பொருளாதார மந்தநிலை: நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிபுணர்களுடன் ஆய்வு

இந்தியா எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிக அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் முதலீடுகளை புதுப்பித்தல் போன்ற விவகாரங்கள் பேசப்பட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP growth) கடந்த மூன்று ஆண்டுகளில் மிக குறைந்த அளவுவாக … Continue reading பொருளாதார மந்தநிலை: நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிபுணர்களுடன் ஆய்வு

ஜிஎஸ்டிக்கு பிறகு 8% விலை குறைந்துள்ளது: ஜேட்லி

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின் பொருட்களின் விலை 4 முதல் 8% குறைந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி வரிவிகிதம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. இது, தனிப்பட்ட ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றியில்லை, எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. இதன்மூலம், வரி ஏய்ப்பு, வரி மோசடி, அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதிக்கு பின் அனைத்து பொருட்களின் விலையும் … Continue reading ஜிஎஸ்டிக்கு பிறகு 8% விலை குறைந்துள்ளது: ஜேட்லி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க அருண் ஜேட்லி சென்னை வந்தார்

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பட துறையினரும் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். இன்று பிற்பகல் அப்பலோ மருத்துவமனைக்கு சென்ற பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷாவும் மத்திய அமைச்சரான அருண் ஜேட்லியும் அங்குள்ள மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் மருத்துவமனையிலிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அப்பலோ … Continue reading முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க அருண் ஜேட்லி சென்னை வந்தார்

மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?

அ. மார்க்ஸ் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது," "கோதாவரி - கிருஷ்ணா பேசினில் ஏராளமாக எரிவாயு இருப்பதைக் கண்டு பிடித்துள்ளோம். இன்னும் இரண்டாண்டுகளில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கி விடுவோம்" என அதிரடியாக அறிவித்து 11 ஆண்டுகள் ஆகியும் வாயு மட்டுமல்ல ஒரு ஏப்பம் கூட வெளிவரவில்லை. ஆனால் பொதுத்துறை வங்கிகளிலிருந்து இதுவரை 19,726 கோடி ரூபாய் அந்தத் திட்டத்திற்குக் கடன் பெறப்பட்டுள்ளது என்கிற உண்மையை சென்ற மார்ச் 31 அன்று CAG தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தியது … Continue reading மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?

விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை

இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் வந்துள்ள தகவல்கள்... பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப் பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. இதன் … Continue reading விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை

இதோ கீர்த்தி ஆசாத்தைப் போல பாஜக தூக்கிய எறிந்த தலைவர்களின் பட்டியல்!

அரசியல் கட்சிகள் சில நேரங்களில் மூத்தத் தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்களை தூக்கியெறிவது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால், மோடி-அமித் ஷா பாஜகவின் அதிகார மையங்களாகிவிட்ட பிறகு பல மூத்தத் தலைவர்கள், நேர்மையான அரசியல்வாதி என பெயர் எடுத்தவர்களை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதன் பட்டியல் இதோ... அத்வானி மோடி தலைமைக்கு பாஜக பலிகொடுத்த மூத்தத் தலைவர் ‘ரத யாத்திரை’ புகழ் அத்வானி. பிரதமர் கனவில் இருந்த அத்வானியை ஓரங்கட்டி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் முழு பங்கும் … Continue reading இதோ கீர்த்தி ஆசாத்தைப் போல பாஜக தூக்கிய எறிந்த தலைவர்களின் பட்டியல்!

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஓயாத ட்விட்டர் போர்!

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்துக்கு சிபிஐ சோதனை வந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் மோடியை கடுமையாகத் தாக்கினார். இந்த சோதனைக்குக் காரணமே அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தபோது நடந்த ஊழல்தான் என்றார்.  தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகளை ட்விட்டர் மூலமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால் இதோ சமீப மூன்று நாட்களில் அவர் ட்விட்டிய சில கருத்துக்களின் தொகுப்பு... https://twitter.com/ArvindKejriwal/status/676635594588487680 https://twitter.com/ArvindKejriwal/status/676635641292054528 https://twitter.com/ArvindKejriwal/status/676648110668427265 https://twitter.com/ArvindKejriwal/status/676664384765095936 https://twitter.com/ArvindKejriwal/status/676742968242364416 https://twitter.com/ArvindKejriwal/status/676974589164023808 https://twitter.com/ArvindKejriwal/status/676975559189143553 https://twitter.com/ArvindKejriwal/status/676623478091419648 https://twitter.com/ArvindKejriwal/status/676623727480598528 https://twitter.com/ArvindKejriwal/status/676627652204060672 https://twitter.com/ArvindKejriwal/status/676632104071921664 https://twitter.com/ArvindKejriwal/status/676979927011446786 https://twitter.com/ArvindKejriwal/status/677443063225040896Continue reading அரவிந்த் கெஜ்ரிவாலின் ஓயாத ட்விட்டர் போர்!