பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு

சென்னை காட்டாங்கொளத்தூரில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஹோட்டல் மேனேஜ் மென்ட் என பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், தலித்துகளுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர்பஞ்சமி நிலத்தையும், அதேபோன்று பொத்தேரி ஏரி, பாசன கால்வாயையும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக பொத்தேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், எஸ்.ஆர்.எம். … Continue reading பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு

ரூ. 70 லட்சம் மோசடி: பாரிவேந்தர் மீது மேலும் ஒரு புகார்!

மருத்துவ படிப்பிற்கு இடம் வழங்கும் விவகாரத்தில் பண மோசடி, தயாரிப்பாளர் மதன் காணாமல் போனது உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்புடையதாக, எஸ் ஆர் எம் கல்விக் குழும நிறுவனர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் கடந்த 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜாமின் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாரிவேந்தர் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், … Continue reading ரூ. 70 லட்சம் மோசடி: பாரிவேந்தர் மீது மேலும் ஒரு புகார்!

ரிலையன்ஸ் ஜியோ ‘மாடலாக’ பிரதமர் நரேந்திர மோடி: எந்த பிரதமரும் செய்யாத சாதனை!

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை திட்டத்துக்கு மாடலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வைத்து வெளியான விளம்பரம் பத்திரிகைகளில் வந்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் டெல்லி, குர்ஹான் உள்ளிட்ட நான்கு பதிப்புகளின் முதல் பக்கத்தில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமரின் படங்கள் அரசு சார்ந்த திட்டங்களின் விளம்பரங்களில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ரிலையன்ஸ் தன்னுடைய வியாபார விஸ்தரிப்புகளுக்காக (தன் … Continue reading ரிலையன்ஸ் ஜியோ ‘மாடலாக’ பிரதமர் நரேந்திர மோடி: எந்த பிரதமரும் செய்யாத சாதனை!

சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி?

வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்தில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தாண்டவராயபுரத்தில் பிறந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து, 1969-ம் ஆண்டு சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப் பள்ளியை தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது? என கேள்வி … Continue reading சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி?

“14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்

ஈஷா யோகா மையத்தில், குழந்தைகளும், பெண்களும் வலுக்கட்டாயமாக துறவியாக்கப்படுவதாக அந்த மையத்தின் முன்னாள் ஊழியர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.  மகள்களை பிரிந்து வாடும் பேராசிரியர் காமராஜ் போன்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இவற்றை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “நான் ஈஷா மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். எங்கள் ஊரில் மொத்தம் ரூ. 15 லட்சம் மரம் நடுவதற்கென்று வசூலித்து கொடுத்தேன். ஆனால், அந்த அளவுக்கு மரங்களை நடவே இல்லை. ஊர் மக்கள் கேட்க ஆரம்பித்தனர். ஈஷா மையத்தின் நடவடிக்கைகள் … Continue reading “14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்

யோகா செய்யப்போன மகள்களை போதைக்கு அடிமையாக்கி, சாமியாராக்கிவிட்டார் ஜக்கி வாசுதேவ்: பெற்றோர் புகார்

ஈஷா மையத்திலிருந்து தனது இரு மகள்களை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார். தீக்கதிரில் வந்த செய்தியின்படி சத்தியஜோதி தெரிவித்தவை: எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் … Continue reading யோகா செய்யப்போன மகள்களை போதைக்கு அடிமையாக்கி, சாமியாராக்கிவிட்டார் ஜக்கி வாசுதேவ்: பெற்றோர் புகார்

வருமான வரி ஏய்ப்புப் புகார்: மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் ரூ. 85 கோடி பறிமுதல்

வருமானவரி ஏய்ப்புப் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போருரில், மகாத்மா காந்தி மருத்துவக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், புதுச்சேரியில் அதே‌ குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரின்‌ வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 43 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்குழுமத்திற்கு சொந்தமான மேலும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை … Continue reading வருமான வரி ஏய்ப்புப் புகார்: மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் ரூ. 85 கோடி பறிமுதல்

அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!

By Meetu Jain with Ushinor Majumdar in Delhi “இந்திய குடியரசு, தற்போது விற்பனைக்கு” நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை நவம்பர் 2010ல்வெளியிட்டபோது அவுட்லுக் இந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியது. அரசியல்வாதி-கார்ப்பொரேட்டுகள் - ஊடகங்களுக்கிடையான பிணைப்பை அந்த 140 உரையாடல்கள்  வெளிக்கொண்டு வந்தன. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஜீவாதாரமான விஷயங்களையெல்லாம் இந்த விவகாரம் தின்றது.  அது நிகழ்ந்து ஆறு வருடங்களுக்குப் பின் வெளிவந்திருக்கும் ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி … Continue reading ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!

ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் கணபதி என்பவர், தனது மகன் 18 வயது மகன் ராஜேந்திர பிரசாத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்துள்ளார். 300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன்  என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதனிடையே டைம்ஸ் ஆப் … Continue reading ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

மவுலிவாக்கத்தில் விதிமீறி கட்டப்பட்ட மற்றொரு கட்டடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜுன் 28ம் தேதி சென்னை அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.  இந்நிலையில் இந்தக் கட்டடத்தின் அருகே ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு கட்டடிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கட்டடமும் விதிமீறி கட்டப்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

திமுக - அதிமுக ஆட்சிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தாது மணலில் உள்ள தோரியத்தின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மெகா கொள்ளைக்கு துணை நின்ற திமுகவும் அதிமுகவும்,இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாது; ஆனால் அதற்கு மாறாக திமுக - அதிமுக தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளித்திருப்பது மக்களை ஏமாற்றவே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கனிமவள … Continue reading தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

“யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை கிரானைட் கொள்ளை பற்றி விவாதம் நடந்தது. கார்த்திகைச் செல்வன் நெறியாள்கை செய்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கண்ணதாசனும் அதிமுக சார்பில் தூத்துக்குடி செல்வமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரா. சிந்தனும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பேசிய தூத்துக்குடி செல்வம் சகாயம் விளம்பரம் தேட சுடுகாட்டில் படுத்தார் என்று பேசினார். இது குறித்து நெறியாளர் … Continue reading “யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

அம்மா மிக்ஸி; அம்மா ஃபேன்; அம்மா கிரைண்டர்: மேட் இன் சீனா!

தமிழக அரசு தமிழக மக்களுக்கு விலையில்லா பொருள்கள் பலவழங்கியுள்ளது. மடிக்கணினிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள், தங்க நாணயங்கள் மற்றும் பள்ளிக்கூட பைகள் என்று பல பொருள்களை அது வழங்கியுள்ளது. இவற்றிற்காக அரசாங்கம் சுமார் 21 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் மூலமாக வாங்கப்பட்டிருக்கலாமோ என்று என்டிடிவி தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த விலையில்லா பொருள்கள் எப்படி அரசால் வாங்கப்பட்டன என்று ஆய்வு செய்த அத்தொலைக்காட்சி … Continue reading அம்மா மிக்ஸி; அம்மா ஃபேன்; அம்மா கிரைண்டர்: மேட் இன் சீனா!

இந்திய மின்சாரத் துறை தனியார் மயமாகி ஊழல் மயமான கதை: ஊழல் மின்சாரம் ஆவணப்படத்தை பாருங்கள்

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப் படம் - ஊழல் மின்சாரம் ஆய்வு , எழுத்து ,வர்ணனை-சா.காந்தி வடிவம் இயக்கம்-சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன் ஒளிப்பதிவு-எம்.ஆர் .சரவணக்குமார் படத்தொகுப்பு-கா.கார்த்திக் தயாரிப்பு- தமிழ் நாடு … Continue reading இந்திய மின்சாரத் துறை தனியார் மயமாகி ஊழல் மயமான கதை: ஊழல் மின்சாரம் ஆவணப்படத்தை பாருங்கள்

கிரானைட் ஊழல் மிகப்பெரிய கூட்டுக்கொள்ளை : சகாயம் குழு விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் (23.4.2016) சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை: கிரானைட் கனிம வளச் சுரண்டல், தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகளிளேயே மிகப்பெரியதாகும். மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் குவாரிகள், சட்டவிரோத சுரண்டல் குறித்த விசாரித்த சிறப்பு விசாரணை அதிகாரி திரு. உ.சகாயம் அறிக்கை நீதிமன்றத்திடம் உள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் சில தகவல்கள் - மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. மிகப்பெரும் … Continue reading கிரானைட் ஊழல் மிகப்பெரிய கூட்டுக்கொள்ளை : சகாயம் குழு விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?

அ. மார்க்ஸ் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது," "கோதாவரி - கிருஷ்ணா பேசினில் ஏராளமாக எரிவாயு இருப்பதைக் கண்டு பிடித்துள்ளோம். இன்னும் இரண்டாண்டுகளில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கி விடுவோம்" என அதிரடியாக அறிவித்து 11 ஆண்டுகள் ஆகியும் வாயு மட்டுமல்ல ஒரு ஏப்பம் கூட வெளிவரவில்லை. ஆனால் பொதுத்துறை வங்கிகளிலிருந்து இதுவரை 19,726 கோடி ரூபாய் அந்தத் திட்டத்திற்குக் கடன் பெறப்பட்டுள்ளது என்கிற உண்மையை சென்ற மார்ச் 31 அன்று CAG தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தியது … Continue reading மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?

”ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் மீண்டும் ரத்து!

திருமுருகன் காந்தி ஆவணப்பட திரையிடலை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லையென்பதை நிறுவினோம். தேர்தல் ஆணையமும் தனக்கு அதிகாரம் இல்லையெனும் எங்களின் வாதத்தினை ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தினை தடை செய்ய வேறு வழியில்லாத நிலையில், தமிழக அரசு, ஆவணப்பட திரையிடல் நடைபெறும் அரங்கின் உரிமையாளருக்கு அதிகப்படியான அழுத்தத்தினைக் கொடுத்து அரங்கத்தில் நிகழ்வு நடத்தும் உரிமையை இறுதி நேரத்தில் ரத்து செய்ய வைத்திருக்கிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக அரங்க உரிமையாளர் … Continue reading ”ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் மீண்டும் ரத்து!

தமிழக மின்துறையில் ரூ. 96 ஆயிரம் கோடி கடன் எப்படி வந்தது? நாளை “ஊழல் மின்சாரம்” ஆவணப்படத்தில்…

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார்,  நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய படம் இது. "ஊழல் மின்சாரம்"(44 நிமிடங்கள்) ஆவணப்படம் வெளியீடு நாளை (10.04.16) ஞாயிறு மாலை 5 மணிக்கு செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் சென்னை ஆய்வு, எழுத்து, … Continue reading தமிழக மின்துறையில் ரூ. 96 ஆயிரம் கோடி கடன் எப்படி வந்தது? நாளை “ஊழல் மின்சாரம்” ஆவணப்படத்தில்…

“ஊழல் மின்சாரம்” ஆவணப் படத் தடை: நடந்ததும் இனி நடக்கப் போவதும்!

திருமுருகன் காந்தி கடந்த பதினைந்து நாட்களாக, “ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிடாமல் தேர்தல் கமிசனும், காவல்துறையும் தொடர்ந்து தடுத்து வருவதை பொதுவெளியில் பதிவு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் நடந்த விவரங்களை பதிவு செய்கிறோம். கடந்த 15-20 வருடங்களில் நடந்த மின்சாரம் குறித்தான தனியார்மயம் அதன் கொள்ளை லாபம் குறித்தான ஆவணப்படத்தினை கடந்த ஏப்ரல் 2ஆம் … Continue reading “ஊழல் மின்சாரம்” ஆவணப் படத் தடை: நடந்ததும் இனி நடக்கப் போவதும்!

”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து

பங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமான மோதிலால் ஆஸ்வாலின் நிறுவனர் மோதிலால் ஆஸ்வால், கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். நாட்டில் உள்ள பாதி பொறியாளர்கள் இடஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் கட்டிய கட்டடம் இடிந்துவிழத்தான் செய்யும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்று சனிக்கிழமை காலை ட்விட்டியிருந்தார். இந்த ட்விட்டுக்கும் எதிர்ப்பு வலுக்கவே, சில மணி நேரங்களில் அது ஃபார்வேர்டு செய்யப்பட்ட குறுஞ்செய்தி, எனக் கூறி அதை நீக்கிவிட்டார். https://twitter.com/MrMotilalOswal/status/716133044181053441Continue reading ”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து

ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

திருமுருகன் காந்தி  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திலோ, அல்லது அரசின் ஒப்பந்த தொழிலையோ, அரசியல்வாதியாகவோ மாறி மக்கள் விரோத நகர்வுகளை செய்வதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும், தங்களது பணியை நிறுத்தாமல் அரசு நிறுவனங்கள் மக்கள் விரோத அரசியலை செய்வதை தடுக்க சில முன்னாள் அரசு பொறியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. முல்லைப்பெரியாறு அணைக்காக்கும் ஆவணப்படத்தினை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செய்தார்கள். இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் … Continue reading ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட். ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால் முதல்வருடம் 100+10 = … Continue reading PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

#வீடியோ: தஞ்சாவூரில் கடன் தவணை கட்டத் தவறியதால் விவசாயியை அடித்து உதைத்த போலீஸ்

தஞ்சாவூர் சோழன்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் தனியார் வங்கி(வங்கியின் பெயரை வழக்கம்போல ஊடகங்கள் தணிக்கை செய்துள்ளன. அது எந்த வங்கி என அறிந்து விரைவில் பதிவை மேம்படுத்துகிறோம்)யில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருக்கிறார். கடந்த இரண்டு மாதமாக தவணைத் தொகைகட்டாததால் வங்கி, உயர்நீதிமன்றத்தில் வண்டியை கைப்பற்ற உத்தரவு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் டிராக்டரை பறிமுதல் செய்ய பாலனின் நிலத்துக்குச் சென்றுள்ளனர். அங்கே பாலன், அறுவடை முடிந்ததும் நான்கு நாட்களில் டிராக்டரை … Continue reading #வீடியோ: தஞ்சாவூரில் கடன் தவணை கட்டத் தவறியதால் விவசாயியை அடித்து உதைத்த போலீஸ்

ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் முதலீடு: நடவடிக்கை கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பின்னர், சொத்துக்களை குவித்துள்ளார் என்றும் இதில் வந்த முறைகேடான பணத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும், தி பயோனீர் ஆங்கில நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதுதொடர்பாக “தி பயோனியர்” என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான … Continue reading ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் முதலீடு: நடவடிக்கை கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

  2007-ஆம் ஆண்டு சென்னை தி. நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மருத்துவர் பழனி ரவிச்சந்திரன் அப்பாவிகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டார். அவுட் லுக் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் 471 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் ரூ. 100 கோடிக்கு மேல் இதன் மூலம் பணம் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜா மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.  சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). தி.நகரில் … Continue reading உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு’ துணைவேந்தர் தெரிவுக் குழு உறுப்பினர் மு.ராமசாமி குற்றச்சாட்டு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுக் குழுவிலிருந்து இருந்து பேராசிரியர் மு.இராமசாமி விலகியுள்ளார். மன சாட்சியின்படி வேலையைச் செய்ய முடியவில்லை என்று அவர் தன் விலகலுக்கான காரணத்தை கூறியுள்ளார். தன்னுடைய விலகல் கடிதத்தில் ‘பல்கலைக்கழகத்தினால் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையும், பட்டியலிடப்பட்டு தேர்வுக்கு வந்த மனுக்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மனுக்கள் பெறப்படுவதற்கான காலம் முடிந்த பின்னரும் மனுக்கள் பெறப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டியிருக்கிறார் அவர். நிரப்பப் படாமல் உள்ள துணைவேந்தர்  பதவிகளை நிரப்புவதில் … Continue reading மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு’ துணைவேந்தர் தெரிவுக் குழு உறுப்பினர் மு.ராமசாமி குற்றச்சாட்டு