல்வார்கள். அழகிப் போட்டிகள், ஆடை கள், அலங்காரப் பொருட்களின் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்குப் பயன்படும் தன்மை இந்த அரங்க அமைப்புக்கு உண்டு. இயல்பான உரையாடல் வழியாகப் பார்வையாளர்களோடு நெருங்கிவிட விரும்பும் இந்த அமைப்பைப் பிரேசிலின் நவீன அரசியல் நாடகக்காரன் அகஸ்டோ போவெல் 1980 களின் தொடக்கத்தில் முன்வைத்தான். அவனைத் தமிழ் நாடகக்காரர்கள் கண்ணுக்குப் … Continue reading நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!

பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி: பேரா. அ. ராமசாமி

பேரா. அ. ராமசாமி எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார். வாரத்திற்கு இரண்டு நாள் வருவார். வருபவர் மாணவிகளோடும் மாணவர்களோடும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருப்பார். மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்த … Continue reading பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி: பேரா. அ. ராமசாமி

தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு: அ. ராமசாமி

அ. ராமசாமி ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு மூலதனத்தின் தேவையும் கூட. அமெரிக்காவில் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. கல்விக்கூடங்களை நடத்துகின்றன. ஆய்வுகளுக்கு நிதி வழங்குகின்றன. 2000 -க்குப் பின்னர் உலகமெங்கும் உருவாகிவரும் அடையாள அரசியல் சொல்லாடல்கள் கூடத் தன்னெழுச்சியாகத்தோன்றுகின்றனவா? பன்னாட்டுக் குழுமங்களின் மறைமுகத்தூண்டுதலால் உருவாக்கப்படுகின்றனவா? என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் அதிகார அமைப்புகளும் வலைப்பின்னல்களும் எப்போதும் அடையாள அரசியலை அனுமதிப்பதுபோலக் … Continue reading தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு: அ. ராமசாமி

தமிழக முதல்வர் தொடங்கிய வைத்த தொழில்சாலைகளின் மதிப்பை கூட்டியும் குறைத்து செய்தி வெளியிட்ட நாளிதழ்கள்: வார்த்தைகள் மாறலாம்; எண்கள் மாறுமா?

அ. ராமசாமி   நீண்டகாலமாகத் தினமணி வாங்கிப் படிக்கிறேன். தோன்றும்போது தமிழ் இந்து வாங்கிப் படிப்பேன். நகரில் சினிமா விவரங்களுக்காக தினத்தந்தியையோ தினமலரையோ நாடுவது வழக்கம். இன்று காலையில் மூன்று நாளிதழ்களிலும் முதன்மைச் செய்தியாக முதல்வர் தொடங்கிவைக்கும் தொழிற்சாலைகள் பற்றிய செய்தி இருந்தது. தினமணியில் 3865 கோடியில் புதிய அரசு ஆலைகள் - என்ற செய்தியைத் தர, அதையே தினத்தந்தி 3863 கோடியில் புதிய தொழிற் சாலைகள் என்று தலைப்பிட்டுத் தந்திருந்தது. ஆனால் தமிழ் இந்து மட்டும் 3 … Continue reading தமிழக முதல்வர் தொடங்கிய வைத்த தொழில்சாலைகளின் மதிப்பை கூட்டியும் குறைத்து செய்தி வெளியிட்ட நாளிதழ்கள்: வார்த்தைகள் மாறலாம்; எண்கள் மாறுமா?