அசோகமித்திரன் எனும் பால்கனி தாத்தாவுக்கு அஞ்சலி!

அதிஷா நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபாரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவர் நம்முடைய வாழ்வின் அவலங்களை புன்னகையோடு எளிய கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். அவை இலக்கியத்தரத்தோடு இருந்தன. அசோகமித்திரனின் கதைகளின் மொழி மூளையை அஷ்டபங்காசனம் பண்ண வைக்கிற வகையில் என்றைக்குமே இருந்ததில்லை. தண்ணீரும் ஒற்றனும் மானசரோவரும் கரையாத நிழல்களும்... ஒவ்வோரு சிறுகதைகளும் மக்களின் மொழியில்தான் உணர்வுகளை கடத்தின. அந்த உணர்வுகளின் அழுத்தம் … Continue reading அசோகமித்திரன் எனும் பால்கனி தாத்தாவுக்கு அஞ்சலி!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும். *"கண்டிவீரன்" என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் "புனைவுப் பரிசு"ஷோபா சக்திக்கு வழங்கப்படுகிறது. *தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான, அசோகமித்ரனின் "குறுக்குவெட்டுக்கள்" என்னும் கட்டுரை … Continue reading கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!

‘மிக நுண்ணிய மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு’ அசோகமித்திரனின் இந்தியா 1948: போராட்டமும் விடுதலையும் நாவலை முன்வைத்து

முரளிதரன் காசி விஸ்வநாதன் இந்தியா 1948: போராட்டமும் விடுதலையும் "இவனெல்லாம் ஒரு ஆளா?" என்று பலரை நாம் நினைைத்திருப்போம். ஆனால், அவர்களுக்கான ஒரு தருணத்தில் வியப்பூட்டும் வகையில் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தி அவர்கள் உயர்ந்து நிற்பார்கள். அசோகமித்திரனின் இந்த நாவலில் வரும் நான்கு பெண்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே! ஆனால், அவர்களுக்கான தருணம் நாம் எதிர்பாராத நேரத்தில் வெளிப்படுகிறது. மிக மிக subtleஆக. இந்த நாவலின் தலைப்பு, இது ஒரு புனைவல்லாத, வரலாற்று நூலோ என்ற எண்ணத்தை … Continue reading ‘மிக நுண்ணிய மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு’ அசோகமித்திரனின் இந்தியா 1948: போராட்டமும் விடுதலையும் நாவலை முன்வைத்து