அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்... https://youtu.be/WIPgEuYARUg https://youtu.be/mHzfvi6ck8o https://youtu.be/zaIfl2g1Tws https://youtu.be/iiA9JIKavs0 https://youtu.be/uIiOm20CQ9s

தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்

அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள் தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற அவள் வீடு பறத்தெருவிலிருந்தது. ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள் அவளது தெருவிலிருந்து அவளது படிப்பை கெடுக்கவில்லை பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு என்று பறையன் அப்பா சொல்லவில்லை படிச்சு கிழிச்சது போதும் என்று பறையன் அண்ணன்கள் சொல்லவில்லை அடக்கமா ஒடுக்கமா இருன்னு பறைச்சி பாட்டி சொல்லவில்லை படிப்புதான் நமக்கு எல்லாமே என்று எல்லா பறையர்களும் தமது பிள்ளைகளுக்கு சொல்வதைத்தான் அனிதாவின் வீட்டிலும் … Continue reading தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்

நீட் : யாருக்கெல்லாம் இழப்பு?

போலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு!

நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

வில்லவன் இராமதாஸ் நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை … Continue reading நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

மருத்துவர் தீண்டத்தகாதவர்களா? அனிதாக்கள் அழிக்கப்படுவதற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு?….

அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதாவை நாம் அறிவோம். அனிதாவின் மரணத்தை புரிந்து கொள்ள அஸ்வினை நாம் அறிந்து கொள்வது அவசியம். மருத்துவம் என்ற அறிவுத்துறை சார்ந்த செயல்பாட்டுக்காகத்தான் அஸ்வின்களும் அனிதாக்களும் பலியாக்கப்பட்டார்கள். அஸ்வின் அனிதாவைப்போல சுமைப்பணியாளர் வீட்டிலே பிறந்தவன் அல்ல, இன்னும் சொல்லப்போனால் அஸ்வின் மனிதனே அல்ல, அவன் கடவுள். அப்படித்தான் அழைக்கப்படுகிறான். தெய்வத்தோடு தெய்வமாக வைத்து போற்றப்பட்ட ஒருவனுக்கும், ஏழை மாணவி அனிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருவரும் மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். அதன் … Continue reading மருத்துவர் தீண்டத்தகாதவர்களா? அனிதாக்கள் அழிக்கப்படுவதற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு?….

ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அனிதா என்கிற சிறு பெண் , நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர என்றால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை எனலாம். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது செப்டம்பர் மாத துக்ளக் இதழ். சோ.ராமசாமியின் மரணத்திற்கு பின் துக்ளகிற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் பாரதீய ஜனதாவின், இல்லை இல்லை ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடுகளை … Continue reading ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார். இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் … Continue reading மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

100 மார்க் பிராமணனும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

உங்களுக்கு தேவை அனிதாக்கள் பத்துப் பாத்திரம் தேய்த்தோ, பீ அள்ளியோ திரிய வேண்டும்.

யார் இந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு?

அவதூறாளர்கள் கோலோச்சும் காலத்தின் அவலக் கோலத்தைப் பாருங்கள் - அனிதா உயிரோடிருக்கும்போதே போராடத் தொடங்கிய, விடாப்பிடியாக சமூக கவனத்தைத் திருப்பிய ஒருவரை - அவதூறு பேசி குறிவைத்து வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.

தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது... “2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் … Continue reading தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

சின்னப்பன். எம். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவன். ஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த … Continue reading டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் … Continue reading அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி

குட்டிரேவதி அனிதாவின் உயிர்ப்பலி நாம் எளிதாகக் கடந்துவிடக்கூடியதாக இல்லை. நண்பர்கள், ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் அலைமோதுகிறார்கள். இயலாமையின் எல்லையில் எல்லோரும் பரிதவிக்கிறோம். இதற்கிடையில் சிலர், இதற்கெல்லாம் போய் தற்கொலைசெய்துகொள்ளலாமா, இன்னும் போராடியிருக்கவேண்டாமா என்றெல்லாம் அறிவுரை வழங்குகிறார்கள். நீட்'டுக்கு எதிராகப் பேசுபவர்களும், அனிதாவிற்கு ஆதரவாகப் பேசுபவர்களுமே கூட, அரைகுறை புரிதலுடன், உணர்ச்சிவயப்பட்டுப் பேசுகிறமே அன்றி இதைத் தொடரும் வழியறியோம். அனிதா போன்றோரின் பின்னணியிலிருந்து வரும் ஒரு பெண் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியும் நீதி … Continue reading உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு!

https://www.facebook.com/anbe.selva/posts/1492603270806521மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்; கைது... https://www.facebook.com/joshuaisaac.azad/posts/1561071840582745 சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆர்ப்பாட்டம்... https://www.facebook.com/arunnedunchezheyian.arun/posts/10209741491321339   விசிக சென்னையில் நடத்திய போராட்டம்... https://www.facebook.com/joshuaisaac.azad/posts/1561082197248376 டெல்லி ஜந்தர்மந்தரில் எழுத்தாளர் மாலதி மைத்ரி ஒருங்கிணைக்கும் போராட்டம்... https://www.facebook.com/permalink.php?story_fbid=509377732733288&id=100009831978370 மதுரையில் மே 17 இயக்கம் நடத்திய போராட்டம்... சென்னையில் சிபிஎம் கட்சியின் … Continue reading அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு!

“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”

மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு..

கண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்

அனிதாவின் மரணத்திற்கும் நீட்டை எதிர்த்தும் கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. நாள்: 02.09.2017 சனிக்கிழமை, மாலை 4.30 மணி. இடம்: அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை. ஒருங்கிணைப்பு: சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவரும் வருக. இது நம்ம கடமை ...வந்திடுங்க.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின. https://www.facebook.com/murugan.kanna1/posts/1457181081028681   https://www.facebook.com/odiyen/posts/10155902968641807 நாளையும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. இரா.தெ.முத்து: அனிதாவிற்காக நாளை ( செப் 2 ) ஒரு போராட்டம் நடக்கிறது. வருக தோழர்களே சென்னை தாராப்பூர் டவர் அருகே( தேவி தியேட்டர் எதிரே) காலை 10/மணி மறியல் போர் தோழர் ஜி ராமகிருஷ்ணன் தலைமை மார்க்சிஸ்ட் கட்சி களம் https://www.facebook.com/anandt.13/posts/2206801286212909

நீங்கள் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்: ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டிய மரு. கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு சிதைந்தநிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் மறைவு தமிழக சூழலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. நியூஸ் 7, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய தொலைக்காட்சிகள் நடத்திய விவாதங்களில் பங்கேற்றார் மருத்துவர் கிருஷ்ணசாமி. நியூஸ் 7 விவாதத்தில் நெறியாளர் விஜயனிடம் கடுமையாக நடந்துகொண்ட கிருஷ்ணசாமி, ஊடகங்கள் கருத்துகளை புகுத்துவதாக குற்றம்சாட்டினார். புதிய தலைமுறை விவாத்தில் நெறியாளர் … Continue reading நீங்கள் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்: ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டிய மரு. கிருஷ்ணசாமி

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?

ஏழு லட்சமும்...ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே.. இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க... இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட விலைபேசி அடிக்கிறீங்க...

மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்ஆஃப் மதிப்பெண்னாக 196.5 பெற்றார். மருத்துவம் பயில இரவும் பகலும் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றார் என்பதால் மருத்துவக் கல்வி பயிலமுடியாமல் மனவேதனை அடைந்து இன்று தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், … Continue reading மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதயறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவி அனிதாவின் தற்கொலை நடந்திருக்கக் கூடாத ஒன்றாகும். அனிதாவின் தற்கொலையை தடுக்கத் தவறியதற்காக சமூகம் வெட்கப்பட வேண்டும். மாணவி அனிதா 12-ஆம் … Continue reading மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

நீட் : மாணவி அனிதா ‘ படுகொலை ’ மோடியும் எடப்பாடியும்தான் குற்றவாளிகள்: புமாஇமு ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோன நிலையில் தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை செப்டம்பர் - 2, காலை 11 மணி புரட்சிகர மாணவர் இளைஞர் - முன்னணி 9445112675

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்?

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்? கமல்ஹாசன் என நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மட்டும் அல்ல நீதிமன்றமும் மக்கள் அமைத்தது தான் என்றும் நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், "நீட் விவகாரத்தில் தோழர் திருமாவளவன் போன்றோர் கட்சிகளைக் கடந்து வெகுண்டெழுந்து போராட வேண்டும்!" என்றும் தெரிவித்தார்.    

அனிதாவுக்கு பிரேத பரிசோதனை செய்ய மிரட்டி கையெழுத்து வாங்கினர்: அனிதா தந்தை குற்றச்சாட்டு

அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உள்ள அனிதாவின் உடலை வாங்க அவருடைய தந்தை சண்முகம் மறுத்துள்ளார். அனிதாவின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய அதிகாரிகள் தன்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்து, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தை ஒட்டி விவாதம் நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. இந்த விவாதத்தில் … Continue reading அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிபெண் 196.5 பெற்றிருந்த அரியலூர் மாணவி அனிதா வின் தற்கொலை சாவு நெஞ்சை பிளக்கும் செய்தியாக கிடைத்து அதிர்ச்சியுற்றோம். சுமைப்பணித் தொழிலாளியான சண்முகம், தாயை இழந்த பிள்ளையான அனிதாவின் மருத்தவ கனவை நிறைவேற்ற அல்லும், பகலும் பாடுபட்டார். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்த அனிதா … Continue reading 12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…

மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் - இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்? நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?