டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். “குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். … Continue reading “குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்
குறிச்சொல்: அன்புமணி
“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்
“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்
அன்புமணி ராமதாசுக்கு என்ன அருகதை இருக்கிறது?: வன்னி அரசு
வன்னி அரசு 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் நடந்துக் கொண்டிருந்தவேளையில் கடல் வழியாக நான் ஈழத்திற்கு சென்றேன். அங்கு சிங்களவனின் விமான தாக்குதலுக்கிடையே விடுதலைப்புலிகளோடு ஒருவனாக எனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிகளை முடித்து தமிழகத்திற்கு திரும்பியபோது, அய்யா புதுவை ரத்தினதுரை அவர்களின் பின்னணி குரலோடு தயாரிக்கப்பட்ட 'எமக்காகவும் பேசுங்களேன்' என்ற ஆவணப்படத்தை எடுத்து வந்தேன். இங்கு அண்ணன் சுபவீ மூலமாக தோழர் கனிமொழியிடம் ஒரு நகல் சேர்க்கப்பட்டது, தமிழகத்தின் எல்லா கட்சிகளின் தலைமைக்கும் அந்த ஆவணப்படம் கொண்டு … Continue reading அன்புமணி ராமதாசுக்கு என்ன அருகதை இருக்கிறது?: வன்னி அரசு
வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?
வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது. … Continue reading வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?
புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். புகையிலை ஒழிப்பு நாளில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் தீமை புகையிலைதான். சிகரெட், பீடி, குட்கா, மூக்குப் பொடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் கொலை செய்யப்படுகிறார்கள். புகையிலையால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய் எனப் பல கேடுகள் நேருகின்றன. இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் … Continue reading புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
எங்கிருந்து வந்தது முதலை? விளம்பர தட்டியில் தெறிக்க விட்ட பாமகவினர்…
பாமக திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று அக்கட்சியின் , மதுரவாயல் தொகுதி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்த தனியார் திருமண மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டியில் "முதலமைச்சர் வேட்பாளர்" என்பதற்கு பதிலாக "முதலை"மைச்சர், என்று எழுதப்பட்டிருந்தது கூட்டத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது . கூட்டத்திற்கு வந்த மாவட்ட செயலாளர் டெல்லி பாபு, அந்த தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து, பேப்பர் ஒட்டி "முதலை" மறைக்கப்பட்டது.
வேல்முருகனும், சரத்குமாரும் தேடிய ‘சுயமரியாதை’ அதிமுகவில் கிடைத்ததா?
ஜி. கார்ல் மார்க்ஸ் 'தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின்' வேல்முருகனுக்கு அதிமுக கூட்டணியில் இடம் ஒதுக்காமல் கைவிடப்பட்டதைக் கிண்டலடித்து சமூக ஊடகங்களில் நிறைய பதிவுகள். தமிழ் ஹிந்துவில் கூட அவர் குறித்து செய்தி வந்திருக்கிறது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள். எங்களிடம் கேட்டிருந்தால் நாங்கள் கோரிய வேட்பாளர்கள் எண்ணிக்கையைக் கூட குறைத்திருப்போம். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம், அதைத் தராமல் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள் என்று கண்ணீர் விட்டிருக்கிறார் வேல்முருகன். சரத்குமார் கூட இப்படியான ஒரு மனநிலையில்தான் … Continue reading வேல்முருகனும், சரத்குமாரும் தேடிய ‘சுயமரியாதை’ அதிமுகவில் கிடைத்ததா?
ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை
பாவெல் தருமபுரி "சமூகத்தில் நிலவுகின்ற பிரதான முரண்பாடுகளை சரியானநேரத்தில் சரியான சக்திகள் தீர்க்காவிட்டால் தவறான சக்திகள் தவறான விதத்தில் தீர்த்துவிடும்." - மாவோவின் புகழ் மிக்க வரிகள் இவை. உண்மையில் இன்றைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்துக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி மக்களின் இருதயங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிமுக வாகட்டும் திமுக வாகட்டும் தத்தமது அந்திமகாலத் துடுப்புக்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகர் விஜயகாந்த் ஒரு தலைமைக்கான … Continue reading ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை
விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!
சமீபத்தில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து ‘த்தூ’ என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், ‘த்தூ’ என்று துப்பியதால் இனி விஜயகாந்‘த்தூ’ என அழைக்கப்படுவார் என பகடி செய்திருந்தார். விஜயகாந்தின் நடத்தையும் கண்டித்திருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடந்த பாமக மாநாட்டில் பேசிய ‘சர்ச்சை’ புகழ் காடுவெட்டி குரு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் … Continue reading விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!
2015 ஆண்டின் சிறந்தவர்களுக்கான பட்டியலில் ஜெயலலிதா, விஜயகாந்த்: சிம்புவின் பீப் பாடலுக்கு சிறந்த பாடல் விருது!
கவின்மலர் 2015 விருதுகள் சிறந்த நடிகை- முதல்வர் ஜெயலலிதா ( எனக்கு உங்களைவிட்டா யாரிருக்கா) சிறந்த பாடல் - பீப் பாடல் சிறந்த குணச்சித்திர நடிப்பு - அம்மா உஷா ராஜேந்தர் ( முதல்வர் மன்னிப்பாராக) சிறந்த சவுண்ட் இஞ்சினியர்- முதல்வரின் வாட்ஸ் அப் உரையை பேப்பர் சத்தத்தோடு ஒலிப்பதிவு செய்தவர். சிறந்த வசனம் - விஜய்காந்த் (த்தூ...) சிறந்த புதுமுகம் - கி.விரலட்சுமி சிறந்த ஃபோட்டோஜெனிக் முகம் - செல்ஃபி புகழ் மோடி சிறந்த நடிகர்- … Continue reading 2015 ஆண்டின் சிறந்தவர்களுக்கான பட்டியலில் ஜெயலலிதா, விஜயகாந்த்: சிம்புவின் பீப் பாடலுக்கு சிறந்த பாடல் விருது!
இனிமேல் அவர் “விஜயகாந்”தூ”- அன்புமணி கிண்டல்…
விஜயகாந்தை மக்கள் இனிமேல் விஜயகாந்"தூ" என்றே அழைப்பார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். செய்தியாளர்களை பார்த்து காறி உமிழ்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செயல் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு “மக்கள் இனிமேல் அவரை விஜயகாந்‘தூ’ என்றே அழைப்பார்கள் என்று கூறியதுடன் விஜயகாந்தை கூட்டணிக்கு அழைக்கும் கலைஞர், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தூரமாக நின்றே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் அன்புமணி கிண்டலடித்தார்.
ஸ்டாலினின் சமூக ஊடகத்தொடர்பு கேலியாகிறது ஏன்?
வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவிருக்கிற 30 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ள இளைஞர்களை கவரும் விதமாக இளைஞர் அதிக அளவில் நேரத்தை செலவிடும் சமூக ஊடகங்கள் மூலம் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிடுகிறன. இதில் அதிகம் கவனம் செலுத்தி வருவது பாமகவும் திமுகவுதான். அன்புமணியை முன்னிறுத்தி பாமக சமூக வலைத்தளங்களில் செய்யும் பிரச்சார உத்திகள் சமூக வலைத்தளங்களில் மீமிக்களாக உலவும். அதுபோலத்தான் திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் உள்பட பலர் அரசியல் வாதிகளை நெட்டிசன்கள் வருத்தெடுக்கிறார்கள். ஆனால், … Continue reading ஸ்டாலினின் சமூக ஊடகத்தொடர்பு கேலியாகிறது ஏன்?
மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கு: அன்புமணி ஆஜராகவில்லை
மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கில் டிசம்பர் 12-ஆம் தேதி பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணியை ஆஜராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக ஆஜராகவில்லை என அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளித்தாக அன்புமணி ராமதாஸ் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய ஒரு கல்லூரியான இண்டெக் மருத்துவ … Continue reading மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கு: அன்புமணி ஆஜராகவில்லை