பத்திரிகை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்: ஊடகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊழியர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஊடகத்துறை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. 23.04.2018 பெறுநர் உயர்திரு ஆசிரியர் அவர்கள், நாளிதழ் / தொலைக்காட்சி, சென்னை. அன்புடையீர் வணக்கம், ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த … Continue reading பத்திரிகை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்: ஊடகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

அதிகாரத்தின் வல்லமைகள்: பேராசிரியர் அ. ராமசாமி

கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் திரட்டும் வல்லமையாளர்கள் என்பது பேரரசியலுக்குப் புரியாமல் இருக்கலாம். நுண்ணரசியலாளர்களுக்குத் தெரியும். உடனடியாக எதிர்வினை ஆற்றுவார்கள்.

அதிகார நெருக்குதலுக்கு அடிபணிந்து ஊடகவியலாளர்களைப் பலியிடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல: தொல்.திருமாவளவன்

ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஊடக நிறுவனங்களையும் பெண் ஊடகவியலாளர்களையும் ஆபாசமாக இழிவுப்படுத்திப் பதிவுச் செய்திருந்தார். அதை தமிழ்நாட்டில் அமைச்சர் ஜெயகுமார் உட்பட அனைவருமே கண்டித்தனர். எஸ்.வி.சேகர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தமதுகண்டனத்தை ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர்கள் … Continue reading அதிகார நெருக்குதலுக்கு அடிபணிந்து ஊடகவியலாளர்களைப் பலியிடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல: தொல்.திருமாவளவன்

பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பெண்மையை இழிவுபடுத்தும் எச்.ராசா, எஸ்.வி சேகரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கல்லூரி மாணவிகளுக்கு அவர்களின் பேராசிரியையே பாலியல் வலை வீசிய விவகாரம், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுனர் புரோகித் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த எச்.ராசாவும், எஸ்.வி.சேகரும் தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. அவர்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களால் கூட ஏற்கமுடியாதவை. பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியில் உள்ள பெரிய … Continue reading பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி: அ. மார்க்ஸ் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்துவருவதாக எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.   “எஸ்.வி.சேகரின் ஆபாசப் பதிவை எதிர்த்த பத்திரிகையாளர்களின் போராட்டத்தை முன்வைத்து இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினர் சென்னையிலுள்ள முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கூண்டோடு பழி வாங்கி ஒழித்துக் கட்ட தீவிரமாக முயல்கின்றனர். இன்று வழக்குத் தொடர்ப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் … Continue reading போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி: அ. மார்க்ஸ் கண்டனம்

கல் எறிவது யார்?: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை

எஸ். வி. சேகரின் பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு பகிர்வுக்கு கண்டனம் தெரிவித்து அவர் வீட்டின் முன் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தின் ஒரு பகுதியாக  சில பத்திரிகையாளர்கள் சேகர் வீட்டின் கேட்டின் மீது செருப்பு, கற்களை வீசினர்.  போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. இந்நிலையில் பத்திரிகையாளர்களின் போராட்டத்தில் வேறு சில அமைப்பினர் கலந்துகொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி சில பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் எழுதினர். இதுகுறித்து … Continue reading கல் எறிவது யார்?: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை