பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!

கை. அறிவழகன் 1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து ஷூட்டிங்ல கண்ணும் கருத்துமா இருந்தீங்கன்னு ஒரு பாழாப் போன இந்திய தேச விரோதி உங்க மேலே அபாண்டமான பழி சொல்றாங்கய்யா? மாலை 5 மணி வரைக்கும் ஷூட்டிங்ல இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறப்பக் கூட … Continue reading பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!

“எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி”

ஒரு மாடு சார்ந்த பண்பாடு தமிழர்களாய் இணைத்தது. அதே மாடு சார்ந்த உணவுப் பழக்கப் பண்பாடு தமிழர்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி உருவாக்கப்படுகிறது.

பிரதமரின் கருணைமிக்க வார்த்தைகளை கேட்டபடியே, பசு காவலர்கள் ஒருவரை அடித்துக்கொன்றனர்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து மாட்டை முன்னிறுத்தி, ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் கும்பல் வன்முறை ஏவிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வன்முறைகளுக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள், தலித்துகளுமே. நாடு முழுக்கவும் இத்தகைய பசு ரட்சகர்களின் கொலைகளுக்கும் கும்பல் வன்முறைகளுக்கும் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி மவுனம் சாதித்து வந்தார்.  சர்வதேச ஊடகங்களின் கவனம் இந்தப் பிரச்னையில் திரும்ப, குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய கருணைமிக்க வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். … Continue reading பிரதமரின் கருணைமிக்க வார்த்தைகளை கேட்டபடியே, பசு காவலர்கள் ஒருவரை அடித்துக்கொன்றனர்!

ஐஐடி மாணவர் சூரஜுக்கு சீதாராம் யெச்சூரி ஆறுதல்

சென்னை ஐஐடியில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய பாஜக கூட்டணி அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர்கள், சூரஜ் என்ற மாணவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஆராய்ச்சி மாணவரான … Continue reading ஐஐடி மாணவர் சூரஜுக்கு சீதாராம் யெச்சூரி ஆறுதல்

ஐஐடியில் தாக்குதல் நடத்திய மாணவரை சந்தித்த பாஜக தலைவர்

ஐஐடியில் மாணவர் சூரஜை தாக்கிய மாணவர் மணீஷை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்திருக்கிறார் பாஜகவின் இளைஞரணி தலைவரான வினோஜ் ப செல்வம். மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கண்டித்து சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்து நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் ஆய்வு மாணவர் சூரஜ். அவரை சக மாணவர் மணீஷ் மாட்டிறைச்சி சாப்பிட்டு சைவ மெஸ்ஸுக்கு வந்தார் என்ற காரணத்தால் பலமாக தாக்கினார். சூரஜை … Continue reading ஐஐடியில் தாக்குதல் நடத்திய மாணவரை சந்தித்த பாஜக தலைவர்

மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி

மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று என்பதற்குச் சங்க காலப் பாடல் ஒன்று

உனக்கு நான் வழங்குவது – ஆஸாங் வாங்கடெ கவிதை

இரண்டு வேளைச் சோற்றுக்காக உனது மலத்தை அள்ளுகிறேன் அதைச் செய்யாவிட்டால் இந்தக் குடியரசில் நான் பட்டினியுடன் உறங்க வேண்டும் சோப்பும் ஷாம்பூவும் உனது அறியாமையை வளர்க்கின்றன

மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட பீஃப் பார்டி: பாஜக தலைவர் ஏற்பாடு

மத்தியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அரிசி பீருடன் பீஃப் பார்டி கொடுக்கப்படும் என மேகாலயா மாநிலத்தின் கரோ மாவட்ட பாஜக தலைவர் பச்சு சம்பூகோங் மராக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். https://www.facebook.com/bachumarak/posts/1347659721992713 மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதற்கு தடை கொண்டுவந்த நிலையில் மேகாலயாவின் பாஜக தலைவர் ஒருவரே மாட்டிறைச்சி விருந்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி தவிர்க்க முடியாத … Continue reading மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட பீஃப் பார்டி: பாஜக தலைவர் ஏற்பாடு

‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்

தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை

ஆண் மயில் உறவு கொள்வதில்லை; அதனால்தான் அது தேசிய பறவையானது!: ராஜஸ்தான் நீதிபதி

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என இன்று காலை சொன்னவர்.  அந்த பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு ‘அறிய’ தகவல் ஒன்றை சொல்லியிருக்கிறார். அதாவது ஆண் மயில் உறவு கொள்ளாதாம்; ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதால்தான் பெண் மயில் கர்ப்பமாகிறதாம். ஆண் மயிலின் இந்தப் புனிதத் தன்மையால்தான் அது தேசிய பறவையாக உள்ளதாம். அதனால்தான் கடவுள் கிருஷ்ணர் தன்னுடைய தலையில் மயில் இறகை சொருகி இருந்தாராம். மேலும் … Continue reading ஆண் மயில் உறவு கொள்வதில்லை; அதனால்தான் அது தேசிய பறவையானது!: ராஜஸ்தான் நீதிபதி

ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பெண்ணின் கையை முறிக்கும் பெண் போலீஸ்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாக மறுக்க, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கையை முறுக்கத் தொடங்கினார் பெண் காவலர் ஒருவர்.

ஐஐடியில் இரட்டைக்குவளை முறை: அசைவத்திற்கு தனி பாத்திரங்கள்; ஆராய்ச்சி மாணவர் பகீர் குற்றச்சாட்டு…

அசைவத்திற்கென்று தனி பாத்திரத்தைதான் ஒதுக்கி இருப்பார்கள் அந்த பாத்திரத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் தேசியம் கோமியத்தில் இருக்கிறது!

அவர்களின் தேசியம் உழைப்பில் இருக்கிறது. இங்கே கோமியத்தில் இருக்கிறது. விரைவில் அதையும் பாட்டிலாக சைனாக்காரனே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர், தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாகிருல்லாஹ் ஆகியோர் கூட்டறிக்கையை விடுத்துள்ளனர். மாநில பட்டியலில் இருக்கும் இப்பிரச்னையில் மத்திய … Continue reading மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

“உணவு அடிப்படை உரிமை”: மத்திய அரசின் மாட்டிறைச்சி உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு அண்மையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு தடை விதிக்குமாறு மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாபா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், ‘உணவைத் தெரிவு செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை; அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இந்த சட்டம் கடந்த 1960ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. எனவே, இந்த புதிய … Continue reading “உணவு அடிப்படை உரிமை”: மத்திய அரசின் மாட்டிறைச்சி உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

ஐஐடியில் மாட்டுக்கறி விருந்து ஏற்பாடு செய்த மாணவர் மீது காவி கும்பல் தாக்குதல்!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சி தடை விதிக்கும் அறிவிக்கையை எதிர்த்து சென்னை ஐஐடி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான முனைவர் பட்ட மாணவர் சூரஜை, மற்றொரு வலதுசாரி மாணவர் அமைப்பினைச் சேர்ந்த 6 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் … Continue reading ஐஐடியில் மாட்டுக்கறி விருந்து ஏற்பாடு செய்த மாணவர் மீது காவி கும்பல் தாக்குதல்!

எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

திராவிட மாடு ……………………………. மாட்டுக்கு கொம்பு சீவு வண்ணம் தடவு நம் திராவிட மாட்டுக்கு மாட்டை கட்டிய கயிறை தறி வரலாற்றின் பட்டிகளைத் திற திராவிட மாட்டை அவிழ்த்து விடு திராவிட மாடுகள் வயலில் ஆழ உழுபவை திராவிட மாடுகள் வாடிவாசலில் சீறிப் பாய்பவை திராவிட மாட்டுபால் சத்துக்கள் நிறைந்தவை திராவிட மாட்டுக்கறி மனதிற்கு இச்சை தருபவை மாட்டுத்திருடன் அதிகாரத்தின் மாறுவேடங்களில் வருகிறான் தந்திரமாக பட்டிக்குள் நுழைகிறான் நீ இப்போது திராவிட மாடுகளை அவிழ்த்து கையில் பிடித்துக்கொண்டு … Continue reading எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி!

தர்மபுரியில் சாதி வெறியாட்டத்தை எதற்காக இராமதாஸ் உருவாக்கினாரோ, அதே கொள்கைக்காகத்தான் இப்போது கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார்.

இது வெறும் மாட்டுக்கறி விசயம் மட்டுமல்ல….

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கில் ஒரு போர், அதாவது இரண்டாவது கார்கிலாக இருக்கலாம். தேவைப்பட்டால் புத்தர் மூன்றாம் முறையாக சிரிப்பார், பொக்ரான்-3 நடத்தப்படலாம்.

இந்தியாவிலிருந்து பிரிந்து ‘திராவிட நாடு’ உருவாக வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #dravidanadu

மாட்டிறைச்சி உண்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள மறைமுக தடைக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தென் இந்திய மக்கள் அதிகமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் அடுத்த நிலையாக, இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட மொழிகளை பேசும் மக்கள் வசிக்கும் மாநிலங்கள் இணைந்து ஒரு நாடாக உருவாக வேண்டும் என ‘சீரியஸாக’ மக்கள் ட்விட்டி வருகின்றனர். #dravidanadu என்ற ஹேஷ் டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த மூன்றாண்டுகால மோடி … Continue reading இந்தியாவிலிருந்து பிரிந்து ‘திராவிட நாடு’ உருவாக வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #dravidanadu

மாட்டிறைச்சி தடை; சிரியாவின் ஐ.எஸ்ஸுன் இந்தியாவின் ஆர்.எஸ். எஸ்ஸும்!

த. கலையரசன் பாஸிசமும், முதலாளித்துவமும் எவ்வாறு கூட்டிணைந்து வேலை செய்கின்றன என்பதற்கு, இந்தியாவில் மாட்டிறைச்சி தடை ஒரு சிறந்த உதாரணம். மதத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்கும் மோடி அரசின் நரித்தனமான திட்டங்களை, பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. உலகளவில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. அதை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு மாட்டிறைச்சி தடை உதவும் என எதிர்பார்க்கப் படுகின்றது. வெளிநாடுகளில், குறிப்பாக பணக்கார மேற்கத்திய நாடுகளில், இன்றைக்கும் மாட்டிறைச்சியின் விலை அதிகம். ஆகவே, இதனால் … Continue reading மாட்டிறைச்சி தடை; சிரியாவின் ஐ.எஸ்ஸுன் இந்தியாவின் ஆர்.எஸ். எஸ்ஸும்!

இந்துத்துவ பாசிசமும் மாட்டிறைச்சி தடை சட்டமும்

இதன் இலக்கு சமூகத்தை கலாச்சார ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் இந்துத்துப்படுத்துவதே!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு: சிபிஐ

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடுமுழுவதும் பசு, மாடு, காளை, எருது, கன்றுகள் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடைவிதித்தும், விவசாயப் பணிகளுக்கும், வளர்ப்புக்கும் கால்நடைகளை விற்பனை செய்ய கடுமையான நிபந்தனை விதித்தும் மோடியின் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் … Continue reading கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு: சிபிஐ

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா?: ஜுன் 1 கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடும் மத்திய அரசின் ஆணையை நடவடிக்கையைக் கண்டித்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசு, காளை, எருமை, ஒட்டகங்களை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்னும் மத்திய பி.ஜே.பி. அரசின் மனித உரிமை விரோத, அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை எதிர்த்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் … Continue reading மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா?: ஜுன் 1 கண்டன ஆர்ப்பாட்டம்

ஏழை விவசாயிகளின் உரிமையை பறிக்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம்

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுகவின் கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.  மத்திய அரசின் அறிவிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடையின் மூலமாக மதச் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாவற்றையும் மறுக்கும் விதத்தில் ஒரு “அறிவிக்கையை” மத்திய அரசே வெளியிடுவது … Continue reading ஏழை விவசாயிகளின் உரிமையை பறிக்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம்

மாடு, ஒட்டக இறைச்சிக்கு தடை விதிப்பது பண்பாட்டுக்கு எதிரான ஒடுக்குமுறையே..!

மத்திய சுற்றுச்சூழல் துறை கால்நடை விற்பனைக்குப் பல கெடுபிடிகளை விதித்துப் பிறப்பித்துள்ள அறிவிக்கை தொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் சனிக்கிழமையன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தித் திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பண்பாட்டுச் சர்வாதிகார நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாகவும், ஏற்கெனவே பாஜக ஆளும் சில மாநிலங்களில் உள்ள இறைச்சி உணவுப் பழக்கத்திற்கு எதிரான விதிகளின் விரிவாக்கமாகவும் நாடு முழுவதற்குமான அறிவிக்கை மூலம் கால்நடை விற்பனைக்கான கெடுபிடிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. … Continue reading மாடு, ஒட்டக இறைச்சிக்கு தடை விதிப்பது பண்பாட்டுக்கு எதிரான ஒடுக்குமுறையே..!

மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்கிற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் திராவிட இயக்க செயல்பாட்டாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தம்பி தமிழரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்து புராண-இதிகாசங்களில் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகள் குறித்து சுப.வீ பேசினார். நாராயணன் பசுவின் புனிதம் குறித்து விளக்கினார். மிருகவதை குறித்து கவலைப்படும் பாஜக அரசு, ஆடுகள், கோழிகள் … Continue reading மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை; சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்க மற்றும் வாங்க முடியும். இறைச்சிக்காக காளைகள், ஒட்டகங்கள், எருமைகள், பசுக்கள், இளம் காளைகள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றை விற்க முடியாது. எழுத்தாளர் மாலதி மைத்ரி: பசு, கன்று, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை … Continue reading இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை; சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு