முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை; குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல், கெஜ்ரிவால் கைது!

ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் முன்னாள் ராணுவத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அதில் ராம் கிஷண் கிரவால் என்ற முன்னாள் ராணுவ வீரர் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி நேரில் சென்றார். ஆனால் டெல்லி போலீசார் ராகுல்காந்தியை அனுமதிக்காமல், தடுத்தி நிறுத்தி, திலக் மார்க் காவல் நிலையத்துக்கு வேனில் அழைத்துச் சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் ராகுல்காந்தி … Continue reading முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை; குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல், கெஜ்ரிவால் கைது!

மோடியின் பாதையில் செல்ல விரும்புகிறார் அரசியல்வாதி இரோம் ஷர்மிளா!

மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, கடந்த ஆகஸ்ட் மாதம் தன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை  கடந்த திங்கள்கிழமை சந்தித்து தேர்தல் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைக் கேட்டார் இரோம் ஷர்மிளா. கெஜ்ரிவாலைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனைக் கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒருவர் நண்பனாக இருந்தாலும் சரி, எதிரியாக இருந்தாலும் சரி, அவரிடம் நல்ல … Continue reading மோடியின் பாதையில் செல்ல விரும்புகிறார் அரசியல்வாதி இரோம் ஷர்மிளா!

“அரவிந்த் கெஜ்ரிவாலின் நாக்கு நீளமாக வளர்ந்து விட்டது; அதை வெட்டவேண்டும்”: நாக்கு வெட்டுத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்

மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர்களுக்கு எப்போதும் தாங்கள் ஆர். எஸ். எஸ். சாகாவில் பேசுவதைப் போன்றே நினைப்பு. மத்திய அமைச்சர்களானாலும் மாநில முதல்வரேயானாலும் வெறுப்பை கக்குவதில் பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும். முன்னாள் கோவா முதலமைச்சரும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர்,  இப்படி பேசியிருக்கிறார்: “டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பிரதமருக்கு எதிராக பேசியிருக்கிறார். இங்கு (கோவாவில்)எனக்கு எதிராக பேசியிருக்கிறார். அவர் நாக்கு நீளமாக வளர்ந்துவிட்டது, என அதை வெட்டி ஒழுங்குப்படுத்த … Continue reading “அரவிந்த் கெஜ்ரிவாலின் நாக்கு நீளமாக வளர்ந்து விட்டது; அதை வெட்டவேண்டும்”: நாக்கு வெட்டுத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்

நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!

மாதவராஜ் நடிகர் ராமராஜனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழக ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, இந்த நாட்டின் பிரதமரின் போலிக் கல்விச் சான்றிதழ் குறித்த விவாதங்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாய் ஆம் ஆத்மி கட்சி இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது, … Continue reading நரேந்திர மோடி பி. ஏ. எம். ஏ. உபயம்: போட்டோஷாப்!

எமர்ஜென்ஸி முன்னோட்டம்: சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசவிரோத வழக்கு!

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கின்றனர். இவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாக சொல்லப்பட்டது பொய்யான குற்றச்சாட்டு என பேசப்படும் நிலையில், இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர்களான  சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக … Continue reading எமர்ஜென்ஸி முன்னோட்டம்: சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசவிரோத வழக்கு!

முதல்வருக்கு எதிராக அதிகாரிகள் போராட்டம்: சம்பளத்துடன் விடுப்பு அளிக்க முதல்வர் விருப்பம்

டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த இரண்டு அதிகாரிகளை  சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து, அம்மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 270 முக்கிய அதிகாரிகள் தொடர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இது குறித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால், “அதிகாரிகள் நீண்ட விடுப்பில் சென்று விட்டால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்.  இவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அரசு தயாராக உள்ளது” என்று விருப்பம் தெரிவித்துள்ளார். “அதிகாரிகள் விடுப்பில் சென்று … Continue reading முதல்வருக்கு எதிராக அதிகாரிகள் போராட்டம்: சம்பளத்துடன் விடுப்பு அளிக்க முதல்வர் விருப்பம்

’என் வீட்டில் சிபிஐ சோதனையிட்டால் மஃப்ளர்களைத்தான் கண்டுபிடிக்க முடியும்’: அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் மீது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சென்ற வாரம் டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சோதனை செய்தது. டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியும் பாஜகவும் கடுமையாக மோதிக்கொண்டன. டெல்லி போக்குவரத்துத் துறையில் மூன்று அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நீக்கம் செய்தார். அதுகுறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “சமீபத்தில் மோடி ஜி, என்னுடைய அலுவலகத்தில் ஆய்வு செய்தார். ஒன்றையும் அங்கிருந்து கைப்பற்ற … Continue reading ’என் வீட்டில் சிபிஐ சோதனையிட்டால் மஃப்ளர்களைத்தான் கண்டுபிடிக்க முடியும்’: அரவிந்த் கெஜ்ரிவால்

“தைரியம் இருந்தால் என்மேல் மானநஷ்ட வழக்குத் தொடருங்கள்” அருண் ஜேட்லிக்கு சவால் விடும் பாஜக எம்பி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றவே, டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதாக அந்த மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பூதாகரமாக உருவாகியுள்ள … Continue reading “தைரியம் இருந்தால் என்மேல் மானநஷ்ட வழக்குத் தொடருங்கள்” அருண் ஜேட்லிக்கு சவால் விடும் பாஜக எம்பி

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஓயாத ட்விட்டர் போர்!

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்துக்கு சிபிஐ சோதனை வந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் மோடியை கடுமையாகத் தாக்கினார். இந்த சோதனைக்குக் காரணமே அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தபோது நடந்த ஊழல்தான் என்றார்.  தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகளை ட்விட்டர் மூலமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால் இதோ சமீப மூன்று நாட்களில் அவர் ட்விட்டிய சில கருத்துக்களின் தொகுப்பு... https://twitter.com/ArvindKejriwal/status/676635594588487680 https://twitter.com/ArvindKejriwal/status/676635641292054528 https://twitter.com/ArvindKejriwal/status/676648110668427265 https://twitter.com/ArvindKejriwal/status/676664384765095936 https://twitter.com/ArvindKejriwal/status/676742968242364416 https://twitter.com/ArvindKejriwal/status/676974589164023808 https://twitter.com/ArvindKejriwal/status/676975559189143553 https://twitter.com/ArvindKejriwal/status/676623478091419648 https://twitter.com/ArvindKejriwal/status/676623727480598528 https://twitter.com/ArvindKejriwal/status/676627652204060672 https://twitter.com/ArvindKejriwal/status/676632104071921664 https://twitter.com/ArvindKejriwal/status/676979927011446786 https://twitter.com/ArvindKejriwal/status/677443063225040896Continue reading அரவிந்த் கெஜ்ரிவாலின் ஓயாத ட்விட்டர் போர்!

#IfCBIRaids அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை: வாய்விட்டுச் சிரிக்க சில படங்கள்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட சிபிஐ சோதனை குறித்து அரசியல் வட்டாரம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ட்விட்டர் மக்கள் #IfCBIRaids இதை வைத்து பகடி செய்து கொண்டிருக்கிறார்கள். இதோ சில பகடிகள்... அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடந்தால் ஊடகவியலாளர்கல் ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத் அலுவலகங்களில் சோதனை செய்தால் என்ன கிடைக்கும்? சரத்பவாரின் வீட்டில் சோதனை நடந்தால்... ராகுல் காந்தி வீட்டில் சோதனை நடந்தால்... ஆம் ஆத்மிக்காரர்கள் சிபிஐ சோதனையை இப்படித்தான் பார்க்கிறார்கள்...