2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாட்டில் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2.76 லட்சத்துக்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் பாஜக எம்.பி. சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்தத் தகவலை தெரிவித்தார்.அண்மைய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை … Continue reading 2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!
பகுப்பு: மோடி அரசு
2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட … Continue reading 2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!
2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் சட்ட வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை! 2008, ஜூலை 26 அன்று குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனை, வெவ்வேறு … Continue reading அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!
நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாது கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட உமர் காலித்!
2020 டெல்லி கலவர வழக்கில் இன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித், கைவிலங்குகளுடன் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி காவல்துறை கைவிலங்குடன் ஆஜர்படுத்துவதற்கான மனுக்களை டெல்லி நீதிமன்றம் நிராகரித்திருந்தது. உமர்காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வரக்கூடாது எனவும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதைப் பொருட்படுத்தாது டெல்லி காவல்துறை உமர் காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளது. இந்த நிலையில், நீதிபதி அமிதாப் ராவத்தின் நீதிமன்ற அறையில் கைவிலங்குடன் உமர்காலி ஆஜர்படுத்தப்பட்டதாக … Continue reading நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாது கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட உமர் காலித்!
மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !
சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு மிகக்கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இந்தியாவில் இருந்து வரும் முதல் மூத்த அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான அமெரிக்கப் பயணம் மோசமான காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கும், அமெரிக்க சமூக இணையதள ஊடகங்களுக்கும் இடையில் மண்டிக்கிடக்கும் புகை மண்டலத்துக்கு இடையே இந்தப் பயணம் ஏற்பாடாகி இருக்கிறது, அவருடைய பயணத்தின் மிக முக்கிய நோக்கம் இந்தியாவுக்காக தடுப்பூசிகளை வாங்குவது, அது சாத்தியமாகுமா? இந்தியா தொடர்ந்து கோவிட் 19, பெருந்தொற்றால் … Continue reading மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !
இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்
ரானா அய்யூப்தமிழில்: கை. அறிவழகன்டாக்டர். ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை … Continue reading இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்
கல்பாக்கத்தில் வேலை!மும்பையில் தேர்வு மையமா? மத்திய அரசின் தொடர் பாரபட்சம் குறித்து சு.வெங்கடேசன் கேள்வி
கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால் சென்னையில் இன்னொரு மையத்தை அறிவிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (சி.பி.எம்) பிரதமருக்கும், அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்கிற்கும் கடிதங்களை எழுதியுள்ளார். அதில், "பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு சுழற்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கை எண் 1/2020 ல் Stipendiary Trainees Categories I, II & Category … Continue reading கல்பாக்கத்தில் வேலை!மும்பையில் தேர்வு மையமா? மத்திய அரசின் தொடர் பாரபட்சம் குறித்து சு.வெங்கடேசன் கேள்வி
கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்
க. கனகராஜ் முன்பொரு முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி அவர்கள் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். பொதுமக்களும், கேரளத்தினரும், பல அறிவு ஜீவிகளும் இதற்காக மோடியை துவைத்து, கிழித்து வறுத்துப் போட்டனர்.மனித வளக் குறியீட்டில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள ஒரே மாநிலம் ‘கேரளம்’ மட்டும் தான். அத்தகைய மாநிலத்தை வாக்குகளை அபகரிப்பதற்காக ‘சோமாலியா’ என்று கோமாளித்தனமாக சித்தரித்து கிண்டலுக்கு உள்ளானார்.தற்போது, சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஏன் உணவுப் பொருட்களை … Continue reading கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்
இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?
திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள் உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன. ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை … Continue reading இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?
சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!
சந்திரமோகன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், "1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும், 2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும், 3) எதிர்காலத்தில் … Continue reading சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!
பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!
கை. அறிவழகன் 1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து ஷூட்டிங்ல கண்ணும் கருத்துமா இருந்தீங்கன்னு ஒரு பாழாப் போன இந்திய தேச விரோதி உங்க மேலே அபாண்டமான பழி சொல்றாங்கய்யா? மாலை 5 மணி வரைக்கும் ஷூட்டிங்ல இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறப்பக் கூட … Continue reading பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!
பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக்
வி.களத்தூர் எம்.பாரூக் இந்திய ரிசர்வ் வங்கி 29.08.2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் '2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி ரூ. 15.44 இலட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ. 15.31 இலட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது' என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு திட்டம் முழு தோல்வியை சந்தித்திருப்பது தெளிவாக தெரிகிறது. ரூ. 13,000 கோடி மட்டுமே இன்னும் திரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Continue reading பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக்
ஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு!
கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக 180கி.மீ. தூரத்தை ஐந்து நாட்கள் நடந்து மாநில தலைநகரில் போராட்டம் நடத்தினர். அதிகமாக விவசாய தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான மகாராட்டிரத்தை ஆளும் பாஜகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் தங்களுடைய துயரங்களை துடைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால், அந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மூலம் அவர்கள் போராடினார்கள். வயல்களில் ஓயாத பணிகளால், நீர் பாயாத நெல்வயலைப் போல பிளந்து வெடித்த … Continue reading ஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு!
ஓட்டுநர் இருக்கைக்குகூட வழியில்லை…இதில் புல்லட் ரயில் பெருமைகள் வேறு!
ஜம்முவிலிருந்து ஹரா செல்லும் ரயிலில் ஓட்டுநர் இருக்கையில் பழுதடைந்து செங்கல்லை இருக்கையாக பயன்படுத்தும் படங்களை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்திருக்கிறார் சஞ்சீவ் பட் என்கிற ஐபிஎஸ் அதிகாரி. மத்திய ஆளும் அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து கடும் விமர்சனங்களை எழுதிவருகிறார் சஞ்சீவ் பட். ஓட்டுநர் இருக்கையைக்கூட சரிசெய்து தராத ரயில்வே நிர்வாகம், புல்லட் ரயில் குறித்து பேசிக்கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் அவர் விமர்சித்திருக்கிறார். https://twitter.com/sanjivbhatt/status/1003950158852206593
எண்ணெய் சுத்திகரிப்பு குறித்த இந்தியா சவுதி அரேபியா ஒப்பந்தம்: அரசில்- பொருளாதார பலன்கள் என்ன?
எப்போதும் துயரமான சம்பவங்களையே சமூக ஊடகங்களில் படிக்க வேண்டியிருக்கிறது என்று நொந்து கொள்பவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து படித்து சந்தோஷப்படலாம்.
கழிப்பறையை எட்டிப் பார்த்தபோது அம்பலமானது மோடியின் ‘மகள்களை காப்போம்’ முழக்கம்
தொலைகாட்சி கேமராக்கள் முன்னால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பழங்குடியின பள்ளி மாணவிகள் ராக்கி கட்டிய உடனேயே, அவர்களில் சிலர் கழிப்பறைக்குச் சென்றபோது, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்; அவர்களை மிரட்டி பாலியல்ரீதியாக தாக்கியிருக்கிறார்கள்.
வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!
வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அட்டவணை குறைந்துள்ளதாக டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளதே காரணம் என செய்தி தெரிவிக்கிறது. ஜனவரி-மார்ச் மாதத்துக்கான பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட 1 சதவீதம் குறைவு. பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பார்த்த அளவு 7.1 … Continue reading வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!
“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்
மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் தை முதல் நாளை நீக்கிவிட்டு, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாக அறிவித்திருப்பது மன்னிக்க முடியாத அநீதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்த அவரின் இன்றைய அறிக்கை: இந்தியா என்கின்ற நாடு, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறு நாகரிகங்கள் கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பாக இந்திய நாடு திகழ்கின்றது. இதில் எந்தத் துறையில் ஒரு ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும், … Continue reading தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்
பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்
பொங்கல் தினத்தை விருப்பவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்ததை பொதுவிடுமுறையாக மீண்டும் மாற்றுமாறு மத்திய அரசுக்கு சிபிஎம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். சிபிஎம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன், இது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திரசிங்குக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகத்திற்கு மிக முக்கியமான பண்டிகை,பொங்கல். மத்திய அரசின் 2017ம் ஆண்டிற்கான விடுமுறைகள் தினப் பட்டியலில் ஜனவரி 14 பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை. … Continue reading பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்
மிச்சம் இருக்கின்ற விகாஷ் புருஷின் இரண்டரை வருட ராஜ்ய பரிபாலனத்தில்…
அகமது இக்பால் *ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த மதசகிப்பு, அமைதி எல்லாவற்றையும் மொத்தமாக கொலை செய்தாயிற்று; *அடிப்படை உரிமையான தனிமனிதனின் உணவுத்தேர்வையும் கூட பிரச்னைக்குரிய ஒன்றாக்கி கொலை பாதகம் வரை சென்றாயிற்று; *விகாஷ்புருஷின் சொந்த மாநிலத்திலேயே தலித்துக்களின் சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார நிலைமையின் லட்சணம் என்ன என்பதை உனா நிகழ்வும் தொடர்ந்த மாபெரும் எழுச்சி யாத்திரையும் அம்பலமாக்கின *‘ஒவ்வொருவரின் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் ரூபாய் ஏறும் நன்னாளை எதிர்பாருங்கள்’ என்ற விகாஷ்புருஷின் வாக்கு வெறும் பச்சைப்பொய் என … Continue reading மிச்சம் இருக்கின்ற விகாஷ் புருஷின் இரண்டரை வருட ராஜ்ய பரிபாலனத்தில்…
ரிலையன்ஸ் ஜியோ ‘மாடலாக’ பிரதமர் நரேந்திர மோடி: எந்த பிரதமரும் செய்யாத சாதனை!
தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை திட்டத்துக்கு மாடலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வைத்து வெளியான விளம்பரம் பத்திரிகைகளில் வந்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் டெல்லி, குர்ஹான் உள்ளிட்ட நான்கு பதிப்புகளின் முதல் பக்கத்தில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமரின் படங்கள் அரசு சார்ந்த திட்டங்களின் விளம்பரங்களில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ரிலையன்ஸ் தன்னுடைய வியாபார விஸ்தரிப்புகளுக்காக (தன் … Continue reading ரிலையன்ஸ் ஜியோ ‘மாடலாக’ பிரதமர் நரேந்திர மோடி: எந்த பிரதமரும் செய்யாத சாதனை!
மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்
மனிதர்கள் தங்களுடைய அழுக்குகளை மூழ்கி தொலைக்கும் கங்கை நதியில் வாழும் டால்ஃபின்கள் அந்த அழுக்குகளால் (மாசுபடுதலால்) பார்வையிழப்பை சந்தித்துக்கொண்டிருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒப்புதல் அளித்துள்ளார். புதன்கிழமை இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கங்கை நதி மாசுபடுவதால், அந்த நதி நீரில் வாழும் அறிய வகை டால்ஃபின்கள் அழிந்துவருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து பின்னர் விளக்க அறிக்கை வெளியிட்ட நீர் வளத்துறை அமைச்சகம், அமைச்சர் சொன்னது உண்மை என்றாலும், அது … Continue reading மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்
அரியானா சட்டமன்றத்தில் தருண் சாகர்: இங்கே நிர்வாணம் மட்டும் பிரச்சினையல்ல!
மோசமான ஆளுகை, ஆர்எஸ்எஸ்ஸின் சாதிவெறி - மதவெறி நிகழ்ச்சிநிரல் திட்டமிட்ட விதத்தில் முன்னகர்த்தப்படுவது, பிற்போக்கு ஆணாதிக்க மனோபாவம் ஆகியவற்றால், எம்எல் கத்தார் தலைமையிலான அரியானா பாஜக அரசாங்கம், ஏற்கனவே நம்பகத்தன்மை இழந்திருக்கிறது; இப்போது, இந்திய அரசின் அரசியல் சாசன அடிப்படையின் மய்ய கோட்பாடான, மதத்தை அரசியலில் இருந்து பிரித்து நிறுத்துவது என்ற மதச்சார்பின்மை கோட்பாட்டை வெளிப்படையாக மீறியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று, ஜைன துறவி தருண் சாகரை சட்டமன்றத்தில் பேச அழைத்தது. தொழில்நுட்பரீதியாகச் சொல்வதென்றால், தருண் சாகர் … Continue reading அரியானா சட்டமன்றத்தில் தருண் சாகர்: இங்கே நிர்வாணம் மட்டும் பிரச்சினையல்ல!
வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சுதந்திரத்துக்கான போராட்டம் 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து பிரிட்டீஷாரை நாம் தூக்கி எறிந்தோம். நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பண்டிட் ஜவஹர்லால் நேரு, பகத் சிங் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிடப்பட்டனர். அவர்களுக்காக நாம் வணக்கம் செலுத்த வேண்டும்” என்று பேசினார். நேருவும் பட்டேலும் … Continue reading வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்
உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்தவர் … Continue reading ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்
உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…
அன்புசெல்வம் உனா தலித் எழுச்சியை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தலித் ஆதரவு அலை உருவாகியுள்ளது. குஜராத்தில் 30 -க்கும் மேற்பட்ட தலித் இயக்கங்களுடன் தொடங்கியிருக்கிற இவ்வெழுச்சிக்கு கட்சி, இயக்கம், அமைப்பு என பாராமல் ஆதரவு வலுத்து வருகிறது. வெளி நாடுகளில் உள்ள தலித்துகளும் தங்களின் ஆதரவை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். நீலக்கொடியுடன், சிவப்பும் இணைந்து ஜெய்பீம் முழக்கத்துடன் லால்சலாம் சொல்லி வருகிறது. சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆதரவளிப்பதைப்போல தமிழ்நாட்டில் தலித் … Continue reading உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…
சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?
அ. மார்க்ஸ் அப்பட்டமான ஒரு இந்துத்துவவாதியும், ஒரு போலி அறிவுஜீவியுமாகிய ராஜிவ் மல்ஹோத்ராவின் ஏற்பாட்டில் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் “சுதேசி இன்டாலஜி” கருத்தரங்கம் வெளியார் அனுமதியின்றி மூடிய கதவுகளுக்குள் ஐஐடி நிர்வாகத்தின் பூரண ஒத்துழைப்புகளுடனும் விதிமீறல்களுடனும் நடந்து கொண்டுள்ளது. உலகளவில் மதிக்கப்படும் இந்தியவியல் அறிஞரான ஷெல்டன் பொல்லாக்கைக் குறி வைத்து இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிற செய்தி இப்போது ஊடகங்களில் பேசப்படுகிறது.. ராஜிவ் மல்ஹோத்ரா ஏற்கனவே ஷெல்டன் பொல்லாக்கை “விமர்சித்து” எழுதிய Battle for … Continue reading சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?
“ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!
“ஸ்பிண்ட்ரெல்லா” அதாவது நூல் நூற்கும் தேவதை என தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப். ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இந்நாளிதழ், ஜேஎன்யூ மாணவர் பிரச்சினை தீவிரமடைந்தபோது ‘ஆண்டிநேஷனல்’ என தலைப்பிட்டு செய்திவெளியிட்டது. முன்னதைப் போலவே ஆதரவும் எதிர்ப்புமாக டெலிகிராப்பின் முகப்புச் செய்தி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. டெலிகிராப் நாளிதழைப் போல ட்விட்டர்வாசிகள் ஸ்மிருதி … Continue reading “ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!
“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி
By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி
காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி: அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?
ஷாஜஹான் R அமெரிக்காவில் கைதட்டல் வாங்கிய மோடி குறித்து பக்தர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பேசுவது ஒன்றாகவும் உள்நாட்டில் செயல்கள் வேறாகவும் இருப்பதை தெள்ளத்தெளிவாக எழுதினால், அதில் உள்ள விஷயங்களில் ஒன்றுக்கும்கூட பதில் தராமல் எப்போதும் போல தேய்ந்துபோன ஒரே வாதத்தை முன்வைக்கிறார்கள் — பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆயிற்று. 60 ஆண்டுகளாக சீர்கெட்ட இந்தியாவை இப்போதுதான் சீர்செய்து கொண்டிருக்கிறார். பக்தர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. போகட்டும். சிட்டிசன் டாட் இன் தளத்தில் ரபீர் … Continue reading காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி: அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?
“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நமது நாட்டில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு விவசாயபொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தியிலும் வீழ்ச்சியை சந்தித்தது. பொருள் உற்பத்தி குறைந்தது. அதேநேரம் தாராளமயம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து வருகிறது என்று பெருமையுடன் … Continue reading “உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்
மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
சித்தார்த் வரதராஜன் பிப்ரவரி 28, 2002 அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பு, மிக மோசமான இந்த நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஒரு தலைவராக மக்களின் பலமான உணர்வுகளை அவர் தூண்டுகிறார். பலர் அவர் தவறு செய்யமாட்டார் என நினைக்கிறார்கள். சிலர் அவரால் நல்லதை செய்யவே முடியாது என நம்புகிறார்கள். பிப்ரவரி 28, 2002 கொலைகள், அவர் விரும்பியதால் நிகழ்ந்தனவா? … Continue reading மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
“உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”
குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர். இவர் தான் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்ட குண்டர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பல அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார். அதில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியுடனும் பேசியதாக இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரூபா பென் தெரிவித்துள்ளார். தனது மகனை கொலை தாக்குதலுக்கு பலிகொடுத்த ரூபா பென், … Continue reading “உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”
குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்
தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அயூப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி கண்டு, ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு: தி ஒயர் இணைய … Continue reading குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்
இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்
சேம நல அரசு என்பதை மெல்ல மெல்ல அழித்து அந்நிய மூலதனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றதாக அரசாங்கத்தினை மாற்றக் கூடிய ஏற்பாட்டினை செய்து வருகிறது மோடி அரசு. உலக நிதி மூலதனத்தை வேண்டுமென்றே தாஜா செய்யும் மத்திய அரசாங்கத்தின் இந்த நோக்கத்தின் பின்னணியில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமில்லை. மாறாக பாரதீய ஜனதா கட்சியின் மிக ஆபத்தான பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கமே உள்ளது என்கிறார் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் … Continue reading இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்?
மலேகான் குண்டுவெடிப்பு! கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத் தப்பட்டது. அதேபோல குஜராத் மாநிலம் மடோசா என்ற இடத்தில் அதே நாளில் ஒரு குண்டு வெடித்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்துத்துவ அமைப்புகளுக்குத் தொடர்பு: 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் … Continue reading மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்?
மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!
ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி … Continue reading மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!