Family man 2 : இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவையாற்றும் ஒரு படைப்பு!

அருண் நெடுஞ்செழியன்FAMILY MAN சீசன் -1 பார்த்தபோது அதற்குமுன் அமேசான் பிரைமில் பார்த்த BOSCH சீரியஸ்தான் நியாபகத்திற்கு வந்தது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் போலீஸ் துறையில் கொலைகுற்ற பிரிவில் ஹாரி பாஷ்க் என்ற கதாபாத்திரமாக வருகிற போலீஸ் அதிகாரி தனது துறைசார்ந்த கொலைக் குற்ற துப்பறியும் சாகசங்களையும் தனது குடும்ப சிக்கல்களை கையாள்கிற விதத்தை மையமாக கொண்டு வந்த சீரீஸ் அது.இதுவரை இந்தியாவில் வந்துள்ள ஐந்து சீரியசையும் அடுத்தடுத்த நாட்களில் பார்த்துள்ளேன்.சலிப்பு தட்டாத வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம்.இப்படத்தை … Continue reading Family man 2 : இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவையாற்றும் ஒரு படைப்பு!

இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் சூழலுக்கு பொருத்தி,இக்கருத்தாக்கத்தை வளர்ந்த்தெடுத்த கிராம்சியின் புரட்சிகர சிந்தனைகளை இந்துத்துவ பாசிசத்தின் காலத்தில் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாக தெரிகிறது. 1 அரசியல் களத்தில் “நிலைபதிந்த போர்” … Continue reading இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்

காவி நக்சல் கருத்துருவாக்கம்: சந்தர்ப்பவாத வழிமுறையின் பிரகடனம்

#metoourbannaxal என்ற முழக்கத்தின் வழியே ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மைக்கு எதிரான சிவில் சமூகத்தின் ஜனநாயக எதிர் போராட்ட முழக்கமானது தோழர் அருணனை ஏன் கலவரப்படுத்துகிறது?

மோடி அரசில் ரூல் ஆஃப் லா வெத்து காகிதமாகிவிட்டது: அருண் நெடுஞ்செழியன்

மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், உச்ச நீதிமன்றத்தில் ஆர். எஸ். எஸ். ஊடுருவ முயற்சிக்கிறது என குற்றம் சாட்டுகிறார். ராணுவத்தை காவி மயப்படுத்துகிற முயற்சிகள் மற்றொருபுறம் நடக்கிறது. மோடி அரசில், அரசியல் சாசன அடிப்டையிலான ரூல் ஆஃப் லா வெத்து காகிதமாகிவிட்டது.

”நடைமுறை சந்தர்ப்பவாதத்திற்கு கோட்பாட்டு முலாம் பூசுகிற திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள்”: அருண் நெடுஞ்செழியன்

மார்க்சியர் கே. சங்கர நாராயணன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட “மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூல் குறித்து அரசியல் செயல்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன் எழுதிய விமர்சனம் இது. முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம். இந்திய மைய அரசுடனான, கடுமையான போராட்டங்களுக்கும் உயிர்த்தியாகங்களுக்கும் பிறகு இந்திய ஆளும்வர்க்கத்தால் அரைமனதாக அமைக்கப்பட்ட மொழி வழி மாநிலங்களின் அரசியல் முடிவை இன்று யார் எடுத்து வருவது? ஒரு மாநில ஆளுனரை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. மாநில ஆளுநர், மத்திய அரசால் நேரடியாக … Continue reading ”நடைமுறை சந்தர்ப்பவாதத்திற்கு கோட்பாட்டு முலாம் பூசுகிற திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள்”: அருண் நெடுஞ்செழியன்

ஒடுக்குகிற தேசியம் இல்லையென்றால் ஒடுக்குமுறை இல்லையென்று ஆகுமா?: தேசிய இனப் பிரச்னையும் மார்க்சியமும் நூல் விமர்சனம்

அருண் நெடுஞ்செழியன் இந்திய ஆளும்வர்க்கத்தின் குரலாக “மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூலொன்று வந்துள்ளது.தோழர். கே. சங்கர நாராயணன் எழுதியுள்ள இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் கே. சங்கர நாராயணன் ஒடுக்குகிற தேசியம் என இந்தியாவில் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை என்ற ஒன்று அவசியமில்லை என வாதிடுகிறார். தோழர் சுனிதி குமார் கோஷ் இதைக் காணத் தவறுவதாக கூறுகிறார். ஒடுக்குகிற தேசியம் இல்லை என வாதிட வருபவர்,இந்தியாவிலுள்ள தேசிய … Continue reading ஒடுக்குகிற தேசியம் இல்லையென்றால் ஒடுக்குமுறை இல்லையென்று ஆகுமா?: தேசிய இனப் பிரச்னையும் மார்க்சியமும் நூல் விமர்சனம்

இருண்ட காலம்…

அருண் நெடுஞ்செழியன் ஆர்.எஸ். எஸ். இன் அரசியல் முன்னணி அமைப்பான பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை நேற்றைய நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய பாராளுமன்ற ஆட்சி முறையின் தலைமையை கைப்பற்றியுள்ள ஆர். எஸ். எஸ். (பாஜக), இந்திய லிபரல் ஜனநாயக நிறுவனங்களின் ஒழுங்கிற்குள் இயங்க இயலாத பண்பை கொண்டதாகும். ஜனநாயக நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலமாக கட்டுப்படுத்துகிற பண்பை கொண்டவையாகும். குஜராத் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பந்தாடப்படுவது, தூக்கி அடிக்கப்படுவது இதன் புறநிலை வெளிப்பாடாகும். … Continue reading இருண்ட காலம்…

சென்னை மாநகர  உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் 1 சென்னை மாநகர வளர்ச்சியும் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கமும் சென்னை பெருநகர உழைக்கும் வர்க்கத்தின் வரலாறானது,19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் வளர்ச்சியுற்ற கிழக்கிந்திய நிறுவனங்களின் தொழில்துறை எழுச்சியோடு தொடங்குகிறது. துறைமுகம், மின்சார உற்பத்தி நிலையம்,ரயில்வே போக்குவரத்து, பஞ்சாலைகள், எண்ணெய்-பெட்ரோல் நிறுவனம், தீப்பெட்டி தொழிற்சாலை,ட்ராம் வே,தோல் பதனிடும் ஆலைகள், அச்சுக்கூடம்  போன்ற ஆலைத் தொழில்களும் போக்குவரத்து சாதானங்களும்  19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியிலும, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோற்றம் பெற்று  பாய்ச்சல் வேகத்தில் விரிவாக்கம் … Continue reading சென்னை மாநகர  உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்

தமிழகத்தில் தொடர்கிற கைதுகள்: இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம்..

வரக்கூடிய நாட்களை மக்களுக்கு மென்மேலும் துன்பத்தை வழங்குகிற நாட்களாக அமையவுள்ளன. வேலை வாய்ப்பற்ற போக்கு, விவசாய வீழ்ச்சி, கல்வி சுகாதாரத்தில் அரசின் பாத்திரம் சுருங்கிச் செல்லுதல் என சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஒரு மையப் புள்ளியில் குவிவதை நோக்கி செல்கின்றன.

நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை: இந்த அரசு யாருக்கானது?

நீட் போராட்டத்திற்கு தடை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அமைப்பிற்கு எதிராக போராடக் கூடாது என்ற மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும்..

அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: ஜாக்டோ ஜியோ இப்போதாவது விழித்துக் கொள்ளுமா?

ஜேக்டோ ஜியோ போன்றே போக்குவரத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் தொழில் சங்கங்கங்களின் பிற்போக்குத் தலைமையால், வர்க்க உணர்வு ஊக்கம் பெறாமல், அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக சடங்கு போராட்டம் நடத்துபவர்களாக மாற்றப்பட்டுள்னர். 

மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது.

வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!

பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி.

நிதி ஆயோக்கின் புதிய தலைவர் ராஜீவ் குமார்: கும்பலாட்சியில் புதிய வரவு ….

ராஜீவ், லிபரல் பொருளாதாரவாதி. உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தை இந்தியாவில் தீவிரப்படுத்த முனைகிற லிபரல்வாதி. இவரது கட்டுரைகள் மற்றும் உரைகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரத்தை , சுதந்திர வர்த்தகப் பாதைக்கு திறந்துவிடுவதற்கு கோருபவை.

நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா ஏன்?

தாராளப் பொருளாதாரவாதிகள் பெரும்பாலும் வலது பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்க கூடியவர்கள். வலது பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள். அதைத்தான் இந்தியாவில் அமலாக்க முயன்றனர் ராஜனும் அரவிந்தும். ஆனால், வலது பாபுலிச சக்திகளின் அரசியல் நெருக்கடிகளை தாக்கு பிடிக்க இயலாமல் ஓடுகின்றனர். 

சிலிண்டர் மானியம் ரத்து ஏன்?

சில ஆண்டுகளுக்கு முன்பாக கிரீசில், ஸ்பெயினில் இதுதான் நடந்தது. ஒரு கட்டத்தில் வங்கியில் பணம் எடுக்கக்கூட இயலாமல் மக்கள் ரோட்டிற்கு வந்தனர். இந்தியா இந்நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. அதன் ஒரு அறிகுறிதான் சமூக நலத்திட்டங்கங்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை வெட்டுகிற நடவடிக்கையாகும்.

சமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்

இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்து, சட்டப் பூர்வத்தின் வழியே ஜனநாயகத்தை காப்பதாக ஏமாற்றுவதை ஒழித்து, பாட்டாளிகள், விவசாயிகள் தலைமையில் அதிகாரத்தை குவிக்கிற புரட்சிகர ஜனநாயக குடியரசை நிறுவ வேண்டும் என்ற அடுத்த கட்ட முடிவுக்கு அவரால் வர இயலவில்லை.

தோழர்கள் செந்தில் ,பரிமளா கைதும் போலி முற்போக்காளர்களின் சதிகளும்: அருண் நெடுஞ்செழியன்

நியூஸ் 18 இல் வேலை செய்கிற நாசர், வசுமதி, பட்டுராசன், இளையராஜா, அப்துல் ஆகியோர் உள்ளே நுழைந்து தோழர்களை தரக்குறைவாக பேசியும் தாக்கவும் முயன்றுள்ளனர்.

ஆளுநரின் தலையீடு; கேள்வியாகும் மாநில சுயாட்சி!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வருகிற சில நாட்களில் ஆளுனர் கிரண் பேடியின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி, ஆளுநர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் மத்திய ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’!

“இந்தியா டெவெலப்மென்ட் ரிலீப் பண்டு” என்ற நிறுவனத்தின் மூலமாக ஆர்.எஸ்.எஸ்க்கு வெளிநாடுகளிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதி வருகிறது. வெளிநாடுகளிருந்து அதிகளவு நிதி வரும் அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் சே முதன்மையாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவ பாசிசமும் மாட்டிறைச்சி தடை சட்டமும்

இதன் இலக்கு சமூகத்தை கலாச்சார ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் இந்துத்துப்படுத்துவதே!

இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…

அருண் நெடுஞ்செழியன் துருக்கியில் ஜனாதிபதி பதவிக்கு மிக அதிகமான அதிகாரம் வழங்குகிற சட்டத் திருத்தம் மீதான ஓட்டெடுப்புக்கு சாதகமாக 51% விழுக்காட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் எர்டோகன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.அடுத்து பத்தாண்டுகளுக்கு இவர் துருக்கியின் அரசியல் பொருளாதாரத்தை ஏகபோகமாக தீர்மானித்திட,சர்வாதிகார ஆட்சி நடத்திட சட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.துருக்கியின் நீதிபதிகள், ராணுவம்,அரசியல் தேசிய சபை என அனைத்தும் எர்டோகன் ஒருவரால் கட்டுப்படுத்தப்படும். எர்டோகனின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த லட்சக்கணக்கானோர் சிறையில் உள்ளனர். மதமும் … Continue reading இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…

செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் எடுபிடி முதலாளித்துவமும்

அருண் நெடுஞ்செழியன் ஆந்திர மாநிலம், திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சென்ற ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதியில், தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர அதிரடிப்படையினரின் இக்காட்டுமிராண்டிச் செயலுக்கு எதிராக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் இரு மாநில மனித உரிமை அமைப்புகள் திரண்டதை அடுத்து,விசாரணைக் குழுவொன்றை அமைக்க உத்தரவிட்டார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.இதுவரை இவ்விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கிப்படவில்லை.என்கவுண்டர் வழக்குத் தொடர்பான குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் … Continue reading செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் எடுபிடி முதலாளித்துவமும்

நெடுவாசல் எழுச்சி!

அருண் நெடுஞ்செழியன் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் தொடங்கி தமிழகம் முழுதும் பற்றிப் படறி வரும் எதிர்ப்புகள் எண்ணெய் இயற்கை வள கொள்ளையில் ஏகபோக ஆட்சி செலுத்திவருகிற பெரு முதலாளிகளுக்கும்,அவர்களுக்கு எடுபிடியாக சேவை செய்கிற மத்திய மாநில அரசுகளின் முகத்திரைகளை கிழித்துவருகிறது.இவர்களின் வர்க்க நலன் அரசியலை அம்பலப்படுத்திவருகிறது. நெடுவாசலில் நிலைகொண்டுள்ள இப்புயல் தமிழகத்தை தாண்டி தில்லியின் ஆளும்வர்க்கத்தை உலுக்கத் தொடங்கியுள்ளது. நிலக்கரி,கனிம வளம்,எண்ணெய் எரிவாவு என நாட்டின் தேச வளத்தை ஆளும் கட்சியாக இருக்கிற அரசியல் கட்சிகளும்,அரசு … Continue reading நெடுவாசல் எழுச்சி!

1877 தாதுப் பஞ்ச காலமும் 2017 வறட்சி காலமும்

அருண் நெடுஞ்செழியன் கொட்டிக் கிழங்கை வெட்டி சிலபேர் கொண்டு போய் நன்றாக வேக வைத்து இட்டமதகாவே தின்று பொழுதை இவ்விதம் போக்குகிறார் பாருங்கடி எறும்பு வளைகளை வெட்டியதனில் இருக்குந் தானியந் தானெடுத்து முறத்தால் கொழித்திக் குத்துச் சமைத்து உண்ணுகிறார் சிலர் பாருங்கடி 1877 ஆம் வருடத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சமான தாது வருஷப் பஞ்ச நிகழ்வுகள் குறித்து தோழர் மலை மருந்தன் எனும் புலவர் பதிவு செய்துள்ள கும்மி தான் இப்பாடல். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்தில், … Continue reading 1877 தாதுப் பஞ்ச காலமும் 2017 வறட்சி காலமும்

குதிரை பேர ஜனநாயகமும் மக்கள் குடியரசு ஜனநாயகமும்

அருண் நெடுஞ்செழியன் “உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன.மாபெரும் தலைவர்களும் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள் என்று ஹெகெல் எழுதியுள்ளார்.அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பதில் சோகக் கதையாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக் கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார்...” லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் நூலில் கார்ல் மார்க்ஸ்,1869. 1940-80 காலகட்டத்தைய இந்திய அரசியல் அரங்கில் தேசியப் பிராந்தியத் தலைவர்கள் வெகுஜன மக்களின் செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களாக கொண்டாடப்பட்டனர்.காலனியாதிக்க ஆட்சியை … Continue reading குதிரை பேர ஜனநாயகமும் மக்கள் குடியரசு ஜனநாயகமும்

பட்ஜெட் 2017: ஐந்து மாநில தேர்தல் சலுகை பட்ஜெட்!

அருண் நெடுஞ்செழியன் பட்ஜெட் அறிவிப்பு வரவுள்ள ஐந்து மாநில தேர்தலை ஒட்டி சில சலுகைகளை எலும்புத் துண்டுகளைப் போல வீசியுள்ளது. செல்லாக் காசு அறிவிப்பு மற்றும் புதிய சேவை வரியை சுற்றியே பெரும் பொருளாதார மாற்றங்களை சாதனையாக கட்ட முனைகிறது. இதை கார்பரேட் ஊடகங்கள் பெரிதுபடுத்தும். குறிப்பாக ஊரக வேலை வாய்ப்புத் துறைக்கு கூடுதலாக பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு, சிறு குறு தொழில்களுக்கு சில வரிச்சலுகை போன்றவற்றை கோடிட்டு காட்டலாம். மாறாக பட்ஜெட்டைவிட, பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிட்ட பொருளாதார அறிக்கையானது ஆளும்வர்க்க … Continue reading பட்ஜெட் 2017: ஐந்து மாநில தேர்தல் சலுகை பட்ஜெட்!

#புத்தகம்2017: நான் பேசிவிட்டேன் … என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன்…

அருண் நெடுஞ்செழியன் "நான் பேசிவிட்டேன் ...என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன் ..." கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சன நூலில், கார்ல் மார்க்சின் இறுதி வரிகள் இவை .. கோத்தா செயல்திட்டம் என்றால் என்ன? இது குறித்து மார்க்ஸ் பேசாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் 1875 ஆம் ஆண்டில் மார்க்ஸ் எழுதிய கோத்த செயல்திட்டம் மீதான விமர்சனம் எந்தளவு பொருத்தப்பாடு உள்ளது? சுருக்கமாக பார்ப்போம் .. மார்க்சும் எங்கெல்சும் அக்காலகட்டத்தில் இருந்த ஏனையே தொழிலாளர்கள் … Continue reading #புத்தகம்2017: நான் பேசிவிட்டேன் … என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன்…

சமகால அரசியல் போக்குகளும் மாற்று அரசியலும்

அருண் நெடுஞ்செழியன் செல்லாக் காசு அறிவிப்பு,தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதிமுக கட்சியின் உள்முரண்பாடு, அதிமுகவிற்கும் Vs பாஜகவிற்குமான வெளி முரண்பாடு,தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகல் என நடைபெறுகிற அனைத்து அரசியல் திசை மாற்றப் போக்குகள் மீதான விமர்சனங்களை, ஆய்வுகளை நிலவுகிற சட்டவாத முதலாளித்துவ ஜனநாயக சட்டகத்திற்குள்ளாக வைத்து விமர்சிக்க இயலுமா? நிலவுகிற அமைப்பை செப்பனிட்டால் இப்பிரச்சனைகளை தீர்க்க இயலுமா? நிலவுகிற அமைப்பிற்குள்ளாக மாற்று சாத்தியமா? முதலாளித்துவத்திற்கான ஜனநாயகம், அதை பிரதிபலிக்கிற முதலாளித்துவ, குட்டி … Continue reading சமகால அரசியல் போக்குகளும் மாற்று அரசியலும்

மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை

அருண் நெடுஞ்செழியன் தோழர் ஆழி செந்தில் நாதனின் “மாநிலங்களின் உரிமைக் குரல்!” என்ற தலைப்பிலான தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனக் குறிப்புகள்: http://tamil.thehindu.com/…/%E0%AE%AE%E…/article9417205.ece… கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்தோம் என்றால் மத்திய அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் பணியாமல் எதிர்த்து பேசிவந்தார். மத்திய அரசின் கொள்கை அமுலாக்கத்திற்கு எதிரான மறைந்த முதல்வரின் குறிப்பான எதிர்ப்புகளையும் ஜெயா அம்மையாரின் சொந்த வாக்கியங்களையும் இதற்கு ஆதரவாகத் தருகிறார். அவரது கட்டுரையில் இருந்து … Continue reading மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை

தமிழ்நாட்டில் “அரசியல் வெற்றிடம்”: பகுதி -2

அருண் நெடுஞ்செழியன் இந்துதேசியவாதத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம். நிலவுகிற முதலாளித்துவ அரசியல் அமைப்பிற்கு சேவை செய்கிற குறிப்பான அரசியல் கட்சித் தலைமையின் மரணம், எந்தவகையிலும் பாட்டாளி வர்க்க அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கவில்லை எனப் பார்த்தோம். அதேநேரத்தில், அதிமுக கட்சித் தலைமையின் மரணத்திற்கு முன்பாக,மருத்துவமனையில் கவலைக்கிடமாக ஜெயா அம்மையார் அனுமதிக்கப்பட்டபோதே, பாசகா எனும் இந்துத்துவ தேசியவாத கட்சியின் பிடியில் அதிமுக முகாம் உள்வாங்கப்படுகிற நிகழ்வுப்போக்கானது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. ஜெயா … Continue reading தமிழ்நாட்டில் “அரசியல் வெற்றிடம்”: பகுதி -2

மல்கன்புரியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்: பழங்குடி இளைய தலைமுறையை அழிக்க முயற்சிக்கிறதா ஒடிசா அரசு?

மல்கன்கிரி- ஓடிசாவில் பழங்குடியினர் மிக அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்று.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அரசின் அலட்சிய போக்கினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் இறந்துள்ளனர். என்ன நடக்கிறது - குழந்தைகளின் இறப்புக்கு கூறப்படும் காரணங்களில் ஒன்றான Japanese Encephalitis என்னும் நோய் கொசுவினால் பரவக்கூடியது. தடுப்பூசியின் மூலம் தடுக்கப்படக் கூடிய இந்த நோயினால் ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆண்டிலும் இதுபோல குழந்தைகள் இறந்தனர். இது போக பல்வேறு நோயிகளினாலும் கடந்த … Continue reading மல்கன்புரியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்: பழங்குடி இளைய தலைமுறையை அழிக்க முயற்சிக்கிறதா ஒடிசா அரசு?

நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் குறித்த தனது காத்திரமான அறிவியல் பூர்வ விமர்சனத்தால், அத்திட்டம் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தவர் மக்கள் அறிவியலாளர் விடி பத்மபநாபன். அடிப்படையில் அவர் ஓர் ஜனநாயகவாதி, நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்கள் அனைத்தும் அறிவியலை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானவை. நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்களின் மொழியாக்க தொகுப்பு ‘நியூட்ரினோ அறிவிப்புகளும் உண்மைகளும்’. இந்நூலை நாணல் நண்பர்களும் பூவுலகின் நண்பர்களும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விடி பத்மநாபன் கட்டுரைகளை தமிழில் தந்திருக்கிறார் அருண் நெடுஞ்செழியன். நூலிலிருந்து ‘இந்திய நியூட்ரினோ … Continue reading நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

“தாராளமயம்” ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமா?: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் மூலதனத்தின் அடிப்படை முரண்பாடுகளை முதலாளியம் களையாதவரை,அதற்கு நிரந்தர தீர்வென்று எதுவும் இல்லை.அப்படி அது களையும் பட்சத்தில் அது முதலாளித்துவமாக இருக்க முடியாது. மூலதனத்தை திரட்டுதல்,மறு உற்பத்தியில் உபரி மூலதனத்தை முதலீடு செய்தல்,மீண்டும் உபரி மூலதனத்தை படைத்தல் என்ற அதன் சுற்றோடத்தில் எழுகிற அடிப்படை முரண்பாடுகளாக டேவிட் ஹார்வி(மார்க்சின் வழி) சுட்டிக் காட்டுவது • மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான அடிப்படையான முரண்பாடுகள் • உபரி மூலதனத்தை பங்கிடுவதில் எழுகிற (வறுமைx வளம்) ஏற்றத்தாழ்வுகளை மேலாண்மை செய்வதில் … Continue reading “தாராளமயம்” ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமா?: அருண் நெடுஞ்செழியன்

வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?

அருண் நெடுஞ்செழியன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி, அதைத்தொடர்ந்து 2012-13 இல் ஸ்பெயின்,கிரீசில் ஏற்பட்ட நெருக்கடி தற்போது 2016 இல் வளர்ந்து வருகிற நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசிலை சுற்றி சுருக்குக் கயிறாக சுற்றி வளைதுள்ளது. நெருக்கடியின் முதல் சுற்றானது, வளர்ந்த தொழில்மய நாடுகளில் துவங்கி அதன் இரண்டாம் சுற்று எம்ர்ஜிங் எகனாமி என சொல்லப்படுகிற ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளை முகாமிட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமானது 3.5 விழுக்காடு அளவிற்கு … Continue reading வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு: இந்திய அரசுக்கும் பன்னாட்டு நிதியகத்திற்குமான முரண்பாட்டின் வெளிப்பாடா?

அருண் நெடுஞ்செழியன் ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பானது, இந்திய பெரு முதலாளி வர்க்கப் பண்புகளுக்கும் பன்னாட்டு நிதியகத்தின் பணக் கொள்கைகளுக்குமான முரண்பாட்டை பட்டவர்த்தமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலோட்டமாக மோடி எதிர்ப்பென்ற வகையில் இச்சிக்கலை பார்க்காமல் மோடி என்பவர் இந்திய அரசின் பிரதிநிதி என்ற வகையில்,இந்திய அரசு/இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம் Vs பன்னாட்டு நிதியகக் கொள்கை,ஏகாதிபத்திய மூலதனம் என்ற முரண்பாடுகளுக்கு இடையிலான பொருளாதாரக் பகுப்பாய்வின் அடித்தளத்தில் இச்சிச்சலை சற்று நெருக்கமாக பார்ப்போம். 1 தேசிய அரசுடனான … Continue reading செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு: இந்திய அரசுக்கும் பன்னாட்டு நிதியகத்திற்குமான முரண்பாட்டின் வெளிப்பாடா?

இந்திய வங்கிகளின் நிதி மூலதன திவால் நிலையும்,மோடியின் பொருளாதார பயங்கரவாதமும்!

அருண் நெடுஞ்செழியன் 1 வங்கியும் நிதி மூலதன ஒன்றுகுவிப்பும்: நிலவுகிற சமூக அமைப்பினில்,பணம் - பொருள் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது. வங்கி,பணப் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது. பணமும் வங்கியும் முதலாளியப் பொருளாதாரத்தை சமூகமயப்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியா போன்ற அரை தொழில்மய நாடுகளில்,ரொக்கப் பணமே பொருள் பரிமாற்று சாதனமாக 95 விழுக்காட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.ஆனாலும் இந்த ரொக்கப் பணம்,அதாவது இந்த பண மூலதனம் முழுவதும், மையப்படுத்தப்பட்ட வகையில்,இந்திய முதலாளிய அரசு இதுவரை திரட்டியது இல்லை. ஒட்டுமொத்த … Continue reading இந்திய வங்கிகளின் நிதி மூலதன திவால் நிலையும்,மோடியின் பொருளாதார பயங்கரவாதமும்!

டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

அருண் நெடுஞ்செழியன் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவித்த நாள்தொட்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுவரை, டொனால்ட் டிரம்பின் எழுச்சியானது, பெருவாரியான ஜனநாயக சக்திகளுக்கு குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டு ஏதிலிகளால்தான் அமெரிக்காவிற்கு பிரச்சனை,எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றி,மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர்கட்டவேண்டும் என்றவர்.மெக்சிகோ நாட்டு ஏதிலிகள் வன்புணர்வாளர்கள் என்றவர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பதையும் கடந்த வலது அடிப்படைவாதியாக,இன வெறியராக,பெண்களை இழிவாக பேசுகிற,இஸ்லாம் மத விரோதியாக இருந்தவர் ஜனநாயகமுறையில் நடைபெற்ற தேர்தலில் … Continue reading டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

பணத்தின் மதிப்பும் கருப்புப் பணமும்…

அருண் நெடுஞ்செழியன் 1.பணத்தின் மதிப்பு: மோடியின் நேற்றைய பித்தலாட்ட அறிவிப்பின் ஊடாக பணத்தின் மதிப்பு மீதான புரிதலை இன்றைய சூழலில் புரிந்துகொள்வது அவசியமாகிறது. இன்றைய முதலாளித்துவ அமைப்பினில்,தேவைகளை நிறைவு செய்கிற பொருட்களை/சரக்குகளை வாங்குவதற்கு “பணம்” என்கிற சாதனம் எவ்வாறு முன்னுக்கு வந்தது? பணத்தின் மதிப்பின் (ஐம்பது காசு முதல் முதல் ஆயிரம் வரை) வாயிலாக பொருளின் மதிப்பு (குண்டூசி முதல் வைடூரியம் வரை) எவ்வாறு தெரிவிக்கப்படுகிறது என்ற சிக்கலான ஆய்வை முதன் முதலாக ஆராய்ந்து அறிவித்தவர் கார்ல் … Continue reading பணத்தின் மதிப்பும் கருப்புப் பணமும்…

கருப்பு பண மீட்பரல்ல; கார்ப்பரேட்களின் காவலன்!

அருண் நெடுஞ்செழியன்   வாரக் கடன்: இந்தியப் பெரு முதலாளிவர்க்கத்திடம் இருந்து சுமார் 7 1/2 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது.அதன் முதல் நான்கு இடங்களில் முறையே ரிலயன்ஸ் அனில்அம்பானி -1.21 லட்சம் கோடி ரிலயன்ஸ் முகேஷ் அம்பானி -1.87 லட்சம் கோடி எஸ்ஸார் குழுமம் -1.01 லட்சம் கோடி அதானி குழுமம் - 0.96 லட்சம் கோடி உள்ளது. நாளது வரை,இந்தக் தொகையை வசூலிக்கிற நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக, ஆளும் அரசோ கடனை … Continue reading கருப்பு பண மீட்பரல்ல; கார்ப்பரேட்களின் காவலன்!