செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…
பகுப்பு: மதுரை
”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!
வெள்ளிக்கிழமை சென்னை வந்த மு. க. அழகிரியை நிருபர்கள் விடாமல் துரத்தி செய்தி சேகரித்தனர். அப்போது ஒரு நிருபர் “ஊர் முழுக்க உங்க போஸ்டரா இருக்கே” என்றதற்கு “நான் பிரபலமாக இருக்கறதால சிட்டி ஃபுல்லா இருக்கு” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நிருபர்கள் பலர் சிரித்தனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தங்களது ஆதரவாளர்கள் திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை என்றும், அப்படி நீக்கப்பட வேண்டுமென்றால் லட்சம் பேரை நீக்க … Continue reading ”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!
மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?
மதுரையை அடுத்த ஒத்தக்கடையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் … Continue reading மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?
தடையை மீறி ஜல்லிக்கட்டு : சீமானை கைது செய்ய அவர் தங்கியுள்ள ஹோட்டலை சுற்றிலும் போலீஸ்
உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து மதுரை புறநகர் பகுதியில் சீமானின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த பாலமேடு செல்ல இருப்பதாக சீமான் அறிவித்துள்ளதால், சீமானைக் கைது செய்ய தற்போது மதுரையில் அவர் தங்கியுள்ள ஓட்டலில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
#சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!
இளங்கோ கல்லாணை என்னிடம் சல்லிக்கட்டு நடக்குமா என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே நடக்க ஆரம்பிச்சாச்சு. இன்று பயிற்சி காளைக்கு பக்கத்தில போயி லேசா கையில கீறல். உடம்பு மனசு எல்லாம் ஒரு சந்தோசம். ஊரில் எல்லோரும் தடையை மீறுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தமிழ் உணர்வாளர்கள் தனி நாடு என்பதை ஏன் நாம் இந்த சமயத்தில் உயிர்ப்பிக்கக் கூடாது என்கின்றனர். இருக்கட்டும். போராட்டங்களை விட மக்கள் காளைகளை தயார் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசைக் கொண்டு … Continue reading #சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மொட்டை போட்டு போராட்டம்!
மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, கடைகள் அடைப்பு, சாலைமறியல், கருப்புக்கொடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு, நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், இதற்கு அரசியல்வாதிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மதுரையில் பாலமேட்டில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு துணிகளை கட்டியும், மொட்டையடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய, … Continue reading ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மொட்டை போட்டு போராட்டம்!
’இலவச லேப்டாப் வாங்கியவர்கள் எல்லாம் கட்சியில் சேரணும்’: அதிமுகவின் நூதன மாணவர் சேர்ப்பு முகாம்!
மதுரை மாவட்டத்தில் அதிமுக, ‘மாணவ - மாணவியர் சேர்ப்பு’ எனும் பெயரில் மதுரைக் கல்லூரியில் ஞாயிறன்று மாலை ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. தமிழக அரசின் இலவச லேப் டாப், சைக்கிள் வாங்கிய மாணவர்கள் அனைவரையும் கட்சியில் சேர்க்கும் பொருட்டு இந்த் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகச் சொல்கிறது தீக்கதிர் செய்தி. மேலும் தீக்கதிர் செய்தியில் இந்த நிகழ்ச்சிக்காக 300க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளை ஆளும் கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு எடுத்ததாக கூறி கட்சிக் கொடிகளை கட்டி, வலுக்கட்டாயமாக மாணவ - … Continue reading ’இலவச லேப்டாப் வாங்கியவர்கள் எல்லாம் கட்சியில் சேரணும்’: அதிமுகவின் நூதன மாணவர் சேர்ப்பு முகாம்!
“ஹவாலா, தங்கம், காட்டமைன் கடத்தல் கும்பல்”: ஃபேஸ்புக்கில் வன்மத்தை தூண்டிய புகாரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக கல்யாணராமன்!
திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறுகளைப் பதிவிட்டு வந்ததாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கல்யாண்ராமன் மீது புகார் எழுப்பப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, கல்யாணராமன் மீது சென்னை போலீசில் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜாவஹிருல்லா, வெளியிட்டுள்ள அறிக்கை... “கல்யாண் ராமன் கடந்த டிசம்பர் … Continue reading “ஹவாலா, தங்கம், காட்டமைன் கடத்தல் கும்பல்”: ஃபேஸ்புக்கில் வன்மத்தை தூண்டிய புகாரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக கல்யாணராமன்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் 3 இடங்களில் குண்டுவீச்சு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசலில் மண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசப்பட்டது. மூன்று இடங்களில் மண்ணெய் நிரப்பிய பாட்டில்கள் வீசப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். செவ்வாய்கிழமை இரவு 7 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த பாட்டில்கள் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள அரசு மண்பரிசோதனை கூடம் உள்ள கட்ட வளாகத்துக்குள் இருந்து வீசப்பட்டதாக காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டு வீச்சு சம்பவம் குறித்து க்யூ பிரிவு போலிசாரும், … Continue reading மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் 3 இடங்களில் குண்டுவீச்சு
NO JOKE: ஜல்லிக்கட்டு மாடு முட்டி பொன்.ராதாகிருஷ்ணன் காயம்!
அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்திற்கு சென்றிருந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது, ஜல்லிக்கட்டு மாடு மோதி சிறுகாயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் காலத்து கொள்வதற்காக காரில் சென்ற பொன்.ராதாக்ரிஷ்ணனை, காளை மாடுகளுடன் திரண்டு நின்ற பொதுமக்கள் பலர் திடீரென காரை மறித்து, மனு கொடுத்தனர். அதில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் காளை மாடு ஒன்றை தடவி கொடுத்த போது, … Continue reading NO JOKE: ஜல்லிக்கட்டு மாடு முட்டி பொன்.ராதாகிருஷ்ணன் காயம்!
தமிழறிஞர் தமிழண்ணல்: அஞ்சலி
சுப்ரமணியம் ரவிக்குமார் பேராசிரியர் தமிழண்ணல் எனப்படும் இராம பெரியகருப்பன் புதன்கிழமை மதுரையில் காலமானார். அவருக்கு நான், தமுஎகசவின் மதுரை மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம், தமுஎகசவின் மாநிலத் துணைத்தலைவர் என்.நன்மாறன் ஆகியோர் சென்று காலை 12 மணியளவில் அவரது இலலத்தில் அஞ்சலி செலுத்தினோம். பேரா.தமிழண்ணல் தமுஎகச தமிழுக்காக நடத்திய பல இயக்கங்களில் முனைப்புடன் கலந்து கொண்டவர். அவரது வாழ்க்கை, தமிழாய்வுப் பங்களிப்புகள் குறித்தும், அவரது நூற்கள் குறித்தும் சில விவரங்களை முகநூல் நண்பர்களுக்காக இங்கே பகிரலாம் என நினைக்கிறேன். தமிழறிஞர்களால் … Continue reading தமிழறிஞர் தமிழண்ணல்: அஞ்சலி
65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு
சுந்தரம் தினகரன் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையை சேர்ந்த பேராசிரியர் மனுபிரகாஷும் அவர் தம் குழுவினரும் பேப்பரில் மடிக்கக்கூடிய நுண்நோக்கியை கண்டுபிடித்துள்ளார்கள். இதன் விலை ஒரு டாலர் தான்! நம்மூர் மதிப்பில் ரூபாய் 65 இருக்கலாம். எளிமையாக உருவாக்கிவிடலாம். இந்த நுண்நோக்கியின் மூலம் 150 அல்லது 500 மடங்கு பெரிதுபடுத்தமுடியும். அதற்கான மிகச்சிறிய லென்சையும் உருவாகியுள்ளார். அனைத்துமே பேப்பரால் ஆனது. இதை உருவாக்க அவருக்கு உந்துதல் அளித்த இடம் மதுரை காந்தி அருங்காட்சியகம் என்றால் ஆச்சர்யம் தான்! அங்கு வந்தபோது … Continue reading 65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு
’எங்கும் நிறைந்துள்ளதே நியூட்ரினோ; அதனால் எந்த பாதிப்பும் கிடையாது’ நியூட்ரினோ ஆய்வு திட்ட இயக்குநர்
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் (இன்ஸ்பயர்) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஐந்து நாள் அறிவியல் முகாம், மதுரை யாதவா கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொண்ட இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத் திட்ட இயக்குநர் நாபா.கே. மண்டல் சிறப்புரை ஆற்றினார். “புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, நாடு முழுவதும் இதுபோன்ற அடிப்படை அறிவியல் நிகழ்ச்சிகளை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு மையம் நடத்தி வருகிறது. இந்தியாவில் 1957-ஆம் ஆண்டு நியூட்ரினோ ஆய்வு நடத்தப்பட்டது. 1965-ஆம் ஆண்டு நியூட்ரினோ தொடர்பான … Continue reading ’எங்கும் நிறைந்துள்ளதே நியூட்ரினோ; அதனால் எந்த பாதிப்பும் கிடையாது’ நியூட்ரினோ ஆய்வு திட்ட இயக்குநர்
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக சார்பில் டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அலங்காநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் கென்னடி கண்ணன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலர்கள் மூர்த்தி, மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரந்தாமன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆணவக் கொலை செய்த ராமநாதபுரம் இளைஞர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!
இராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபதி(24) என்பவர் ஆணவக் கொலை செய்ததற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 17 வயது பெண் ஒருவர் தலித் இளைஞரை காதலித்தார் என்பதற்காக அவரை தொண்டையை அறுத்து கொலை செய்தார் பூபதி. இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமாரும் மாவட்ட எஸ்பி மணிவண்ணனும் பரிந்துரைத்தனர்.