ராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்!

அ. மார்க்ஸ் ராஜராஜன் புகழ் பாடும் ஒரு வீடியோ கிளிப்பிங்கை பார்த்தேன். முற்றிலும் வரலாற்று உணர்வு இல்லாமல் ராஜராஜன் வழிபாடு இங்கே அரங்கேற்றப்படுகிறது,. அறிவுபூர்வமான சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மடமை தமிழ் சமூகத்தில் இப்படிப் பரவுவது ஒரு பேராபத்து. நீதிபதிகள் எல்லாமும்கூட இந்தச் சூழலுக்குப் பலியாகிறார்கள். நான் பார்த்த வீடியோவில் பேசுகிற நபர் முன்வைக்கும் ராஜராஜப் புகழின் பின்னுள்ள வரலாற்றுப் புரிதலற்ற வழிபாட்டு மனோபாவத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால் ராஜராஜனின் இலங்கைப் படை எடுப்பைப் பற்றி … Continue reading ராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்!

பா. ரஞ்சித்தும் சோழர்களும்

வாசுகி பாஸ்கர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்; 1 . இராஜராஜ சோழன் காலத்தில் … Continue reading பா. ரஞ்சித்தும் சோழர்களும்

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

கஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை

கஜா புயலால் இப்பகுதியில் பெரிய சேதம் ஏதும் இல்லை என அமைச்சர் மணியன் கூறியதாகப் பரவிய செய்தியைக் கேள்விப்பட்டு அதைக் கண்டித்து இனியவன் பேசிய வீடியோ நாக்கீரன் தளத்தில் வெளியிடப்பட்டு சில மணி நேரங்களில் ‘வைரல்’ ஆகப் பரவியுள்ளது. இன்று அவர் என்கவுன்டர் செய்யப்படலாம் என்கிற அளவிற்கு மக்கள் மத்தியில் அச்சம் உள்ளாகியுள்ள நிலை மிகவும் வருந்தத் தக்கது.

“வீட்டுக்கு 2 பைக் வெச்சிக்கிட்டு பெட்ரோல் எடுக்கக்கூடாதுன்னா எப்படி?”: அ. மார்க்ஸ் விவாத பதிவு

எல்லார் வீட்லயும் பைக் இருக்கு. கிராமத்துல கூட இப்ப ஏ.சி போட்டுக்குறாங்க. அப்புறம் டிராக்டர், ஃபேன்... எல்லாம் வேணும். பெட்ரோல் மட்டும் எடுக்கக் கூடாதுன்னா என்னா சார்..

கோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி

அ. மார்க்ஸ் 'கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்' எனும் நூல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதி நண்பர் செந்தில்நாதன் அவர்களின் ஆழி பதிப்பகத்தால் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை ஒட்டி கோவையில் நடைபெற்ற கலவரத்தில் (Nov 1997) சுமார் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து அகில இந்திய அளவில் அமைக்கப்பட்ட PUCL உண்மை அறியும் குழு அறிக்கை இந்தக் கலவரத்தில் காவல்துறையும் இந்துத்துவ அமைப்புகளும் இணைந்து இந்த வன்முறைகளை … Continue reading கோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி

“ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர் இன்குலாப்”: அ. மார்க்ஸ்

கவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயலாத துயரத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார் எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ். இதுகுறித்து தன்னுடைய முகநூல் குறிப்பில் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளவை: “என்னுடைய இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர் இன்குலாப்”. என்னுடைய முதல் நூல் 'எதுகவிதை' யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி … Continue reading “ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர் இன்குலாப்”: அ. மார்க்ஸ்

சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது

கேரள போலீஸால் படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இவர்கள் தேவராஜன், அஜிதா என தகவல் வெளியானது. இவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அ. மார்க்ஸின் பதிவு... “கோழிக்கோடு மருத்துவமனை மார்ச்சுவரியில் போஸ்ட்மார்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தோழர்களின் உடலுக்கு மரியாதை செய்யச் சென்ற 28 பேர்களை கேரள போலீஸ் கைது செய்தது. இப்படியான அச்சுறுத்தல் முதலியவற்றைக் கண்ட தோழர் அஜிதாவின் … Continue reading சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது

போபால் என்கவுன்டர் படுகொலை போலியானது: அ. மார்க்ஸ்

போபால் என்கவுன்டர் படுகொலை போலி என்பதற்கான நிரூபணங்கள் வெளியாகியுள்ளன என தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார் மனித உரிமை செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ். இது குறித்து தனது பதிவில், “காலையில் இந்தச் செய்தி கேள்விப்பட்ட போதே நாம் மனதிற்குள் உணர்ந்ததுதான். எனினும் முழு ஆதாரங்களும் இல்லாமல் எதையும் சொல்ல வேண்டாம் என்பதற்காகவே முழுச் செய்திகளும் வரட்டும் எனச் சொல்லியிருந்தேன். இப்போது முழுச் செய்திகளும் வரத் தொடங்கிவிட்டன. ம.பி அமைச்சர் முஸ்லிம் இளைஞர்கள் கையில் துப்பாக்கி முதலான … Continue reading போபால் என்கவுன்டர் படுகொலை போலியானது: அ. மார்க்ஸ்

”என்னைக் காயும் தமிழ்த் தேசியர்களுக்கு சில கேள்விகள்!”: அ. மார்க்ஸ்

சமீபத்தில் நடந்த இந்து மக்கள் கட்சி நடத்திய ஈழத்தமிழர் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழர் தேசிய கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன் கலந்துகொண்டார். இதுகுறித்து எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூலில் தமிழ்தேசியம் இந்துத்துவத்துடன் கைக்கோர்க்கும் என அப்போதே சொன்னதாக பதிவு செய்திருந்தார். அது விவாதப்பொருளானது. இந்நிலையில் தமிழ் தேசியர்களுக்கு சில கேள்விகள் என்ற புதிய பதிவொன்றை தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். அவருடை பதிவில், “தமிழ்த் தேசியத்தின் இந்துத்துவத் தொடர்புகள் பற்றிய என் … Continue reading ”என்னைக் காயும் தமிழ்த் தேசியர்களுக்கு சில கேள்விகள்!”: அ. மார்க்ஸ்

கருத்து: ’பொதுவானவர்’களின் அமைதிக்கு என்ன காரணம்?

செம்பறை வார்த்தைகளே இல்லை என்பார்களே, அதைவிட மிகுதியான அதிர்ச்சியில் உறையவைக்கின்றன, பெண்கள் மீதான அண்மைய வன்கொடுமைகள்! தஞ்சை சாலியமங்கலம் எனும் ஊரில் கலைச்செல்வி எனும் இளம்பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம், அவரின் படுகொலை! அந்தக் கொடுமை ஏற்படுத்திய துயரத்தின் வாட்டம் நீங்கிவிடாத நிலையில், விழுப்புரம் நவீனாவின் மரணச்செய்தி! இரண்டு நிகழ்வுகளுமே அப்பட்டமான பாலினரீதியிலான கொடிய வன்முறை; பாதிக்கப்பட்டவர்கள், அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாத அடித்தட்டுப் பிரிவினர்..! கடந்த இரண்டு நாட்களாக இச்சம்பவங்களை கவனிப்பவர்கள் கலங்கிப்போய் இருக்க.. வழக்கம்போல இதிலும் … Continue reading கருத்து: ’பொதுவானவர்’களின் அமைதிக்கு என்ன காரணம்?

விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

அ. மார்க்ஸ் விழுப்புரம் செந்திலின் நெருப்பு ஆலிங்கனத்தின் விளைவாக 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நவீனாவுக்கு நேர்ந்த கதி அடுத்த சில நிமிட ங்களில் எனக்கு வந்தது. நான் அப்போது NCHRO கருத்தரங்கில் இருந்தேன். பத்திரிகையாளர்களிடமிருந்து அந்தச் செய்தி கிடைத்தது. நவீனாவின் மாமா ஏழுமலையிடம் பேசி தகவலை உறுதி செய்து கொண்டேன். அவர் ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர். நான் மிகவும் வேதனைப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்று இது. அந்தப் பெண், … Continue reading விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

ஸ்வாதி கொலை வழக்கு குறித்த திருமாவளவனின் நேர்காணலை முன்வைத்து: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் ஜூலை- 9 The Hindu நாளிதழில் வெளிவந்துள்ள வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் அவர்களது நேர்காணல் (Not playing caste card in Swathi murder case : Thirumavalavan) மிக மிக முக்கியமான ஒன்று. நேர்காணலைச் செய்துள்ள ஸ்ருதி சாகர் யமுனனும் பாராட்டுக்குரியவர். பா.ஜ.க வழக்குரைஞர் ஒருவர் இடையில் புகுந்து ராம்குமார் “சார்பாக” ஜாமீன் மனு தாக்கல் செய்து, பின் வழக்கிலிருந்து விலகி, ராம்குமார் இந்தக் கொலைக்குக் காரணம் இல்லை, வேறு யாரோ … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு குறித்த திருமாவளவனின் நேர்காணலை முன்வைத்து: அ. மார்க்ஸ்

இந்துத்துவமும் நவதராளவாதமும் : அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ் (ஒரு கருத்தரங்கில் ‘இந்துத்துவமும் பொருளியலும்’ எனும் தலைப்பில் பேசியது) பொருளியல் (economics) என்பது இன்று எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள சூழலில் பொருளியல் குறித்த ஒருநாள் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பொருளியல் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் எனக் கருத்தப்பட்ட இடதுசாரிகளும் கூட இன்று மிக வேகமாக இந்தியப் பொருளாதாரம் அந்நியமூலதனத்துடன் பிணைக்கப்படும் சூழலில் அதிர்ந்துபோய் வாயடைத்துப் போயிருக்கும் சூழல்தான் இன்று நிலவுகிறது. பொதுப்புலத்தில் இன்று பொருளாதாரம் ஒரு பேச்சுப் பொருளாக இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் … Continue reading இந்துத்துவமும் நவதராளவாதமும் : அ.மார்க்ஸ்

“உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் "கொலையாளி ராம்குமார் தப்பியது எப்படி" என்றெல்லாம் விதவிதமான கட்டுரைகள்..பழைய புகைப்படம், புதிய படம், கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட, கழுத்தில் கட்டுடன்.... இப்படிப் படங்கள்.. எனக்கு ஒரு பழைய நினைவு.. அப்போது எனக்கு 14 வயது. ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். தினம் பாப்பாநாட்டிலிருந்து பஸ்சில் போய் வருவேன். இடைப்பட்ட ஊர் ஒன்றில் ஒரு தாசில்தார். அடிக்கடி நான் செல்லும் பஸ்ஸில், அந்த ஊரில் ஏறுவார். உள்ளூர்காரர், அதிகாரி என்கிற அடிப்படையில் … Continue reading “உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

Marx Anthonisamy ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், அவரது பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்கவும் முதலமைச்சர் ஜெயா உத்தரவிட்டுள்ளார். நன்றிகளையும் பாராட்டுக்களையும் சொல்லிக் கொள்வோம். இது தொடர்பாக சம்பவத்தன்று என்னிடம் எக்ஸ்பிரஸ். ஹிண்டு ஆகிய பத்திரிகைகளில் கருத்துக் கேட்டபோது உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என்றுதான் சொன்னேன். கொல்லப்பட்ட காவலரின் மனைவி ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. பிள்ளைகள் படித்துக் கொண்டுள்ளனர் என்கிற … Continue reading காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி: உண்மை அறியும் குழு அறிக்கை

அ. மார்க்ஸ் உண்மை அறியும் குழு அறிக்கை தருமபுரி, ஜூன் 06, 2016 உறுப்பினர்கள் பேரா. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (Chair Person, National Confederation of Human Rights Organisations- NCHRO), சென்னைஅரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி, ஓட்டங்காடு, வழக்குரைஞர் அரிபாபு, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCLC), சேலம். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி லக்‌ஷ்மண் ராஜ் (மறைவு) - தனம்மாள் … Continue reading கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி: உண்மை அறியும் குழு அறிக்கை

புனித திரு உரு’ பிம்பங்கள்!

அ. மார்க்ஸ் நமது அரசியல் தலைவர்கள் பற்றிய 'திரு உரு'பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார் காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் … Continue reading புனித திரு உரு’ பிம்பங்கள்!

தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!

அ. மார்க்ஸ் இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் (கோடிக் கணக்கில்) பதுக்கி வைக்கப்பட்ட பணம் கைப்பற்றப்படுகிறது. இவர்கள் அனைவரும் அ.தி.மு. க வினர்க்கு நெருக்கமானவார்கள், அமைச்சர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் என்கிற செய்தியும் வருகிறது. மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளும் பெரிய அளவில் மாற்றப்படுகின்றனர். கரூரில் கைப்பற்றப்பட்ட 4.77 கோடி ரூபாய்க்கு உரிய அதிமுக காரர் அரசு வாகனம் என்கிற பெயரில் போலி பதிவு எண்ணுடன் இக் குற்றத்தைச் செய்துள்ளார். இவர்கள் கைது செய்யப்பட்டு கொஞ்ச … Continue reading தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!

என்ன நடக்கிறது காஷ்மீரில்?

அ.மார்க்ஸ் காஷ்மீர் மீண்டும் எரிந்து கொண்டிருக்கிறது. நான்கு இளைஞர்கள், ஒரு வயதான பெண்மணி என ஐந்து பேர் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகியுள்ளனர். இன்னும் அதிகப் படைகளைக் குவிக்க டெல்லி ஆணையிடுகிறது. ஹன்ட்வாராவில் அன்று என்னதான் நடந்தது? குறைந்தபட்சம் மூன்று கதையாடல்கள் இப்போது மிதந்து வருகின்றன என்கிறார் சீமா முஸ்தபா. கதையாடல் - 1 இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுக்கு முதல் பலி வீழ்ந்தவுடன் அத்தோடு பிறந்தமுதல் கதையாடலின்படி ஒரு இளம் பள்ளி மாணவி திடீரென அலறுகிறாள். அருகில் … Continue reading என்ன நடக்கிறது காஷ்மீரில்?

”இவர்கள் பத்திரிகைகளில் எழுதும் எழுத்துக்களை இனி நாம் எப்படி நம்புவது?”

அ. மார்க்ஸ்  "எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்.." (பத்திரிகையாளர்களின் பொறுப்பு குறித்து ஒரு சொல்) பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று. பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. சமூக அமைதியை மட்டுமல்ல, வெறுப்பையும் அமைதியின்மையையும் வன்முறையையும் உருவாக்கும் சாத்தியம் பத்திரிகைச் செய்திகளுக்கு உண்டு. பத்திரிகைச் செய்திகளின் நம்பகத் தன்மையின் அடிப்படையில்தான் பல நேரங்களில் நீதிமன்றங்கள் கூடக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன; நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. அந்த வகையில்தான் பல கருத்து மாறுபாடுகள் இருந்தபோதும் The Hindu போன்ற இதழ்களை … Continue reading ”இவர்கள் பத்திரிகைகளில் எழுதும் எழுத்துக்களை இனி நாம் எப்படி நம்புவது?”

உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸுடன் ஒரு சந்திப்பு: அ. மார்க்ஸ்

Marx Anthonisamy உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸ் அவர்களைச் சந்தித்தது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய அனுபவம்... உமர் காலித் ஏதோ காஷ்மீரில் பிறந்த ஒரு காஷ்மீரி போல இங்குள்ள ஸீ டிவி போன்ற வலதுசாரி ஊடகங்கள் சித்திரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இலியாஸ் டெல்லியைச் சேர்ந்தவர், 'ஜமாத் ஏ இஸ்லாமியின்' 'வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா' வின் தலைவர் என்பதெல்லாம் எல்லோரையும் போல எனக்கும் தெரியாது. அவர் கூப்பிடு தூரத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மிக … Continue reading உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸுடன் ஒரு சந்திப்பு: அ. மார்க்ஸ்

#சர்ச்சை: கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து, “உங்க ஆளுங்கதாய்யா எல்லாத்துக்கும் காரணம்..” என்று சொன்னாரா கருணாநிதி?

தொண்ணூறுகளி்ன் பிற்பகுதியில் கோவைக் கலவரங்கள் நடந்தபோது திமுக அரசு எப்படி நடந்து கொண்டது என்பது குறித்து பதிவு ஒன்றை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ். அதில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, முஸ்லீம்களே கலவரத்துக்குக் காரணம் என சொன்னதாக பதிவு செய்திருக்கிறார். அ. மார்க்ஸ் எழுதிய பதிவு இங்கே... “கோவையில் நடந்த முதல் கட்ட வன்முறையில் 18 முஸ்லிம்கள் இந்து முன்னணி + கருணாநிதியின் காவல்துறையால் கொல்லப்பட்ட சூழலில் … Continue reading #சர்ச்சை: கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து, “உங்க ஆளுங்கதாய்யா எல்லாத்துக்கும் காரணம்..” என்று சொன்னாரா கருணாநிதி?

மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

அ. மார்க்ஸ் 1.ஏப்ரல் 25, 2013 அன்று மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டிற்கு அச்சசங்கத்தினர் சென்ற போது மரக்காணத்தில் நடை பெற்ற சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட பா.ம.க வைச் சேர்ந்த செல்வராஜ் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கொலைக் குற்றத்தை உறுதி செய்து ஆறு தலித்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க நிறுவனர் தீர்ப்பை வரவேற்றுள்ளார். வி.சி.க தலைவர் திருமாவளவன் தீர்ப்பை ஏற்கவில்லை; தண்டிகப்பட்டவர்கள் அப்பாவிகள் எனக் கூறியுள்ளார். இது விசாரனை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. … Continue reading மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

மகா மகாமகம்: இந்த முறையும் முழுக்குப் போட அம்மாவும் தோழியும் வருவார்களா?

அ. மார்க்ஸ் குடந்தையில் இருக்கிறேன். ஆங்காங்கு "அவசரம்... மகாமகப் பணி" எனும் பேனர் தாங்கிய லாரிகள் அலைந்து கொண்டுள்ளன. ஆறு மாத காலமாக அரசு எந்திரம் முழுமையும் இந்த மகாமகப் பணியை நோக்கியே முடுக்கிவிடப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. நகர் முழுவதும் சாலைகள் கருப்பு வண்ணம் பூசி மினு மினுக்கின்றன. ஆங்காங்கு சதுக்கங்கள் அழகு படுத்தப்படுகின்றன. தனியார்கள் புதிய தங்கும் விடுதிகளைத் திறக்கின்றனர். பழைய விடுதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. குடந்தையில் மட்டுமின்றி குடந்தையைச் சுற்றிலும் கூட ஆலயங்கள் பலவும் குட … Continue reading மகா மகாமகம்: இந்த முறையும் முழுக்குப் போட அம்மாவும் தோழியும் வருவார்களா?

அங்கீகரிக்கப்படாத, விளிம்புநிலை எழுத்தாளராக வாழ்ந்து மடிந்தவர் பிரமிள்!

அ. மார்க்ஸ் சில மாதங்களுக்கு முன்னர் ‘சன்டே எக்ஸ்பிரஸ்’ வார இதழில் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தம் முன்வைத்திருந்த ஒரு சிந்தனை என்னை ஈர்த்தது. இந்தியக் கவி மரபில் இரு பாரம்பரியங்கள் செயல்பட்டு வருவதாக அவர் அடையாளம் கண்டிருந்தார். முதலாவது பிராமண மரபு - வரலாற்றையும் மானுடத் துயர்களையும் இது புனைவுவெளிக்கு அப்பால் நிறுத்திவிடுகிறது. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அரவிந்தர். வரலாற்று நாயகரான அரவிந்தர் வரலாற்றின் மண்படிந்த பாதங்கள் தனது கவி வனத்தின் புனிதத்தைப் பாழ்படுத்தி விடும் … Continue reading அங்கீகரிக்கப்படாத, விளிம்புநிலை எழுத்தாளராக வாழ்ந்து மடிந்தவர் பிரமிள்!

சிறார் நீதி சட்ட திருத்தம்: சில விமர்சனங்கள்

அ.மார்க்ஸ்  குற்றச் செயல்களின் விஞ்ஞானமும் சமூகப் பின்னணியும்.. 18 வயது முடியும் முன் அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பையன் சட்ட விதிகளின்படி விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழி வெறியுடன் குரல்கள் முன் வைக்கப்படும் பின்னணியைச் சாதகமாகிக் கொண்டு பா.ஜ.க அரசு தன் நோக்கங்களில் ஒன்றை நடைமுறைப் படுத்துவதில் முனைந்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 'சிறார்' என்பதன் வரையறையை 18+ என்பதாக இல்லாமல் 16 ஆகக் குறைக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளது. பா.ஜ.க வின் மூலதனமான உயர்சாதி, மத்தியதர … Continue reading சிறார் நீதி சட்ட திருத்தம்: சில விமர்சனங்கள்

“அர்ச்சகர் நியமன தீர்ப்பில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்யமாட்டார்”

அர்ச்சகர் நியமன தீர்ப்பில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்யமாட்டார் என அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.  புதன்கிழமை உச்சநீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதுகுறித்து கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அ. மார்க்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அர்ச்சகர் நியமனம் தொடர்பான தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன? அ. மார்க்ஸ்: திமுக அரசு இயற்றிய 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' சட்டத்தை, சட்ட விரோதமானது எனச் சொல்லி … Continue reading “அர்ச்சகர் நியமன தீர்ப்பில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்யமாட்டார்”