சென்னைக்குத் தேவை அதன் நுரையீரலே: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் சென்னையில் அடித்த புயலில் ஆயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்து விட்டன. இயற்கையாக வீழ்ந்த மரங்களோடு மீட்பு படையினர் வருவதற்கு முன்னதாக ஆங்காங்கே செயற்கையாகவும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாக ஊடகத் தோழர் ஒருவர் தெரிவித்தார். இச்செய்கை பச்சை அயோக்கியத்தனமானது. வருங்காலத்தில் திரும்பவும் புயலடித்தால் இம்மரங்கள் தங்கள் இடத்தின் மேல் வீழ்ந்து விடாதிருக்க இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடாம். மரங்களற்ற சென்னை எப்படி அமையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கான்கிரீட் கட்டிடங்கள் நிறைந்த ஒவ்வொரு நகரமும் ஒரு வெப்ப தீவுதான். குறைந்த … Continue reading சென்னைக்குத் தேவை அதன் நுரையீரலே: சூழலியலாளர் நக்கீரன்

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கு நிவாரணம் : சிபிஎம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். டிசம்பர் 12 அன்று தலைநகரம் சென்னையிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும் தாக்கிய வர்தா புயல் கடுமையான பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் சாய்க்கப்பட்டதின் காரணமாக வீடுகள், குடிசைகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கடைகள், சில தொழில் நிறுவனங்கள் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாகவும் புயலின் காரணமாகவும் மின்சார கட்டமைப்பு … Continue reading புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கு நிவாரணம் : சிபிஎம் வலியுறுத்தல்

இனி ஒரு குரோட்டன்ஸ் செடியைக்கூட நட்டு வளர்க்க ஆட்கள் இல்லை!

சரவணன் சந்திரன் புயலின் போதும் புயலுக்குப் பின்னும் மழைப் பயணம் போனேன். எனக்கு ஒரு சாலை மார்க்கம் மிகவும் பிடிக்கும். வால்பாறையிலிருந்து அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலக்குடி பாதை அடர்த்தியான காடுகளின் வழியாகப் போகும். இரண்டு பக்கமும் மரங்கள் மூடியிருக்கும். ஆங்காங்கே மட்டும்தான் வெயிலைப் பார்க்கவே முடியும். உண்மையில் மரங்களடர்ந்த புதர்களுக்கு மத்தியிலான சாலை அது. மிக முக்கியமான யானை வழித்தடமும்கூட அது. யானைகள் ஒடித்துப் போட்ட மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து கிடக்கும். கிட்டத்தட்ட கடந்த இரண்டு … Continue reading இனி ஒரு குரோட்டன்ஸ் செடியைக்கூட நட்டு வளர்க்க ஆட்கள் இல்லை!