கா. ஐயநாதன் இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்த சில நிமிடங்களிலேயே “மீண்டும் மோடி ஆட்சியே அமையப் போகிறது” என்று கூறும் வாக்குக் கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) தொலைக் காட்சிகளில் வெளியாகியுள்ளன. முன் திட்டமிடப்பட்டுபோல் எல்லா தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மோடியின் தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என்று கூறியுள்ளன. பாஜக தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி … Continue reading எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?
குறிச்சொல்: அரசியல்
திருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன?
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை
பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை
மனுஷ்ய புத்திரன் பொம்மை அரசனின் படைகளுக்கு வீரம் இப்போது அதிகரித்துவிட்டது கடமை இப்போது அதிகரித்துவிட்டது அவர்கள் இப்போது சோளக்காட்டு காவல் பொம்மைகளையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் எனது ஒரு துண்டு நிலத்தை தரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை இருபது காவலர்கள் புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் இன்று காணகிடைக்கின்றன எங்கள் காற்றை நஞ்சாக்காதே என்று சொன்ன ஒரு சிறுவனின் முதுகை சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் உரித்திருந்தார்கள். அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அச்சம் அவர்களை நிதானமிழக்க … Continue reading பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?
கவிதா சொர்ணவல்லி டிடிவி ஜெயிப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆர்கேநகர் நிலவரங்களை தொடந்து கவனிக்க... வேண்டாம் வேடிக்கை பார்த்திருந்தால் கூட இது தெரிந்திருக்கும். அவருக்கு அங்கு எதிரிகளே இல்லை. அதுதான் உண்மை. இந்த இடைதேர்தல் என்பது, வென்றேயாக வேண்டியது என்ற கட்டாயம் தினகரனுக்கு மட்டுமே இருந்தது.அவர் அதில் முழு முனைப்புடன் இறங்கினார். அவருக்காக, அவருடைய ஆட்கள் அங்கே உயிரைக் கொடுத்து பணியாற்றினார்கள். ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி மீது மக்களுக்கிருந்த அதிருப்திகளை வாக்குகளாக்குவதில் கோட்டை விட்டது திமுக. அவ்வளவு ஏன் … Continue reading டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?
ஆர்.கே.நகரும் முதலாளித்துவத் தேர்தல் முறையின் கணக்கு வழக்கும்
ஸ்ரீரசா 1977-ல் அதிமுக வேட்பாளர் ஐசரி வேலன் 28,416 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் 1991-ல் இங்கு 66,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.சேகர் பாபு 2001-ல் 74,888 வாக்குகளும், 2006-ல் 84,462 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் எஸ்.பி.சற்குணபாண்டி யன் 1989-ல் 54,216 வாக்குகளும், 1996-ல் 75,125 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 … Continue reading ஆர்.கே.நகரும் முதலாளித்துவத் தேர்தல் முறையின் கணக்கு வழக்கும்
டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ … Continue reading டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’
கிருஷ்ணன், விநாயகர் வழிபாடுகளை வெறும் எள்ளல்,வசைகளால் அணுகுவது சரியா?
ரபீக் ராஜா புராணங்களில், தற்போதைய "அறிவியல் தன்மை" இருக்கமுடியாது. ஆனால், புராணம் வழி கட்டப்பட்ட, "சூதும் தந்திரமும்" உழைக்கும் மக்களைச் சுரண்ட, சமூக ஒப்புதலைப் பெற்றுத்தருவது நீடிக்கிறது. பதினெட்டுப் புராணங்களும் வரலாற்றின், வல்லாதிக்கத்துக்கும், எளிய மக்களின் மீதான கொடுமைகளுக்கும் இடையேயான போராட்டங்களைப் பூடகமாகச் சொல்பவையே. "பெண்வழிச் சமூகக் கட்டமைப்பை, ஆண்வழிச்சமூக ஆதிக்கமாக மாற்றுவது, வர்ண வளர்ச்சியின் புற எதிர்ப்பைத் தன்வயமாக்குவது, வைதீக எதிர்ப்பைத் தந்திரமாக வளைப்பது, பன்மையை ஒற்றையாக்கி மேலாதிக்கத்தை நிறுவுவது, வெவ்வேறு நிலப்பகுப்பு இருந்தபோதும், சமயம் … Continue reading கிருஷ்ணன், விநாயகர் வழிபாடுகளை வெறும் எள்ளல்,வசைகளால் அணுகுவது சரியா?
கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி
ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்
பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!
ஒரு ஆயா ட்ரான்ஸ்பரைக்கூட அப்ரூவல் இல்லாமல், பண்ண முடியாது என்கிற போது தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா என்ன?
புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம்: மு.க.ஸ்டாலின்
இந்தியை கொல்லைப் புறமாக திணிக்க நினைத்தால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து உருவாக்கும் விதத்தில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நெடுஞ்சாலை 75, … Continue reading புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம்: மு.க.ஸ்டாலின்
‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்
‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையில், “மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதத்தில் புதிய முதலமைச்சராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமித்து விரைவில் தனது அமைச்சரவைச் சகாக்களுடன் பதவி ஏற்கும்படி மாண்புமிகு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். 2016-ல் … Continue reading ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்
”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”
ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது எனவே தற்போதைக்கு பொதுத்தேர்தல் தான் ஒரே தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் "இரு நீதியரசர் இருக்கை" அளித்துள்ளத் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல்சக்திகளுக்குப் பாடம்புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப் படுவதால், … Continue reading ”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”
’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்!
அதிமுக, இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்தனை எம். எல். ஏக்களின் தொடர்பு எண்களை சமூக ஊடகங்களில் பரவவிட்டனர். மக்கள் தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி தொடர்ந்து தொலைபேசியில் பேசினர். இதுகுறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களுடைய சுதந்திரம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதாக கருத்திட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பினை … Continue reading ’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்!
அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும்!
தமிழக அரசியலில் தற்போது நிலவிவரும் அசாதரண சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவுபெற்ற நிலையான ஆட்சியை அமைப்பதற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றத்தில் துவங்கவுள்ளது. அதில் தமிழகத்தின் … Continue reading அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும்!
” ஜெயலலிதாவை ஏன் கொலை செய்தீர்கள்?”
மனுஷ்யபுத்திரன் இன்று காலை புதிய தலைமுறையில் ஆவடி குமார் அடிப்படையான எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் திமுகவை அவதூறு செய்வதிலேயே குறியாக இருந்தார். சட்ட சபையில் துரைமுருகன் ஓபிஎஸ் ஸை நோக்கி ' 5 ஆண்டுகளும் நீங்களே ஆளுங்கள்' என்று சொன்னது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை பொறுமையாக விளக்கினேன். ஓ பி எஸ் ' நாங்கள் செய்த நல்லது எதையும் திமுக பாராட்ட மறுக்கிறது" என்று சட்ட சபையில் குறைபட்டுக்கொண்ட போது " துரைமுருகன்" நல்லது … Continue reading ” ஜெயலலிதாவை ஏன் கொலை செய்தீர்கள்?”
தலைவர் ‘மோடி’ல் மக்கள்!
கண்ணன் ராமசாமி சமீபத்திய அசாதாரணமான சூழல்களை கவனிக்கும் போது ஒரு விடயம் நன்றாக புரிகிறது. சசிகலாவை முதல்வர் பதவிக்கு வரச் செய்வதற்கான வரலாற்று கையெழுத்து ஜெயலலிதாவின் மறைவு நாள் அன்றைக்கே போடப்பட்டு விட்டது. வரலாற்றில் இனி ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று தேடப்போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த காணொளி காட்டித் தருவது சசிகலா என்னும் தலைவரைத் தான்! இந்த கருத்தின் பின்புலத்தில் தான் ஏன் தீபா அங்கு அனுமதிக்கப்படவில்லை என்கிற உண்மை ஒளிந்திருக்கிறது. எதிர்கால மடையர்கள் "சசிகலா … Continue reading தலைவர் ‘மோடி’ல் மக்கள்!
“அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்தவள் நான்!”: சசிகலாவின் முதல் அரசியல் உரை…
அதிமுக பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்ற சசிகலா முதன் முறையாக அதிமுக தலைமை செயலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். ‘‘தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே, அ.தி.மு.க. உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே! உலகமே … Continue reading “அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்தவள் நான்!”: சசிகலாவின் முதல் அரசியல் உரை…
முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து அவர் தரும் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்போலோ மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக … Continue reading முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு
“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்
“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுச் செய்தி அதிமுக ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்யத் திட்டம் கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. 18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள … Continue reading “தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடாத நிலையில் முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏவாக வேண்டும் என்ற நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், நாராயணசாமிக்காக தனது பதவியை ராஜிநாமா செய்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11, 144 … Continue reading புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி
தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்
முதலமைச்சரின் துறைகளை முழுமையாக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்கவேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயனாவரம் சந்தை பகுதி, பெரம்பூர் இந்தியன் வங்கி ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 500 ரூபாய் ஒருவருக்கு வியாபாரம் … Continue reading தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்
ஜல்லிக்கட்டு தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!
“தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளில் தொடங்கி பல மாதங்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், அதற்கான காரணங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன” என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு முடிவு … Continue reading ஜல்லிக்கட்டு தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!
நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்
“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாருர் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சியபுரம் அழகசேன், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ் ஆகிய … Continue reading நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்
“பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்லர்”: சல்மான்கான்
பாகிஸ்தான் - இந்தியமக்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை; நடப்பது இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமே என்று புகழ்பெற்ற திரைப் பட இயக்குநர் ஷியாம் பெனகல் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தீக்கதிர். மேலும் அந்தச் செய்தியில், இந்தியா - பாகிஸ்தான் சர்வேதேச கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும் பும் வரை, பாகிஸ்தான் … Continue reading “பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்லர்”: சல்மான்கான்
“நான் உங்களைப் பார்த்து பயந்துவிடவில்லை”: செருப்பு வீச்சு சம்பவத்து ராகுல் எதிர்வினை
அடுத்த ஆண்டு வரவிருக்கிற உத்திரபிரதேச மாநில தேர்தலையொட்டி கிஷான் யாத்ரா என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. திங்கள் கிழமை உத்தர பிரதேசத்தின் லக்னௌ நகரத்தின் அருகே உள்ள சிதாபூரில் பிரச்சார வாகனத்தில் ராகுல் காந்தி வந்தபோது, அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அவர் மீது செருப்பு படாமல் பின்னால் நின்றுகொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா மீது பட்டது அந்த செருப்பு. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட … Continue reading “நான் உங்களைப் பார்த்து பயந்துவிடவில்லை”: செருப்பு வீச்சு சம்பவத்து ராகுல் எதிர்வினை
கோவையில் கடையை உடைத்து செல்போன்களை அள்ளும் இந்து முன்னணியினர்; சிசிடிவி கேமராவில் சிக்கினர்
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டார். இதைக் கண்டிப்பதாகக் கூறி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட் இந்துத்துவ அமைப்பினர் கோவையில் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். கோவை துடியலூரில் மொபைல் கடையை உடைத்து கையில் செல்போன்களை அள்ளிச் சென்ற காட்சி அந்தக் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. https://youtu.be/BwqQkGOU7N8 வீடியோ உதவி: ஒடியன் லட்சுமணன்
பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; கடைகள் சூறையாடல்: கோவையில் நடந்த வன்முறைகளின் பட்டியல்
கோவையில் வெள்ளிக்கிழமை இந்து முன்னணியினர் நடத்திய வன்முறைகளின் பட்டியலுடன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார் சிபிஐ(எம்)மின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். இந்த மனு விவரம்: கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்ப்பாளர் பொறுப்பில் இருந்த டி. சசிக்குமார் (35) என்பவர் 21.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பத்தையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் … Continue reading பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; கடைகள் சூறையாடல்: கோவையில் நடந்த வன்முறைகளின் பட்டியல்
கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலையானதை அடுத்த நடத்தப்பட்ட வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22.9.2016 இரவு கோவை துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த திரு. சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது. ஆனால், இந்தக் கொலையைப் பயன்படுத்தி இந்து … Continue reading கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
ராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி
ராம்குமார் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு. கருணாநிதி கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கைள்: சென்னை நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கண்டுபிடித்துக் கைது செய்ததைப் பற்றி நான் 8-7-2016 அன்று விரிவாக தெரிவித்திருந்தேன். நெல்லையில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ராம்குமார் அழைத்து வரப்பட்ட போது விடிய விடியத் … Continue reading ராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி
சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணமடைந்தது குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. விசிக தலைவர் தொல் திருமாவளவன்: ராம்குமார் சாவுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதை தற்கொலை என்று மூடி மறைக்க அரசு முயற்சிக்க கூடாது. அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உடலை உடனே அடக்கம் செய்யக்கூடாது. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: … Continue reading சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்
“ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”
மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சிறையில் இருந்த ராம்குமார் எப்படி தற்கொலை செய்துகொண்டிருக்க முடியும்? என சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சில கண்டனக் குரல்கள் இங்கே: Vijayasankar Ramachandran: ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது. பிரதாபன் ஜெயராமன்: இரு ஆணவக்கொலைகள் Joshua Isaac Azad: Ramkumar murdered by the state!!!! #CustodialMurder #I_Stand_By_Ramkumar #JusticeForRamkumar Aravindan Sivakumar: ராம்குமார் இறந்தார் என்று போடாமல் தற்கொலை என்று எப்படி … Continue reading “ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”
அக்னிக்குஞ்சுகள்!
வா. மணிகண்டன் விக்னேஷ் இறந்துவிட்டான். திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன். இரண்டு நாட்களுக்கு இந்தப் பெயரைப் பேசுவார்கள். முத்துக்குமார் எரிந்து கருகிய போதும் இப்படித்தான் பேசினார்கள். செங்கொடி தீக்கு தன்னை இரையாக்கிய போதும் இதே மாதிரிதான் பேசினார்கள். இதற்கும் முன்பு எத்தனையோ பேர் எரிந்து வீணாகப் போனார்கள். மண்டல் கமிஷன் போராட்டத்திலிருந்து, தன் தலைவனை கட்சியை விட்டு நீக்குகிறார்கள் என்பது வரை எத்தனையோ காரணங்களுக்காக இளைஞர்களை தீ காவு கொண்ட மண் இது. முத்துக்குமார் ஞாபகத்தில் இருக்கிறான். … Continue reading அக்னிக்குஞ்சுகள்!
தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற … Continue reading தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்
“காவிரி நீர் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞர் தீக்குளிக்கிறார்; சீமானிடமிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்”
வி. சபேசன் நாம் தமிழர் கட்சி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விக்னேஸ் என்ற இளைஞர் தீக்குளித்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். விக்னேஸ் தீக்குளித்த செய்தி வந்த பொழுது, நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஊர்வலத்தில் தனக்குத்தானே தீமூட்ட முயற்சித்திருப்பான், உடனடியாகவே அவனை பக்கத்தில் நின்ற தொண்டர்கள் காப்பாற்றியிருப்பார்கள், சிறிய தீக்காயம்தான் ஏற்பட்டிருக்கும், இன்றைக்கே வீடு வந்து விடுவான்' இப்படி எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் விக்னேஸ் பற்றி … Continue reading “காவிரி நீர் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞர் தீக்குளிக்கிறார்; சீமானிடமிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்”
காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!
அறிவழகன் கைவல்யம் கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வியல் பண்புகளில் பெரிய அளவில் வேறுபாடுகள் ஏதுமில்லை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் தொல் குடிகளாக வசிக்கும் கன்னட உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி குரல் கொடுக்கவும் இயலாமல் இருப்பவர்கள். அங்கிருக்கும் ஆதிக்க சாதிகளான ஒக்கலிகர் (கௌடர்கள்) மற்றும் லிங்காயத்துகள் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தங்கள் … Continue reading காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!
முழு அடைப்புப் போராட்டம்; கட்சிகள் ஆதரவு; தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்குகள் மூடல்
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு கடையடைப்புப் போராட்டத்துக்குத் திமுகவின் … Continue reading முழு அடைப்புப் போராட்டம்; கட்சிகள் ஆதரவு; தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்குகள் மூடல்
பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?
வேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன. இந்நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ் கண்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனுடன் நட்புடன் … Continue reading பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?
நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்
இக்பால் அகமது கடந்த ஏப்ரல் 18, 19 இரு நாட்களும் பெங்களூரில் லட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கம் வீறுகொண்ட ஆவேசத்துடன் சாலைகளில் திரண்டது; ஆகப்பெரும்பான்மையோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது; அது தன்னெழுச்சியான போராட்டம். மத்திய மோடி அரசு ’தொழிலாளர்களின் சேமிப்பான ஈபிஎஃப்-ஐ அவர்கள் ஓய்வுபெறும்போது அதாவது 58 வயது நிறைந்த பின்னரே மீட்டு எடுக்க முடியும்’ என்று திடீர் ஆணை பிறப்பித்தது; பெங்களூரின் லட்சக்கணக்கான ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள்தான் கோபாவேசம் கொண்டு வீதிகளில் திரண்டு இரண்டு நாட்கள் பெங்களூரின் அசைவை … Continue reading நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்
பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: கருணாநிதி
ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் சக கைதியால் தாக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க. ஆட்சியில் சிறையிலே இருக்கும் பேரறிவாளன் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டு, மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கும், சிறையிலே இருக்கும் கைதிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலைமைதான் உள்ளது என்பதற்கும் எடுத்துக்காட் டாக உள்ளது. மற்றொரு கைதியால் தாக்கப்பட்டார் என்றாலும், அவருக்கு இரும்புக் கம்பி … Continue reading பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: கருணாநிதி