ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: மருத்துவர்கள் விளக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக கடந்து வாரம் அப்பலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரடைந்துவருவதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. புதன்கிழமை முதலமைச்சர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில் மருத்துவர்கள், “முதலமைச்சர் நலமுடன் உள்ளார்; இன்னும் ஒருசில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். முன்னதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகிறவர்களை காவல்துறை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர். காவிரி வழக்கில் கர்நாடக அரசு மேலும் 3 நாளைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது குறித்தும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்ததாக இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி … Continue reading தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!