ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ்

அமுதா சுரேஷ் நான் அறிந்தப் பெண்மணியொருவர் கணவர் விடாது கொடுமைப்படுத்துகிறார் என்றும், எத்தனை முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தம் பெண்குழந்தைகளுக்காக மறைந்து வாழ தலைப்பட்டதைப் பகிர்ந்துக்கொண்டார், அதுவும் காவல்துறையில் ஒருவர் “யார்தான் குடிக்கல, அடிக்கல, புருஷன் இல்லாம வாழ்ந்துடுவியா நீ?, வேற யாராச்சையும் பார்த்துகிட்டியா?” என்று கேவலப்படுத்தியதால் மனம் நொந்தததையும் பகிர்ந்துக்கொண்டார்! நேற்று ஒரு பெண், வாட்ஸ் அப்பில் தன் கணவர் தன்னையும் தன் ஆறு வயது மகனையும் கொடுமைப்படுத்துவதை பகிர்ந்துக்கொண்டு தற்கொலையும் … Continue reading ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ்

பெண்களுக்கு ‘முடியாது’ என சொல்லும் உரிமை இல்லையா?

அமுதா சுரேஷ் "என்ன மாதிரி பையன்கள் பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்" "நீ விரும்புறவனை விட உன்னை விரும்புறவனைக் கட்டிக்கோ" "பொண்ணுன்னா அடக்கம் வேணும்" இந்த வசனங்களைத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், ஒன்று ஏழ்மை, சரியான கல்வியில்லாமை, திரைப்படங்களைப் பார்த்து, தம் ஆதர்ச ஹீரோவை போன்ற "ஆணாதிக்க" திமிர்த்தனமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளும் இளைஞர்கள், இன்னொன்று அளவுக்கதிகமான பணம், சுதந்திரம், பெற்றோர்களின் கவனிப்பு, கண்டிப்பு இல்லாத இளைஞர்கள், தான் நினைக்கும் எதுவும் தனக்கே கிடைத்திட வேண்டும் என்ற மனநிலை, … Continue reading பெண்களுக்கு ‘முடியாது’ என சொல்லும் உரிமை இல்லையா?

மனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்!

பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க!

அங்கீகரிக்கப்பட்ட காமத்திற்கு நிச்சயிக்கப்படும் விலை

அமுதா சுரேஷ் பல வருடங்களுக்கு முன்பு ஓர் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கு, பெற்றவர்கள் பார்த்துத் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்கள், அவருடைய அப்பா சுயதொழில் செய்து ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருப்பவர், "நான் வேலைக்கு வருவதே பொழுபோக்கத்தான்" என்று அந்தப்பெண்ணே சொல்லியிருக்கிறார், திருமண நிச்சயத்திற்குப் பின்பு அந்தப்பெண் சோகமாயிருக்க, அதன் காரணத்தை மற்றவர்கள் கேட்டபோது, அந்தப் பெண்ணுக்கு சிறுவயதிலேயே இதயத்தில் சிறு ஓட்டை இருந்ததாகவும், அதற்கு ஆபரேஷன் செய்து சரிசெய்துவிட்டதாகவும், ஆபரேஷன் செய்த வடுவினால் தனக்குத் … Continue reading அங்கீகரிக்கப்பட்ட காமத்திற்கு நிச்சயிக்கப்படும் விலை

துரித உணவுகளை ஆரோக்கியமான உணவுகளாக மாற்றுவது எப்படி?

அமுதா சுரேஷ் சில மாதங்களுக்கு முன், "அம்மா, அம்மா அப்பா எல்லாம் பசங்களுக்குக் கெட்டது சொல்லித் தருவார்களா" என்று மகள் கேட்க, கொஞ்சம் மனசுக்குள் ஜெர்க்காகி, "ஏன்டா செல்லம், எல்லா அம்மா அப்பாவும் பசங்களுக்கு நல்லதுதான் செய்வாங்க" என்றேன் "நீ என்ன சொல்லி இருக்கே, சிப்ஸ் மாதிரி பாக்கெட்ல விக்கிற ஜங்க் பூட்ஸ் சாப்பிடக்கூடாதுன்னு தானே, அதெல்லாம் உடம்புக்கு கெடுதல் தானே?" "ஆமா மா சரிதான்!" "அப்போ என் கிளாஸ் பிரியா மட்டும் தினம் அதெல்லாம் வாங்கிச் … Continue reading துரித உணவுகளை ஆரோக்கியமான உணவுகளாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்!

அமுதா சுரேஷ் இன்று ஒரு வேலையாகக் கோபாலபுரத்தில் இருக்கும் டி ஏ வி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகள் அமைந்திருக்கும் சாலையைக் கடக்க நேர்ந்தது, இருபக்கமும் வாகனங்களை நிறுத்தி, பெரும் போக்குவரத்து நெரிசல், சென்னையில் பள்ளிகள் அமைந்திருக்கும் எல்லாச் சாலைகளிலும் இதுதான் பிரச்சனை என்றாலும், சிறிய பிள்ளைகள் கூடத் தங்கள் வாகனத்துக்காக அப்படியும் இப்படியும் உடன் பெரியவர்கள் இல்லாமல் ஓடியது அச்சத்தையே தந்தது, அவ்வப்போது காணும் காட்சிகளைக் கண்டும், கேட்கும் நிகழ்வுகளைக் கொண்டும், சில கருத்துக்களைக் குழந்தைகளின் … Continue reading குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்!

பத்தி:ஆண் வளர்ப்பில் மாற்றம் வேண்டும்… இல்லையேல், பெண் கையில் ஆயுதம் தாரீர்!

அமுதா சுரேஷ் தினந்தோறும் செய்திகளை வாசிக்கும்போது, பெண்ணுக்கெதிரான ஏதோ ஒரு வன்முறை நிகழ்வை படிக்க நேர்கிறது! அரிதாகப் பெண்கள் நிகழ்த்தும் கொலைகளை விட, ஆண்கள் நிகழ்த்தும் கொலைகளை பார்க்கும்போது ஆண் இனம் மனதளவில் மிருக குணத்தை இன்னும் தாண்டி வரவில்லை என்றே தோன்றுகிறது! "நீ அம்பளைடா, அவளை வெட்டுடா" போன்ற சினிமா வசனங்கள், பெற்றோரின் காசில் வெட்டியாய் திரியும் நண்பர்களின் போதனைகள் என்று உடலளவில் பலம் பொருந்தியதாகக் கருதப்படும் ஆண்மக்கள், மனதளவில் பிறழ்ந்து தங்கள் பலத்தை எப்போதும் ஒரு … Continue reading பத்தி:ஆண் வளர்ப்பில் மாற்றம் வேண்டும்… இல்லையேல், பெண் கையில் ஆயுதம் தாரீர்!