இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

அறிவழகன் கைவல்யம் தேச பக்தாளே, மோடியும் அல்லக்கைகளும் இந்தியாவின் சமூக நீதியை மட்டும் சிதைக்கவில்லை, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் என்று நம்பப்பட்ட, நம்பப்படுகிற அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் ஊற்றி மூடி விட்டார்கள். அரசுத் துறை என்றவுடன் ஏதோ வணிக நிறுவனங்கள் என்று நினைத்துக் குழம்பி விடாதீர்கள். மோடியும், காவி அல்லக்கைகளும் குழி தோண்டிப் புதைத்தது இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களையும், சமூக நீதியையும் மட்டுமல்ல. மிக முக்கியமான இந்திய ஜனநாயகத்தின் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, … Continue reading இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

“சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”

அறிவழகன் கைவல்யம் திராவிட அரசியல் இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதியை ஒருபோதும் அவர் தவறாகப் புரிந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை, அ.தி.மு.க என்கிற மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை கட்டுக்குலையாமல் ஆளுமை செய்த அவருடைய தீவிர உழைப்பு ஒருவகையில் காவிக் கோட்பாட்டை தமிழகத்தின் சமூக அரங்குகளில் உள்நுழைய விடாமல் மறைமுகமாகவேணும் தடுத்தது. இவற்றை எல்லாம் தாண்டி, ஆண்களின் தனிப்பெரும் கோட்டையாக இருந்த அரசியல் களத்தில் ஒரு பிடரி சிலிர்க்கும் ஒரு ஆவேசப் பெண்ணாக, தான் என்கிற அசைக்க முடியாத … Continue reading “சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”

Saving Private Ryan: போர் குறித்த மனித மனதின் படிமங்களையும் நிஜங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கலைப்படைப்பு!

அறிவழகன் கைவல்யம் கடந்த வாரத்தில் இரண்டு பழைய திரைப்படங்களைப் பார்த்தேன், ஒன்று "Mulholland Drive", இன்னொன்று "Saving Private Ryan". இரண்டுமே மிக நீண்ட காலமாகப் பார்க்க வேண்டும் என்று பட்டியலில் இட்டிருந்த படங்கள், பல்வேறு திரைப்படங்கள் சார்ந்த நூல்களில் இந்த இரண்டு படங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தது, பல்வேறு இணையதளங்களிலும் சிறந்த பத்துப் படங்களின் பட்டியலில் இந்த இரண்டு படங்களும் இருந்தன. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் "Saving Private Ryan" குறித்து அவ்வப்போது நினைவு கொள்வேன், ஆனால், … Continue reading Saving Private Ryan: போர் குறித்த மனித மனதின் படிமங்களையும் நிஜங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கலைப்படைப்பு!

“ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”

அறிவழகன் கைவல்யம் இந்திய அரசு அலுவலகங்களில் வேலைத் திறனோ, பாலின வேறுபாடுகளோ, வேகமோ கணக்கில் வராது, இங்கே கணக்கில் வருவது அந்த அலுவலகத்தின் குறுக்கு அதிகார வழிமுறை மட்டுமே, சிலரை அலுவலகத்திலேயே மடக்கலாம், சிலரை வீட்டில், இன்னும் சிலரை உணவகங்களில், ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சட்டப்பூர்வமான நெறிகளைத் தாண்டி ரகசிய செயல்திட்டமும், கூட்டுப் பணப் பொதித் திட்டங்களும் உண்டு. இது ஒரு சங்கிலித் தொடர், இந்த சங்கிலித் தொடர் மாநில அரசின் தலைமைச் செயலகம் முதற்கொண்டு சட்டப்பேரவை வரையில் … Continue reading “ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”

குஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை

அறிவழகன் கைவல்யம் காவிகளின் தேசப்பற்று என்பது வெறும் பம்மாத்து, காவிகளின் தேசப்பற்று சொந்த மக்களைக் குண்டு வைத்துக் கொன்று கலவரத்தை உருவாக்கி அந்த நெருப்பின் மீது நின்று குளிர்காயும் நாகரீகமற்ற பித்தலாட்டம், பதன்கோட் தாக்குதலில் நிலவிய மர்மங்கள் இன்னும் அகலாத நிலையில் இப்போது யூரி தாக்குதல். காவிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உளறுவதைப் பார்த்தால் பன்னாட்டு அளவில் காஷ்மீர் போராட்டங்களும் அதற்கெதிரான இந்திய தேசிய வன்முறையும் சிக்கலான திசையில் போவதைத் தடுக்க சொந்த வீரர்களையே காவிகள் காவு … Continue reading குஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை

காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!

அறிவழகன் கைவல்யம் கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வியல் பண்புகளில் பெரிய அளவில் வேறுபாடுகள் ஏதுமில்லை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் தொல் குடிகளாக வசிக்கும் கன்னட உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி குரல் கொடுக்கவும் இயலாமல் இருப்பவர்கள். அங்கிருக்கும் ஆதிக்க சாதிகளான ஒக்கலிகர் (கௌடர்கள்) மற்றும் லிங்காயத்துகள் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தங்கள் … Continue reading காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!