93 ரூபாய்க்கு 10 ஜிபி 4 ஜி சேவை: ரிலையன்ஸ் ஜியோ திட்டம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ. 93க்கு 10 ஜிகா பைட் 4 ஜி சேவையை வழங்கவிருப்பதாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் அளித்துள்ளது. தனது 8 மில்லியன் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களில் 90 சதவிதமானவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படவுள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவிலான 4 ஜி சேவைக்கு ஏர்டெல் ரூ. 3,249ம் வோடஃபோன் ரூ. 1,847ம், ஐடியா ரூ. 1,346ம் கட்டணமாக நிர்ணயித்துள்ளன. கிட்டத்தட்ட 94 சதவிதத்துக்கும் குறைவான விலையில் ரிலையன்ஸ் இந்த கட்டண விகிதத்தை நிர்ணயித்துள்ளது. … Continue reading 93 ரூபாய்க்கு 10 ஜிபி 4 ஜி சேவை: ரிலையன்ஸ் ஜியோ திட்டம்

‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதாக ஓட்டெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம கால உலக அரசிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு விழுந்த அடியாக இதை பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.  ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? வெளியேறலாமா? என பிரிட்டனில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவுகளின்படி 52% மக்கள் வெளியேறவும் 48% மக்கள் தொடரவும் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன். வாக்கெடுப்பு முடிவு குறித்து இங்கிலாந்தின் UKIP தலைவர் நைஜல் ஃபரேஜ், “இது சாமானியர்களின் வெற்றி” என கருத்து … Continue reading ‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

பளபள சரவணா ஸ்டோர்ஸின் மறுபக்கம்!

பாரதி தம்பி கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’ பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ கேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் … Continue reading பளபள சரவணா ஸ்டோர்ஸின் மறுபக்கம்!

ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?

இந்திய அரசு - உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  அவருடைய பேட்டியின், முக்கியமான பகுதிகளை எழுத்து வடிவில் கீழே அளித்திருக்கிறோம். *வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இந்தியாவிற்குள் தாராளமாக இறக்குமதி செய்வதற்கு பாரதீய ஜனதா அரசு, உலக வர்த்தக … Continue reading ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட். ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால் முதல்வருடம் 100+10 = … Continue reading PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் "என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் என் தேவைகளை பூர்த்திக்க இத்துறை எனக்குதவும். எனக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது . அதற்கு நான் இன்றிலிருந்து செய்யவேண்டியதென்ன ? இலக்கிய உலகில் நான் என்ன எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது ? கூறுங்கள்" … Continue reading தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.ஆனால், உண்மையான பட்ஜெட் அறிவிப்புகளோ மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றன. வரி ஏய்ப்பாளர்களுக்கு தாராள சலுகை அப்பட்டமாக தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களான வரி ஏய்ப்பாளர்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாங்கள் இதுவரை செலுத்தாத வரியில் 30 சதவீதத்தைச் செலுத்தினால் போதும், அதன் மீது ஒரு ஏழரை சதவீதம் … Continue reading வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

கடன் கட்ட முடியாதவர்களுக்கு எதற்கு ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம்? மல்லையாவுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி

வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் இருக்கும், தொழிலதிபர்கள் பல லட்சங்களில் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்துவது எதற்கு ? என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி கேட்டுள்ளார். வங்கி கடன் கட்டாத தொழிலதிபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது NDTV-யில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  ரகுராம் ராஜன், அப்போது "வங்கிகளில் வாங்கிய பல்லாயிரகணக்கான கோடி ரூபாய்களை திருப்பி கட்டாத தொழிலதிபர்கள், அது பற்றிய நினைவில்லாமல் பல … Continue reading கடன் கட்ட முடியாதவர்களுக்கு எதற்கு ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம்? மல்லையாவுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி

மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!

பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரங்களில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா அனைத்து  துறையிலும் அசுர வளர்ச்சிக் காணும்’ என்று முழங்கினார். அதை நம்பிய வாக்காளர்கள், அவருக்கு அமோகமாக ஆதரவு தந்து ஆட்சியில் அமரவைத்தார்கள். ஆனால் கடந்த ஒன்றே முக்கால் வருட ஆட்சிக்காலத்தில் இந்திய வளர்ச்சியில் பின்னோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தைகள் இறங்கு முகத்தில் இருக்கின்றன.  பணவீக்க விகிதம் தொடர்ந்து சரிவில் இருக்கிறது. இப்போது இந்திய தொழில் உற்பத்தில் 2011-ஆம் ஆண்டைவிட கீழே இறங்கி … Continue reading மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!

நினைவு சின்னமாகிறது HMT வாட்ச்: இந்தியாவின் பிரபல நிறுவனத்தை இழுத்து மூட மோடி அரசு உத்தரவு

இந்தியாவின் பல தலைமுறைகள் HMT கைகடிகாரங்கள் உபயோகிக்காமல் வளர்ந்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய முக்கிய பங்கை வகித்த HMT நிறுவனம் தற்போது இழுத்து மூடப்படவுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த, சிட்டிசன் வாட்ச் நிறுவனத்தின் கூட்டுடன்,  எச்.எம்.டி., வாட்ச் நிறுவனம், 1961ல் பெங்களூருவில், துவக்கப்பட்டது. உள்நாட்டில், முதன் முதலாக இத்தொழிற்சாலையில்தான், கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டது. முதல் கடிகாரத்தை, அப்போதைய பிரதமர் நேரு வெளியிட்டார்.  இதுவரை, 10 கோடிக்கும் அதிகமான கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை … Continue reading நினைவு சின்னமாகிறது HMT வாட்ச்: இந்தியாவின் பிரபல நிறுவனத்தை இழுத்து மூட மோடி அரசு உத்தரவு

“எல்லோருக்கும் வங்கிக் கணக்கு வேண்டும் என்கிற பிரதமர், வங்கிகளுக்கு மூடுவிழா நடத்திக்கொண்டிருக்கிறார்”

தமிழக வங்கிகளை ஒழிக்க மத்திய அரசு முயல்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 1937 ஆம் ஆண்டு கானாடுகாத்தானில் சிதம்பரம் செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. உடனடியாக சென்னையிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது. பின்னர், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளுக்காக பர்மாவில் ரங்கூன் நகரிலும், சிங்கப்பூரிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு வசித்து வந்த தமிழர்களுக்கு ஐ.ஓ.பி. வங்கியின் சேவைகள் மிகுந்த பயன் … Continue reading “எல்லோருக்கும் வங்கிக் கணக்கு வேண்டும் என்கிற பிரதமர், வங்கிகளுக்கு மூடுவிழா நடத்திக்கொண்டிருக்கிறார்”

#‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

நரேன் ராஜகோபாலன் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள What Net Neutrality Activists Won't Tell you on The Top 10 Facts about Free Basics என்கிற விளம்பரத்தில் இடம்பெற்ற குறிப்புகளுக்கான எதிர்வினை... 1 . "Free basics is open to any carriers. Any mobile operator can join us in connecting India." எல்லா டெலிகாம் ஆபரேட்டர்களும் டேட்டா பயன்பாட்டினை அதிகரிக்க தான் 4ஜி அலைவரிசையினை வாங்கி இருக்கிறார்கள். ஆக, … Continue reading #‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

உலக வர்த்தக மாநாட்டு உடன்படிக்கை இந்திய விவசாயத்தை அழிக்கும். இதோ காரணங்கள்…

கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 10 ஆவது அமைச்சர்கள் மாநாட்டில் கடந்த 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக ஏற்கனவே இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்பட்ட காரணமாக இருந்த உலக வர்த்தக அமைப்பு, இப்போது இந்தியாவில் உழவுத் தொழிலையும், உணவுப் பாதுகாப்பையும் அடியோடு ஒழிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. உலக அளவில் வணிகத்தை பெருக்குவதற்காக 1995-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட … Continue reading உலக வர்த்தக மாநாட்டு உடன்படிக்கை இந்திய விவசாயத்தை அழிக்கும். இதோ காரணங்கள்…

தமிழக வெள்ளத்தால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்: மத்திய அமைச்சர் சொல்கிறார்

தமிழக வெள்ளத்தால் 14 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  சென்னையில் உள்ள தொழிற்பேட்டைகளான கிண்டி, ஈக்காடு தாங்கல், அம்பத்தூர், பாடி, திருமுடிவாக்கம் ஆகியவையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் தொழிற்பேட்டையும் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, சனிக்கிழமை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “இந்த நிறுவனங்களில் பெரும்பால நிறுவனங்கள் எந்தவித இன்ஸ்யூரன்ஸும் செய்யவில்லை.  வெள்ளத்தால் இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை … Continue reading தமிழக வெள்ளத்தால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்: மத்திய அமைச்சர் சொல்கிறார்

ஆன் லைனில் சூடு பிடிக்கிறது வறட்டி விற்பனை

ஆன் லைனில் வர்த்தகத்தில் இப்போது எல்லாவற்றையும் வாங்க முடிகிறது. இந்திய மரபு மருத்துவத்திலும் இந்துக்களின் பூஜைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படும் வறட்டியையும் இப்போது ஆன் லைனில் விற்கிறார்கள். அமேசான். காம், ஸ்னாப் டீல் போன்ற ஆன் லைன் வர்த்தக தளங்களில் வறட்டிகளை வாங்கலாம். ரூ. 64 முதல் ரூ. 150 வரை வறடிகள் விற்கப்படுகின்றன. வறட்டி விற்பனை அமோகமாக உள்ளதாக இந்த ஆன் லைன் தளங்கள் தெரிவிக்கின்றன.  

சரக்கு-சேவை வரி மாநிலங்களுக்கிடையேயான பேதத்தை உடைக்கும்’ ரகுராம் ராஜன்

“சரக்கு-சேவை வரி மாநிலங்களுக்கிடையேயான பேதத்தை உடைக்கும்” என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கொல்தத்தாவில் பிரசிடன்ஸி பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே பேசினார். அப்போது.. “சரக்கு-சேவை வரியால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சரக்கு சேவை வரி மூலம் வரி வருவாய் அதிகரிக்கும்; அதிகம் பேர் வரி செலுத்தும் எல்லைக்குள் வருவார்கள். இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பேதத்தை இது உடைக்கும். நாட்டை பொதுவான வியாபார தளமாக மாற்றும்” என்று தெரிவித்தார். மம்தா பானர்ஜி தலைமையிலான கொல்கத்தா அரசு … Continue reading சரக்கு-சேவை வரி மாநிலங்களுக்கிடையேயான பேதத்தை உடைக்கும்’ ரகுராம் ராஜன்

வெள்ளம்: சென்னையிலிருந்து ஐடி ஊழியர்களுக்கு இடமாறுதல்

தகவல் தொழிற்நுட்ப சேவை பாதிக்காத வகையில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு தாற்காலிகமாக இடமாற்றம் செய்துள்ளனர். 15 சதவீத பேர் சென்னையில் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த இரு வாரமாக பெய்த கன மழையால் பல ஐ.டி நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், இந்நிறுவனங்களின் செயல்பாடு முற்றிலும் முடங்கியது. ஐ.பி.எம்., காக்னிசாட், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் சிலரை பெங்களூருக்கு … Continue reading வெள்ளம்: சென்னையிலிருந்து ஐடி ஊழியர்களுக்கு இடமாறுதல்