உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா பிணையில் விடுதலை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாகக் கூறி தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா இருவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். உமர், அனிர்பென் விடுதலை கொண்டாடும் ஜேஎன்யூ மாணவர்கள் http://www.youtube.com/watch?v=bcb4-MAUJCY

தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் கீலானியின் நிலைமை என்னவானது?

தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கீலானி, தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னய்ய குமார் கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் பிப்ரவரி 10-ஆம் தேதியன்று கீலானி மற்றும் மூன்று பேச்சாளர்களின் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் சந்திப்பில், யாரோ சிலர் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதற்காக கீலானி மீது தேச விரோதவழக்கு தொடரப்பட்டுள்ளது. தேச விரோத வழக்கு தொடரப்பட்டதற்கான காரணமாக போலீஸ் தரப்பில், கீலானிதான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.பேராசிரியர் கீலானி நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் வழக்கில் … Continue reading தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் கீலானியின் நிலைமை என்னவானது?

”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் … Continue reading ”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

JNU மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ணையா குமாரைத் தேசவிரோத வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டதையொட்டி இந்திய ஊடகங்களில் மையமாக JNU வந்துள்ளது. காவிகளின் பாசிச ஊடகங்கள், JNUவின் பண்பாட்டினைத் திரித்துகூறி வருகின்றன. விவாதங்களுக்கும் மாற்று கருத்துவேறுபாட்டிற்கும் இடமளிக்கும் JNU வளாகத்தினை இந்துத்துவ கூடாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. JNUவினைச் சுற்றி தடுப்புகளை உருவாக்கியுள்ள தில்லிக் காவல்துறை, முழுவளாகத்தினையும் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. பல்வேறு மாணவ சங்கங்களில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மீது FIR போடப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். … Continue reading ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

தமிழ்நாடு சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, தமிழகத்தின்  அடித்தட்டு மக்களுக்கும் அதிக பரிச்சயமானவர். தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய பிரச்சனைகளுக்கும், பாராளுமன்றத்தில் உரத்து ஒலிக்கும் ஒரு சில குரல்களில் டி.ராஜாவின் குரலும் முக்கியமான ஒன்று. அவரின் மகள் அபராஜிதா ராஜாவின் பெயர்தான்,  கடந்த இரண்டு நாட்களாக டெல்லி பத்திரிக்கைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. "புலிக்கு பிறந்தது" என்ற சொல்லுக்கு சிறிதும் பிழை இல்லாமல் வளர்ந்த பெண்ணான அபராஜிதா, ஐந்தாண்டுகளுக்கு முன், … Continue reading தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?

நாட்டின் பிரபலமான, டெல்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (J.N.U) கடந்த செவ்வாய்க்கிழமை,  ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி, மற்றும் பாரதீய … Continue reading தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?

துப்பாக்கியால் தீருமா காஷ்மீர் பிரச்சனை? பள்ளி தேர்வில் முதலிடம் பெற்றுள்ள அப்சல் குருவின் மகனுக்கு குவிகிறது வாழ்த்துகள்!

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் குரு. இவர் ஜம்மு காஷ்மீர் வாரியம் நடத்திய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார். காலிப் 500 மதிப்பெண்களுக்கு 474 மதிப்பெண்கள் எடுத்தும்,  ஐந்து பாடங்களில் ‘A1’ grade தக்கவைத்தும் சாதனை படைத்துள்ளார். அதிக குழந்தை தொழிலாளிகளை கொண்டதும், 60 % கல்வியறிவு மட்டுமே இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில்,  காலிப் குருவின் வெற்றி கல்விக்கான முக்கியவத்துவதை பறைசாற்றி உள்ளதாக அங்குள்ள பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. … Continue reading துப்பாக்கியால் தீருமா காஷ்மீர் பிரச்சனை? பள்ளி தேர்வில் முதலிடம் பெற்றுள்ள அப்சல் குருவின் மகனுக்கு குவிகிறது வாழ்த்துகள்!