“துலுக்கப்பட்டி பிரச்சனை தீவிரமானதல்ல!”: எழுத்தாளர் அன்புசெல்வம்

அண்மைக்காலத்தில் தான் சில தீய சக்திகள், இந்துத்துவ வெறி கொண்டு தங்களின் சுயநல அரசியலை, சந்தர்ப்பவாதமாக்கிக் கொள்ள இது போன்ற மோதலை உருவாக்கி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு-இளையராஜா சர்ச்சை: எதிர்வினையாற்ற என்ன இருக்கிறது?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து, சிலுவையில் படுகொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து அகில உலக இரட்சகர். துன்பப்படுகிற மக்களின் போராட்டக் குறியீடு.

தலித் மாணவி அமராவதி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் !

பள்ளிக்கூடத்தில் அல்லது சக மாணவர் குழுவில் ஒரு தலித் சாதி ரீதியாக இழிவுபடுத்தும்போது, வன்கொடுமைகளால் காயப்படும்போது ஏற்படும் உளவியல் வலியை யாரிடம் முறையிடுவது?

நவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்?

கிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் "பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்" வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும்.

உ. பி. ஆட்சி மாற்றம்; அகிலேஷ், மாயாவதி செய்யத் தவறியவை

உத்திரபிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 322 இடங்களைப் பிடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம்? எழுத்தாளர் அன்புசெல்வம் தரும் சில காரணங்கள்... உ.பி -யில் பாஜக வெற்றி பெற்றது புதிய விசயமல்ல. ஏற்கனவே கல்யாண்சிங், ராம் பிரகாஷ் தலைமையில் ஆட்சி இருந்திருக்கிறது. மத வெறுப்பு அல்லது மதப் புறக்கணிப்பு என்பதை விமர்சித்தவர்கள் ஓபிசி. "சாதித் தொகுப்பு - Caste Consolidation" மேற்கொண்ட வியூகங்களை கண்டு … Continue reading உ. பி. ஆட்சி மாற்றம்; அகிலேஷ், மாயாவதி செய்யத் தவறியவை

பத்தி: நீலம் – பச்சை – சிவப்பு : தலித் அரசியல் குறியீடாகுமா!

அன்புசெல்வம் குஜராத் - உனா எழுச்சி தேசம் தழுவிய பேரியக்கமாக உருவெடுக்க வேண்டும் என்பதில் பலருக்கும் ஆர்வம். அதற்கான சூழல் உடனடியாக அமையவில்லை என்றாலும் குறைந்த பட்சம் "தலித் - ப‌ழங்குடியினர் - இஸ்லாமியர் - இடதுசாரி" அமைப்புகளையாவது ஒருங்கிணைப்போம் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக, கட்சிகள் வாக்கு வங்கி அரசியலையும், சாதிப் பெரும்பாண்மையையும்சார்ந்திருப்பவை. அவற்றின் குழு அடையாள அரசியலும் அதற்கேற்றார் போலவே செயல்படும். இப்போதைய அரசியல் நடைமுறையில் அவை தலித் எழுச்சியை ஆதரிப்பதில் ஆச்சரியப்பட … Continue reading பத்தி: நீலம் – பச்சை – சிவப்பு : தலித் அரசியல் குறியீடாகுமா!

உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…

அன்புசெல்வம் உனா தலித் எழுச்சியை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தலித் ஆதரவு அலை உருவாகியுள்ளது. குஜராத்தில் 30 -க்கும் மேற்பட்ட தலித் இயக்கங்களுடன் தொடங்கியிருக்கிற இவ்வெழுச்சிக்கு கட்சி, இயக்கம், அமைப்பு என பாராமல் ஆதரவு வலுத்து வருகிறது. வெளி நாடுகளில் உள்ள தலித்துகளும் தங்களின் ஆதரவை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். நீலக்கொடியுடன், சிவப்பும் இணைந்து ஜெய்பீம் முழக்கத்துடன் லால்சலாம் சொல்லி வருகிறது. சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆதரவளிப்பதைப்போல தமிழ்நாட்டில் தலித் … Continue reading உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…

பத்தி: உயர்கல்விக்குச் செல்லாமல் இடைவிலகும் +2 தலித் மாணவர்கள்

அன்புசெல்வம் நாட்டின் முன்னேற்றம் நோக்கிய கோட்பாடுகளின் ஆதார அமைப்பாக இருப்பது உயர்கல்வி படிப்புகள். உயர் கல்வியில் வளர்ச்சி அடைந்து வருகிற ஸ்கான்டிநேவியன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதாவது 23 சதவிகிதம் பேர் மட்டுமே இங்கு உயர்கல்வியை அடைந்திருக்கிறார்கள். உயர்கல்வி படிக்கவில்லை என்றால் எந்தவொரு இளஞருக்கும் நல்லதொரு எதிர்காலம் இல்லை. இதனை உள்ளூர உணர்ந்தபடியால் கிராமப்புற‌ ஏழை எளிய மாணவர்கள் தீவிரமாக படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே  +2 படிக்கிற … Continue reading பத்தி: உயர்கல்விக்குச் செல்லாமல் இடைவிலகும் +2 தலித் மாணவர்கள்

பத்தி: தலித் விவசாய தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்தும் அரசு!

அன்புசெல்வம் தமிழக அமைச்சரவை பதவியேற்றதும் 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா இட்ட கையெழுத்தில் ஒன்று கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற "பயிர்க்கடன் தள்ளுபடி". அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் (2016) சொன்ன வாக்குறுதியின் பொருட்டு இந்த கையெழுத்து இடப்பட்டுள்ளது. அதன்படி 31. 3. 2016 வரை கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து சிறு - குறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன், நடுத்தர நீண்டகால கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அரசுக்கு … Continue reading பத்தி: தலித் விவசாய தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்தும் அரசு!

தலித் கிறிஸ்தவர் போராட்டம் : எது சாத்தியம்?

அன்புசெல்வம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பொருளாதார வளர்ச்சியில் இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பான இடம் இருக்கிறது. இது வரையிலும் அவர்களுக்கு கிடைக்காத சம வாய்ப்பு என்ற நோக்கத்தில் இந்திய அரசியல் அமைப்பும் இதனை உறுதி செய்து, பத்தாண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. கிட்டத்தட்ட ஆறு பத்தாண்டுகள் கடந்து விட்டன. இத்தனை ஆண்டுகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறு ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படியொரு ஆரோக்கியமான சூழல் இந்திய ஜனநாயக அரசியல் … Continue reading தலித் கிறிஸ்தவர் போராட்டம் : எது சாத்தியம்?