ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

திருமுருகன் காந்தி  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திலோ, அல்லது அரசின் ஒப்பந்த தொழிலையோ, அரசியல்வாதியாகவோ மாறி மக்கள் விரோத நகர்வுகளை செய்வதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும், தங்களது பணியை நிறுத்தாமல் அரசு நிறுவனங்கள் மக்கள் விரோத அரசியலை செய்வதை தடுக்க சில முன்னாள் அரசு பொறியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. முல்லைப்பெரியாறு அணைக்காக்கும் ஆவணப்படத்தினை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செய்தார்கள். இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் … Continue reading ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் அதிகாரம் அமைப்பு டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசியவர்கள் மீது ஒன்றரை மாதங்கள் கழித்து தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. இது குறித்து வினவு தளத்தில் வெளியான அறிக்கையில், டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகளின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அறிக்கை முழுவிவரம் இங்கே: கடந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் … Continue reading டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

  ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: அன்பார்ந்த சந்திரசேகர் ராவ்காரு, தங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள இன்று (புதன்) முழுவதும் முயற்சி செய்தேன். பல செய்திகள் அனுப்பப்பட்டும், உங்கள் ஊழியர்கள் அவற்றைப் பெற்ற போதிலும் பதிலேதும் இல்லை. உங்களைத் தொடர்புகொள்ள … Continue reading சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

“உங்க சகிப்பின்மையை குதிரைக்கிட்ட போய் காட்டறீங்களே?”: சட்டசபை வளாகத்தின் முன்பே குதிரையின் காலை ஒடித்த பாஜக எம்பி

பசு நேசர்களாகவும் உயிர்களின் மேல் அளவற்ற அன்பு கொண்டவர்களாகவும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் பாஜகவைச் சேர்ந்த எம் எல் ஏ, உத்தரகாண்ட் மாநில சட்டசபை வளாகத்துக்கு வெளிய ஒரு குதிரையின் காலை லத்தியால் அடித்தே ஒடித்திருக்கிறார். உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் குதிரைப்படை போலீசாரும் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அப்போது அம்மாநில பா.ஜ. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி, ஒரு போலீசாரிடமிருந்த லத்தியை பறித்து … Continue reading “உங்க சகிப்பின்மையை குதிரைக்கிட்ட போய் காட்டறீங்களே?”: சட்டசபை வளாகத்தின் முன்பே குதிரையின் காலை ஒடித்த பாஜக எம்பி

தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

மும்பையில் ஆகஸ்ட் 15, 2010-ஆம் ஆண்டு, தேவதாசி பெண்கள் அரை நிர்வாணத்துடன் தங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2000 வழங்கக் கேட்டுப் போராடினர்.  அப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்து மதத்தில் இந்து கடவுள்களுக்கு பெண் குழந்தைகளை ‘நேர்ந்துவிடுவது’ சமீபம் வரை வழக்கத்தில் இருந்த ஒன்று. இவர்கள் கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்ற பொருளில் தேவதாசி என அழைக்கப்பட்டனர். (Photo by Nagesh Ohal/India Today Group/Getty Images)   காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூலை … Continue reading தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

மாணவர்கள் சுரண்டிய ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்: பொறுக்க முடியாமல் கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

சென்னை அடுத்த கேளம்பாக்கம் படூரில் உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களிடம், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, கடந்த வாரம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு பேட்டியளித்த நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர், “இண்டர்னல் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் ரூ. 8000 கட்டினால் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்கிற நிலை இருந்தது, இப்போது அதை … Continue reading மாணவர்கள் சுரண்டிய ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்: பொறுக்க முடியாமல் கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே... ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு … Continue reading விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

”வைரமாகவும் முத்தாகவும் இருங்கள்; இல்லையென்றால் உங்களுடைய கிருமித் தொற்றை நீக்க கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும்”

தேச துரோக குற்றச்சாட்டில் கைதான மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரு 6 மாத இடைக்கால பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா ராணி, ஹிந்தி படத்தின் பாடல் ஒன்றை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். அவர் சுட்டிக்காட்டிய பாடல் உபகார்’ படத்தில் இடம்பெற்ற தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல். அவர் மேற்கோள் காட்டிய வரிகள் இவைதான். Rang hara Hari Singh Nalve se Rang laal hai Lal Bahadur se Rang bana basanti Bhagat … Continue reading ”வைரமாகவும் முத்தாகவும் இருங்கள்; இல்லையென்றால் உங்களுடைய கிருமித் தொற்றை நீக்க கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும்”

தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட்,  காவலர் சீருடை அணிந்து,  நீதிமன்றம் அழைத்து வருகிறது டெல்லி போலீஸ். வழக்கறிஞர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என சொல்கிறது டெல்லி போலீஸ்.   தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக அறிவித்த வழக்கறிஞர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் … Continue reading தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் ஏன் ஒரு தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அனீர்பன்: பெனடிக்ட் ஆண்டர்சனின் பார்வையில் தேசம் என்பது கற்பனை செய்யப்பட்ட சமூகம். தங்களை அந்த சமூகத்தின் அங்கமாக நம்பும் மக்கள் சமூகரீதியாகக் கட்டுவதே … Continue reading #MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

என் அன்பிலா தேசபக்தர்களே! என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் … Continue reading ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

உள்ளே பூமாலை; வெளியே தக்காளி, முட்டையால் அபிஷேகம்: சுப்பிரமணியம் சுவாமியின் உலக பயங்கரவாத கருத்தரங்கத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள்!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ‘உலக பயங்கரவாதம்’ குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கான்பூர் சென்றிருந்தார். கருத்தரங்கம் செல்லும் வழியில் அவர் காரை மறித்த சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் கார் மீது முட்டை, தக்காளிகளை வீசினர். அவை சிதறி சுப்பிரமணியம் சுவாமி மீது பட்டன. இந்நிலையில் கருத்தரங்க வளாகத்துக்குச் சென்ற சுவாமிக்கு பூமாலை அணிவித்து ஏற்பாட்டாளர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்வில் காஷ்மீர் பிரச்சினை … Continue reading உள்ளே பூமாலை; வெளியே தக்காளி, முட்டையால் அபிஷேகம்: சுப்பிரமணியம் சுவாமியின் உலக பயங்கரவாத கருத்தரங்கத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள்!

கன்னய்யா குமாரை விடுதலை செய்யக்கோரி கோவையில் தொடரும் போராட்டம்

கோவையில் தொடரும் போராட்டம் "சமூக மாற்றத்திற்கான மாணவர் கூட்டமைப்பு" சார்பில், கன்னய்யா குமாரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி திங்கள்கிழமை "பி.எஸ்.என்.எல். அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில்,  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) , இந்திய மாணவர் சங்கம் (SFI),.இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), கேம்பஸ் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா(CFI), புரட்சிகர மாணவர் முன்னணி (RSF), திராவிடர் மாணவர் கழகம், சமத்துவ மாணவர் கழகம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் (SUMS), மக்கள் ஜனநாயக இளைஞர் … Continue reading கன்னய்யா குமாரை விடுதலை செய்யக்கோரி கோவையில் தொடரும் போராட்டம்

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

 கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி "தி வயரில்" கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே:   டைம்ஸ் … Continue reading டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

வர மறுத்த மாணவியை கயிறு கட்டி இழுத்துச்சென்ற போலீஸ்: சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து புரட்சிகர இளைஞர் கழகம் (RYA), அகில இந்திய மாணவர் கழக(AISA)த்தினர் , நுங்கம்பாக்கத்தில் உள்ள (மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்திருக்கும்) சாஸ்திரி பாவனை முற்றுகையிட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை, போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து போகும் காட்சிகளும், அதற்க்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ய பெண் போலீசார் இல்லாததால், உதவி கமிஷனர் மற்றும் எஸ்.ஐ ஆகியோர் … Continue reading வர மறுத்த மாணவியை கயிறு கட்டி இழுத்துச்சென்ற போலீஸ்: சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி…

பூக்களுடன் வீதிக்கு வந்த மாணவர்கள்:ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்!

பூக்களுடன் வீதிக்கு வந்த ஜே.என்.யூ மாணவர்கள்.. ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்!

மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

பூ.கொ.சரவணன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பட்டதாரிகள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று இடதுசாரிகள், போராளிகள் விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைச்சொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு … Continue reading மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

தலித்துகளுக்கு திறக்க மறுக்கும் தேவாலய கதவுகள் 20 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன!

தமிழ் ஆதவன் மூடப்பட்டு கிடக்கும் தச்சூர் கத்தோலிக்க தேவாலயதின் கதவுகள் தலித் கிறிஸ்துவர்கள் உள்ளே வரக் கூடாது என மூடியே கிடக்கிறது.. ஒடுக்கப்பட்டோரை நேசித்த இயேசு இந்தியாவின் ஒடுக்கப்பட்டோரை நேசிப்பதில்லை போலும்.. பாவிகள் மன்னிக்கப்படுவார்கள் என சொன்னது சாதி இந்து கிருஸ்துவர்கள் செய்யும் சாதிக் கொடுமைகளை மன்னித்துக் கொண்டே இருக்கிறது .. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது இங்கே தலித் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக … Continue reading தலித்துகளுக்கு திறக்க மறுக்கும் தேவாலய கதவுகள் 20 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன!

#வீடியோ: மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் போலீஸின் அடக்குமுறையை இந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பாருங்கள்!

அரசு பணிகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகையை ரூ.1000-இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் திங்கள் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, திங்கள் கிழமை மாலை வேப்பேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு குடிநீர், கழிப்பறை, உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என … Continue reading #வீடியோ: மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் போலீஸின் அடக்குமுறையை இந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பாருங்கள்!