காவி நக்சல் கருத்துருவாக்கம்: சந்தர்ப்பவாத வழிமுறையின் பிரகடனம்

#metoourbannaxal என்ற முழக்கத்தின் வழியே ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மைக்கு எதிரான சிவில் சமூகத்தின் ஜனநாயக எதிர் போராட்ட முழக்கமானது தோழர் அருணனை ஏன் கலவரப்படுத்துகிறது?

#விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார். பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை. “ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க … Continue reading #விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

“அந்தரங்கமா வாசிக்கிறதுன்னா புத்தகத்தை ஜட்டிக்குள்ள ஒளிச்சு வச்சு படிக்கணும்னு அர்த்தம்” பவா இலக்கணம் குறித்து ஆதவன் தீட்சண்யா

பவா செல்லதுரை ‘செம்மலர்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில் கவிதைக்கான இலக்கணம் குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கு இடதுசாரி எழுத்தாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளரும் பேராசிரியருமான அருணனின்  முகநூல் பதிவு இது: பவா வின் கவிதைக்கான இலக்கணம் நியாயமானது அல்ல நாடகக் கலைக்கு பிரளயன் அளித்துள்ள பங்களிப்பு பற்றி ஓர் அழுத்தமான கட்டுரை எழுதியிருக்கிறார் பவா செல்லதுரை "செம்மலர் "ஏட்டில். ஆனால் போகிற போக்கில் கவிதைக்கு அவர் தந்திருக்கிற இலக்கணம் நியாயமானது அல்ல. எந்தவொரு இலக்கிய வடிவமும் நவரசங்களுக்கும் சொந்தமானதே. … Continue reading “அந்தரங்கமா வாசிக்கிறதுன்னா புத்தகத்தை ஜட்டிக்குள்ள ஒளிச்சு வச்சு படிக்கணும்னு அர்த்தம்” பவா இலக்கணம் குறித்து ஆதவன் தீட்சண்யா

“விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்ற தமிழருவி மணியனுக்கு ஒரு பதில்

அரசியலிருந்து விலகுவதாக அறிவித்த தமிழருவி மணியன், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். இதில் “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?" என்று கம்யூனிஸ்டுகள் குறித்து காட்டமாக பேசினார் தமிழருவி மணியன். மணியனின் இந்தப் பேச்சுக்கு பேரா. அருணன் அளித்திருக்கும் பதில்: “நேற்று ஒரு டி வி பேட்டியில் "எம் ஜி ஆர், விஜயகாந்த் என்று நடிகர்கள் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும் ?" என்று கேலியாக கேட்டார் தமிழருவிமணியன். கடந்த மக்களவைத் தேர்தலில் பா ஜ … Continue reading “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்ற தமிழருவி மணியனுக்கு ஒரு பதில்

பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

கடந்த சில மாதங்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று பேசினார். இதைப் படியுங்கள்: #வீடியோ: “ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே! தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாம் … Continue reading பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

#வீடியோ: ”ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே!

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதிமுக அகற்றுவதை முக்கியமான வேலை என்று சொல்லும் மக்கள் நலக் கூட்டணியின் முடிவை சொன்னார் பேரா. அருணன். அதற்கு சீமான் … Continue reading #வீடியோ: ”ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே!

#சர்ச்சை: நாத்திகத்தை தூக்கிப் பிடிப்பது கம்யூனிஸ்டுகளா? திராவிட இயக்கங்களா?

எழில் அரசன் வெள்ளிக்கிழமை காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தேன். மதிப்பிற்குரிய தோழர் அருணன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுந்தான் சித்தாந்த அடிப்படையிலான ‘விஞ்ஞானபூர்வ நாத்திக’ கட்சி என்றும் ‘நாங்கள் வறட்டு நாத்திகவாதிகள் அல்ல’ என்பதுபோலவும் சொன்னார். தமிழ்நாட்டில் அருணன் இப்படி சொல்லியிருப்பதால், திராவிடர் இயக்கத்தினர் ‘வறட்டு நாத்திகவாதம்’ பேசுகிறவர்கள் என்றுதான் மறைமுகமாக சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். உழைக்கும் மக்களின் பொருளாதார மற்றும் சமூகவியல் சிக்கல்களை தீர்த்துவிட்டால் கடவுளும் மதமும் தாமாக … Continue reading #சர்ச்சை: நாத்திகத்தை தூக்கிப் பிடிப்பது கம்யூனிஸ்டுகளா? திராவிட இயக்கங்களா?