அருண் நெடுஞ்செழியன் இந்த மீம்ஸ் சிரிக்க வைத்தது போல உண்மையான காரணம் குறித்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.. இருநூறு தொகுதிக்கு மேலே வென்று திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையிலே சுமார் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருப்பதும் சுமார் 75 தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலை பெற்றுள்ளதும் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாக அமைகிறது.அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், பத்தாண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்புணர்வை எதிர்கொண்டும், பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தும் பாஜகவை … Continue reading அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்
குறிச்சொல்: அதிமுக
இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
இந்தியா மட்டும்தான் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறதா?
இப்போது நம்முடைய முதன்மையான கோரிக்கை முழக்கமெல்லாம், தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியாத அதிமுக அரசே பதவிவிலகு என்பதாகதான் இருக்கவேண்டும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?
கவிதா சொர்ணவல்லி டிடிவி ஜெயிப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆர்கேநகர் நிலவரங்களை தொடந்து கவனிக்க... வேண்டாம் வேடிக்கை பார்த்திருந்தால் கூட இது தெரிந்திருக்கும். அவருக்கு அங்கு எதிரிகளே இல்லை. அதுதான் உண்மை. இந்த இடைதேர்தல் என்பது, வென்றேயாக வேண்டியது என்ற கட்டாயம் தினகரனுக்கு மட்டுமே இருந்தது.அவர் அதில் முழு முனைப்புடன் இறங்கினார். அவருக்காக, அவருடைய ஆட்கள் அங்கே உயிரைக் கொடுத்து பணியாற்றினார்கள். ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி மீது மக்களுக்கிருந்த அதிருப்திகளை வாக்குகளாக்குவதில் கோட்டை விட்டது திமுக. அவ்வளவு ஏன் … Continue reading டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?
தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!
எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.
சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்துக்குச் … Continue reading சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்
மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் பாஜக பிரமுகர்கள் பெருமளவு கலந்துகொண்டனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஜெயலலிதாவின் உடல் அருகே நீண்ட நேரம் இருந்தார். அதிமுக பொதுச்செயலாளரின் இரங்கல் நிகழ்வில் பாஜக பிரமுகர் ஏன் … Continue reading மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு
ராசாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்ததன் பின்னணி; சவுக்கு சங்கர் சொல்கிறார்
சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, திமுக தலைவர் மு. கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் சென்று வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘சவுக்கு’ சங்கர் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் ரசாத்தி அம்மாளிடம் சசிகலா கதறி அழுததாகச் சொல்கிறார். மேலும் அந்தப் பதிவில், நேற்று இரவு ராசாத்தி அம்மாள் அப்போல்லோ மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன. அந்த சந்திப்பு நடந்தது உண்மையே. ,இரவு 9.40 … Continue reading ராசாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்ததன் பின்னணி; சவுக்கு சங்கர் சொல்கிறார்
ஜெயலலிதா மீதான கரிசனமா?; தமிழ்நாட்டின் அரசியல் உரிமையா?: எது அவசியத் தேவை இப்போது?
ஜி. கார்ல் மார்க்ஸ் தமிழகத்தின் தற்போதைய சூழலை சாதகமாக்கிக்கொண்டு பிஜேபி அரசாங்கம் பின்வாசல் வழியாக தமிழகத்தில் நுழைய முயல்கிறது என்று சிலர் அச்சத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். வைகோ சென்று கவர்னரைப் பார்த்தது, வெங்கைய நாயுடு சென்று கவர்னரைப் பார்த்தது, மேலும் கேரள கவர்னர் வேறு தமிழக கவர்னரை சந்தித்தது என்று இந்த வதந்தியின் பெறுமதியை கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல் தளத்திலிருது கூட இத்தகைய அச்சம் சில தலைவர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இதன் உச்சமாக, இந்த இக்கட்டான நேரத்தில் நாம் ஒன்றிணைந்து … Continue reading ஜெயலலிதா மீதான கரிசனமா?; தமிழ்நாட்டின் அரசியல் உரிமையா?: எது அவசியத் தேவை இப்போது?
ஜெயலலிதாவின் உடல்நலமும் சுயநல நோக்கங்களுக்காக நடத்தப்படும் நாடகங்களும்
ஜி. கார்ல் மார்க்ஸ் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலமின்மையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்றன. அவரது நிலை குறித்து விதவிதமான கருத்துகள் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. எல்லோரும் இந்த விஷயத்தில் அதீத மாண்பு காக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தொடங்கி எதிரிக்கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் உட்பட. அப்பல்லோ மருத்துவமனை ஒரு கோட்டையைப் போல பராமரிக்கப்படுகிறது. இதுவரை அவரது உடல்நிலை குறித்து வெளிவந்திருக்கும் எல்லாத் தகவல்களுமே உண்மைக்கும் பொய்க்குமான விளிம்பில் நிற்கின்றன. அந்த செய்திகளைச் சுற்றி உளுத்துப்போன செண்டிமெண்ட் காரணங்கள் … Continue reading ஜெயலலிதாவின் உடல்நலமும் சுயநல நோக்கங்களுக்காக நடத்தப்படும் நாடகங்களும்
வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?
மனுஷ்யபுத்திரன் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக காவல்துறை தினமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த வதந்திகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன. இதை யார் பரப்புகிறார்கள்? இவை வைரலாக எப்படி தொடர்ந்து மக்களிடம் சென்று சேர்கின்றன? வதந்திகளை பரப்புவோரின் நோக்கம் என்ன? வதந்திகள் என்பவை தானாக உருவாகின்றவை அல்ல. அவற்றிற்குப் பின்னே திட்டவட்டமான … Continue reading வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?
தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி வழக்கில் கர்நாடக அரசு மேலும் 3 நாளைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது குறித்தும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்ததாக இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி … Continue reading தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!
வருமான வரி சோதனை எதிரொலி; நத்தம் விஸ்வநாதன் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம்
கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக மாநில அமைப்பு செயலாளர் பதவியும், செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், செய்தி தொடர்பு குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் விஸ்வநாதன் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். … Continue reading வருமான வரி சோதனை எதிரொலி; நத்தம் விஸ்வநாதன் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம்
“நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர்”: அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்கக் கேட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக் காவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்றினர். அதோடு, அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்ட 88 திமுக உறுப்பினர்களையும் ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். திமுக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய நிதித் … Continue reading “நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர்”: அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்கக் கேட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
“ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா
தன்னை அதிமுக தலைமையில் இருக்கும் ஜெயலலிதா, கன்னத்தில் அறைந்ததாக பரபர குற்றச்சாட்டை வைத்தார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. அதிமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கியது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, “சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன் வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனி … Continue reading “ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா என்னை ஒரு முறைதான் அறைந்தார்: திருச்சி சிவா
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு தகராறு ஏற்பட்டது. திருச்சி சிவா, தமிழக அரசு குறித்து விமர்சித்ததாகவும் அதைக் கேட்டு சும்மா இருக்க முடியாது என்பதால் நான்கு அறை விட்டதாகவும் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். ஆனால், திருச்சி சிவாவோ எதிரில் வந்த தன்னை சட்டையைப் பிடித்து ஒரே முறைதான் கன்னத்தில் அறைந்ததாகவும் பேட்டியளித்துள்ளார். https://www.facebook.com/qaneio/videos/10209933938562954/
“செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே;பத்திரை மாத்து தங்கமே!”: ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் கவிதை
2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஜெயலலிதாவை கவிதை வடிவில் புகழ்ந்துரைத்தார். “கனிவு , இரக்கம், ஈகை இலக்கணமாக , மக்களுக்காக துடிக்கின்ற மனித தெய்வமே, மக்களால் நான் , மக்களுக்காகவே நான் என்ற தியாகத்தில் வாழும் சொரூபமே, புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில் 6-ம் முறை தமது ஆற்றல் கரங்களில் செங்கோல் ஏந்தி ஆட்சி … Continue reading “செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே;பத்திரை மாத்து தங்கமே!”: ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் கவிதை
ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிவேல் மகன் சந்தோஷ் (வயது 30). வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தேசிகன். பெல் நிறுவனத்தில் துணை பொதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சுமதி (29). வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி படித்து வந்தபோது சந்தோசுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சுமதியை அவருடைய பெற்றோர் … Continue reading ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…
ஆர். கே. நகர் மக்களின் குறைகளைக் கேட்க தனி அலுவலர்
ஆர் கே நகர் தொகுதி மக்களின் குறை தொடர்பான மனுக்களை பெற தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், தண்டையார்ப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவின் தனி அலுவலர், வாரந்தோறும் செவ்வாய் அன்று மனுக்களை பெற்றுக்கொள்வார் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி:ஜெயலலிதா உத்தரவு
சேலத்தில் வசித்துவருபவர் பிரபல இசையமைப்பாளர் கோவர்த்தன் (88). இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் கைராசி, பூவும் பொட்டும், பட்டணத்தில் பூதம் (அந்த சிவகாமி மகனிடம் என்ற பாடல்) உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். வயது முதிர்வு, செவித்திறன் குறைபாடு போன்றவற்றால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். எந்தவித வருவாயும் இல்லாமல் வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதால் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் … Continue reading இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி:ஜெயலலிதா உத்தரவு
தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!
வெ.ஜீவக்குமார் ஐவகை நிலங்களில் தலையாய மருதமே எமது பிரதேசமாகும். ஊரின் பெயரே ஐந்து நதிகளைச் சுட்டிக்காட்டும் திருவையாறு எமது தொகுதியாகும். தன் பரிவாரங்களுடன் பட்டத்து யானையில் தினமும் பவனி வந்து பார்வை இட்டு கரிகாற் சோழன் கட்டிய கல்லணை இத்தொகுதியில்தான் உள்ளது. பொன்னியின் செல்வன் காலத்தில் வந்தியத் தேவன் ஓட்டிய குதிரையின் குளம்படி தடங்கள் ஆற்றங்கரைகளில் இப்போதும் ஒளிந்து கிடக்கலாம்.எனினும் திருவையாறு சட்டமன்ற பரப்பு காவிரிச் சமவெளி பகுதியை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. கட்டளை மேட்டு வாய்க்கால், … Continue reading தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!
“ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது”: கருணாநிதி பிறந்த நாள் செய்தி
93வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதி, கட்சித் தொண்டர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டி, திராவிடத்தின் துயர் துடைப்போம் என அழைப்பு விடுத்துள்ளார். பிறந்த நாள் செய்தியாக, திமுக தொண்டர்களுக்கு, கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது 93வது பிறந்த நாள்! 92 வயது நிறைவடைந்து, 93வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய வேளையில், எனை ஈன்று புறந்தந்த என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், எனைச் சான்றோனாக்கிய அன்புத் தந்தை முத்துவேலர், கொள்கை வேல் … Continue reading “ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது”: கருணாநிதி பிறந்த நாள் செய்தி
“மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது” ஆசிரியர்களை மிரட்டி அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்குலர்
தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்குச் சொந்தமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஹை டெக் இன்ஜினியரிங் கல்லூரி, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் முதல்வர், கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், “ஒரு வருடத்தில் மூன்று மாணவர்களை கட்டாயம் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், இதுவரை ஒரு மாணவரைக்கூட யாரும் சேர்க்கவில்லை. எனவே, போதிய நடவடிக்கைகள் எடுத்து மாணவர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். அப்படியில்லையெனில் மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட … Continue reading “மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது” ஆசிரியர்களை மிரட்டி அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்குலர்
பினராயி விஜயனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!
கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பினராயி விஜயனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தலைமையில் கேரள மாநிலம் வளர்ச்சி மற்றும் வளம் நிறைந்ததாக மாறுவதற்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இடைப்பட்ட காலத்திலும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் மட்டும், அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 … Continue reading குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்
அதிமுகவை உடைக்க முயற்சியா?: கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன??
திமுக தலைவர் கருணாநிதி “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி... 1. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் களத்தில் இருந்து வந்த தகவல்களும் திமுக வெற்றி பெறும் என்றே தெரிவித்தன. இருப்பினும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு காரணம் என்ன? கருணாநிதி:- தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே … Continue reading அதிமுகவை உடைக்க முயற்சியா?: கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன??
திமுக: நம்பகமான கூட்டாளியா?
ஸ்டாலின் ராஜாங்கம் அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும். இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே. இத்தேர்தலில் தலித் தலைவர்கள் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திருமாவளவன் 87,டாக்டர் கிருஷ்ணசாமி 493,சிவகாமி 6853 ஆகிய வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றிருக்கின்றார்கள். திருமாவளவனுக்கு காட்டுமன்னார்கோயிலும் கிருஷ்ணசாமிக்கு ஒட்டப்பிடாரமும் செல்வாக்கான தொகுதிகள். தங்களுக்கிருக்கும் ஓட்டுகளோடு மற்றொரு கட்சியின் … Continue reading திமுக: நம்பகமான கூட்டாளியா?
“93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”
ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு. இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய: கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. … Continue reading “93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”
“வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா
தேர்தல் முடிவுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான … Continue reading “வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா
திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!
விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!
இடதுசாரிகள் எப்போது தேவைப்படுகிறார்கள்?
சம்சுதீன் ஹீரா அந்த மாபெரும் பன்னாட்டுத் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி ஒரு தொழிலாளிக்கு கை போய்விடுகிறது. சொற்ப தொகையைக் கொடுத்து சரிக்கட்டப் பார்க்கிறது நிறுவனம். அது மருத்துவச் செலவுக்கே போதாத தொகை. தொழிலாளியின் குடும்பம் சங்கத்தில் வந்து முறையிடுகிறது. தோழர்கள் விரைந்து சென்று தலையிடுகிறார்கள். அரசியல் தலையீடு (ஆளும் கட்சி), பணபலம் சாதியமைப்புகளின் மிரட்டல் அனைத்தையும் தாண்டி உறுதியுடன் போராடினார்கள் தோழர்கள். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணிகிறது நிறுவனம். மருத்துவச்செலவை முழுதும் ஏற்றது மட்டுமன்றி தொழிலாளிக்கு … Continue reading இடதுசாரிகள் எப்போது தேவைப்படுகிறார்கள்?
சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி. வீரலட்சுமி 14083 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளருக்கு அடுத்த படியாக வந்துள்ளார். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரலட்சுமி போட்டியிட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ஆர். சரஸ்வதியின் வெற்றியை இவர் வெகுவாக பாதித்திருக்கிறார். சரஸ்வதி 90, 000 வாக்குகளும் திமுக வேட்பாளர் 1லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். கி.வீரலட்சுமி குறித்து … Continue reading சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!
அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்
தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கதில் எழுதியுள்ள கட்டுரை: ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள் அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி … Continue reading அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்
“தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி
பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக, பாமக தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது திமுகவுக்கு எதிரான சதி என்றும் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் தானே போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தார். முன்னதாக தேர்தல் முடிவுகள் குறித்து … Continue reading “தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி
மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?
மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?
நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!
அ.குமரேசன் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் எளிமையுமான கருத்துப் பரவல் இயக்கங்கள், பாதிக்கப்படுவோருக்காகத் தன்னுணர்வான தொண்டுகள், சமரசமற்ற முற்போக்கு அடையாளங்கள், மக்களைத் திரட்டும் மாபெரும் முயற்சிகள்... ஆகிய பாதைகளை மூடுவதற்கில்லை. பதிவான வாக்குகளில் அதிமுக-வுக்கு சுமார் 41 சதவீதம் … Continue reading நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!
கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!
Thiru Yo தேர்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு நடத்தப்படுகிற கருத்துக் கணிப்புகள் எவ்வளவு போலியான கருத்துத் திணிப்புகள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. லயோலா முன்னாள் மாணவர்கள், அந்நாள் மாணவர்கள், முந்தாநாள் மாணவர்கள் துவங்கி விகடன், நக்கீரன் என இதழ்களும், தொலைக்காட்சிகளும் உற்பத்தி செய்த தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துத் திணிப்புகளும் அப்பட்டமாக தடைசெய்யப்பட வேண்டியவை. அவை அனைத்தும் விளம்பரங்கள் மற்றும் கட்சிகளிடமிருந்து பலனை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை. ஊடகங்களின் நேர்மையை இத்தேர்தல் அம்பலப்படுத்தியது. … Continue reading கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!
தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!
பரமேசுவரி திருநாவுக்கரசு ஆசிரியப் பணியாகவும் தேர்தல் பணியாகவும் தொடர்ந்து கிராமங்களில் பணியாற்றுவதை சிற்சில இடர்ப்பாடுகள் கடந்து வரமாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு சில மாதங்களுக்கு முன்னரே உள்ளுணர்வு உணர்த்திய ஒன்று. அதிமுகவின் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதல்ல. சற்றே நிதானிக்க, சிந்திக்க வேண்டிய இடத்தில் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் சிந்தியாமல், செயல்படுத்தாமல் அதீத இலவசங்களுக்கே மக்கள் பெரும்பான்மை அளித்து விடுவார்களென்று நினைத்ததற்கான மரண அடியிது. சென்றமுறைபோல் அதீதப் பெரும்பான்மைஆட்சி இந்த … Continue reading தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!
ஜெயலலிதா அவர்களே…வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
இராசையா சின்னத்துரை ஜெயலலிதா அவர்களே... தொண்ணுறுகளுக்கு பின் தமிழகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை யாரும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்ததில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள். மக்கள் நல்லவர் கெட்டவர் கொள்கை கோட்பாடுகள் பார்த்து வாக்களிப்பதில்லை என்பதால் இதை சாதனையாக கருதுவது எளிய மனங்களின் செயல்பாடுகள் மட்டுமே. விதந்தோத ஒன்றும் இல்லை. ஆனால், காலம் உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது மக்களுக்கு நிறைய செய்யமுடியும். உலகம் எப்போது சுதந்திர மனிதர்களால் நிறைந்துள்ளதோ அன்றுதான் மனிதகுலத்தின் விடுதலை சாத்தியமாகும். அதிகாரத்தில் இல்லாதவர்கள் … Continue reading ஜெயலலிதா அவர்களே…வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!