ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்

மு. இக்பால் அகமதுகீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக: 1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் - உதாரணங்களுடன் நிறுவுக.2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்.... ... ...மாணவன் எழுதிய கட்டுரை:(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் … Continue reading ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்

பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்: தோழர் சந்திரமோகன்

800 சிறைவாசிகளுக்கு சமைத்துப் போட, இரண்டு சமையல்காரர்கள் மட்டுமே உள்ளனர். தினசரி 30 சிறைவாசிகள் சமையலறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி வருகின்றனர்.

ஆலை ‘மூடப்பட்ட‘ பின்னரும் ஸ்டெர்லைட் கையில் உள்ள தமிழ்நாடு காவல்துறையும் அரசு நிர்வாகமும்!

சி. மதிவாணன் அரசியல் முன்னணிகள் குறிப்பாக, புரட்சிகர அமைப்புகளின் முன்னணிகள் தூத்துக்குடி காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர். சட்டவிரோத தடுப்புக் காவலில் வைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள் கூட காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். இவற்றுக்கெல்லாம் பின்னே உள்ளது தமிழக அரசின் கை மட்டுமல்ல, ஸ்டெர்லைட்டின் கையும் கூட. ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எடுபிடியாக இருந்த போலீஸ் ஆலை மூடல் அறிவிப்பு வந்த பின்னர் கூட ஸ்டெர்லைட்டின் கையால் இயக்கப்படுகிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இவரைக் காவல்துறை கைது செய்து … Continue reading ஆலை ‘மூடப்பட்ட‘ பின்னரும் ஸ்டெர்லைட் கையில் உள்ள தமிழ்நாடு காவல்துறையும் அரசு நிர்வாகமும்!

“ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?”: மனுஷ்ய புத்திரன்

காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார்.

”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதிமுக அரசும் இதே கருத்தை கூறிவரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ரஜினியை பாராட்டி கட்டுரை எழுதியுள்ளது. காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், “தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி … Continue reading ”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு!

யார் நீங்க? #நான்தான்பாரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை  நேரில் சந்தித்தார். சிகிச்சை பெற்றவர்களை ஒவ்வொருவராக நலம் விசாரித்தார் ரஜினி. அப்போது, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான சந்தோஷ் என்ற இளைஞர், ‘யார் நீங்க?’ என ரஜினியைப் பார்த்து கேட்டார். ‘ நான்தான்பா ரஜினிகாந்த்’ என பதிலளித்தார் அவர். நூறு நாட்களாக நடந்த போராட்டத்தின் போது வராத ரஜினி, இப்போது எதற்காக வருகிறார் என சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்ததுடன், … Continue reading யார் நீங்க? #நான்தான்பாரஜினிகாந்த்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது: உண்மை அறியும் குழு அறிக்கை

பேரா. அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து கள ஆய்வு செய்தது. இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள சுருக்கமான விவரங்கள்... துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத் தாசில்தார்கள் சுடுவதற்கு ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளதாக FIR தயாரிக்கப்பட்டுள்ளது. … Continue reading தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது: உண்மை அறியும் குழு அறிக்கை

பிரின்ஸ்டனின் எதிர்காலம்..?

சென்னியப்பன் பிரின்ஸ்டன்., வயது 21., தனியார் கப்பல் நிறுவனத்தில் பணி. மதியம் 1.30 மணிக்கு செல்லவேண்டிய பணிக்காக வீட்டை விட்டு 1 மணிக்கு கிளம்பினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்த போது வலது முழங்காலுக்கு மேல் எங்கிருந்தோ துப்பாக்கி குண்டு ஒன்று துளைக்க மயங்கிச் சரிகிறார். அருகிலிருந்தவர் ஒருவர் உதவிட அருகே இருந்த மண்டபத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் … Continue reading பிரின்ஸ்டனின் எதிர்காலம்..?

மனம்பிறழ்ந்த தமிழக காவல் துறை: ப. ஜெயசீலன்

அதிகாரிகள் பொறுக்கித்தனம் செய்வதை policing என்று ஏன் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? அவிழ்த்துவிடப்பட்ட வேட்டைநாய்களின் குணநலன்களை அவர்கள் கொண்டிருப்பதன் காரணம் என்ன? ஒரு அமைப்பாக நமது காவல்துறை ஏன் மனப்பிறழ்வு நோயிற்கு ஆட்பட்டிருக்கிறது?

மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு!

மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் இரா. முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், ‘ நாட்டின் அரசியல் அதிகாரம் நிதி மூலதன சக்திகளின் ஆதிக்கத்திற்கு சென்றுள்ளது. நிதி மூலதன சக்திகள் வலதுசாரி, மதவாத சக்திகளை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது. திரு நரேந்திர மோடியின் பாஜக ஆட்சி வரும் 22.05.2018 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5 ஆம் ஆண்டில் நுழைகிறது. நாட்டின் நெடிய விடுதலைப் போராட்ட … Continue reading மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை: இந்த அரசு யாருக்கானது?

நீட் போராட்டத்திற்கு தடை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அமைப்பிற்கு எதிராக போராடக் கூடாது என்ற மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும்..

அனிதாவுக்கு நீதி கேட்டு மதுரையில் தமிழ்ப் படைப்பாளிகள் முழக்கம்!

சமகால அரசியல் பொருளியல் பண்பாட்டுச் சூழலை அசைக்கும் நிகழ்வுகள் யாதொன்றுக்கும் தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள் தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்திருக்கின்றனர். அவ்வகையில் சமீபத்தில் நிகழ்ந்த அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.மதிப்பெண் தகுதியிருந்தும் லட்சிய தாகம் கொண்ட அனிதாவின் கனவை நீட் எனும் பூதம் சிதைத்திருக்கிறது. இம் மரணம் விரக்தியாலோ, கையறு நிலையிலோ, தோல்வி மனப்பான்மையாலோ நிகழ்ந்தது அன்று. மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளால் நிகழ்ந்தது இம் மரணம். அனிதாவின் மரணம் ஒரு தற்கொலையாகக் … Continue reading அனிதாவுக்கு நீதி கேட்டு மதுரையில் தமிழ்ப் படைப்பாளிகள் முழக்கம்!

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு!

https://www.facebook.com/anbe.selva/posts/1492603270806521மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்; கைது... https://www.facebook.com/joshuaisaac.azad/posts/1561071840582745 சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆர்ப்பாட்டம்... https://www.facebook.com/arunnedunchezheyian.arun/posts/10209741491321339   விசிக சென்னையில் நடத்திய போராட்டம்... https://www.facebook.com/joshuaisaac.azad/posts/1561082197248376 டெல்லி ஜந்தர்மந்தரில் எழுத்தாளர் மாலதி மைத்ரி ஒருங்கிணைக்கும் போராட்டம்... https://www.facebook.com/permalink.php?story_fbid=509377732733288&id=100009831978370 மதுரையில் மே 17 இயக்கம் நடத்திய போராட்டம்... சென்னையில் சிபிஎம் கட்சியின் … Continue reading அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு!

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின. https://www.facebook.com/murugan.kanna1/posts/1457181081028681   https://www.facebook.com/odiyen/posts/10155902968641807 நாளையும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. இரா.தெ.முத்து: அனிதாவிற்காக நாளை ( செப் 2 ) ஒரு போராட்டம் நடக்கிறது. வருக தோழர்களே சென்னை தாராப்பூர் டவர் அருகே( தேவி தியேட்டர் எதிரே) காலை 10/மணி மறியல் போர் தோழர் ஜி ராமகிருஷ்ணன் தலைமை மார்க்சிஸ்ட் கட்சி களம் https://www.facebook.com/anandt.13/posts/2206801286212909

திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

யாழன் ஆதி திருமுருகன் காந்தியும் மகளும் இந்தச் சந்திப்பில் நீ எதைக் கடத்துகிறாய் என் அன்பு நண்பனே பிஞ்சு விரல்கள் பற்றிய உன் விரல்கள் என்ன சொல்கின்றன குழந்தையிடம் அன்பின் தூரிகைகளாய் மாறியிருக்கும் உங்கள் விரல்களில் வழியும் உணர்வின் பெரும்பாதையில் நாளையின் கணங்கள் நடக்கலாம் சொல்லாமலேயே பாதியில் விடப்பட்ட ஒருபுரட்சியின் காதையை மீண்டும் சொல்வேன் என்னும் நம்பிக்கை அந்தத் தீண்டலில் துளிர்விட்டிருக்கலாம் ஒன்றும் கவலைப்படாதே என்னும் சொல்லொன்று உனக்கு அந்த விரல்களிலிருந்து வந்திருக்கலாம் ஒளியேற்றி வந்ததனால் சிறையிருள் … Continue reading திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திடல் வேண்டும். அனைத்து பகுதி மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்திட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்து … Continue reading இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

எண்ணெய் எரிவாயு எடுப்பிற்கு எதிரான ஒகோனியர்கள் போராட்டமும் கென் சரோவிவாவின் தியாகமும்

நைஜர் ஆற்றுப்படுகையில் ஒகோனியர்களை வேட்டையடியாடுவதை போல தற்போது காவிரிப்படுகையில் எண்ணெய் எடுப்பிற்காக தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்!

நீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்!

பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6000 முதல் ரூ.7000 வரை சம்பளப் பணத்தை பிடித்துக் கொண்டு Sadist போல மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் … Continue reading ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

நீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்

இப்போது தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 வருடத்திற்குப் பிறகு 12 தவணைகளில் பெற்றுக் கொள்வார்களா? தொழிலாளியை இவ்வளவு இளக்காரமாக நீதிமன்றம் பார்ப்பதை ஏற்க முடியுமா?

நெடுவாசல் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை

மனுவேல் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இரயில் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக, பொய் வழக்கு போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட நான்கு SUMS தோழர்கள் உட்பட 7 பேர் இன்று வரை சிறையில் உள்ளனர். தோழர் வளர்மதி (Sums Valarmathi) திருச்சி பெண்கள் சிறையில் உள்ளார். அங்கு அவரும், தோழர் சுவாதியும் சிறை அதிகாரிகளின் ஆசியுடன், சிறைக் காவலர்களால் பலமுறை கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தோழர் வளர்மதியும், … Continue reading நெடுவாசல் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கேலி பேசுபவர்களுக்காக இந்தப் பதிவு!

ஆர். எஸ். பிரபு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து பலரும் கவலை தெரிவித்தாலும் சில அருவருப்பான கருத்துக்களையும் பார்க்கமுடிகிறது. சம்பளம் பத்தலன்னா வேற வேலைக்கு போலாம்ல, இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவனுக்கெல்லாம் போராட தகுதி உண்டா, கடைசியில் வழக்கமான பல்லவியான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மாதிரி சில. சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாமே என்று போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனரைப் பார்த்து கருத்து முத்தை உதிர்ப்பவர்கள் கீழானவர்கள். அவர்களுக்கு கீழ்மட்டத்திலிருக்கும் தொழிலாளர் … Continue reading போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கேலி பேசுபவர்களுக்காக இந்தப் பதிவு!

விவசாயிகளின் சிறுநீர் குடிக்கும் போராட்டம்: மனித மாண்புகளுக்குப் புறம்பாக தம்மை கீழிறக்கிக் கொள்வதை கைவிட வேண்டும்!

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள், தமது கோரிக்கைகளின் பேரில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துவிடும் நோக்கில் பல்வேறு நூதனப் போராட்டங்களை வருகின்றனர். இந்நிலையில் அவர் சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர். இது மனித மாண்பை கீழிறக்கிக் கொள்ளும் போராட்டம், அதை கைவிடுத்து வேறு முறைகளில் விவசாயிகள் போராட வேண்டும் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ள கருத்து: டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள், தமது கோரிக்கைகளின் … Continue reading விவசாயிகளின் சிறுநீர் குடிக்கும் போராட்டம்: மனித மாண்புகளுக்குப் புறம்பாக தம்மை கீழிறக்கிக் கொள்வதை கைவிட வேண்டும்!

நெடுவாசல் எழுச்சி!

அருண் நெடுஞ்செழியன் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் தொடங்கி தமிழகம் முழுதும் பற்றிப் படறி வரும் எதிர்ப்புகள் எண்ணெய் இயற்கை வள கொள்ளையில் ஏகபோக ஆட்சி செலுத்திவருகிற பெரு முதலாளிகளுக்கும்,அவர்களுக்கு எடுபிடியாக சேவை செய்கிற மத்திய மாநில அரசுகளின் முகத்திரைகளை கிழித்துவருகிறது.இவர்களின் வர்க்க நலன் அரசியலை அம்பலப்படுத்திவருகிறது. நெடுவாசலில் நிலைகொண்டுள்ள இப்புயல் தமிழகத்தை தாண்டி தில்லியின் ஆளும்வர்க்கத்தை உலுக்கத் தொடங்கியுள்ளது. நிலக்கரி,கனிம வளம்,எண்ணெய் எரிவாவு என நாட்டின் தேச வளத்தை ஆளும் கட்சியாக இருக்கிற அரசியல் கட்சிகளும்,அரசு … Continue reading நெடுவாசல் எழுச்சி!

சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

சந்திரமோகன் 4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் பாத்திரங்கள் வரைத் தயாரிக்க பயன்படும் துருப்பிடிக்காத எஃகு தகடுகள் தயாரிக்கும் ஆலை, சேலம் உருக்காலை ஆகும். 1970 களில், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை மிகுந்த பொதுத்துறை நிறுவனம். "இரும்பாலை வருகிறது , … Continue reading சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

தண்ணீருக்கான பொது மேடை எண்ணூர் கழிமுகமும், பக்கிங்காம் கால்வாயும்,கொசஸ்தலை ஆறும் காமராஜர் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையங்களின் விரிவாக்கத் திட்டத்திற்காக வேகமான வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வடசென்னையின் நிலத்தடி நீர்மட்டம், சாம்பல் கழிவு மற்றும் வெந்நீர் கலப்பால் அழிவுக்குள்ளாகியிருக்கும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்த்தலை ஆற்றின் பல்லுயிரியம் இவற்றோடு இன்னும் வளர்ச்சியின் பேரால் மேற்கொள்ளப்பட்டு வருகிற துறைமுக, அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் பேரழிவின் எல்லைக்கு இப்பகுதியை தள்ளிக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் … Continue reading இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

காஷ்மீர் போராட்டக்காரர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக மிளகாய் கிரானேட்டு

காஷ்மீரில் இரண்டு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி வந்தது இந்திய ராணுவம். பெல்லட் குண்டுகளால் சிறுவர்கள், இளைஞர்களுக்கு பார்வை இழப்பும், கடுமையான காயங்களும் ஏற்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து எழுந்த கண்டனங்களின் விளைவாக தற்போது, பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக PAVA ஷெல்ஸ் எனப்படும் மிளகாய்(காரம்) கிரானேட்டுகளைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். ஆனால் இரண்டாம் நிலை ஆயுதமாக பெல்லட் குண்டுகளின் பயன்பாடும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரத்தன்மையுடைய கிரானேட்டுகளைப் பயன்படுத்தும்போது, போராட்டக்காரர்களால் செயல்பட முடியாது. … Continue reading காஷ்மீர் போராட்டக்காரர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக மிளகாய் கிரானேட்டு

“குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா  மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். “குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். … Continue reading “குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

  சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து … Continue reading “600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

மக்கள் போராட்டத்தால் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட 100 வயது ஆலமரம்!

முகிலன் ஈரோடு மாவட்டம் -பவானி வட்டம், பெருந்தலையூர் ஊராட்ச்சிக்கு உட்பட்ட செரையாம்பாளையம் என்ற கிராமத்தில் "சாரல் பசுமை தன்னார்வ அமைப்பு" என்ற அமைப்பினர் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் முன்முயற்சியில் ஊரில் உள்ள பல்வேறு அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த நசசு மரமான வேலிக்கருவை என்ற சீமை கருவேல மரத்தை அழித்து மண்ணை பண்படுத்தி, சுமார் 700 மரங்கள் (ஆல்-அரசு- வேம்பு-பழம் தரும் மரம்கள்) நட்டு வளர்த்து, முன்மாதிரியாக இருந்து வருகின்றனர். அங்கு 100 ஆண்டுகள் ஆன … Continue reading மக்கள் போராட்டத்தால் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட 100 வயது ஆலமரம்!

யார் இந்த பியூஸ் மனுஷ்?

R.r. Srinivasan யார் இந்த பியூஸ் மனுஷ்? - ஒரு காலத்தில் குப்பைகளாலும், கழிவுகளாலும் அழிந்து போன 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார் குறிப்பு: சென்னையில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள சேத்துப்பட்டு ஏரியினை புனரமைக்க அரசாங்கம் செலவழித்த தொகை 43 கோடி. - தர்மபுரியில் வற்றிப்போன … Continue reading யார் இந்த பியூஸ் மனுஷ்?

ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

ஜோஷ்வா ஐசக் ஆசாத்     நேற்றிலிருந்து இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் … Continue reading ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

கார்ப்பரேட் நலன்காக்கும் நீதிமன்றங்களும் களத்தில் வழக்கறிஞர்களும்: பாவெல் தருமபுரி

பாவெல் தருமபுரி சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள வழக்கறிஞர் சட்டத்தில்(advocate practicing act 1961) செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து வழக்கறிஞர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். நீதிமன்ற புறக்கணிப்பும், ஊர்வலம் ஆர்ப்பாட்டமுமாக அவர்கள் ஆர்ப்பரித்து நிற்கிறார்கள். இது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் சில முன்னாள், இந்நாள் நீதிபதிகளும், வழக்கறிஞர் பேராயத்தின் உறுப்பினர்களும் இந்த சட்டத்திருத்தத்துக்கு வரவேற்பு கம்பளம் விறிக்ககின்றனர். இந்த முரண்பாடு தொடர்பாகவும், வழக்கறிஞர் போராட்டங்களில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் இந்தக் கட்டுரை … Continue reading கார்ப்பரேட் நலன்காக்கும் நீதிமன்றங்களும் களத்தில் வழக்கறிஞர்களும்: பாவெல் தருமபுரி

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் உள்ள அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக் கோரி கடந்த ஜனவரி 2015 இல் பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர்கள் பிரிவின் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் … Continue reading ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வழக்குரைஞர்கள் சட்டத்தில் பிறப்பித்த சட்டத்திருத்தத்தின் படி நீதிமன்றத்தில் போராட்டம் நடத்துவது, பதாகைகளை பிடிப்பது மற்றும் நீதிபதி பெயரைச்சொல்லி பணம் பெறுவது, நீதிபதிகளை ஆதாரமற்று விமர்சிப்பது மற்றும் குடி போதையில் நீதிமன்றத்திற்கு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதியானவர் வழக்குரைஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபர் வழக்குரைஞராக தொழில் செய்வதை தடுத்து உத்திரவிடலாம். இது உடனடியாக தமிழக அரசிதழில் வெளியாகி … Continue reading ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்

நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

திலீபன் மகேந்திரன் சிறிது நேரத்தில் போராட்டம் தொடங்கும்.. அண்ணா சித்த மருத்துவமனை நிர்வாகத்தின் அராஜகம். திரு. ஆறுமுகம் ஒரு கை, கால் முற்றிலுமாக செயலிழந்தவர் இங்கே கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய அக்கா அவர் கணவர் உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்த காரணத்தால் அவரை பார்க்க நேற்று சென்றுவிட்டார். இதைப் படியுங்கள்: “போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்! இதைக் காரணம் … Continue reading நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

ஜிஷாவுக்கு நீதி கேட்போம், தமிழகத்திலிருந்து…

ஹேமாவதி உடல் முழுக்கக் கத்திக் குத்துக் காயம். மூச்சுத் திணறல், கழுத்து நெறிப்பு அறிகுறிகள். வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட அடையாளங்கள். என்ன நடந்தது என்று சொல்ல உயிரோடில்லை. குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் தேசம் பெரிதாகக் கொந்தளிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் கண்டனம் குவியவில்லை. ஊடகங்களும் ஓரளவுக்குமேல் கண்டுகொள்ளவில்லை. என்ன காரணம்? ஜிஷா ஒரு தலித் பெண் என்பதைத் தவிர? கேரளத்தில் நடந்த கொடுமையானாலும் தமிழகத்தில் நம் ஆவேசக் குரலை ஒலிப்போம். இன்று இடதுசாரி பெண்கள் கூட்டமைப்பு இணைந்து மெரினாவில் மாலை 5 … Continue reading ஜிஷாவுக்கு நீதி கேட்போம், தமிழகத்திலிருந்து…

ஜிஷா படுகொலையில் பேரமைதி:பெண்ணியவாதிகள் பார்ப்பனீய மயமாகிவிட்டதை போராளி சமூகம் உணரவேண்டும்: குட்டிரேவதி

குட்டி ரேவதி “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல். * ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று. ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார். * 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் … Continue reading ஜிஷா படுகொலையில் பேரமைதி:பெண்ணியவாதிகள் பார்ப்பனீய மயமாகிவிட்டதை போராளி சமூகம் உணரவேண்டும்: குட்டிரேவதி

மே தினம் கொண்டாடுவதற்கு அல்ல, போராடுவதற்கு!

மாதவராஜ் 1886ஆம் ஆண்டு மே மாதம் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட்டில் சிந்திய தொழிலாளர்களின் இரத்தம் இன்று உலகமெங்கும் செந்நிறக் கொடிகளாக பறந்து கொண்டிருக்கின்றன. இதே நாளில் அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும், லண்டனிலும், மாஸ்கோவிலும், பாரிஸிலும், பெர்லினிலும், இத்தாலியிலும், இராவல்பிண்டியிலும், என உலகத்தின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்த செந்நிறக் கொடி ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சிலிர்ப்பாய் இருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் அந்த கொடியின் கீழ் நின்று கொண்டிருகிறார்கள் என்னும் பிரக்ஞை மாபெரும் மனித சமுத்திரத்தில் நாமும் ஒரு … Continue reading மே தினம் கொண்டாடுவதற்கு அல்ல, போராடுவதற்கு!

“என்னை ஒரேயடியாக சுட்டுக் கொல்லாமல் மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா

மத்திய ஆட்சியாளர்கள், தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், அதற்காக அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புது விதமான சித்ரவதையை செய்ததாகவும் பேராசிரியர் சாய்பாபா கூறியுள்ளார். 1990-ம் ஆண்டுகளில் சமூகநீதி, இடஒதுக்கீடு கோரிக்கைகளுக்காக போராடியவர் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. பின்னர் காவல்துறையின் போலி என்கவுண்ட்டர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத் தார். 2000-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியில் சேர்ந்த சாய்பாபா, 2009-ம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ்அரசு துவங்கிய - ‘பசுமை … Continue reading “என்னை ஒரேயடியாக சுட்டுக் கொல்லாமல் மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா