#BeepSong: சிம்பு-அனிருத் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக சொல்லப்படும் பீப் சாங் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் பாடலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது ஜனநாயக மாதர் சங்கம் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில்  கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது மேலும் ஒரு வழக்கு  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#‎BeepSong‬ சிம்பு வெளியூரில் இருக்கிறார்: டி. ஆர். போலீஸில் தகவல்

சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில் சனிக்கிழமை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நடிகர் சிம்பு, இசைமைப்பாளர் அனிருத் ஆகியோர் தரப்பில் இருந்து கோவை காவல்நிலையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக சொல்லப்படும் பீப் சாங் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் பாடலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது ஜனநாயக மாதர் சங்கம் அளித்த புகாரின் பேரில் … Continue reading #‎BeepSong‬ சிம்பு வெளியூரில் இருக்கிறார்: டி. ஆர். போலீஸில் தகவல்

#BeepSong பத்தி அனிருத்தோட நெருங்கிய சொந்தக்காரர் ரஜினிகிட்ட கேட்கவேண்டியதுதானே?’

பீப் பாடல் பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இசையமைப்பாளர் இளையராஜாவிடன் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டு சர்ச்சையான நிலையில், அவர் தரப்பில் இருந்து அவருடைய சகோதரர் கங்கை அமரன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் இதுகுறித்து கருத்து சொல்லியிருக்கிறார். “இளையராஜா போன்ற இசைப்பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும்.  அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல ..... ஏன் … Continue reading #BeepSong பத்தி அனிருத்தோட நெருங்கிய சொந்தக்காரர் ரஜினிகிட்ட கேட்கவேண்டியதுதானே?’

சிம்புவின் ட்விட்டுக்கு கருத்து தெரிவித்த பெண்ணை கீழ்த்தரமாக பேசிய சிம்பு ரசிகர்கள்

சிம்பு-அனிருத் கூட்டணியில் உருவான பீப் பாடலுக்கு எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், மூன்று நாட்களாக வாய்த்திறந்து பேசாத சிம்பு செவ்வாய்க்கிழமை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கடவுள் தன் பக்கம் உள்ளார், தன்னைக் காப்பாற்றுவார் என பதிவு செய்திருந்தார். இதை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில்ரேகா என்ற பெண், ‘நானும் கடவுளை நம்புகிறேன். பெண்களை மதிக்காத உங்களைப் போன்றோரை நிச்சயம் கடவுள் மன்னிக்கமாட்டார். நிச்சயம் கடவுள் உங்களை சபிப்பார்’ என்று … Continue reading சிம்புவின் ட்விட்டுக்கு கருத்து தெரிவித்த பெண்ணை கீழ்த்தரமாக பேசிய சிம்பு ரசிகர்கள்

“நான் பெண்களை மதிக்கிறவன்”: அனிருத்

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக கனடாவின் டொராண்டோ நகரில் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.  இந்நிலையில் #BeepSong குறித்து சர்ச்சைகளும் வழக்குகளும் விடாப்பிடியாக சுழன்று கொண்டிருக்க தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் அனிருத். “பீப் பாடல் குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.  இந்தப் பாடலுக்கு  நான் இசையமைக்கவோ, பாடல் எழுதவோ, பாடவோ இல்லை.  இந்த விவகாரத்தில் என் பெயர் இடம்பெற்றிருப்பது எதிர்பாராதது. நான் பெண்களை மதிக்கிறவன்; நான் இசையமைத்த பாடல்களே இதற்கு உதாரணம்.  விரும்பத்தாகாத இந்த சூழலுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்” என அனிருத் தெரிவித்துள்ளார்.

”பீப் சாங் பத்தியெல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க;அதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணமுடியாது” குஷ்பூ

சிம்பு- அனிருத் கூட்டணியில் உருவான பீப் பாடல் பெண்களை தவறாக சித்தரிப்பதாக பலருடைய கண்டனத்தை பெற்றிருக்கிறது. சிம்பு, அனிருத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் குஷ்பூ, “பீப் சாங் பத்தி உங்க கருத்து என்னன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. நான் வெள்ள நிவாரணப் பணிகள்ல இருக்கேன். அந்தப் பாடல் கேட்பதற்கெல்லாம் எனக்கு ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை. இதுக்கெல்லாம் நான் நேரத்தை … Continue reading ”பீப் சாங் பத்தியெல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க;அதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணமுடியாது” குஷ்பூ

இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் அனிருத்: வெள்ள நிவாரணத்துக்கு உதவுகிறார்

பீப் பாடல் மூலம் தன் மேல் ஏற்பட்டு இமேஜை மாற்றும் பொருட்டு ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இதுகுறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிம்பு-அனிருத்தின் ஆபாச பாடலை தடை செய்ய வேண்டும்: பெண்கள் அமைப்பு போலீஸில் புகார்

அனிருத்தின் இசையமைப்பில் சிம்பு எழுதிய பீப் பாடல் வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியானது.  இந்தப் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பான ஜனநாயக மாதர் சங்கம் இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் அமுதா, போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். இந்தப் பாடல் பெண்களையும் ஆண்களையும் கொச்சையாக சித்தரிப்பதாக அமுதா கூறினார்.