தமிழரை நிர்வாணப்படுத்தி அடித்த கன்னட ரக்‌ஷன வேதிகே: வெறுப்பரசியலின் பின்னணி…

மராட்டியத்தில் இந்துத்துவ கொள்கைகளை மராட்டிய மொழிப் பற்றாக வெளிப்படுத்திக்கொள்ளும் சிவ சேனையின் அடியொற்றி கர்நாடகத்தில் 2000களின் தொடக்கத்தில் தோன்றிய வலதுசாரி அமைப்பே கன்னட ரக்‌ஷன வேதிகே. அதாவது கன்னட பாதுகாப்பு இயக்கம் என்று பொருள். கர்நாடகத்தின் அனைத்து மாவட்டத்திலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, நியூசிலாந்து என வெளிநாடுகளிலும் 12 ஆயிரம் கிளைகளுடன் வெறுப்பரசியல் கடை பரப்பியுள்ளது இந்த அமைப்பு. முதன் முதலில் தன்னுடைய வெறுப்பரசியலை தொடங்கியது, கர்நாடக - மராட்டிய எல்லையோரம் இருக்கும் பெல்காம் … Continue reading தமிழரை நிர்வாணப்படுத்தி அடித்த கன்னட ரக்‌ஷன வேதிகே: வெறுப்பரசியலின் பின்னணி…

சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல்; காரணம் சரியாகத் தெரியவில்லை என்கிறார் வழக்கறிஞர்

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார் என செய்தி வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை. அறை மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனை இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், கையில் காயமடைந்த அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் 6 தையல்கள் போடப்பட்டிருப்பதாக சொல்கிறது அந்தச் செய்தி. தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் தாக்குதலுக்கான காரணம் குறித்து … Continue reading சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல்; காரணம் சரியாகத் தெரியவில்லை என்கிறார் வழக்கறிஞர்

வருமான வரி சோதனை எதிரொலி; நத்தம் விஸ்வநாதன் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார்.  தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக மாநில அமைப்பு செயலாளர் பதவியும், செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், செய்தி தொடர்பு குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் விஸ்வநாதன் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். … Continue reading வருமான வரி சோதனை எதிரொலி; நத்தம் விஸ்வநாதன் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம்

பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை: காவல்துறை ஆணையர் விளக்கம்

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் தமிழக இளைஞர் பெங்களூருவில் தாக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை சென்னை மயிலாப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தேசிய முன்னையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. இதனிடையே, காவிரியில் இருந்து கடந்த … Continue reading பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை: காவல்துறை ஆணையர் விளக்கம்

காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது?

  காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது? என கேட்டுள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதி மன்றத்திலே முறையிட்டு, அதன் பிறகே தண்ணீரைப் பெற வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு வருகிறது. … Continue reading காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது?

காவிரி உச்சநீதிமன்ற தீர்ப்பு: மாண்டியாவில் முழு அடைப்பு, விவசாயி தற்கொலை முயற்சி, பேருந்துகள் நிறுத்தம்

தமிழக அரசு தாக்கல் செய்திருந்த காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பதட்டமான சூழல் நிலவுவதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் ஒசூர் வரை மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. * கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் வழக்கம் போல் … Continue reading காவிரி உச்சநீதிமன்ற தீர்ப்பு: மாண்டியாவில் முழு அடைப்பு, விவசாயி தற்கொலை முயற்சி, பேருந்துகள் நிறுத்தம்

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக (அ) அவதூறு வழக்குப் போடக்கூடாது: உச்சநீதிமன்றம்

அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் யார் மீதும் தேச விரோத வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. "காமன் காஸ்' என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை  நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்: தேச துரோகம் என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால், தேச துரோக வழக்குகள், தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் … Continue reading அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக (அ) அவதூறு வழக்குப் போடக்கூடாது: உச்சநீதிமன்றம்

குழந்தைகள் காப்பாளரான குற்றவாளி: பதவியின் விலை எத்தனை கோடி?

சி.மதிவாணன் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணனை நியமனம் செய்ததை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கல்யாணியைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு மேற்படி ஆணையம் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்டதுதான் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். அது சட்டத்தின்படி உருவான ஆணையம். Commissions for Protection of Child Rights Act என்ற 2005 ஆம் ஆண்டு மத்திய சட்டத்தின்படி மாநில … Continue reading குழந்தைகள் காப்பாளரான குற்றவாளி: பதவியின் விலை எத்தனை கோடி?

காவிரி: உச்சநீதிமன்ற உத்தரவும் கர்நாடகாவின் பதிலும்

  காவிரியிலிருந்து 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு மூன்று நாட்களில் அணுக வேண்டும். தங்களது கோரிக்கையை தமிழகம் மூன்று நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும். இந்த மூன்று நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை … Continue reading காவிரி: உச்சநீதிமன்ற உத்தரவும் கர்நாடகாவின் பதிலும்

“மகாராணி” யாகக் கற்பனை செய்து கொண்டு வாழ்பவர் ஜெயலலிதா; நீதிமன்ற கண்டனம் குறித்து கருணாநிதி விமர்சனம்

தன்னை "மகாராணி" யாகக் கற்பனை செய்து கொண்டு வாழ்பவர் ஜெயலலிதா என திமுக தலைவர் மு. கருணாநிதி விமர்சித்துள்ளார். மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணம் நியமிக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேள்வி பதில் பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: “மன்னர் ஆட்சி பல ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதே? குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்துவது … Continue reading “மகாராணி” யாகக் கற்பனை செய்து கொண்டு வாழ்பவர் ஜெயலலிதா; நீதிமன்ற கண்டனம் குறித்து கருணாநிதி விமர்சனம்

திறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்!

அபூஷேக் முஹம்மத் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள். விசாரணை கைதிகளில் மக்கள் தொகை கணக்கீட்டின்படி மற்ற மதத்தினரை விட முஸ்லீம்களே அதிக அளவில் உள்ளனர். விகிதாச்சாரபடி இந்துக்களை விட முஸ்லிம்கள் 2 மடங்கு உள்ளனர். 21 சதவீத முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ளனர். இதில் உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், … Continue reading திறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று … Continue reading இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

இந்திய மருத்துவத்துறையின் நிலை இதுதான்; மருத்துவமனை அனுமதி கேட்டு தோள்களில் மகனை தூக்கி சுமந்த தந்தை

ஒடிசா மாநிலத்தின் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தன் மனைவியின் பிணத்தைத் தூக்கிச் சுமந்தார் ஒருவர். அதே ஒடிசாவில் ரயிலில் அடிப்பட்ட முதியவரின் பிணத்தைத் தூக்கிச்செல்ல வாகன வசதி செய்து தராதநிலையில், எலும்பை உடைத்து முதியவரின் பிணத்தை அள்ளிக்கொண்டு போனார்கள் ஊழியர்கள். இந்தச் சமபவங்களைப் பற்றிய பேச்சே அடங்காத நிலையில் உத்தர பிரதேசத்தில் தன் 12 வயது மகனை தோள்களில் சுமந்து வந்த தந்தை, அரசு மருத்துவமனையில் சேர்க்க சென்றுள்ளார் சுனில் குமார். … Continue reading இந்திய மருத்துவத்துறையின் நிலை இதுதான்; மருத்துவமனை அனுமதி கேட்டு தோள்களில் மகனை தூக்கி சுமந்த தந்தை

சசிகலா புஷ்பாவை வைத்து அதிமுக அரசை மிரட்டுகிறார் வைகுண்டராஜன்: சகோதரர் குற்றச்சாட்டு

சசிகலா புஷ்பா வி‌வகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த வைகுண்டராஜன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக, அவரது சகோதரர் குமரேசன் குற்றம்சாட்டியுள்ளார். சசிகலா புஷ்பாவுக்கு தேவையான உதவிகளையும் வைகுண்டராஜனே செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக அரசை மிரட்டுவதாகவும் அவர் சொன்னார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டவிரோதமாக நடைபெற்ற 50 லட்சம் டன் மணல், எந்தெந்த நாடுகளுக்கு, எந்தெந்த நிறுவனங்களுக்கு சென்றது என்ற விவரம் தம்மிடம் இருப்பதாக கூறியுள்ளார். தாது மணல் கடத்தலால் அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் … Continue reading சசிகலா புஷ்பாவை வைத்து அதிமுக அரசை மிரட்டுகிறார் வைகுண்டராஜன்: சகோதரர் குற்றச்சாட்டு

ஜோக்கர்: மக்கள் ஏன் ஜோக்கர்களாக பார்க்கப்பட வேண்டும்?

கார்த்திக் கோபாலகிருஷ்ணன் ஒரு படம் பொழுதுபோக்காக இருக்கிறதா இல்லையா? என்பது பிரச்சனை அல்ல. ஆனால் தரமான படம், நல்ல கருத்தை சொல்கிறது என்று கொண்டாடும் பொழுது அந்த கருத்து எப்படிப்பட்டது என்பதை கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் ரசிகன் கருத்தை ரசிக்கிறான், அந்த கருத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிப்போகிறான், ஒத்துப்போகிறான். "ஜோக்கர்" படம் பார்த்தேன், அப்படம் சொல்லவரும் கருத்து என்ன. "வீதிக்கு போராட வா தோழா" நல்ல விஷயம் தான், பிறகு என்ன பிரச்சனை. வீதிக்கு மக்கள் திரளாய் இல்லாமல் தனியாக வரச்சொல்கிறது … Continue reading ஜோக்கர்: மக்கள் ஏன் ஜோக்கர்களாக பார்க்கப்பட வேண்டும்?

இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

பிரேம்  ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரி தன் உயிரை அளிக்கவும் முன் வந்த இரோம் ஷர்மிலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு தன் உண்ணாமை போராட்டத்தை முடித்துக் கொண்டு வேறு வகையான போராட்டத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். மணிப்பூர் மண்ணிலிருந்து வரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இரோம் ஷர்மிலா பெயரைக் கேட்டதும் கண்களில் காட்டும் ஈர நினைவு பல அர்த்தங்களைக் கொண்டது. அமைதி, தன்மானம் கொண்ட வாழ்க்கை, தினக்கொலைகளும், வன்கொடுமைகளும் இல்லாத வாழ்க்கை இதுதான் அவருடைய கோரிக்கை … Continue reading இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

மோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா?

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலித்துகளை அடிப்பதை நிறுத்தி விட்டு தன்னை அடியுங்கள் என பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் ‘பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி!’ என ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பதிவில், “பசு பாதுகாப்பு என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் 07.08.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை வரவேற்கிறேன். 'தாக்கவேண்டுமென்றால் என்னைத் தாக்குங்கள், தலித்துகளை தாக்காதீர்கள்; சுடவேண்டுமென்றால் … Continue reading மோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா?

பேரா. சுபவீ, ஊடகவியலாளர் குணா மற்றும் சிலருக்கு ஒரு திறந்த மடல்: கௌதம சன்னா

கௌதம சன்னா பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதம் உங்களுக்கும் உங்களைப் போலவே கருத்துத் தெரிவித்துள்ள ஊடகவியலாளர் குணா மற்றும் சூனியர் விகடன் இதழ் குழுமத்திற்குமானது. நீங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதால் இதை எழுத வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. என்னை உங்களுக்கு யாரென தெரியாமல் இருக்கலாம். நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொருப்பாளராக இருந்தாலும் அந்த தகுதியில் இக்கடிதத்தை எழுதவில்லை. ஒரு சாமான்ய மனிதனாக எனக்கு எழுந்துள்ள கேள்விகளினால் உந்தப்பட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். … Continue reading பேரா. சுபவீ, ஊடகவியலாளர் குணா மற்றும் சிலருக்கு ஒரு திறந்த மடல்: கௌதம சன்னா

பதவியை இழந்த அருணாச்சலப் பிரதேச முதல்வர் தூக்குமாட்டி இறந்த நிலையில் மீட்பு

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தனது வீட்டில் தூக்குமாட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் முதலமைச்சராக நான்கரை மாதம் பதவி வகித்த அவர், சமீபத்திய ஆட்சி கழிப்பால் பதவி இழந்தார். அது முதல் அவர் விரக்தியான மனநிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கொண்டு இந்த மரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

“ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா

தன்னை அதிமுக தலைமையில் இருக்கும் ஜெயலலிதா, கன்னத்தில் அறைந்ததாக பரபர குற்றச்சாட்டை வைத்தார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. அதிமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கியது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, “சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன் வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனி … Continue reading “ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா

“எங்கே போகிறது பா.ஜ.க.? முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!”

திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, பா.ஜ.க.வினர் சிலரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரும் மற்றும் அவர்களது தொண்டரடிப்பொடி பிரசாரகர்களும், விளைவுகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலையின்றி, எதை நினைத்தாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எல்லைக்கே சென்று செயல்பட்டு, நாட்டில் பேதத்தையும், வேறுபாட்டையும், பிளவையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட … Continue reading “எங்கே போகிறது பா.ஜ.க.? முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!”

மனித கழிவுகளை அகற்ற தடைவிதித்த உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்தக் காட்சி

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தடை செய்யும் சட்டம் அமலாக்கச்சொன்ன நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே, அடைப்பை நீக்க மலக்குழிக்குள் இறக்கி விடப்பட்டிருக்கிறார் இவர். இது சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட படம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வந்த எதிர்வினை: பிரதாபன் ஜெயராமன் மனித கழிவுகளை அகற்ற தடைவிதித்த உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்றைய காட்சி....சட்டத்தை அமல்படுத்தவேண்டியவர்களே மீறும் அவலம். Thanks P.C:- Manikandan Vathan சு. இரவிக்குமார் நியாயமாரே... ----------------- சென்னை உயர்நீதி மன்ற … Continue reading மனித கழிவுகளை அகற்ற தடைவிதித்த உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்தக் காட்சி

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. நீஸ் நகரின் ‌கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், அந்நாட்டு தேசிய தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, லாரி ஒன்றை அதிவேகமாக ஓட்டியவாறு ஒருவர், திரண்டிருந்த கூட்டத்திற்குள் நுழைந்தார். அந்த நபர், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் 80 பேர் உயிரிழந்தனர்;பலர் காயமடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் ‌அந்த நபரை சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து பிரான்சில் பதட்டம் அதிகரித்துள்ளதால் அவசர நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக … Continue reading பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

இத்தனை எளிமையான கேமரூன் பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் சிக்கியது எப்படி?

பிரிட்டன் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவியை பிரிக்சிட் வாக்கெடுப்புக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.  அரசு மாளிகையை விட்டு அவருடைய குடும்பம் அண்மையில் வெளியேறியது இதையொட்டி முகப்பில் இருக்கும் படம், உலகம் முழுக்க வைரலானது. இங்கிருப்பவர்கள் கேமரூனின் எளிமையை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். சில பதிவுகளைப் பாருங்கள்:   Thadagam Mugund பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு ஆபிச காலி பண்ணும் போது...நம்ப ஊரு வார்ட் மெம்பரிடம் கூட இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமானு தெரியல. … Continue reading இத்தனை எளிமையான கேமரூன் பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் சிக்கியது எப்படி?

முன்னாள் காவல் துறை அதிகாரியின் பொறுப்புணர்வு இதுதானா?

பா. ஜீவசுந்தரி  மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை சமமாக நடத்தும்படியும், உடைமைப் பொருளாக நினைக்காமல், தாவர, சங்கம சொத்துக்களாக மதிப்பிடாமல் ரத்தமும் சதையும் உயிரும் உள்ள சக மனுஷியாக, மனிதப்பிறவியாக நினையுங்கள் என்பதை வலியுறுத்தலாம். அதை விடுத்து பாதுகாப்பு என்று பெண்ணை வீட்டுக்குள் முடக்கும் நடைமுறைகள் எரிச்சலூட்டுகின்றன. படங்களைப் பதிவிடும்போது அதை யார் பார்க்கலாம் என்ற விதிமுறைகளைப் பெண்கள் பின்பற்றினால் போதும். … Continue reading முன்னாள் காவல் துறை அதிகாரியின் பொறுப்புணர்வு இதுதானா?

ஒய். ஜி. மகேந்திராவுக்கு சமூக வலைத்தள மக்கள் கடும் எதிர்ப்பு; கைது செய்ய கோரிக்கை

நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தனது முகநூலில், ஸ்வாதி என்ற பிராமண பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக் என அவதூறு பதிவொன்றை எழுதியிருந்தார். தற்போது அந்தப் பதிவைத் தான் எழுதவில்லை என சொல்கிறார். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு குண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் பிலால் மாலிக். இந்தச் சம்பவத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்டார். நுங்கம்பாக்கம் ஸ்வாதியைப் போன்றே இவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர்தான். கூகுள் சர்ச்சில் … Continue reading ஒய். ஜி. மகேந்திராவுக்கு சமூக வலைத்தள மக்கள் கடும் எதிர்ப்பு; கைது செய்ய கோரிக்கை

இந்திய வறுமையின் வரைபடம்…

சு. இரவிக்குமார் இது 2010 ல் இந்தியாவில் நிலவிய வறுமையின் வரைபடம். பீகார், சத்தீஷ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 35 -40 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். மேற்கு வங்கம், அருணாசலப் பிரதேசத்தில் 25-35 சதம் மக்கள் வறுமையின் பிடியில் இருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்ரா, கர்னாடகா, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், மேகாலயா, நாகலாந்து, … Continue reading இந்திய வறுமையின் வரைபடம்…

புதிய மொந்தையில் பழைய கள்: ஜெயலலிதாவின் கோரிக்கைகள் பற்றி கருணாநிதி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  பிரதமரைச் சந்தித்து 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று 3-6-2014 அன்று பிரதமரிடம் 31 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்ததோடு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களையும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களையும் சந்தித்து விட்டு சென்னை … Continue reading புதிய மொந்தையில் பழைய கள்: ஜெயலலிதாவின் கோரிக்கைகள் பற்றி கருணாநிதி

புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். புகையிலை ஒழிப்பு நாளில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் தீமை புகையிலைதான். சிகரெட், பீடி, குட்கா, மூக்குப் பொடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் கொலை செய்யப்படுகிறார்கள். புகையிலையால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய் எனப் பல கேடுகள் நேருகின்றன.  இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் … Continue reading புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமைச்சரவையில் பெண்களுக்கான இடம்: பெண்கள் ஏன் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள்?

சுகந்தி நாச்சியாள்  முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து ஆளுங்கட்சியாக இருந்த கட்சியே ஆளும்கட்சியாக மீணும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே, பெண்களின் தலையில் குட்டு வைக்கிறார்கள். தமிழக அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துவிட்டார்கள். மிகவும் சந்தோஷப்படக் கூடிய விஷயமாக மூன்று பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் சரோஜா, ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் வெற்றிக்கனியைப் பறித்து வந்து அம்மாவிடம் சமர்பித்த எஸ். வளர்மதி, சாதி சான்றிதழை மாற்றியதாகக் கூறப்பட்ட சங்கரன்கோயில் ராஜலட்சுமி ஆகியோர் தான் … Continue reading அமைச்சரவையில் பெண்களுக்கான இடம்: பெண்கள் ஏன் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள்?

தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க திமுக செயற்குழு கூட்டம்!

திமுக செயற்குழு கூட்டம் வரும் 24ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் விவாதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களும் புதிய எம் எல் ஏக்களும் பங்கேற்க உள்ளனர்.

ஷுட்டிங் புறப்பட்ட விஜயகாந்த்!

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் இருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த். https://twitter.com/iVijayakant/status/733594228278730752 https://twitter.com/iVijayakant/status/733593916461580288 https://twitter.com/iVijayakant/status/733588272580952064 https://twitter.com/iVijayakant/status/733577518544916481  

“வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 1984 முதல் அ.தி.மு.க.வும்  தி.மு.க.வும்  தமிழகத்து ஆட்சி நாற்காலியில் மாறி மாறி அமரும் சூழல் இன்று முறியடிக்கப்பட்டு அ.தி.மு.க.,வே   மீண்டும் ஆட்சியில் தொடரும் நிலை வாய்த்திருக்கிறது.  இது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றாலும் இந்த முடிவு ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளையும், ஊழலற்ற ஆட்சிமுறையையும், நேர்த்தியான நிர்வாகத்திறனையும் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க … Continue reading “வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”

ஒன்றரை லட்சம் கடன் பாக்கிக்காக கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன் வீடு ஜப்தி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் சென்னையில் புதனன்று (மே 4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கல்விக் கடனில் மிக மோசமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. கடன் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் பலரை கடனை திருப்பி கட்டக்சொல்லி துன்பப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். என்றாலும் இந்தமாதியான பாதிப்பு தனிப்பட்ட முறையில் எனக்கே ஏற்பட்டுள்ளது. என்னுடைய மகள் கல்விக் கடன் பெற்று … Continue reading ஒன்றரை லட்சம் கடன் பாக்கிக்காக கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன் வீடு ஜப்தி!

அசோக்குமார் ஏன் டிஜிபியாக தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்?

தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “மதிப்பிற்குரிய தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, வணக்கம். எனது 30.04.2016 கடிதத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடுநிலையான, நேர்மையான தேர்தல் நடத்திட உடனடி நடவடிக்கைக்காக இந்தக் கோரிக்கையைத் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். கடந்த 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் உயர்ந்த பதவிகளில் இருக்கக்கூடிய காவல்துறையின் மூத்த மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விலக்கி உள்ளார்கள். டி.ஜி.பி. - … Continue reading அசோக்குமார் ஏன் டிஜிபியாக தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்?

வசந்தி தேவி யார்? அரசியலுக்கு வசந்தி தேவியின் தேவை என்ன?

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர். கே. நகர் தொகுதியில் அவரை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  களம் காண்கிறார் வசந்தி தேவி.  இவரைப் பற்றி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் சிலரின் கருத்துக்கள் இங்கே... அ. மார்க்ஸ் (பேராசிரியர்) ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயாவை எதிர்த்து ம.ந.கூ சார்பாக டாக்டர் வசந்தி தேவி நிறுத்தப்பட்டுள்ளார். சக்கரைச் செட்டியார் அவர்களின் பேத்தி முன்னாள் துணை வேந்தர், முன்னாள் பெண்கள் ஆணையத் தலைவர், கல்லூரி ஆசிரியர் சங்கப் போராளி, அனைவராலும் மதிக்கப்படும் ஒரு … Continue reading வசந்தி தேவி யார்? அரசியலுக்கு வசந்தி தேவியின் தேவை என்ன?

தேமுதிக வேட்பாளர் முழு வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி – தமாகா கூட்டணியில் தேமுதிக 104 தொகுதிகளிலும்  மதிமுக- 29, த.மா.க - 26, சிபிஎம் - 25, விசிக- 25, சிபிஐ -25 இடங்களில் போட்டியிடுகின்றன. தேமுதிக முழு வேட்பாளர் பட்டியல் இங்கே: முதல் வேட்பாளர் பட்டியல் ஓமலூர் – இளங்கோவன் புதுக்கோட்டை – ஜாகீர் ஹூசைன் திருச்சி மேற்கு – ஜோசப் ஜெரால்டு கன்னியாகுமரி – ஆதிலிங்கப் பெருமாள் பத்மநாபபுரம் – ஜெகன்நாதன் 2-வது பட்டியல் விருகம்பாக்கம் … Continue reading தேமுதிக வேட்பாளர் முழு வேட்பாளர் பட்டியல்!

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் கட்சித் தலைவர் கருணாநிதி வெளியிட்டார். பட்டியல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுடன்... 1. கும்மிடிப்பூண்டி - மக்கள் தேமுதிக 2. பொன்னேரி (தனி)-  டாக்டர் கே. பரிமளம் 3. திருத்தணி - காங்கிரஸ் 4. திருவள்ளூர்- வி.ஜி. ராஜேந்திரன் 5. பூவிருந்தவல்லி (தனி)- இ. பரந்தாமன், 6. ஆவடி- சா.மு. நாசர் 7. மதுரவாயல் -காங்கிரஸ் 8. அம்பத்தூர் -காங்கிரஸ் 9. மாதவரம் மாதவரம் - எஸ். சுதர்சனம், … Continue reading திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மீண்டும் சர்ச்சையில் குஷ்பூ: கட்டான் சாய் குடித்த படங்களைப் பகிர்ந்து மதுஅருந்துவதாக சமூக ஊடகங்களில் அவதூறு!

சமூக ஊடகங்களில் மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறார் குஷ்பூ. குஷ்பூ மது அருந்துவதாகச் சொல்லி சில புகைப்படங்களில் பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப் பட்டுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸாருடன் சேர்ந்து குஷ்பூ மது ஒழிக்கும் விதம் இதுதான் என சொல்லி இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றி குஷ்பூ விளக்கம் அளித்திருக்கிறார். கேரளா சென்றிருந்த போது அங்கு, நண்பர்களுடன் புகழ்பெற்ற கட்டன் சாய் குடித்தேன். அந்தப் படங்களை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதைத்தான் இப்போது எல்லோரும் பகிர்கிறார்கள் என அவர் … Continue reading மீண்டும் சர்ச்சையில் குஷ்பூ: கட்டான் சாய் குடித்த படங்களைப் பகிர்ந்து மதுஅருந்துவதாக சமூக ஊடகங்களில் அவதூறு!

#வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, இரண்டு நாட்களுக்கு முன் திமுக, தேமுதிகவை கூட்டணியில் இணைக்க ரூ. 500 கோடி பேரம் பேசியது என குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகைகள்தான் பேரம் பேசுவதாக தொடர்ந்து எழுதின; அப்படி எழுதுவதை தயவு செய்து நிறுத்துங்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். இந்நிலையில் பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வைகோவிடம், ‘திமுக ரூ. … Continue reading #வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!