#metoourbannaxal என்ற முழக்கத்தின் வழியே ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மைக்கு எதிரான சிவில் சமூகத்தின் ஜனநாயக எதிர் போராட்ட முழக்கமானது தோழர் அருணனை ஏன் கலவரப்படுத்துகிறது?
பகுப்பு: விவாதம்
மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!
சத்வா சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் 'வேறு பல வித அமானுசிய' முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து நோய்களையும் அழித்தொழித்து விட கூடியது என்றும், அரசின் ஆதரவு இல்லாமை மற்றுப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலுமினாட்டி சதியின் காரணமாக தான் மேற்சொன்ன மாற்று மருத்துவங்கள் பின்னடைவை தழுவி விட்டதாகவும் ஒரு … Continue reading மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!
பார்ப்பனர்களின் அடித்தளங்கள் அப்பழுக்கற்றவையா? ஜெயமோகனுக்கு சுப.உதயகுமாரன் கேள்வி
“சாதிய அமைப்பின் கடந்தகாலக் கொடுமைகளுக்கான” (கவனிக்கவும், “கடந்தகால”) “பொறுப்பை பிராமணர் மேல் சுமத்திவிட்டு” நாமெல்லாம் கழன்றுகொள்கிறோம் என்று குறைபடுகிறார். இதைத்தான் victim-blaming (இரையைக் குறை சொல்வது) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.
விவாதம்: “கக்கூஸ்” ஆவணப்படத்தை பார்க்கணும்; ஆனால், அது பேசும் அரசியலை நிராகரிக்கணும்”
மீனா சோமு திவ்யா பாரதி இயக்கிய, "கக்கூஸ்" ஆவணப்படம் பார்த்தேன். மலத்தோடு அதன் நாற்றத்தோடு செத்துக் கொண்டிருப்பவர்களை பற்றிய ஆவணம் அது. 1.30மணி நேரம் ஓடிய ஆவணப்படம், நம் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை முகத்தில் மலத்தை அறைந்து சுட்டுகிறது. மலம் அள்ளும் பணியாளர்கள் இல்லையென்று சொன்னாலும் மலம் அள்ளும் நிலைக்கு தள்ளப்படும் துப்புரவு பணியாளர்கள் குறித்தும் அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கிய அரசின் எத்தனம் பற்றியும் சமூக நிலை பற்றியும் பட்டவர்த்தனமாய் வைக்கும் ஆவணப்படம் இது. அதே … Continue reading விவாதம்: “கக்கூஸ்” ஆவணப்படத்தை பார்க்கணும்; ஆனால், அது பேசும் அரசியலை நிராகரிக்கணும்”
உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனி; குர்குரே சாப்பிட்டு ஈனோ குடித்த 17 வயது இளைஞர் மரணம்!
சென்னையைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் குர்குரே என்ற நொறுக்குத் தீனியை சாப்பிட்டு ஈனோ குடித்ததால் இறந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பகிரப்பட்டது. அந்தச் செய்தி பொய்யானதா என பலரும் நினைத்த நிலையில் அந்த இளைஞரின் பெயர் கிரிஸ் சியாரோ என்றும் குர்குரே சாப்பிட்டு வயிற்று வலி ஏற்பட்டதால், ஜீரணத்துக்காக ஈனோ குடித்ததால் இறந்ததாகவும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனிகளை தடை செய்ய சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரபல பதிவரான சபீதா … Continue reading உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனி; குர்குரே சாப்பிட்டு ஈனோ குடித்த 17 வயது இளைஞர் மரணம்!
“ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”
அறிவழகன் கைவல்யம் இந்திய அரசு அலுவலகங்களில் வேலைத் திறனோ, பாலின வேறுபாடுகளோ, வேகமோ கணக்கில் வராது, இங்கே கணக்கில் வருவது அந்த அலுவலகத்தின் குறுக்கு அதிகார வழிமுறை மட்டுமே, சிலரை அலுவலகத்திலேயே மடக்கலாம், சிலரை வீட்டில், இன்னும் சிலரை உணவகங்களில், ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சட்டப்பூர்வமான நெறிகளைத் தாண்டி ரகசிய செயல்திட்டமும், கூட்டுப் பணப் பொதித் திட்டங்களும் உண்டு. இது ஒரு சங்கிலித் தொடர், இந்த சங்கிலித் தொடர் மாநில அரசின் தலைமைச் செயலகம் முதற்கொண்டு சட்டப்பேரவை வரையில் … Continue reading “ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”
உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…
அன்புசெல்வம் உனா தலித் எழுச்சியை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தலித் ஆதரவு அலை உருவாகியுள்ளது. குஜராத்தில் 30 -க்கும் மேற்பட்ட தலித் இயக்கங்களுடன் தொடங்கியிருக்கிற இவ்வெழுச்சிக்கு கட்சி, இயக்கம், அமைப்பு என பாராமல் ஆதரவு வலுத்து வருகிறது. வெளி நாடுகளில் உள்ள தலித்துகளும் தங்களின் ஆதரவை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். நீலக்கொடியுடன், சிவப்பும் இணைந்து ஜெய்பீம் முழக்கத்துடன் லால்சலாம் சொல்லி வருகிறது. சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆதரவளிப்பதைப்போல தமிழ்நாட்டில் தலித் … Continue reading உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு
எழுத்தாளர் ஜெயமோகன் விகடன் தடம் இதழுக்கு அளித்த நேர்காணலில் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை” என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் ‘நஞ்சுண்ட காடு’ நாவலின் ஆசிரியரான் குணா. கவியழகன், ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பை விடுத்திருக்கிறார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில், “எழுத்தாளர் திரு.ஜெயமோகன் விகடன் தடம் இதழின் பேட்டியில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லை என கூறியிருக்கிறார். இந்த கருத்துத் தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்திற்கு திரு.ஜெயமோகனை அழைக்கிறேன். அரசறிவியல் … Continue reading இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு
மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் … Continue reading மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா
‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது
நிலா லோகநாதன் அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள். எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான "மெச்சத்தக்க"படத்தை எடுத்தவரல்லவா? அப்பா திரைப்படம் தொடங்கும் போது, கூரையில் கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டு வலியைத் தாங்கி வீட்டில் பிரசவிக்கிறார் அந்தப் பெண். சமுத்திரக்கனி அதைத்தான் வலியுறுத்துகிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றால் வெட்டிப்போட்டு விடுவார்கள் என்கிறார். அதற்கு முதற்காட்சியில், பக்கத்து வீட்டுப் … Continue reading ‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது
விவாதம்: திருமண மறுப்பு என்பது ஆழ்ந்த பெண்வெறுப்பால் வருவது!
நியாண்டர் செல்வன் இந்த பதிவில் ஏன் பிரம்மசர்ய துறவு முறை இந்து மதத்துக்கு ஒப்புதலானதில்லை என்பதையும், அதன் எதிக்ஸையும் நவீன கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அகத்தியர், வசிஷ்டர், விசுவாமித்திரர் என வேதரிஷிகளை எடுத்துகொண்டால் அவர்கள் யாரும் பிரம்மசாரிகள் அல்ல, வெஜிட்டேரியன்களும் அல்ல. ரிஷிகள், ரிஷிபத்தினிகள் என ஆசிரமம் அமைத்தே குடும்பத்துடன் வாழ்ந்தார்கள். இந்து கடவுளர்களும் சிவன், பார்வதி, முருகன், வினாயகர் என குடும்பத்துடனே அருள்பாலிக்கிறார்கள். திருமனம் செய்து, பிள்ளைபெறாவிடில் புத் என்ற நரகம் கிடைக்கும் என இந்துநூல்கள் கூறுகின்றன. … Continue reading விவாதம்: திருமண மறுப்பு என்பது ஆழ்ந்த பெண்வெறுப்பால் வருவது!
விவாதம்: ஜக்கியும் சாமியார் தானே? ஏன் தனக்கு மொட்டையடித்து காவியுடுத்தி, மற்ற ‘சந்நியாசிகள்’ போல வாழவில்லை?
திரு யோ சக்கியின் ஆசிரமத்தில் நடப்பதன் பெயர் துறவறமா? சந்தேகத்திடமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் மடியில் கனமில்லாத 'துறவி' சட்டத்தின் பார்வைக்குள் விசாரணைக்கு தனது மடத்தை திறந்து விடுவது எல்லாவற்றிற்கும் முடிவை தருமில்லையா? கட்டுப்பாடான சூழலில் மூளைச்சலவை செய்து எப்படியெல்லாம் கார்ப்பரேட் சாமியார்கள் பலரையும் தங்களது காட்டிற்குள் வைத்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள் என்பதற்கு ஏற்கனவே பலர் உள்ளிருந்து வெளியே வந்து பதிவு செய்துள்ளனர். ஒருவரது கல்வி, வயது, அனுபவம் அனைத்தையும் கடந்து மூளைச்சலவை … Continue reading விவாதம்: ஜக்கியும் சாமியார் தானே? ஏன் தனக்கு மொட்டையடித்து காவியுடுத்தி, மற்ற ‘சந்நியாசிகள்’ போல வாழவில்லை?
அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களை குறிக்க ‘பறையர்’ என்ற சொல்தான் பயன்படுத்த வேண்டுமா?: ஓர் விவாதம்
‘பறையர்’ என்ற சொல் விவாதமாகியுள்ளது. விலக்கப்பட்டவர்களை, அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களைக் குறிக்க ‘பறையர்’ என்ற சொல்லை பயன்படுத்தலாமா என்பதே விவாதத்தின் சாரம். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் முகநூல் பதிவை ஒட்டி இந்த விவாதம் நிகழ்கிறது. கீழே இதன் தொகுப்பு... Aadhavan Dheetchanya அங்கீகாரம்... தீட்டு... பறையர்... 2013 நவம்பர் 'தோர்ச்ச' மாத இதழில் வெளி்யான மலையாள எழுத்தாளர் தோமஸ் ஜோசப்புடைய நேர்காணலின் தமிழாக்கம் நியூ செஞ்சுரியின் 'உங்கள் நூலகம்' ஜூலை 2016 இதழில் வெளியாகியுள்ளது. கலை இலக்கியம் தொடர்பான … Continue reading அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களை குறிக்க ‘பறையர்’ என்ற சொல்தான் பயன்படுத்த வேண்டுமா?: ஓர் விவாதம்
#விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா
பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார். பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை. “ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க … Continue reading #விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா
கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தமிழில் பாட முயன்றதற்காக தீட்சிதரால் அடித்து வீசப்பட்டார். பல ஆண்டுப் போராட்டங்களுக்கு பின் நீதிமன்றம் சென்று, திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் பாட அரசாணையும் கிடைத்து அவர் பாடியபோது, 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டு கழித்தனர். அந்த ஆறுமுகசாமி வன்னியர். அவருக்காக ஆலய பிரவேசத்திற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் மூவர் விசிக வினர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரபாளையம் கோயில் விழாவில் கரகம் … Continue reading கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!
இறைவி….: ப்ரியா தம்பி
Priya Thambi கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் காதல் கதை அது.... ‘’அவங்க இரண்டு பேரும் டெய்லி கிருஷ்ணன் கோயில்ல மீட் பண்ணிப்பாங்க.. அதுதாங்க அவங்க லவ் பிளேஸ்’’ என்று சொன்ன இடத்திலேயே, அதற்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என … Continue reading இறைவி….: ப்ரியா தம்பி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி செய்யப்படுகின்றன?
தளவாய் சுந்தரம் எனக்குத் தெரிந்து நேற்று மாலையில் இருந்து எட்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. எட்டும் தமிழகத்துக்கு வெளியேயுள்ள ஊடகங்கள் செய்தவை. எப்படி இந்த சர்வேகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த விபரங்கள் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை. பொதுவாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்றால், சில இடங்களில் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று, வாக்களித்து வருபவர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, அதன்படி கணிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல். உங்களுக்கும் அப்படித்தான் … Continue reading தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி செய்யப்படுகின்றன?
பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்
ஸ்டாலின் ராஜாங்கம் 1)தேர்தல்பணிகள் தொடங்கிய நேரத்தில் கட்சி கூட்டமொன்றில் திமுக பொன்முடி, சாதி பற்றி பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பொன்முடியின் சொந்த குடும்பத்தில் நடந்திருக்கும் கலப்புமணங்களை வரிசைப்படுத்திக் காட்டி அவரை சாதிரீதியாக யோசிக்கக் கூடாது என்று எழுதப்பட்டது. 2)இப்போது முகநூல்பக்கத்தில் தன்பெயரை மட்டுமே போட வாய்ப்பிருந்தும் சாதிப்பட்டத்தோடு கூடிய 'மாற்றமுடியாத'தன் அப்பாவின் பெயரோடு தன் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா.(பெரிய மாயத்தேவர் பாரதிராஜா)இந்நிலையில் சினிமாத்துறையைச் சேர்ந்த சிவா என்பவர் இதை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். வாசிக்க: “ஓட்டு போடும் … Continue reading பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்
பளபள சரவணா ஸ்டோர்ஸின் மறுபக்கம்!
பாரதி தம்பி கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’ பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ கேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் … Continue reading பளபள சரவணா ஸ்டோர்ஸின் மறுபக்கம்!
“ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல”: தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்
காந்திராஜன் ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் காலங்களில் உருவான கோவில்களில் இச் சிற்பங்களை காண இயலாது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் விஜயநகர மன்னர்கள் ஒரிஸ்ஸாவின் தென் பகுதியைக் கைபற்றிய பின், அங்கிருந்த எரோட்டிக் கலையினை ஆந்திரம் வழியாக சுமார் 16-ம் நூற்றாண்டுக்கு பின்னரே கொண்டு வந்தனர். இந்த Erotic கலையினை வந்தேறி அரசுகள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நம் கோயில் மரபில் திணித்தனர். இவை பெரும் … Continue reading “ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல”: தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்
“யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்
புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை கிரானைட் கொள்ளை பற்றி விவாதம் நடந்தது. கார்த்திகைச் செல்வன் நெறியாள்கை செய்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கண்ணதாசனும் அதிமுக சார்பில் தூத்துக்குடி செல்வமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரா. சிந்தனும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பேசிய தூத்துக்குடி செல்வம் சகாயம் விளம்பரம் தேட சுடுகாட்டில் படுத்தார் என்று பேசினார். இது குறித்து நெறியாளர் … Continue reading “யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்
“ஆர்டினரி கேக்கை வீட்டு வேலை செய்யறவங்க சாப்பிடுவாங்க; நாங்க வெல்வெட் கேக் மட்டும் சாப்பிடுவோம்”: அதிமுக ஃபேஸ்புக் பிரபலத்தின் பதிவு
பெங்களூருவில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஃபேஸ்புக் பிரபலம் ப்ரியா குருநாதன். இவர் அளித்துள்ள ஃப்ரி அட்வைஸ் முகநூலில் விறுவிறுப்பான விவாத்தைக் கிளப்பியுள்ளது. Priya GuruNathan யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க. Just my free advice. ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க. எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் 6 cake வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் … Continue reading “ஆர்டினரி கேக்கை வீட்டு வேலை செய்யறவங்க சாப்பிடுவாங்க; நாங்க வெல்வெட் கேக் மட்டும் சாப்பிடுவோம்”: அதிமுக ஃபேஸ்புக் பிரபலத்தின் பதிவு
மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!
திருமுருகன் காந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் பெரிய தேர்தல் கட்சிகளின் அஜண்டாவை மையப்பத்தியே விவாதங்களை நடத்துகின்றன. திட்டமிட்டு மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் இந்த விவாதங்களில் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த பெரிய அதிகார மைய கட்சிகள் ’மக்கள் போராளிகள் போலவும், புரட்சிகர அரசியலை செய்வது போலவும் படம் போடுவதை காண சகிக்க முடியவில்லை. பொதுமக்கள் மீது தேர்தல் அரசியல் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும் ஒரு நம்பிக்கையை வரவழைக்க முயலுகின்றனர். தேர்தல் கமிசனும் நேர்மையாக நடப்பது … Continue reading மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!
பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கருணாநிதியை ஏற்றுக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!
சுகுணா திவாகர் தி.மு.க. கூட்டணியில் சிவகாமி அய்.ஏ.எஸ். தலைமையிலான சமூக சமத்துவப் படை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் படித்தபோது இரண்டு ஆச்சர்யங்கள். ‘பெரியார் தலித் விரோதி’ என்ற விவாதம் உச்சத்தில் இருந்த காலம் அது. அப்போது அதை மறுத்து பெரியாரியத்தை ஆதரித்த கட்டுரைகள் சிவகாமி நடத்திய ‘புதிய கோடங்கி’ இதழில் வெளியானது. ஆனால் என்ன நினைத்தாரோ, ஒரே இதழில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் சிவகாமி. பெரியார் முதல் கவிஞர் இன்குலாப் வரை அனைவரையும் … Continue reading பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கருணாநிதியை ஏற்றுக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!
பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!
திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான்” என விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசியதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதை ஒட்டியும் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. க. பொன்முடியின் சம்பந்தியும் ஆய்வாளருமான சுபகுணராஜன், இந்தச் … Continue reading பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!
“ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?
புத்தக வெளியீடுகள் அதிகமாக நடக்கும் காலக்கட்டங்களில் சர்ச்சைகளுக்கும் குறைவு இருப்பதில்லை. அண்மையில் கோவையில் உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் உயிர்மை மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இந்தக் குழு கோவை அருகே மசினகுடியில் தங்கியிருந்தபோது, அங்கு நடந்த விவாதத்தில் சாருநிவேதாவை, குமரகுருபரன் அடிக்க கிளம்பியதாக சமூக வலைத்தளங்களில் எழுதிய சிலர், குமரகுருபரனை ‘200 கிலோ’ என உருவத்தைப் பற்றிய தாழ்ந்த பதிவுகளையும் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து மனுஷ்ய … Continue reading “ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?
உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்
உயர்பதவியில் இருப்பவர்கள் இன்னமும் பிரபுத்துவ மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூறினார். நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பணி ஓய்வுபெற்றதையடுத்து, அவருக்கு பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமை வகித்தார். தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசியதாவது: பொதுவாக உயர் பதவியில் இருப்போர் ஒருபிரபுத்துவ மனப்பான்மையில் இருப்பது வருத்தத்துக்குரியது. சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர்களாலும், பல … Continue reading உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்
PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?
நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட். ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால் முதல்வருடம் 100+10 = … Continue reading PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?
#விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”
தமயந்தி இரண்டு நாட்களாய் இணையத்தில் நெஞ்சுரம் கொண்ட ஆணவக் கொலைக்கெதிரான கட்டுரை( புகைப்படம் ) பார்த்த போதே அதன் பின்னிருக்கும் அரசியல் எனக்கு நன்கு புரிந்தது. இணையத்தில் இதைப் புரிந்து கொள்ளாமல் அவரவர் அரசியல் புரிதலும் அவசரமான பழி வாங்கும் சொற்களும் மிக ஆபாசமாக பகிர்ந்து கொள்ளப்பட்டன. கொற்றவை, குட்டி ரேவதி ,முக்கியமாக ஜோதியின் களப்பணி நான் அறிந்ததே. அவர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாதென திண்ணமாக எண்ணினேன். நம்பினேன். தனிவிரோத தாக்குதல்களாய் தூக்கி வீசப்பட்ட … Continue reading #விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”
சாதியும் தமிழ் சினிமாவும்: அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்!
சாதியை போற்றி வளர்த்ததில் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பு உண்டு. சினிமாவின் சாதி வளர்ந்த வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த முயற்சி. http://www.youtube.com/watch?v=GOoI4zNEOmI Shah Jahan தமிழ்த் திரைப்படங்கள் சாதியை எவ்வாறு சித்திரித்தன. தாழ்த்தப்பட்டவர்களை திரைப்படங்கள் எவ்வாறு சித்திரித்தன. சாதி உணர்வு இல்லாதவர்களாக இருந்தவர்களையும் தமது சாதி குறித்துப் பெருமை உணர்வு கொண்டவர்களாக ஆக்குவதில் திரைப்படங்களின் பங்கு என்ன? இன்றைய பிரச்சினைக்கு முக்கியக்காரணங்களில் முதன்மையான காரணமாக சினிமாவை நான் கருதுவேன். Meena Somu தமிழ் சினிமாவில் சாதி... இந்த … Continue reading சாதியும் தமிழ் சினிமாவும்: அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்!
விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!
கடன் தவணை கட்டவில்லை என்று விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸார் என செய்திகள் வெளியிடும் பல ஊடகங்கள், விவசாயி எந்த வங்கியில் கடன் வாங்கினார் என சொல்லவேயில்லை. ‘தனியார் வங்கி’ என்றே அந்த வங்கியை விளித்தனர். போலீஸாருக்கு மட்டும் பங்கு இருப்பதாகக் காட்டி, அந்த தனியார் வங்கியின் சரிபாதி குற்றத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. போலீஸ் தரப்பில் கருத்து கேட்ட ஊடகங்கள், அந்த தனியார் வங்கியிடம் கடன் தவணை கட்டத் தவறினால் இப்படித்தான் அராஜகத்தை ஏவி … Continue reading விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!
தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…
செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…
விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை
இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் வந்துள்ள தகவல்கள்... பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப் பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. இதன் … Continue reading விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை
சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?
மீனா சோமு பெண்களாகிய நாங்கள் (மீனா சோமு, கீதா இளங்கோவன், தயா மலர்) சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதை செய்தியாகவும் தன் ப்ளாகிலும் பகிர்ந்த தோழர் இரா. எட்வின் அவர்களது செய்கை ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்கும். கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கும் ஆணாதிக்க சாதிய சிந்தனைகளால் கட்டப்பட்டு இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை தரும். தோழர். இரா எட்வின் அவர்களுக்கு நன்றியும் அன்பும். பெண்களுக்கான தளம் என்பது எழுத்திலும் சிந்தனையிலும் செயலிலும் கூட வரையறை செய்யும் சமூகம் இது. … Continue reading சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?
கார்ட்டூன் சர்ச்சை: ’பாலாவை நோக்கி கல்லெறிபவர்களுக்கு மதி கண்ணிலேயே படாததின் ரகசியம் என்ன?’
2014-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து குஷ்பூ விலகியபோது, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் யாரும் அதை விமர்சிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைந்த பிறகு, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது. முகநூலில் வெளியான சில கருத்துகள் கீழே... மனுஷ்யபுத்திரன் மதுவிலக்கிற்காக கலைஞர் செய்த அறிவிப்பிற்கு தினமணியில் மதிபோட்ட கார்ட்டூனாகட்டும் இப்போது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஒட்டி குஷ்புவை வைத்து பாலா என்பவர் போட்டிருக்கும் கார்ட்டூனாகட்டும் அவர்களது மனோ வக்கிரத்தின் சிறுமையையே … Continue reading கார்ட்டூன் சர்ச்சை: ’பாலாவை நோக்கி கல்லெறிபவர்களுக்கு மதி கண்ணிலேயே படாததின் ரகசியம் என்ன?’
தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?
பிரேம் இந்திய அரசியல்-சமூக விடுதலை அரசியல்-பொருளாதார விடுதலை எதுவாக இருந்தாலும் தலித் அரசியலின் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல்- சமூக சமத்துவ அரசியல்) அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே தமக்கான அடுத்த கட்ட இயக்கத்தைத் தொடர முடியும். அடிமைப்பட்ட சமூகம், அடக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்டச் சமூகம் என ஒரு அமைப்பை -பல சாதிகளைத்- தமக்குள் வைத்துக்கொண்டுள்ள ஒரு சமூகக்கூட்டம் அடிப்படையில் சமத்துவம், மனித உரிமைகள், அடிப்படை மனித அறங்கள் என எதையும் மதிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மை. … Continue reading தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?
#விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!
வா. மணிகண்டன் எழுத்தாளர் ஞாநி, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் தாங்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி வென்றுவிடும் என்று இப்பொழுது வரைக்கும் நான் நம்பவில்லை என்றாலும் திமுக, அதிமுகவிற்கு மாற்று எதுவுமேயில்லை என்ற நிலை இல்லை. மூன்றாவதாக ஒரு ஆள் இருக்கிறார் என்பதே சந்தோஷம்தான். ஆனால் மூன்றாவதான ஒரு ஆளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தர்ம அடி அடிப்பதைத்தான் காணச் சகிக்கவில்லை. மனுஷ்ய புத்திரன் மாதிரியானவர்கள் வைகோவையும் மக்கள் நலக் … Continue reading #விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!
“மனுஷ்யபுத்திரன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பரப்புரையை தொடங்கிய மக்கள் நலக் கூட்டணி, வாக்குகளைப் பிரிக்குமா? வெற்றிக் கனியை பறிக்குமா? என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி புதன்கிழமை ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் மனுஷ்ய புத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திருப்பூர் சுப்பராயன், முஸ்லீம் கட்சியிலிருந்து ஷேக் தாவூத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆளூர் ஷாநவாஸ், பத்திரிகையாளர் ப.கோலப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை மு. குணசேகரன் நெறியாள்கை செய்தார். இந்த விவாதத்தின் … Continue reading “மனுஷ்யபுத்திரன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”
நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை
கொங்கு பகுதியின் சாதிய குழுக்களின் வன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த ஒலிப்பதிவு வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டாலும் இணையத்தில் முதன் முதலாக பதிவேற்றியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம். http://www.youtube.com/watch?v=p8Cxc20_Vug இதன் விளைவாக கொலை மிரட்டல் விடுத்த சாதியவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் இயக்கங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றன. செவ்வாய்கிழமை திராவிடர் விடுதலைக் கழகம் சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய நபர்களை கைசெய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. இதுகுறித்து வைரம் தி.வி.க தன்னுடைய முகநூலில், … Continue reading நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை
மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து எழுதிய ஞாநி, பத்ரி சேஷாத்ரி: முகநூலில் கிளம்பியிருக்கும் விவாதம்!
மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து பத்திரிகையாளர் ஞாநியும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் கருத்து இட்டிருந்தனர். இதை ஆதரித்தும் நிகராகரித்தும் பல வகையான விவாதங்கள் முகநூலில் எழுந்துள்ளன. ஞாநியும் பத்ரியும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது முதலில்... ஞாநி சங்கரன் அ.தி.மு.கவா தி.மு.கவா என்றால் இன்று நான் தி.மு.கவுக்கே என் ஓட்டை அளிப்பேன். தி.மு.கவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் இன்று நான் மக்கள் நலக் கூட்டணிக்கே என் ஓட்டை அளிப்பேன். ஞாநி சங்கரன் மக்கள் நலக் … Continue reading மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து எழுதிய ஞாநி, பத்ரி சேஷாத்ரி: முகநூலில் கிளம்பியிருக்கும் விவாதம்!