பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் … Continue reading இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்
குறிச்சொல்: அம்பேத்கர்
அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்
‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் … Continue reading அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்
வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1
ப. ஜெயசீலன் நரேன் ராஜகோபாலன்(கருப்பு குதிரை என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்) என்று ஒரு முக நூல் பதிவர் சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது வெறித்தனமான முரட்டுத்தனமான பிஜேபி எதிர்ப்பாளராக, திமுக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். he is really a character. ஒரு நாள் திடீரென்று நான் ஏன்தான் இவ்வளவு விஷயம் தெரிந்த அறிவாளியாக இருக்கிறேன் என்று எனக்கு சலிப்பாயிருக்கிறது. இப்பொழுது பாருங்கள் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் இந்தியா ஒரு மிக பெரிய … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?
பிரபாகரன் அழகர்சாமி உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கலின் போது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, இந்த மசோதாவை முதலில் தேர்வு குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி செய்த முயற்சிக்கு சி.பி.எம் ஆதரவளித்தது, அதுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் டி.கே.ரங்கராஜன் கனிமொழிக்கு ஆதரவாகதான் வாக்களித்திருக்கிறார். அவர் நேற்று அவையில் பேசிய உரையிலும் இந்த மசோதவின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்துதான் பேசியிருக்கிறார். மசோதாவில் இரண்டு திருத்தங்களை சி.பி.எம் முன்மொழிந்தது, அதுவும் பாஜகவால் நிராகரிக்கப்பட்டது. இத்தனைக்கு … Continue reading பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?
’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்
‘திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’ என்கிற இயக்குநர் பா. ரஞ்சித்தின் கேள்விக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் பதில்... “முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது. ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார். அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் … Continue reading ’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்
இந்த எழுச்சி தேவை; சிலைகளை காக்க மட்டும் அல்ல!
யோ. திருவள்ளுவர் இந்த எழுச்சி தேவை. இது வெறுமனே சிலையை காக்க அல்ல. இழந்த உரிமைகளை மீட்கவும், இருப்பவற்றை இழக்காமல் பாதுகாக்கவும் தேவை. சரியான பாதைக்கு திருப்பினால் இத்தகைய எழுச்சிகள் உரிமைகளை காக்க துவக்கமாக அமையும். ஆனால் கலவரங்கள் உருவாகாமல், பிளவுகளை உருவாக்குவதை கவனமாகத் தடுக்க வேண்டும். ராஜா மட்டுமல்ல தமிழ்மக்களின் உரிமைகளை மோடியின் காலடியில் விற்கிற அதிமுக அரசுக்கும் பொறுப்புண்டு. அதனால் தான் எச்சு.ராஜாக்களால் இப்படி துள்ளமுடிகிறது. பெரியாரும், அம்பேத்கரும் எந்த மக்களையும் விலக்கம் செய்யவோ, … Continue reading இந்த எழுச்சி தேவை; சிலைகளை காக்க மட்டும் அல்ல!
பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பெரியார்!!!
பிரபாகரன் அழகர்சாமி பெரியாருக்கு எதிராகவோ போட்டியாகவோ மாற்றாகவோ, அம்பேத்கரை கொண்டுவந்து நிறுத்துவது, கூடவே இப்போது அயோத்திதாசரை கொண்டுவந்து நிறுத்துவது போன்ற வேலைகளை , அறிவிஜீவிகள் என்று கருதப்படுகிற சிலர் பெரிய கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள்! தமிழக சூழலில் பெரியார் அதிகம் விவாதிக்கப்படுவதும் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுவதும் மிகவும் இயல்பானதும், தவிர்க்கவே முடியாததும் ஆகும்! பெரியார் ஒரு தனிநபர் ஆளுமையாக மட்டுமே விளங்கியவர் அல்ல. அவர் முழுக்க முழுக்க ஒரு இயக்கவாதி. தன்னுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் ஊர் ஊராக சுற்றித்திரிந்து பரப்பியவர். … Continue reading பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பெரியார்!!!
நூல் அறிமுகம்: ‘புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை’
பீட்டர் துரைராஜ் பட்டேல் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டுமே மதிக்கப்படுகிறார்; போஸ் வங்காளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நினைவு கூறப்படுகிறார் என்று சொல்ல முடியாது; ஆசாத் முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் மறக்கப்பட்டு விட்டார். வலதுசாரிகளாலும், இடது சாரிகளாலும் நேரு விமர்சிக்கப் படுகிறார்; காந்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்களால் மதிக்கப்படுகிறார் என்றாலும் பெரும்பாலானவர்கள் மீது அவர் தாக்கத்ததை தருகிறார் என்று சொல்ல முடியாது. இன்றைக்கு அம்பேத்கர் மட்டுமே நாடெங்கிலும் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார். அவரது பிறந்த நாளை … Continue reading நூல் அறிமுகம்: ‘புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை’
வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!
அன்புசெல்வம் சாதி அரசியல் ஏற்படுத்துகிற வன்முறையைக் கருத்தில் கொண்டு வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம். "இந்துக்களிலேயே உன்னதமானவர்" என்றழைக்கப்பட்ட காந்தியைப் பேசுவதற்கு இது ஒரு காரணம். ஆனால் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த முரண்பாட்டை மட்டுமே கூர்தீட்டுகிற பழைய காலத்து அரசியல் இன்றைக்கும் இருக்கிறது. அது செயல்படுத்த வேண்டிய சிறு, சிறு நம்பிக்கைகளை பொது நினைவுகளில் இருந்தே அகற்றி விடுகிறது. குறைந்தபட்சம் தலித்துகளுக்காக காந்தி ஏதாவது சொல்லியிருந்தால் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம். அதற்காக சில குறிப்புகள். … Continue reading வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!
”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை
1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை 1956 அக்டோபர் 15 ஆம் … Continue reading ”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை
UPSC தேர்வில் முதலிடம் பெற்ற டினா பெயரில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை திணிக்கும் மோடி பக்தர்கள்!
ஆதவன் தீட்சண்யா இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் (UPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போன்றவை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவை. பணிநியமனத்தில் நிலவும் சாதிரீதியான சாய்மானத்தையும் பாரபட்சத்தையும் தடுப்பதற்கான முதற்படியாக மத்திய மாநில அரசுகள் தத்தமக்கான தேர்வாணையங்களை அமைக்கவேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையே பிற்காலத்தில் செயல்வடிவம் பெற்றது. அரசியல் சாசன அவையில் அங்கம் வகிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் என்கிற … Continue reading UPSC தேர்வில் முதலிடம் பெற்ற டினா பெயரில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை திணிக்கும் மோடி பக்தர்கள்!
#தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்!
ஸ்டாலின் ராஜாங்கம் ஞாயிறு தமிழ் தி இந்து(01.05.2016) பெண் இன்று இணைப்பில் முதல் பெண் தலித் அமைச்சர் என்ற தலைப்பில் சத்தியவாணிமுத்து பற்றி சிறு கட்டுரை ஒன்றை ஆதி எழுதியுள்ளார் .திமுக வின் தொடக்ககால தலைவர்களில் ஒருவர், 1967 ல் திமுகவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்ற தலித்,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தியது, மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட அவர் பற்றிய பெரும்பாலான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. நல்ல பதிவு. எல்லோரும் கருதுவதை போல சத்தியவாணிமுத்துவின் அரசியல் வாழ்க்கை … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்!
பூலே முதல் அம்பேத்கரை வரை – கற்கவேண்டிய பாடங்கள்:டாக்டர் பி.டி. சத்யபால் பேசுகிறார்; ஒரு நாளை ஒதுக்கிவைத்துக்கொள்ளுங்கள்
குட்டி ரேவதி மானுடவியல் பேராசிரியரான சத்யபால் அவர்கள், இந்தியச் சமூகத்தின் சாதியக் கொடுமைகளையும் அதன் வரலாற்றையும் மக்களை, மண்ணுரிமைப் போராளிகளைப் பிரித்து வைத்திருப்பதில் கெட்டிக்காரத்தனமாக இயங்கும் பார்ப்பனீய இயந்திரத்தின் தந்திரங்களையும் மெய்யான தகவல்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர். முழுநாள் சொற்பொழிவை எந்தத் சோர்வும் தடையும் இன்றி அம்பேத்கரின் முழு எழுச்சியுடன் பகிரக்கூடியவர். அம்பேத்கரின் கொள்கைகளை, எந்த ஆர்ப்பாட்டமுமின்றி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பானவர். சமூகப் பணியாற்ற, சமூகத்தைப் புரிந்துகொள்ள விரும்புவோர் தவறவிடாதீர்! ஃபேஸ்புக் போராளிகள் முதல் … Continue reading பூலே முதல் அம்பேத்கரை வரை – கற்கவேண்டிய பாடங்கள்:டாக்டர் பி.டி. சத்யபால் பேசுகிறார்; ஒரு நாளை ஒதுக்கிவைத்துக்கொள்ளுங்கள்
“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!
ப்ரேமா ரேவதி மிக சுத்தமான உயர்தரமான சில சாலைகள் சில பகுதிகள் சென்னை மாநகரத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று சேத்துப்பட்டில் இருக்கும் ஹாரிங்டன் சாலை. பல முறை துப்புரவு செய்யப்பட்டு பல பன்னாட்டு உணவு விடுதிகள் மிளிரும் இச்சாலையை பலமுறை கடந்திருக்கிறேன். இன்று அதிகாலை அதைக் கடக்கும்போது திடீரென “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்” என்ற பாடல் மிக உரக்க ஒலித்தபோது இது ஹாரிங்டன் சாலைதானா என … Continue reading “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!
ஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்? ஓர் எளிய விளக்கம்
விஜய் பாஸ்கர்விஜய் நீங்கள் மாதம் குறைந்தது 30,000 க்கும் மேல் சம்பாதிக்கும் நபர். சுத்தமான வீடு, பாத்ரூம், கழிவறை. நல்ல சாப்பாடு வாரம் ஒருநாள் மால், சினிமா, பீச், ரெஸ்டாரண்ட். கணவன் மனைவி குழந்தைகள் என்றிருக்கிறீர்கள். வெள்ளிக்கிழமை காலை குளித்து நல்ல உடை தரித்து கோவிலுக்குப் போகிறீர்கள். தெருமுனையில் இருக்கும் குப்பைப் பெட்டியில் இரண்டு பேர் குப்பை அள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எளிதாக கடந்துவிடுகிறீர்கள். கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தால் என்ன நினைப்பீர்கள். ”ஐயோ பாவம் … Continue reading ஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்? ஓர் எளிய விளக்கம்
தேர்தல் அரசியல் நம் தலைவர்களின் படங்களும்!
பிரேம் தேர்தல் என்றவுடன் நமக்கு பெரும் கட்சிகள், ஆட்சியமைக்கும் கட்சி ஆட்சியிழக்கும் கட்சிகள் என்பவைதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் தேர்தலை முன்வைத்துதான் நாம் மாற்று அரசியலை பார்வைகளை இன்றுள்ள அமைப்பின் போதாமைகளை கொடுமைகளை பொது வௌியில் நினைவூட்ட இயலும்.இந்தியாவின் இடதுநிலைக் கட்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றாலும் அவைதான் ஜனநாயக இயக்கத்தை தொடர்ந்து காத்துவருபவை. தலித் அரசியலில் தேர்தல் மிகத்தேவையான ஒரு செயல்பாடு. தனித்த அரசியல் கட்சிகளாக தலித் தலைமையில் அம்பேத்கரிய அடிப்படைகளை முன் வைத்த செயல்பாடு நாம் நினைப்பதைவிட கூடுதலான … Continue reading தேர்தல் அரசியல் நம் தலைவர்களின் படங்களும்!
#தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்
ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி * தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி? இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா? மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது. சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார். வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு … Continue reading #தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்
“சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா
ரமேசு பெரியார் கௌசல்யா அது வெறும் பெயர்ச்சொல் அல்ல.,! ஆதிக்க சாதிவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கபோகும் வினைச்சொல்..!! அவளுடைய கண்ணில் சாதிவெறியர்களை களையெடுக்க வேண்டும் என்ற கோவமும், சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை பாதுகாக்க வேண்டுமென்ற ஆதங்கமும் தெரிகிறது...சாதிவெறி பிடிச்ச என்னுடைய பெற்றோர்களையும் கடுமையாக தண்டிக்கனும், தூக்குத்தண்டனை வாங்கிதரணும்ண்ணா..!!! நான் இப்படியே இருந்திரமாட்டேன் விரைவிலே இதிலிருந்து மீண்டுவருவேன் என்னால் இயன்றவரை சாதியொழிப்பு வேலைகளை செய்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள்...,கழிப்பிட வசதிகூட இல்லாத ஏழையான சங்கரை காதலிச்சு அவன் … Continue reading “சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா
பின்நவீனத்துவம் அறியாத அம்பேத்கரும் அயோத்திதாசரும் பாரிசுக்கு இருமுடி கட்டி பயணம் மேற்கொள்ளும் தமிழ் எழுத்தாளர்களும்
பிரேம் 1916- மே மாதம் 9 ஆம் தேதி Caste in India: Their mechanism, genesis and development (இந்தியாவில் சாதிகள்: அவற்றின் செயல்பாடு, உருவாக்கம், பெருக்கம்) என்ற ஆய்வுக்கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கர் அளித்த போது அவருக்கு வயது 25. ஒரு ஆய்வு மாணவராக அவர் அளித்த அக்கட்டுரை இன்று உள்ள இந்திய ஆய்வுகள் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அதனை எழுதும் முன் அவரின் மனதில் அது எத்தனை காலம் ஊறிக்கிடந்திருக்கும் என்பதை … Continue reading பின்நவீனத்துவம் அறியாத அம்பேத்கரும் அயோத்திதாசரும் பாரிசுக்கு இருமுடி கட்டி பயணம் மேற்கொள்ளும் தமிழ் எழுத்தாளர்களும்
இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!
(பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு தூக்கிலிடப்பட்டதைப்பற்றி பாபாசாகேப் மராத்தி இதழான ஜனதாவில் எழுதியது ஜனதா 13 ஏப்ரல், 1931) பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலப்பட்டுவிட்டார்கள். சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியையும், சர்மன் சிங் என்னும் சீக்கிய சிப்பாயையும் கொன்றதாக அவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், பனாரஸ் காவல்துறை கண்காணிப்பாலரை கொலை செய்ய முயற்சித்தது, அசெம்ப்ளியில் குண்டு வீசியது, மௌலிமியா கிராமத்தில் ஒரு வீட்டை கொள்ளையடித்தது உட்பட மூன்று, நான்கு குற்றச்சாட்டுகளும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டன. … Continue reading இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!
சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி
குட்டி ரேவதி 'நான் உயர்சாதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்' என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது. *நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்பது யாரும் அறியாதது அல்ல. … Continue reading சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி
சாதியும் தமிழ் சினிமாவும்: அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்!
சாதியை போற்றி வளர்த்ததில் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பு உண்டு. சினிமாவின் சாதி வளர்ந்த வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த முயற்சி. http://www.youtube.com/watch?v=GOoI4zNEOmI Shah Jahan தமிழ்த் திரைப்படங்கள் சாதியை எவ்வாறு சித்திரித்தன. தாழ்த்தப்பட்டவர்களை திரைப்படங்கள் எவ்வாறு சித்திரித்தன. சாதி உணர்வு இல்லாதவர்களாக இருந்தவர்களையும் தமது சாதி குறித்துப் பெருமை உணர்வு கொண்டவர்களாக ஆக்குவதில் திரைப்படங்களின் பங்கு என்ன? இன்றைய பிரச்சினைக்கு முக்கியக்காரணங்களில் முதன்மையான காரணமாக சினிமாவை நான் கருதுவேன். Meena Somu தமிழ் சினிமாவில் சாதி... இந்த … Continue reading சாதியும் தமிழ் சினிமாவும்: அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்!
#விவாதம்: இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள், திமுகவால் இருட்டடிப்பு செய்யப்பட்டரா?
கௌதம சன்னா இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்...? இந்தி எதிர்ப்பு என்றாலே யாவருக்கும் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாண்ட நடராசன் தாளமுத்து ஆகியோரைத் தான் நினைவுக்கு வரும். ஆனால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு தொடங்கியபோது அதில் முன்னணியில் நின்று போராடி எல்லோரையும் விட அதிக மாதங்கள் சிறையில் இருந்த ஒரே வீர மங்கை அன்னை சௌந்தரி அம்மாள் அவர்களை யாருக்கும் தெரியாது.. காரணம் … Continue reading #விவாதம்: இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள், திமுகவால் இருட்டடிப்பு செய்யப்பட்டரா?
”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!
(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் கன்னைய குமார் 2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் … Continue reading ”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!
அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!
மகிழ்நன் பா.ம இந்துத்வ அம்பேத்கர் என்று நூலின் பெயரை வெளியிட்டதாலேயே பலருக்கும் கிலி வந்திருக்கிறது. எல்லோரும் அஞ்சி சாகிறார்கள் என சிலர் எழுதி திரிகிறார்கள். அவர்களின் பொருட்டு அம்பேட்கரை மீண்டும் புரட்டிப் பார்ப்போம்... இந்துத்வ கும்பல் எழுதியிருக்கும் நூலின் குயுக்தியை பற்றி அம்பேட்கரை மதிப்பிடக் கூறினால் ”இந்துக்கள் நாவில் ராம நாமமும், கட்கத்தில் கூரிய வாளையும் வைத்திருக்கின்றனர். முனிவர்களைப் போல பேசி, கசாப்புக்காரர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.” என்றுதான் அண்ணல் கூறுவார் அந்த நூலை எழுதியவர்கள் நிறுவ விரும்புவது … Continue reading அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!
இந்துத்துவ அம்பேத்கர்: அம்பேத்கருக்கு பூசப்படும் காவி முலாம்!
மகிழ்நன் பா.ம பறையர் என்ற காரணத்தினால், ஒரு நபரை முன்வைத்து அம்பேத்கருக்கு இந்துத்துவ முலாம் பூச முயற்சி எடுத்து வருகிறது இந்துத்துவ கும்பல். அதற்கு பதில் சொல்ல வக்கற்றவர்களாகவே, முற்போக்கு முகாம் இருக்கிறது என்பதும், அம்பேத்கரின் எழுத்துகள் இன்னும் தீண்டத்தகாததாகவே இருப்பதுவும் உண்மை என்பதை எவரும் மறுக்கலாகாது. அம்பேத்கருக்கு இந்துத்துவ பெயிண்ட் அடிக்க அனுமதித்துக் கொண்டிருந்தால், தலித்’ என்று அழைக்கப்படும் பட்டியல்சாதி மக்களின் கரங்களாலேயே முற்போக்காளர்களுக்கு எதிரான வன்முறைகளை இந்துத்துவ கும்பல் பரவலாக்கும் என்பதை எச்சரிக்கையாக கொள்ள … Continue reading இந்துத்துவ அம்பேத்கர்: அம்பேத்கருக்கு பூசப்படும் காவி முலாம்!
இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை
பிரேம் பிராமணியம் என்ற சமூக அரசியல் மரபு இந்தியாவில் உருவாகி, வளர்ந்து, ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே பிராமணிய எதிர்ப்பு, பிராமணிய வெறுப்பு என்னும் சமூக உளவியலும் தொடங்கி விட்டது எனலாம். பிராமணியத்தின் விரிவான வரலாற்றை ஒரு வகையில் பிராமணிய எதிர்ப்பு இலக்கியங்கள் மற்றும் இயக்கங்களின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. வேதங்கள், உபநிஷத்துகள், சுருதிகள், சாஸ்திரங்கள், புராண-இதிகாசத் தொகுப்புகள் அனைத்திலும் தன்னை மேல் நிலையில் நிறுத்திக்கொள்ளும் பிராமணிய-பார்ப்பனிய மரபின் மொத்த இருப்பையும் இயக்கத்தையும் புரிந்து … Continue reading இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை
அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்ஸை ஆதரித்தாரா? ஆர்கனைசரின் விஷப் பிரச்சாரத்துக்கு தமிழக அறிவுஜீவிகளின் எதிர்வினை என்ன?
அ. மார்க்ஸ் நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்த நாளை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ இதழான 'ஆர்கனைசர்' இதழில் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்சைப் பாராட்டினார் எனவும் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாதி வேறுபாடுகள் முதலியன இல்லை எனவும் இம்மாதிரியான பல விஷயங்களை எழுதியிருந்தனர். ஹைதராபாத் பல்லைக் கழகப் பேராசிரியர்கள் கே. லக்ஷ்மணையா மற்றும் கே.ஒய்.இரத்தினம் உட்பட நான்கு தலித் அறிவுஜீவிகள் இந்த அபத்தங்களை மறுத்தும், அம்பேத்கர் எப்படி இந்துத்துவக் கருத்தியல்களுக்கு … Continue reading அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்ஸை ஆதரித்தாரா? ஆர்கனைசரின் விஷப் பிரச்சாரத்துக்கு தமிழக அறிவுஜீவிகளின் எதிர்வினை என்ன?
ஐரோப்பாவிலும்கூட அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படுகிறது!
இளங்கோ கிருஷ்ணன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை வளாகத்தில் இரண்டு இந்தியத் தலைவர்களுக்கு சிலைகள் உள்ளன. ஒருவர் காந்தி, இன்னொருவர் அம்பேத்கர். இரண்டு சிலைகளுக்குமே உண்மையான மூக்குக்கண்ணாடி அணிவிக்கப்பட்டிருக்கும். இதில், அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படும். யார் இதைச் செய்கிறார்கள் என பல்கலைக்கழகத்தினர் கண்காணித்தபோது, இந்திய மாணவர்களில் ஒரு பிரிவினர் இதைச் செய்வதை அறிந்தனர். ஐரோப்பியர்களுக்கு புரியவே இல்லை. அம்பேத்கரும் அவர்கள் தேசத்தின் தலைவர்தான் ஏன் அவர் கண்ணாடி மட்டும் உடைகிறது என. … Continue reading ஐரோப்பாவிலும்கூட அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படுகிறது!
செத்தவன் எந்த சாதிக்காரன் என்று உறுதி செய்துகொண்டு அழச்சொல்கிறார் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ்
ஹைதராபாத் பல்கலையில் மரணமடைந்த ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா, தலித் அல்ல, அவர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சமூக ஆர்வலர் பானுகோம்ஸ். இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். தலித்தாக இருந்தாலும் வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் இறுதிவரை போராடியது இந்துத்துவத்தை எதிர்த்துதான் என்பதை, பானு கோம்ஸ் போன்ற வலதுசாரிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து … Continue reading செத்தவன் எந்த சாதிக்காரன் என்று உறுதி செய்துகொண்டு அழச்சொல்கிறார் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ்
தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!
Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!
அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது?
சமூக நீதி பாதையில் அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் ‘திராவிடக் கட்சி’ களான திமுக, அதிமுக கட்சிகளின் வளர்ச்சி சமூக நீதி முன்னோடி தலைவர்களான அம்பேத்கரையும் பெரியாரையும் மறுப்பதில் வந்து நிற்கிறது. மறைமுகமாக இதன் மூலம் இவர்கள் சொல்லும் செய்தி என்ன? தலித்துகளை புறக்கணிக்கும் திமுக: எல்லா சாதிகளும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று சமத்துவபுரம் அமைத்த கருணாநிதியின் அரசியல், தலித்துகளை புறக்கணிப்பதில் வந்து நிற்கிறது. தருமபுரி இளவரசன் படுகொலையில் ஆகட்டும், கோகுல்ராஜ் கொலையில் ஆகட்டும் … Continue reading அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது?