ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை புகாரின் பின்னணி என்ன?

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படுவதாக பல காலமாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் ஐஐடி ஆய்வு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அதுகுறித்த புகாரை நீர்த்துப்போக வைக்க ஐஐடி சென்னை நிர்வாகம் முயன்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அண்மையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) ஐஐடி-மெட்ராஸைச் சேர்ந்த 30 வயது பெண் பிஎச்டி பட்டதாரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை செய்தியாளர் சந்திப்பில் முன்வைத்தது. … Continue reading ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை புகாரின் பின்னணி என்ன?

அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது! ஜூலியன் அசாஞ்சேவுடன் திருமணம் குறித்து ஸ்டெல்லா மோரீஸ்

புதன்கிழமை, விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் உயர் பாதுகாப்பு சிறையில் ஆறு விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பத்திரிகையாளர்கள் அல்லது புகைப்படக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க இராணுவம் செய்த தவறுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளரான் ஜூலியன் … Continue reading அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது! ஜூலியன் அசாஞ்சேவுடன் திருமணம் குறித்து ஸ்டெல்லா மோரீஸ்

நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாது கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட உமர் காலித்!

2020 டெல்லி கலவர வழக்கில் இன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித், கைவிலங்குகளுடன் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி காவல்துறை கைவிலங்குடன் ஆஜர்படுத்துவதற்கான மனுக்களை டெல்லி நீதிமன்றம் நிராகரித்திருந்தது. உமர்காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வரக்கூடாது எனவும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதைப் பொருட்படுத்தாது டெல்லி காவல்துறை உமர் காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளது. இந்த நிலையில், நீதிபதி அமிதாப் ராவத்தின் நீதிமன்ற அறையில் கைவிலங்குடன் உமர்காலி ஆஜர்படுத்தப்பட்டதாக … Continue reading நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாது கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட உமர் காலித்!

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது. மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு … Continue reading இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குக: பியூசிஎல் அறிக்கை

சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என பியூசிஎல் அறிக்கை விடுத்துள்ளது.   “மார்க்சிய - இலெனினியச் செயற்பாட்டாளர் பத்மா அவர்கள் 10 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு, திசம்பர் ஏழாம் நாள் பொடா சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்குத் திசம்பர் 10 ஆம் நாள் இதயநோய் தீவிரமான காரணத்தால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல், தண்டனைச் சிறைவாசிக்குரிய மருத்துவ … Continue reading சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குக: பியூசிஎல் அறிக்கை

வீட்டுப் பிரசவம் தனியுரிமையா?

டி. சத்வா வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதும் இறந்து போவதும் மக்களின் தனியுரிமை என்றும் அரசு இதில் தலையிட கூடாது என்றும் செந்தமிழன் போன்றோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது நியாயமானதா அல்லது சட்டபூர்வமானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டபிரிவு 25 மக்களின் நம்பிக்கைகளில் அரசு தலையிட கீழ்கண்ட மூன்று விதிவிலக்குகளை வழங்கியுள்ளது. 1. Public order (சட்டம் ஒழுங்கு) 2. Morality 3. Health (பொது சுகாதாரம்) … Continue reading வீட்டுப் பிரசவம் தனியுரிமையா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018 மே 22, 23 தேதிகளில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது உடமைகளுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட உண்மைகள் அறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக் குழு சார்பாக 2018 மே 27, 28 தேதிகளில் களஆய்வு நடைபெற்றது. ஜி.செல்வா (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்புக் குழு) தலைமையில், வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி (சென்னை உயர் நீதிமன்றம்), பேராசிரியர் வி.பொன்ராஜ்(திருநெல்வேலி), நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.மல்லிகா (கோவில்பட்டி), எஸ்.அரிகிருஷ்ணன் … Continue reading தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை

முகநூலில் பிரதமர் கார்ட்டூன் பதிவிட்ட திருப்பூர் தொழிலாளி கைது; பியூசிஎல் கண்டனம்

திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை ஒன்றில் பணியாற்றும் பிரபாகரன் என்ற தொழிலாளர் முகநூலில் பிரதமரை ‘தவறாக’ சித்தரித்து படம் போட்டதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மீது புகார் கொடுத்தவர் உள்ளூர் பாஜக பிரமுகர் சின்னசாமி. இந்த புகாரின் பேரில் திருப்பூர் மாநகர காவல் துறையால் தனிப்படை அமைக்கப்பட்டு பிரபாகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ் செய்தி வெளியாகியுள்ளது. பிரபாகரன் கைது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என மக்கள் கண்காணிப்புக் குழு தேசியக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச. பாலமுருகன் தெரிவித்துள்ளார். … Continue reading முகநூலில் பிரதமர் கார்ட்டூன் பதிவிட்ட திருப்பூர் தொழிலாளி கைது; பியூசிஎல் கண்டனம்

ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பெண்ணின் கையை முறிக்கும் பெண் போலீஸ்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாக மறுக்க, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கையை முறுக்கத் தொடங்கினார் பெண் காவலர் ஒருவர்.

நெடுவாசல் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை

மனுவேல் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இரயில் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக, பொய் வழக்கு போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட நான்கு SUMS தோழர்கள் உட்பட 7 பேர் இன்று வரை சிறையில் உள்ளனர். தோழர் வளர்மதி (Sums Valarmathi) திருச்சி பெண்கள் சிறையில் உள்ளார். அங்கு அவரும், தோழர் சுவாதியும் சிறை அதிகாரிகளின் ஆசியுடன், சிறைக் காவலர்களால் பலமுறை கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தோழர் வளர்மதியும், … Continue reading நெடுவாசல் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை

கோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி

அ. மார்க்ஸ் 'கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்' எனும் நூல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதி நண்பர் செந்தில்நாதன் அவர்களின் ஆழி பதிப்பகத்தால் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை ஒட்டி கோவையில் நடைபெற்ற கலவரத்தில் (Nov 1997) சுமார் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து அகில இந்திய அளவில் அமைக்கப்பட்ட PUCL உண்மை அறியும் குழு அறிக்கை இந்தக் கலவரத்தில் காவல்துறையும் இந்துத்துவ அமைப்புகளும் இணைந்து இந்த வன்முறைகளை … Continue reading கோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி

குழந்தைகள் மீதான வன்முறைக்குக் காரணமான உளவியல் என்ன? தீர்வு என்ன?

தமிழகத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் மீது நிழத்தப்பட்ட மோசமான வன்கொடுமைகள் சமூகத்தின் பேசுபொருளாகியுள்ளன. தாம்பரம் ஹாசினி பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 3 வயது குழந்தை நகைகளுக்காக கொல்லப்பட்டு குப்பையில் தூக்கிவீசப்பட்டிருக்கிறார். கொடூரமாக கொல்லப்பட்டதற்கான தடயங்கள் அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காணக் கிடைக்கின்றன. அரியலூரில் நந்தினி என்ற பதின் பருவ சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவங்கள் சமூக சீரழிவை எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்கள் கருத்தாளர்கள். … Continue reading குழந்தைகள் மீதான வன்முறைக்குக் காரணமான உளவியல் என்ன? தீர்வு என்ன?

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை மேடவாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் போலீஸார் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர். இது ஊடகங்களில் வெளியாகி கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆறு வாரங்களில் விசாரணை அறிக்கையை அளிக்க காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலையில் இந்துத்துவக் கையாளாக ஜெ. அரசு செயல்படுகிறதா?

சி.மதிவாணன் ராம்குமார் மரணம் தற்கொலை என்று சொல்லப்படுகிறது. மின்சாரக் கம்பியைப் பிடித்து தன்னைத் தானே கொன்றுகொண்டுள்ளார் என்பது செய்தி. அதேசமயம், “ராம்குமார் சாப்பிட்ட உணவால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆகவே, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுவதாக ராம்குமார் வக்கீல் கூறியுள்ளார்“ என்று தினத்தந்தியின் வலைமனை செய்தி சொல்கிறது. அவரின் இடது கன்னத்திலும் மார்பிலும் மின்சாரம் பாய்ந்த காயங்கள் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவாதி கொலையின் பின்னுள்ள, இதற்கு முந்தைய விளக்கப்படாத மர்மங்களையும், கைது செய்யப்பட்டபோதே … Continue reading சுவாதி கொலையில் இந்துத்துவக் கையாளாக ஜெ. அரசு செயல்படுகிறதா?

“மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”

பிரேம் (சாதிச்) சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது... பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம்சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞர் தற்போது கொல்லப்பட்டிருக்கிறார். நீதி மன்றத்தின முன் ராம்குமார் பேசுவதால் வெளிவரக்கூடி உண்மைகளில் இருந்து பலரைக் காப்பற்ற செய்யப்பட்ட கொலையை தற்கொலை என்று ஊடகங்கள் அறிவித்துவிட்டன. சாதிச் சட்டமும் சதிச் செயல்களில் வல்ல காவல் துறையும் தன் கடமையைச் செய்துவிட்டது. … Continue reading “மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”

வாகனம் தர மறுத்த அரசு மருத்துவமனை: இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற பழங்குடி

இந்த தேசம் தலித்துகளையும் பழங்குடிகளையும் விளிம்பு நிலை மக்களையும் துச்சமாக மதிக்கும் என்பதற்கு மீண்டுமொரு உதாரண சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசாவின் கலாஹண்டி அரசு மருத்துவமனையில் டிபி நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அமாங் டே, சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். அமாங்கின் கணவர் டானா மஞ்சி, தன் மனைவியின் உடலை எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகன உதவியைக் கேட்டிருக்கிறார். அவர்கள் வாகன இல்லை என்று நீண்ட அலைகழிப்புக்குப் பிறகு, தெரிவித்துள்ளனர். வாகனம் அமர்த்தி தன்னுடைய கிராமத்துக்கு எடுத்துச் செல்ல பணமில்லாத நிலையில், மனைவியின் … Continue reading வாகனம் தர மறுத்த அரசு மருத்துவமனை: இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற பழங்குடி

காவல்நிலைய விசாரணையில் கீழக்கரை இளைஞர் படுகொலை: மமக கண்டனம்

“தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேக் அலாவுதீன், திருட்டுக் குற்றச் சம்பவத்திற்காக கடந்த 2.8.2016 அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால்  காவல்நிலையத்திற்கு அழைத்துச் … Continue reading காவல்நிலைய விசாரணையில் கீழக்கரை இளைஞர் படுகொலை: மமக கண்டனம்

காஷ்மீரும் கந்தமாலும்

ஜோஸ்வா ஐசக் ஆசாத் ஜூலை 8ஆம் தேதி மாலை காஷ்மீரில் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் துமுதிபந்த் கோட்டத்தில் இருக்கும் குமுதுமகா என்னும் கிராமத்தில் 5 தலித், ஆதிவாசிகள் மத்திய மாநில படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 வயது குழந்தை உட்பட 1 ஆண், 3 பெண்கள் அடங்குவர். பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை வங்கியிலிருந்து … Continue reading காஷ்மீரும் கந்தமாலும்

“என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

Nallu R Lingam அப்பாவிகளிடம் வீரம் காட்டும் இவர்கள் மனிதர்களா? காக்கி உடை அணிந்தவுடன் மனிதாபிமானம் மரித்துவிடுமா? மு.கு.: இந்த செய்தி 'தி இந்து' இணையத்தில் வெளியாகி இருந்தது. செய்தியை வாசித்து பகிர முயன்றால், அதற்குள் பதிவை நீக்கிவிட்டார்கள். யார் தந்த அழுத்தம்? இந்தக் கோழைகளா மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தருவார்கள்? நல்ல வேளையாக, நான் பின்னோக்கி செல்லாததால் பதிவைக் காப்பி செய்துவிட்டேன். ஸ்கிரீன் ஷாட்டும் எடுத்து வைத்துள்ளேன். செய்தி கீழே... ------------------- திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் … Continue reading “என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

“உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் "கொலையாளி ராம்குமார் தப்பியது எப்படி" என்றெல்லாம் விதவிதமான கட்டுரைகள்..பழைய புகைப்படம், புதிய படம், கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட, கழுத்தில் கட்டுடன்.... இப்படிப் படங்கள்.. எனக்கு ஒரு பழைய நினைவு.. அப்போது எனக்கு 14 வயது. ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். தினம் பாப்பாநாட்டிலிருந்து பஸ்சில் போய் வருவேன். இடைப்பட்ட ஊர் ஒன்றில் ஒரு தாசில்தார். அடிக்கடி நான் செல்லும் பஸ்ஸில், அந்த ஊரில் ஏறுவார். உள்ளூர்காரர், அதிகாரி என்கிற அடிப்படையில் … Continue reading “உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

Marx Anthonisamy ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், அவரது பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்கவும் முதலமைச்சர் ஜெயா உத்தரவிட்டுள்ளார். நன்றிகளையும் பாராட்டுக்களையும் சொல்லிக் கொள்வோம். இது தொடர்பாக சம்பவத்தன்று என்னிடம் எக்ஸ்பிரஸ். ஹிண்டு ஆகிய பத்திரிகைகளில் கருத்துக் கேட்டபோது உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என்றுதான் சொன்னேன். கொல்லப்பட்ட காவலரின் மனைவி ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. பிள்ளைகள் படித்துக் கொண்டுள்ளனர் என்கிற … Continue reading காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் … Continue reading வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் கணபதி என்பவர், தனது மகன் 18 வயது மகன் ராஜேந்திர பிரசாத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்துள்ளார். 300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன்  என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதனிடையே டைம்ஸ் ஆப் … Continue reading ஸ்ட்ரெச்சர் தள்ள எவ்வளவு? பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எவ்வளவு ?;சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…

ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதியவர் கோகுல் தாஸ், ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்றார் என்பதற்காக, உள்ளூர் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார். முதியவர் ரத்தக் காயங்களுடன் இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. பல பாகிஸ்தான் பிரபலங்கள், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவின் மகள் பக்தவார் புட்டோ உள்பட பலர் கோகுல்தாஸுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். இந்நிலையில் சிந்து மாகாணத்தின் ஐஜி விரைந்து நடவடிக்கை எடுத்து, முதியவரைத் தாக்கிய குற்றத்துக்காக அந்தக் … Continue reading ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

“நாங்க ஒதுங்கித்தான் இருக்கோம்; ஆனா ஒரு புத்தகம் எழுதினதுக்காக எங்க மேல பகையா இருக்காங்க” எழுத்தாளர் துரை குணா கைது குறித்து மனைவி கோகிலா

ஊரார் வரைந்த ஓவியம் என்ற புத்தகம் காரணமாக தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வரும் துரை குணா, வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டிருக்கிறார். என்ன காரணம் என்பதை தெரிவிக்காமல் கைது செய்த பரமக்குடி போலீஸார், துரை குணாவின் மனைவி கோகிலாவின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின், கொலை முயற்சி குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். என்ன நடந்தது என தெரிந்துகொள்ளும்பொருட்டு டைம்ஸ்தமிழ், கோகிலாவைத் தொடர்பு கொண்டது... “புதன்கிழமை காலையில அஞ்சரை மணிக்கு இருக்கும்; நான் எழுந்து வெளியே போயிருந்தேன். வீட்ல, … Continue reading “நாங்க ஒதுங்கித்தான் இருக்கோம்; ஆனா ஒரு புத்தகம் எழுதினதுக்காக எங்க மேல பகையா இருக்காங்க” எழுத்தாளர் துரை குணா கைது குறித்து மனைவி கோகிலா

மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்

சித்தார்த் வரதராஜன் பிப்ரவரி 28, 2002 அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பு, மிக மோசமான இந்த நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஒரு தலைவராக மக்களின் பலமான உணர்வுகளை அவர் தூண்டுகிறார். பலர் அவர் தவறு செய்யமாட்டார் என நினைக்கிறார்கள். சிலர் அவரால் நல்லதை செய்யவே முடியாது என நம்புகிறார்கள். பிப்ரவரி 28, 2002 கொலைகள், அவர் விரும்பியதால் நிகழ்ந்தனவா? … Continue reading மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்

நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

திலீபன் மகேந்திரன் சிறிது நேரத்தில் போராட்டம் தொடங்கும்.. அண்ணா சித்த மருத்துவமனை நிர்வாகத்தின் அராஜகம். திரு. ஆறுமுகம் ஒரு கை, கால் முற்றிலுமாக செயலிழந்தவர் இங்கே கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய அக்கா அவர் கணவர் உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்த காரணத்தால் அவரை பார்க்க நேற்று சென்றுவிட்டார். இதைப் படியுங்கள்: “போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்! இதைக் காரணம் … Continue reading நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

“போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்!

திலீபன் மகேந்திரன் தோழர் ஆறுமுகம் ஒரு காலும், ஒரு கையும் செயலிழந்தவர். சென்னை அண்ணா சித்த மருத்தவமனையில் (அமைந்தகரை) கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்தவர்.. நேத்து அவுங்க அக்கா (attender) இல்லாத நேரத்துல ஹாஸ்பிட்டல் தரையிலையே கழித்திருக்கிறார்.. அத அவரே சுத்தமும் பன்னிட்டாரு.. ஆனா இந்த நர்சும், செக்கியூரிட்டிங்களும் சேந்து இவர குண்டு கட்டா தூக்கி வெளிய போட்டுட்டாங்க.. நடுரோட்ல.. உச்சி வெயில் முதல் நைட்டு வர வெளியதான் கடந்தாரு. நா யாருன்னு விசாரிச்சி … Continue reading “போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்!

“மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்

“இதுபோன்று மாணவர்களின் நலனில் அக்கறையற்று மரக்கட்டைபோல் உணர்ச்சியற்று இருந்திடும் ஒரு துணைவேந்தரை நாங்கள் எங்கேயும் சந்தித்தது இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளமாட்டோம். இது சாகும்வரையிலான உண்ணாவிரதம்,’’ என்று மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராம நாகா கூறுகிறார். 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களில் ராம நாகாவும் ஒருவர். கன்னய்ய குமார் உட்பட ஆறு பேர் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டதாலும், மருத்துவர்கள் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு சிகிச்சையைத் தொடர … Continue reading “மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்

”ஜிஷாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை”: ஜிஷாவின் தாய்

கேரளத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஜிஷா, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூர மான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.நாராயணன் நாடாளு மன்றத்தில் கிளப்பினார்.கேரள மாநிலத்துக்கே ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், கேரள போலீசார்உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தில் உள்ளபெரும்பாவூரைச் சேர்ந்தவர் ஜிஷா(29). ஒரு ஏழைதலித் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எர்ணா குளம் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்து வந்தார். … Continue reading ”ஜிஷாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை”: ஜிஷாவின் தாய்

எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் கடந்த மார்ச் 2-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏழு பேரையும் … Continue reading எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

“பேரறிவாளன் குற்றவாளி இல்லை” தெளிவுபடுத்திய பல்நோக்கு விசாரணைக் குழு

இராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், குற்றவாளி இல்லை என பல்நோக்கு விசாரணை குழு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பிய பேரறிவாளனுக்கு, அளித்த பதிலில் இதைக் குறிப்பிட்டிருக்கிறது பல் நோக்கு விசாரணைக் குழு. இதுகுறித்து வழக்குரைஞர்.சிவக்குமாரிடம் பேசினோம். "இராஜீவ் காந்தி கொலை வழக்கு இரண்டு நீதிமன்றங்களில் நடைபெற்றது.ஒன்று தடா நீதிமன்றம். மற்றொன்று பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணை. தடா நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் … Continue reading “பேரறிவாளன் குற்றவாளி இல்லை” தெளிவுபடுத்திய பல்நோக்கு விசாரணைக் குழு

பேராசிரியர் ஜி. என். சாய்பாபாவுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்

நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. போலியோவால் பாதிக்கப்பட்ட ஜி. என். சாய்பாபாவால், நகரும் நாற்காலியின் உதவியால்தான் இயங்க முடியும். இந்த நிலையில் அவர் அண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இவருடைய வழக்கறிஞர், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதன் அடிப்படையில் பூர்ணிமா என்ற சமூக செயல்பாட்டாளர் தாக்கல் செய்த பொதுநல மனுவை ஏற்றுக்கொண்ட … Continue reading பேராசிரியர் ஜி. என். சாய்பாபாவுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்

அடித்து, உதைப்பதுதான் மதுவிலிருந்து விடுபட வைக்கும் வழியா? போதை மறுவாழ்வு மையத்தின் மனித உரிமை மீறல்களை வீடியோவில் பாருங்கள்!

சென்னை போரூரில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் மதுவுக்கு அடிமையாகி சிகிச்சை பெற வந்தவரை கடுமையாக தாக்கும் காட்சி வாட்ஸப்பில் வெளியாகியுள்ளது. மதுவுக்கு இத்தகைய வழிமுறைகளில்தான் சிகிச்சை அளிக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல்களை அதிர்ச்சியை உருவாக்கி இருக்கின்றன. http://www.youtube.com/watch?v=49HN6Gavdzo

#LahoreBlast இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்: குழந்தைகள், பெண்கள் மீது லாகூரில் தற்கொலைப் படைத்தாக்குதல்

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குல்சான்-ஐ-இக்பால் பார்க் அருகே நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில், 56 பேர் இறந்துள்ளனர். இதில் குழந்தைகளும், பெண்களுமே அதிகம் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் ஈஸ்டர் தினம் என்பதால் குடும்பத்துடன் பெண்கள், குழந்தைகள் அதிகம் கூடியிருந்த பூங்காவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. https://twitter.com/ShivAroor/status/714117089854775296 https://twitter.com/aichaansary/status/714116352810704896 https://twitter.com/AbrarUmerzai/status/714101221909508096 https://twitter.com/TheAnonnMessage/status/714127444018642944 https://twitter.com/iEshaalK/status/714124585533378562 https://twitter.com/Benazir_Shah/status/714124289595850752  

”ஜனநாயகத்தை பத்தியெல்லாம் பேசாதீங்க; ஓட்டல்ல அவங்களுக்கெல்லாம் எடமில்லை”: கொங்கு பகுதி உணவகங்களில் தீண்டாமையை வீடியோவில் பாருங்கள்

கொங்கு மண்டலம் சாதியத்தை தக்க வைத்துக்கொள்வதில் எத்தகைய கீழ்மையான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என சமீப கால பல நிகழ்வுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. திருமண மண்டபங்களில் தீண்டாமை என சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வந்த செய்தியை வெளியிட்டிருந்தோம். காங்கேயம் அதிமுக எம் எல் ஏ வுக்குச் சொந்தமான திருமணம் அது என்பது கூடுதல் கீழ்மை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் ஒடுக்கும் சாதியினர் நடத்தும் உணவகங்களில் தலித் மக்கள் உணவு விற்பனையும், சரிசமமாக உணவகத்தில் அமர்ந்து உண்கிற … Continue reading ”ஜனநாயகத்தை பத்தியெல்லாம் பேசாதீங்க; ஓட்டல்ல அவங்களுக்கெல்லாம் எடமில்லை”: கொங்கு பகுதி உணவகங்களில் தீண்டாமையை வீடியோவில் பாருங்கள்

தீண்டப்படாத கிறிஸ்தவரின் பாதத்தை இயேசுவின் பெயரால் யார் தீண்டுவார்?

அன்பு செல்வம் உங்களில் தலைவராக இருக்க விரும்புகிறவர் முதலில் எப்படி ஒரு தொண்டராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், யூத கலாச்சாரத்தின் பஸ்கா விருந்து அடையாளத்துக்காகவும் இயேசு தனது இயக்கத் தோழர்களுக்கு செய்து காண்பிக்கும் ஒரு வேலைத்திட்ட‌ நிகழ்வு தான் இந்த "பாதம் கழுவுதல் - Foot Washing Ceremony". இதனை "நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்" (John. 13 : 14) என்று மாபெரும் கட்டளையாகவும் கூறுவார். தனது தோழர்களுக்கு அவர் விதித்த ஒரே கட்டளையும் … Continue reading தீண்டப்படாத கிறிஸ்தவரின் பாதத்தை இயேசுவின் பெயரால் யார் தீண்டுவார்?

இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்

கல்பனா கண்ணபிரான் ரோஹித் வெமுலாவின் தற்கொலையிலிருந்து எவ்விதமான படிப்பினையையும் கற்க மறுக்கும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் அங்கே மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை வெளிஉலகிற்குத் தெரியாமல் மூடிமறைத்துவிட்டால் போதும் என்கிற ரீதியில் தன் நிர்வாக எந்திரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் நடைபெற் றுள்ள நிகழ்வுகள் மிகவும் வலியை ஏற்படுத்து கின்றன. திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துணை வேந்தர் வளாகத்திற்குள் நுழைந்ததானது, பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பெரும்திரளாகக் கூடி தங்கள் … Continue reading இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்

சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

  ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: அன்பார்ந்த சந்திரசேகர் ராவ்காரு, தங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள இன்று (புதன்) முழுவதும் முயற்சி செய்தேன். பல செய்திகள் அனுப்பப்பட்டும், உங்கள் ஊழியர்கள் அவற்றைப் பெற்ற போதிலும் பதிலேதும் இல்லை. உங்களைத் தொடர்புகொள்ள … Continue reading சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

#பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்

  வழக்குரைஞர் மில்ட்டன் சட்டீஸ்கரில் முக்தி மோர்ச்சா கட்சியை துவங்கி, வழிநடத்திய சங்கர் குஹார் நியோகியால் சாகித் மருத்துவமனை துவங்கப்பட்டது. சுரங்க தொழிலாளர்கள் அளிக்கும் நிதியால் தான் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை அளித்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளின் மருத்துவ சேவையில் 30 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் மருத்துவர் சாய்பால் ஜனா. 1992-ல் பிலாய் தொழிலக பகுதியில் தொழிலாளர் போராட்டத்தின் பொழுது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. 18 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் காயம்பட்ட தொழிலாளர்களுக்காக மருத்துவ … Continue reading #பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்